11262020வி
Last updateசெ, 24 நவ 2020 7pm

ஜனநாய அமெரிக்கா ஒரு குற்றவாளி நாடு!

இன்று அமெரிக்காவில் 50 லட்சம் சிறைக் கைதிகளை சிறைகளில் அடைத்து வைத்துள்ளது. ஜனநாயக அமெரிக்க அரசு, ஆயுதக் கலாசாரமும், வெள்ளை கறுப்பு நிற வெறியும், ஏழை – பணக்கார இடைவெளியின் கோர முகமும் அமெரிக்காவை ஒரு குற்றவாளிகள் கொண்ட தேசமாக மாற்றியுள்ளது. 50 லட்சத்தை விட இன்று அமெரிக்க ஆதிகத்தில் உள்ள குற்றவாளிகள் ஜனநாயக வேடமிட்டு பல லட்சமாகத் திரிகின்றனர். பல லட்சம் பேர் கொண்ட பல CIA பல லட்சம் கொண்ட இராணுவமென பல்வேறு வகையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அமெரிக்கா பயங்கரவாத வன்முறைகளில் ஈடுபடுகின்றது. இவர்கள் உண்மையில் மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் பாரிய குற்றவாளிகளும் ஆவர். ஆனால் இவர்களே இன்று ஜனநாயகக் காவலரென்று கூச்சலிடுகின்றனர் ஒரு சொட்டு வெட்கம் இல்லாமல்.


பீக்கில் பெண்கள் மாநாடு

பெண் விடுதலை என்ற உலகலாவிய பெண்கள் கோரிக்கையை இன்று அரசுகளும் அதன் அடிவருடிப் பெண்களும், அதன் மீட்பாளர்களாக மாறியதே சீனாவின் இரு பெண்கள் மாநாட்டுக் கூத்தடிப்புகளாகும்.

கொங்கொங்கில் வீதிக்கு வரவுள்ள தொழிலாளர்கள்


புதிய உலக அமைப்பின் கீழ் ,டங்கல் ஒப்பந்தித்தின் மூலம் கொங்கொங்கில் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்ய உத்தரவு இடப்பட்டுள்ளது. இதன்மூலம் 2000ம் ஆண்டளவில் 270 மில்லியன் தொழிலாளர்கள் வேலை நீக்கப்பட்டு வீதிக்குத் துரத்தப்படுவர்.


புதிய உலக அமைப்பில் ,டங்கல் ஒப்பந்தத்தில் உலகம் சொர்க்க புரியாக மாறுமென்ற ஜனநாயகத்தின் காவலன் அமெரிக்காவின் கொக்கரிப்புக்கள் மக்களைப் பட்டினிக்குள்ளும்,அவர்களை வீதிகளுக்குத் துரத்தி கொன்று குவித்தும் தனது புதிய உலக அமைப்பை நகர்த்திச் செல்லவுள்ளது.

ஜக்கிய நாடுகள் சபையின் 50வது கொண்டாட்டங்கள் தொடர்பாக

ஐக்கிய நாடுகள் சபை உருவாக 50ஆவது வருட ப+ர்த்திக் கொண்டாட்டங்களில் உலகத் தலைவர்களான எல்லாக் கொள்ளைக்காரர்களும் ஒன்றாகச் சேர்ந்து கூடிக் குலாவினர். ஐ.நா என்பது அதன் வரலாறு நெடுகிலும் உலகிலுள்ள மக்களுக்கு சமாதானத்திற்குப் பதில் ஒடுக்குமுறையே பரிசாகக் கொடுத்து வந்துள்ளது. வல்லமைமிக்கவன் பொருளாதாரதப் பலம் உள்ளவன் ஐ.நாவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து உலகில் தமக்குக் கட்டுப்படாதவர்கள் மீது ஆக்கிரமிப்புக்களையும், அடாவடித்தனங்களையும் கட்டவிழ்த்து விட்டு எல்லா வகையான மிரட்டல்களின் ஆயுதமாக ஐ.நா செயற்படுகின்றது. ஐ.நா 2ஆம், 3ஆம் உலக நாடுகளின் உள்நாட்டில் தலையிடுவதும், சர்வதேச பொருளாதார புதிய உலக ஒழுங்கை உருவாக்க பல்வேறு மக்கள் விரோத ஒப்பந்தங்களை மூன்றாம் உலக நாடுகிளன் விருப்பங்களை மீறி அவர்கள் மீது திணித்தது. இவற்றைச் செய்து விட மிரட்டல் என எல்லாவித போக்கிரி நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது. ஐ.நா என்பது இன்று அமெரிக்காவின் இராணுவ மையமே. இந்த ஐ.நாவிடம் மூன்றாம் உலக நாடுகள் எந்த அற்ப சலுகைகளைக் கூட அமெரிக்க நலனை மீறி பெற்றுவிட முடியாது.

உலக ஒழுங்கமைப்புக்கு உட்பட்ட உலகமானது மீண்டும் ஏகாதிபத்திய காலனியாக….

அமெரிக்க, ருசிய மேல்நிலை வல்ல ரசுகளின் வலிமை

அமெரிக்க மூலதனக் குவிப்புகள் ப+தாகரமாக மாறத் தொடங்கின. 17,500 கோடி ரூபாய்களுக்கு மேல் வர்த்தகம் செய்த 12 ப+தாகரமான தொழில் கழகங்கள் அமெரிக்காவிலுள்ள  500 பெரிய தொழில் கழகங்களின் மொத்த சொத்துக்களின் மதிப்பில் 27 வீதத்தையும், வர்த்தகத்தில் சுமார் 29 வீதத்தையும் 1970 ஆம் ஆண்டே பிடித்து வைத்திருந்தன. நாட்டிலுள்ள 50 பெரும் வர்த்தக வங்கிகளின் சொத்து, மற்றும் வைப்புத் தொகையில் 61 வீதத்தை பத்து பென்னம பெரிய வங்கிகள் கைப்பற்றின.
வெளிநாடுகளில் அமெரிக்காவின் நேரடி மூலதனம் இடல் 1950 களில் 20,550 கோடி ரூபாய்களாக இருந்தது. இது சுமார் 25 வருடங்களின் பின் அதாவது 1976ம் ஆண்டு 2,40,100 கோடியாக உயர்ந்தது. ஏகாதிபத்திய நாடுகளின் மொத்த மூலதன ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கோ 52 வீதமாகும். 76ல் இருந்த உலகிலுள்ள மிகப் பெரிய முதுலாளித்துவ தொழில் கழகங்கள் 500 இல் 260 அமெரிக்காவின் கைவசம் வந்துவிட்டது.