11302020தி
Last updateஞா, 29 நவ 2020 7pm

சரிநிகருக்குள் மார்க்சிய விரோதிகள்

சரிநிகருக்குள் மார்க்சிய விரோதிகள் எதை எப்படி திணிக்க முனைகின்றனர் எனப் பார்ப்போம்:- சரிநிகர் 124 இல் திட்டமிட்ட மார்க்சிய விரோத கோட்பாட்டை வெளிப்படுத்தும் மூன்று செய்திக் கட்டுரைகள் வெளிவந்திருந்தன. தலித்தியக் குறிப்புக்கள், பின் நவீனத்துவமும் பின் காலனித்துவமும் சில புதிய புத்தகங்கள் என்ற வெவேறு தலைப்புகளில் வெளியாகிய செய்திகள் மட்டுமின்றி அண்மைக்காலமாக சரிநிகரில் அதிகளவு மார்க்சிய விரோதக்கருத்துக்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.


உங்களுடன் சமர்

புரட்சிவரலாற்றில் பங்கெடுத்த தலைமைகள் செய்த சாதனைக்கு ஈடாக தவறுகளையும் செய்யத்தவறியதில்லை என்பது நாம் அறிந்த, படித்த, தரிசித்த வரலாறுகளாகும். இந்த வரிசையில் பாலஸ்தீன மக்களின் தேசமீட்புப்போரில் ஏற்பட்டுள்ள, திருப்புமுனை என வர்ணிக்கப்படும் தேக்க நிலையிலிருந்து தரிசிக்கும் இவ்வேளையில் சமர் தனது 9வது இதழை வெளியிடுகின்றது.

வாசகர் கடிதங்கள்

மனிதம் இதழில் வெளிவந்த எனது கட்டுரை தொடர்பாக சில கேள்விகள் எழுப்பியிருந்தீர்கள். நான் உங்களுக்கு எழுதிய முதல் கடிதத்தில் இது பற்றி சிறு விளக்கம் அளித்திருந்தேன். அது போதுமானதாக அமையவில்லையென இம்மடல் மூலம் உணர்கின்றேன்.

மனிதத்தின் கடிதமும் சமரின் பதிலும்

சமர் ஆசிரியர் குழுவினருக்கு!  தோழமையுடன் எழுதிக்கொள்வது. உங்கள் (திகதியிடப்படாத) கடிதமும், அத்துடன் இணைந்த தேசிய விடுதலைப் போராட்டமும் தேசிய சக்திகளும் எனும் (ஏ4 அளவுப் பேப்பரில்)18 பக்கக் கட்டுரை ஒன்றும் கிடைக்கப் பெற்றோம். மேற்படி உங்களது கட்டுரையில் விவாதத்துக்குரிய அல்லது கருத்தாடலுக்குரிய பண்புகள் மீறப்பட்டுளளமையினால் எமது பத்திரிகையில் பிரசுரிப்பதில்லை என்ற ஒருமித்த முடிவுக்கு நாம் வந்துள்ளோம்.

மூன்றாவது பாதைக்கான திட்டம்

சமர் ஏழாவது இதழில் முன்வைத்த மூன்றாவது பாதைக்கான வேலைத்திட்டம் ஆடிமாதம் 17-18 திகதிகளில் ஜரோப்பிய நாடுகளில் உள்ள வர்க்க சிந்தனை கொண்டோர், ஜனநாயக தேசபக்த சக்திகளால் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, திட்டத்தில் திருத்தங்கள் செய்ததனினூடாக மூன்றாவது பாதைக்கான ஜக்கியமுன்னணியை ஒரு ஸ்தாபனமாக உருவாக்கியுள்ளனர்.