06202021ஞா
Last updateவெ, 18 ஜூன் 2021 3pm

முடிவாக என்னதான் நடக்கப் போகின்றது

தேசியத்தை எப்போதோ அழித்துவிட்ட புலிகள் இன்று செய்வது என்ன? தமது சொந்த இனத்தை அழிக்கின்றனர். ஒரு விடுதலை இயக்கமே அதை செய்து முடிக்கின்றது. இது ஒன்றும் கற்பனையான எனது தனிப்பட்ட முடிவல்ல. நடந்து கொண்டிருப்பதை அடிப்படையாக கொண்ட, ஒரு எதார்த்தமான சமூக உண்மை இது.


மக்கள் விரோத வலதுசாரிய அரசியலுக்கு லாடம் கட்டும் முயற்சி தேவைதானா!

அண்மையில் மரணமடைந்த புஸ்பராஜா பற்றி, பலரும் எதிர்பார்த்தது போல் நான் எதையும் எழுதாமல் இருந்தேன். அவரின் 35 வருட அரசியல் சார்ந்த பொதுவாழ்வும், சில காலம் கடுமையான சித்திரவதையுடன் கூடிய சிறைவாழ்வும் என எதையும், அரசியல் ரீதியாக நியாயப்படுத்த முற்படாத ஒரு நிலையில் மரண நிகழ்வு நடந்தது.

மனித உரிமைக்கான கண்காணிப்பு அமைப்பின் அறிக்கையும், அதன் மீதான எதிர்வினைகள் மீதும்

மனித உரிமைக்கான கண்காணிப்பு அமைப்பு (HUMAN RIGHTS WATCH) கனடா மற்றும் இங்கிலாந்தை அடிப்படையாக கொண்டு புலம்பெயர் தமிழர்கள் மீதான புலிகளின் நிதி அறிவீடு பற்றிய ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

தன்னெழுச்சியான பிரஞ்சு மாணவர் எழுச்சி, மனித குலத்துக்கே போராடக் கற்றுக் கொடுக்கின்றது.

(இக்கட்டுரை எழுதி முடித்து வெளியிட இருந்த அன்று, பிரஞ்சு அரசு தான் கொண்டு வந்த மக்கள் விரோதச் சட்டத்தை மீளப் பெற்று இருந்தது. இதனால் இதன் ஒரு பகுதி நிகழ்காலத்தில் இருந்து இறந்த காலத்துக்கு திருத்தப்பட்டுள்ளது.)

 

'டிமைகளுக்கான ஒப்பந்தம்" ( Contrat Pour Esclaves) என்று மாணவர்களால் சரியாகவே வருணிக்கப்பட்டு, இதற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் பிரஞ்சு சமூகத்தையே விழிப்புற வைத்தது.

பிரான்சில் மாணவர் போராட்டம் எதை கற்பிக்கின்றது

பிரான்சில் மாணவர் போராட்டம் மூலதனத்துக்கும் அதன் எடுபிடியாகவுள்ள அரசுக்கும், மீண்டும் தனது அரசியல் பாடத்தை புகட்டத் தொடங்கியுள்ளது. தன்னியல்பான இப் போராட்டம் இயல்பில் அனைத்துவிதமான அரசியல் துரோகங்களையும் அம்பலப்படுத்தி