05092021ஞா
Last updateஞா, 02 மே 2021 10pm

மக்களை கேனயர்களாக்கிய புலியெதிர்ப்பு அரசியல்

புலியெதிர்ப்பையே தமது அரசியலாகக் கொண்டவர்கள் ஒன்று கூடி, தமது அரசியல் பொறுக்கித்தனத்தை மறுபடியும் நிறுவிக் காட்டியுள்ளனர். அந்த அரசியல் பொறுக்கித்தனத்தையே ஒரு தீர்மானமாகவும் வெளியிட்டனர். மக்களை முட்டாளாக்கும் இந்த கழுதைகள், மக்களை கேனயர்களாக்கிய படி முதுகு சொறிகின்றனர். பேரினவாத மற்றும் ஏகாதிபத்திய மனிதவிரோத வக்கிரத்தையே, புலிப் பாசிசத்தின் துணையுடன் சுமப்பதே தமது உயர்ந்த இலட்சியமாக பிரகடனம் செய்கின்றனர்.


இலங்கையின் முதன்மைப் பிரச்சினை புலிப் பாசிசமா?

இதை சாரமாக கொண்டு, மற்றொரு புலியெதிர்ப்பு அணியும் குலைக்கின்றது. புலியெதிர்ப்பையே அரசியலாக கொண்டு, அதையும் மார்க்சியத்தின் பெயரில் திரித்து குலைக்கின்றது. இந்த புதிய அணி முதலாளித்துவம் என்ற சொற்களைக் கொண்டே மார்க்சியத்தை சாயம் அடித்தபடி தான், புலியெதிர்ப்பில் தன்னை வேறுபடுத்தி

மக்களைப் பிளக்காது, வடக்கு கிழக்கு இணைப்பும் பிரிப்பும் அரங்கேறாது

* மக்களின் இயல்பான ஐக்கியத்துக்கு பதிலாக, வடக்குகிழக்கு இணைப்பை யாழ் மேலாதிக்கமும், ஏகாதிபத்திய துணையுடன் செயல்படும் பேரினவாதத்தின் மிதவாத பிரிவும் கோருகின்றது.


* மக்களின் ஐக்கியத்தை மறுதலித்து, வடக்குகிழக்கின் பிளவை புலியெதிர்ப்பு கும்பலும், பேரினவாதத்தின் தீவீரமான பகுதியும் கோருகின்றது.

சமூக ஆற்றலற்ற மலட்டுத்தனம் கொலைகளையே தீர்வாக்கின்றது

கொலைகளையே தமது அரசியல் பரிகாரமாக சிந்திக்கின்ற எமது சொந்த மன உணர்வுகள், மனிதத்தின் சகல கூறுகளையும் மலடாக்கிவிடுகின்றது. எமது சிந்தனை முறையும், வாழ்வியல் முறையும், மற்றவனின் மரணம் மூலம் தீர்க்கப்படலாம் என்று நம்புகின்றது எமது அறிவு. அப்படித்தான் அதை விளக்குகின்றது. அப்படித்தான் அதை நடைமுறைப்படுத்துகின்றது. இப்படி சிந்திக்கின்ற காட்டுமிராண்டிகளைக் கொண்ட ஒரு சந்ததிகளின் காலத்தில், நாம் உயிருடன் வாழ்கின்றோம்.

ஓநாய் கூட்டத்துக்கு ஏற்ற கைக்கூலி பரிசுதான் ஒரு கோடி பெறுமதியிலான 'அகிம்சையும் - சகிப்பும்'

புலிகளின் தலைவர் பிரபாகரன் அடிக்கடி, தமது இழிசெயலுக்கு துணைநின்ற மக்கள் விரோதிகளுக்கு "மாமனிதன்" என்ற பரிசு வழங்குகின்றார். அதேபோன்று தான் ஆனந்தசங்கரிக்கும் ஏகாதிபத்தியம் வழங்கியுள்ளது. "அகிம்சைக்கும் சகிப்புக்கும்" எடுத்துக்காட்டி, அதை ஊக்குவிக்க, இலங்கைப் பணத்தில் அண்ணளவாக ஒரு கோடிக்கு ஒரு பொன் முடிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனந்தசங்கரிக்கோ, அவரின் கூட்டணிக்கோ இன்று தனித்துவமான சொந்த அரசியல் கிடையாது. அதனால் தான் இந்தப் பரிசுக்கு சிறப்பாக அவரை தேர்வு செய்துள்ளது. ஏகாதிபத்தியத்தின் அரசியலை ஆனந்தசங்கரி தன்வசப்படுத்தி, அதை தன்னுடைய அரசியல் திட்டமாக உலகுமெங்கும் முன்வைத்து வாலாட்டித் திரிவதால் தான், பரிசுக்குரிய நபராக அவர் தெரிவு செய்யப்பட்டார்.