01262021செ
Last updateதி, 25 ஜன 2021 1pm

செய்தித் துளிகள் !

ஷேக்ஸபியர்:: பிறந்த நாளும் , இறந்த நாளும் ஒரே தேதியில் தான். பிறந்தது 23-04-1564.இறந்தது 23-04- 1616.


கிரேக்க மெகஸ்தனிஸ்: சிறந்த பேச்சாளராக இருந்து சரித்திரத்தில் ஓர் உன்னதமான் இடம் பெற்றாலும் , இளம் வயதில் அவருக்குத் திக்குவாய் ! இழுத்து, இழுத்துத் தடுமாறித்தான் பேச முடியும். !


சாக்ரடீஸ்: மூன்று மகன்கள் இல்வாழ்க்கை திருப்தி இல்லை. எப்பொதும் சண்டை போடும் மனைவி.அவளிடம் மட்டும் சாக்ரடீஸின் தர்க்கம் எடுபடாமல் போனது.


லியோ டால்ஸ்டாய் பிறந்த வருடம் - 1828.
எகிப்து நாட்டின் கடைசி மன்னன்-பரூக்.


இங்கிலாந்தின் சரித்திரத்தை இயற்றியவர்= மெக்காலே/
ஏசுவின் முதல் சீடர்- செயிண்ட் ஆண்ட்ரு.


பிளாரன்ஸ் நைட்டிங்கேல் எனற பெயர் நர்ஸிங்குடன் தொடர்புடையது.
முதன் முதலில் உலகப்படம் வரைந்தவர் -தாலமி.


நெல்சன் நெப்போலியனை இறுதியாக வாட்டர் லூ போரில் தோற்கடித்தர்ர்.
வெடி மருந்தைக் கண்டுபிடித்தவர்-ஆல்பிரட் நோபல்.


முதன் முதலில் கட்டப்பட்டதும் , மிகப் பழமையனதுமான கலங்கரை விளக்கம் எகிப்தில் உள்ளது.


காலரா என்ற கொள்ளை நோய்க்கான் கிருமியைக் கண்ட ஜெர்மானியர்_ராபர்ட் கோச்..


ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தை உருவாக்கியவர்- இயான் ஃப்ளௌமிங்.
இயேசுவைக் காட்டிக் கொடுத்த சீடர்- ஜூடாஸ் இஸ்காரியட்.

 

http://santhanamk.blogspot.com/2008/08/blog-post_04.html


உடல் எடை !

ஒருவரின் உடல் எடை அதிகமா இல்லையா என்பதை ஆய்வாளர்கள் 'பாடி மாஸ் இன்டெக்ஸ்' என்று சொல்லப்படும், பி.எம்.ஐ. மூலம் முடிவு செய்கிறார்கள். இந்த பி.எம் ஐ. யை எப்படி கணக்கிடுவது?


உங்கள் உடல் எடையை உங்கள் உயரத்தினால் (மீட்டர் ஸ்கொயர்டு கணக்கில்) வகுக்கவேண்டும். அப்போது கிடைக்கும் மீதி 20 முதல் 30 க்குள் இருந்தால் அவர் சரியான எடையில் இருக்கிறார் என்று அர்த்தம். ஒருவரது பி.எம். ஐ, 30 க்கு மேல் இருந்தால் அவர் குண்டர் என்று அர்த்தம்.

நன்றி: தினமலர். (27- 01- 2007).

http://santhanamk.blogspot.com/2008/07/blog-post_16.html

மழை,புழுக்கம் !

சாதாரணமாக மழை பெய்வதற்கு முன்னர் நாம் அதிக புழுக்கத்தை உணர்கிறோம்.அது ஏன் தெரியுமா? கரு மேகங்கள் உதயமான உடனடியாகவே, சுற்றுப்புறம் முழுமையாக நீர் ஆவியால் நிரம்பிவிடும்.! இதனால் நம்முடைய உடலில் உண்டாகும் வியர்வை எளிதில்ஆவியாகாமல் உடலிலேயே தங்கிவிடும். அதனால்தான் ஒருவகை புழுக்கம் ஏற்படுகிறது

http://santhanamk.blogspot.com/2008/07/blog-post.html

கருக்கல்!

காலை என்பதே கருக்கல் தான்.
எந்த ஜீவராசியும் சூரிய உதயத்திற்குப் பிறகு உறங்குவதில்லை மனிதன் மட்டும் தான் சூரிய உதயத்திற்குபிறகும் உறங்குகிறான் அதிகாலை 4:30 க்கும் 5:30 க்கும் இடைப்பட்ட நேரம் 'கருக்கல்' ஆகும்.
இந்த நேரத்தில் தான் பகலின் வெளிச்சக்காற்று தோன்றி மறைந்து சற்று இருட்டாக இருக்கும். இந்த நேரத்தில் எழுந்து சுவாசித்தால் நெஞ்சில் உள்ள கெட்டக் காற்று நீங்கி அப்பழுக்கற்ற காற்று கிடைக்கும்.அது ஆரோக்கியத்தை அளிக்கும்.
நன்றி: -தினமலர் (26-12-2006).

http://santhanamk.blogspot.com/2008/06/blog-post_9988.html

உலகில் 35 சதவீதம் பேரை மலேரியா தாக்கும் அபாயம்

lankasri.comஉலகின் 35 சதவீதம் பேர் மலேரியா நோய் தாக்கும் அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பதாக பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட வரைபட ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. உலகின் மலேரியா நோயின் அபாயம் குறித்து ஆராய்வதற்காக ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக பேராசிரியர் பாப் ஸ்னோ தலைமயில் "மேப்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

கென்ய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டுவரும் இந்த அமைப்புக்கு "வெல்கம்' என்ற தன்னார்வ நிறுவனம் நிதியுதவி செய்து வருகிறது. உலகின் எந்தெந்தப் பகுதிகளிலெல்லாம் மலேரியா இருக்கிறது என்பது குறித்து இந்த அமைப்பு வரைபட அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் உலகம் முழுவதும் சுமார் 237 கோடி பேர் மலேரியா தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

இதில் சுமார் 100 கோடி பேர் இதற்கு முன் இருந்ததைக் காட்டிலும் குறைந்த அபாயத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்காவின் சில பகுதிகள் ஆகியவற்றில் அபாயம் குறைந்திருப்பதாக அந்த வரைபடம் கூறுகிறது. மலேரியாவைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு சர்வதேச நிறுவனங்களும் கொடையாளர்களும் பெரும் பணத்தைச் செலவழிக்கும்போது இதுபோன்ற வரைபடத்தைக் கையில் வைத்திருப்பது அவசியம் என்றார் ஸ்னோ. உலகின் எந்தெந்தப் பகுதிகளில் மலேரியாவை ஒழிக்க முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கு இந்த வரைபடம் சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்றார் அவர்.

http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1204225791&archive=&start_from=&ucat=2&