01192021செ
Last updateச, 16 ஜன 2021 11am

பொட்டுக்குள்ளால் எட்டிப் பார்க்கும்


கத்தரி
வெள்ளையாக
மாறுமா?
மாறும்!
வெள்ளையாக மட்டுமென்ன
செம்மையாக, மஞ்சளாக .. இன்னும் இன்னும்

கத்தரி வாழையுடன் கூட்டிணைந்து
தேங்காய்ப் பாலில் முக்குளித்து,
தேசியுடன் கலக்கும் போது
வாசனை கமழும், வாயூறும்

அக்கம் பக்கமும்
பொட்டுக்குள்ளால்
எட்டிப் பாரக்கும்.

ஊர்க் கத்தரியானால்
ஊரே கூடும்.

சுவைப்போமா?

தேங்காய்ப் பால் கத்தரி

தேவையான பொருட்கள்

1. பிஞ்சுக் கத்தரிக்காய் - 2
2. வாழைக்காய் - 1
3. சின்ன வெங்காயம் - 5,6
4. பச்சை மிளகாய் - 2
5. வெந்தயம் - ½ ரீ ஸ்பூன்
6. தேங்காய்த் துருவல் - ½ கப்
7. மஞ்சள் தூள் விரும்பினால்
8. தேசிப்பழம் - ½
9. கறிவேற்பிலை – 1 இலை
10. உப்பு தேவையான அளவு

தாளிக்க

1. சின்ன வெங்காயம் - 3,4
2. தாளிதக் கலவை - 1 ரீ ஸ்பூன் (கடுகு, உழுத்தம் பருப்பு, சீரகம், சோம்பு,)
3. கறிவேற்பிலை – 1 இலை
4. எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

1 ம் கெட்டிப் பாலை எடுத்து தனியே வைத்துவிடுங்கள். 2ம், 3ம் பாலை ஒரு கோப்பையில் விட்டுக் கொள்ளுங்கள்.

கத்தரிக்காயை முழுதாகக் கழுவி எடுத்து தண்ணீரில் சின்னவிரலளவு நீள் துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.

வாழைக்காயின் தோலை உட் தோலுடன் சீவிக் கழிக்கவும், காயை தண்ணீரில் கத்தரியைப் போல வெட்டிக் கொள்ளுங்கள்.

வெங்காயம் மிளகாயை தனித்தனியே நீளமாக வெட்டிக் வையுங்கள்.
அடுப்பில் வைக்கும் பாத்திரத்தை எடுத்து 2ம், 3ம் பாலை ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

காய்கறிகளை 2-3 தண்ணீரில் கழுவிக் கொண்டு பாத்திரத்தில் போடுங்கள். பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு, மஞ்சள், வெந்தயம் சேர்த்து இறுக்கமான மூடி போட்டு 5-7 நிமிடம் அவிய விடுங்கள்.

திறந்து பிரட்டிவிடுங்கள். மீண்டும் மூடி போட்டு 2 நிமிடம் அவியவிட்டு எடுத்து கிளறி, தண்ணிப்பால் வற்ற, 1ம் பாலை ஊற்றி 1 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, எலுமிச்சம் சாறு சேர்த்துவிடுங்கள்.

எண்ணெயில் தாளித்துக் கொட்டி கிளறிவிடுங்கள்.
தேங்காய்ப்பால் மணத்துடன் குழந்தைகளும் விரும்பி உண்ணும் கறியாகிவிடும்.

குறிப்பு

வாழைக்காய்க்குப் பதில் உருளைக்கிழங்கு, பலாக்கொட்டை கலந்து கொள்ளலாம்.

அசைவம் உண்போர் கருவாடு சேர்த்துக் கொண்டால் சுவை தரும்.
http://sinnutasty.blogspot.com/2008/10/blog-post_15.html

தையல் இயந்திரம்

தையல் இயந்திரம் எப்படித் தைக்கிறது?

http://kichu.cyberbrahma.com/tag/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/

எம்ப்ட்ராயட்ரிங்: ச‌ங்‌கி‌லி‌த் தைய‌ல்

ஆடைக‌ளிலு‌ம், ‌வீடுக‌ளி‌லபய‌ன்படு‌மச‌ன்ன‌லது‌ணி, தலையணமேலுறை, கைகு‌ட்டபோ‌ன்றவ‌ற்‌றிலு‌மஅழ‌கிவேலை‌ப்பாடுக‌ளசெ‌ய்வதுதா‌னஎ‌ம்‌‌ப்‌ட்ராய‌ட்‌ரி‌ஙஆகு‌ம்.

அழ‌கிஎ‌ம்‌ட்ராய‌ட்‌ரி‌ஙசெ‌ய்ய‌ப்ப‌ட்ஆடைகளையு‌ம், தலையணைகளையு‌ம் ‌நீ‌ங்க‌ள் ‌விரு‌ம்‌பி வா‌ங்‌கி பய‌ன்படு‌த்‌தி‌யிரு‌ப்‌பீ‌ர்க‌ள்.

ஆனா‌ல் ‌நீ‌ங்க‌ள் ‌விரு‌ம்‌பி வா‌ங்‌கிஆடைக‌ளி‌லகூஉ‌‌ங்க‌ளவ‌ண்ண‌த்‌திலேஎ‌ம்‌‌ப்‌ட்ராய‌ட்‌ரி‌ஙசெ‌ய்தஅச‌த்முடியு‌ம்.

துணிகளில் பூவேலை (எம்ப்ட்ராயட்ரிங்) செய்வது என்பது என்னவென்றே எனக்குத் தெரியாதே என்றெல்லாம் நீங்கள் சாக்கு சொல்ல வேண்டாம்.

இந்த நவீன காலத்தில் கணினி முன் அமர்ந்தால் நீங்கள் எந்தக் கலையையும் கற்றுக் கொள்ளலாம் ஆ‌ர்‌வமிரு‌ந்தா‌ல்.

முத‌லி‌ல் ச‌ங்‌கி‌லி‌த் தைய‌ல் ப‌ற்‌றி‌ப் பா‌ர்‌‌ப்போ‌ம். இதை‌ ச‌ரியாக அழகாக‌ப் போட‌க் க‌ற்று‌க் கொ‌ண்டாலே போது‌ம். ‌நீ‌ங்க‌ள் பா‌தி கை‌வினைஞரா‌கி‌வி‌ட்டீ‌ர்க‌ள் எ‌ன்று அ‌ர்‌த்த‌ம்.

எ‌ன்ன தயாரா?

முத‌லி‌ல் ‌நீ‌ங்க‌ள் பூ வேலை செ‌ய்யு‌ம் து‌ணி‌யி‌ல் ஒரு ‌சி‌றிய பூ‌வினை பெ‌ன்‌சிலா‌ல் வரை‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள். அத‌ன் உ‌ட்புற‌ப் பகு‌தி‌யி‌ல் இரு‌ந்து தையலை‌த் துவ‌ங்கு‌ங்க‌ள்.

ஒரு ‌இட‌த்‌தி‌ல் அடி‌யி‌ல் இரு‌ந்து ஊ‌சியை‌க் கு‌ற்‌றி மேலே எடு‌ங்க‌ள். ஊ‌சியை‌க் கொ‌ண்டு பெ‌ன்‌சி‌ல் கோ‌ட்டி‌னை ஒ‌‌ட்டி இரு‌க்கு‌ம் து‌ணி‌யி‌ல் க‌ண்க‌ளினா‌ல் ச‌ரியாக எ‌ண்‌ணி 5 நூ‌ல்களை ஊ‌சி‌யி‌ல் மா‌ட்டு‌ம் வகை‌யி‌ல் உ‌ள் நுழை‌த்து வெ‌ளியே ‌‌நி‌ற்க வையு‌ங்க‌ள். அ‌ப்போது ஊ‌சி‌க்கு ‌கீழே இரு‌க்கு‌ம் நூலை‌ ஊ‌சி‌யி‌ன் முனை‌யி‌ல் போ‌ட்டு மா‌ட்டி‌வி‌ட்டு ‌பி‌ன்ன‌ர் ஊ‌சி‌யை வெ‌ளியே இழு‌ங்க‌ள். த‌ற்போது முடி‌ச்சு போ‌ன்று ஒ‌ன்று ‌விழு‌ம். இதையே தொட‌ர்‌ந்து ச‌ெ‌ய்யு‌ம் போது ச‌ங்‌கி‌லி தைய‌ல் வ‌ந்து‌விடு‌ம்.

இதை வெறுமனே கோடுகளாக‌ப் போ‌ட்டு பாரு‌ங்க‌ள். உ‌ங்க‌ள் முய‌ற்‌சி வெ‌ற்‌றி அடை‌ந்தது‌ம், நீங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் எத்தனையோ பூவேலை செய்யப்பட்ட துணிகளை உற்று கவனித்தால் அதன் போக்கு தெளிவாகத் தெரிந்துவிடும். அவ்வளவே, அதனை பழைய அல்லது உபயோகப்படுத்தாத துணிகளில் ச‌ங்‌கி‌லி‌த் தைய‌ல் முறை‌யி‌ல் போட்டுப் பாருங்கள். முதலில் உங்களுக்கே கொஞ்சம் அசிங்கமாகத்தான் இருக்கும். பின்னர் அதன் போ‌க்கை நீங்கள் தெரிந்து கொ‌‌ண்டு அத‌ற்கே‌ற்றா‌ர் போல செ‌ய்து பாரு‌ங்க‌ள்.

கடைகளில் மர‌த்‌தினாலான எம்ப்ட்ராயட்ரிங் ப்ரேம் என்று கிடைக்கும். அதனை வாங்கி துணி‌யி‌ல் பொரு‌த்‌தி ‌வி‌ட்டு பூ வேலை செ‌ய்ய‌த் துவக்குங்கள். இதனா‌ல் உ‌ங்க‌ள் து‌ணிக‌ள் சுரு‌ங்‌கி ‌விடாம‌ல் இரு‌க்கு‌ம்.

http://tamil.webdunia.com/miscellaneous/woman/womanspecial/0806/26/1080626045_1.htm

குறுக்குத் தையல்

தேவையானப் பொருட்கள்

  • அய்டா ஃபேப்ரிக்(aida fabric) - 3" X 3" அளவானது
  • சிறிய ஃபிரேம் - 1
  • ஊசி
  • எம்பிராய்டரி நூல்கள் - டார்க் பிங்க், லைட் பிங்க், டார்க் பச்சை, லைட் பச்சை, இலை பச்சை
இதற்கு தனி குறுக்குத் தையல் (Single Cross stitch) என்று பெயர். படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு சதுரத்தின் இடப்பக்கம் கீழ் (எண் 1) இருந்து ஆரம்பித்து குறுக்கே மேல்நோக்கி (எண் 2) செல்லவேண்டும். பின்னர் பின்புறமாக நூலை நேராக இறக்கி எண் 3 ன் வழியே வெளிக் கொண்டு வரவும். அதன்பின்னர் குறுக்கே எண் 4 நோக்கி செல்லவும்.

 

இதற்கு வரி குறுக்குத் தையல் (A row of cross stitch) என்று பெயர். படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு சதுரத்தின் இடப்பக்கம் கீழ் (எண் 1) இருந்து ஆரம்பித்து குறுக்கே மேல்நோக்கி (எண் 2) செல்லவேண்டும். பின்னர் பின்புறமாக நூலை நேராக இறக்கி எண் 3 ன் வழியே வெளிக் கொண்டு வரவும். அதன்பின்னர் அடுத்த கட்டத்தில் குறுக்கே எண் 4 நோக்கி செல்லவும். இப்படியே தேவையான வரை தொடர்ந்து பின்னர் அதே முறையில் பின்னோக்கி வரவும். படத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை வரிசைப்படி தொடரவும்.

step 2

இதற்கு அரை குறுக்குத் தையல் (Half Cross stitch) என்று பெயர். படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு சதுரத்தின் இடப்பக்கம் கீழ் (எண் 1) இருந்து ஆரம்பித்து குறுக்கே மேல்நோக்கி (எண் 2) செல்லவேண்டும். அவ்வளவுதான். இதையே மேலிருந்து ஆரம்பித்து கீழ்நோக்கி கொண்டு வரலாம்.

step 3

இதற்கு கால் குறுக்குத் தையல் (Quarter Cross stitch) என்று பெயர். படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு சதுரத்தின் இடப்பக்கம் கீழ் (எண் 1) இருந்து ஆரம்பித்து குறுக்கே மேல்நோக்கி சதுரத்தின் மையம் (C) வரை செல்லவேண்டும். அதாவது பாதி தூரம் (எண் 2) வரை சென்றால் போதும்.

step 4

இதற்கு முக்கால் குறுக்குத் தையல் (Three-quarters Cross stitch) என்று பெயர். படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு சதுரத்தின் ஏதேனும் ஒரு கீழ் பக்கத்தில் (எண் 1) இருந்து தொடங்கி, குறுக்கே மேல்நோக்கி எண் 2 வரை செல்லவும். அதன்பின்னர் பின்புறமாக, நேரே கீழாக எடுத்து வந்து, எண் 3 வழியே வெளிக்கொணரவும். அதில் இருந்து குறுக்கே சதுரத்தின் மையம் வரை செல்லவும்.

step 5

தையலுக்கு BASEஆக பிளாஸ்டிக் பாட் (Palstic Pad), அய்டா ஃபேப்ரிக்(Aida Fabric), லினன் ஃபேப்ரிக் (Linan Fabric) போன்றவற்றைப் பயன்படுத்தலாம். பெரிய படங்கள் செய்து ஃபிரேம் செய்வதாயின் அய்டா ஃபேப்ரிக்தான் மிகவும் வசதியானது. இதில் தைப்பதும் மிக இலகு. முதன் முதலில் தைக்கத் தொடங்குபவர்கள் இதில் ஆரம்பிப்பது நல்லது. இந்த பேப்ரிக்கிலும் 11Count, 14 Count, 16 Count, 18 Count, 22 Count என வகைகள் உண்டு. Count என்பது ஒரு அங்குலத்தில் எத்தனை குறுக்கு நூல்கள் ஓடுகின்றன என்பதைக் குறிக்கும்.

step 6

தைப்பதற்கு எம்பிரொய்டரி நூல்(Embroidery floss), வூல் நூல்(Wool thread), யார்ன் (yarn) ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். இந்த தையலை தைப்பதற்கென்றே முனை மழுங்கிய, நீண்ட கண்(துளை) உள்ள ஊசிகள் (tapestry needle) இருக்கின்றன.

step 7

முதலில் மாதிரிக்கு தையல் (கார்னேஷன் பூ) விளக்கப் படம் ஒன்றை எடுத்துக் கொள்ளவும். படத்தில் காட்டியவாறு துணியில் மார்க் செய்துவிட்டு அதன் மீதும் தைக்கலாம் அல்லது தையலை எண்ணி அதற்கேற்றவாறு தைக்கலாம்.

step 8

முதலில் பூ இதழ்களை குறுக்குத் தையலால் தைக்கவும். தைப்பதற்கு இரட்டை நூலைப் பயன்படுத்தவும்.

step 9

தைத்துக்கொண்டிருக்கும் போது இடையில் நூல் முடிந்துவிட்டால் முடிச்சு போட வேண்டாம். பதிலாக பின்னால் திருப்பி, ஏற்கனவே தைத்த தையலினூடாக கோர்த்து எடுத்து விடவும்.

step 10

பூவை முழுவதும் தைத்து சிறிய ஃபிரேமில் போட்டு பிளைன்ட் (Blind)கயிறில் கட்டிவிட்டால் பார்ப்பதற்கு கைப்பிடி போல மிகவும் அழகாக இருக்கும். இதே பூவை லேடீஸ் பான்ட் பாக்கட்டில், தலைகாணி உறையில் அல்லது சிறுவர்களின் ஆடைகளிலும் போடலாம். மிகவும் அழகாக இருக்கும்.

step 11

குறுக்குத் தையலின் வகைகளையும், எப்படி செய்வது என்பதையும் திருமதி. நர்மதா அவர்கள் மிகச் சிறப்பாக விளக்கியிருக்கின்றார். அறுசுவை நேயர்களுக்கு மிகவும் அறிமுகமான திருமதி. நர்மதா அவர்கள் சமையல் மட்டுமன்றி, கைவினைப் பொருட்கள் செய்வதிலும் மிகுந்த திறன் வாய்ந்தவர்.
http://www.arusuvai.com/tamil/cross_stitch

step 12

ஓட்டுத் தையல்

எம்ப்ட்ராயட்ரிங்கில் சங்கிலித் தையல் முறையைப் பார்த்தீர்கள் அல்லவா அது மிகவும் எளிதான மற்றும் அடிப்படை முறைதான்.

அதை விட மிக எளிதான ஒரு தையல் முறை உள்ளது. அதுதான் ஓட்டுத் தையல். இதனை மிக அழகாகக் கையாண்டால் இந்த ஒரேத் தையல் மூலமாக ஒரு புடவை முழுமையையும் கூட பூ வேலைப்பாடு போட்டுவிடலாம்.

ஆனால் இதனை கற்றுக் கொள்வதுதான் கொஞ்சம் எளிது...

என்ன ரொம்ப ஆர்வமாக இருக்கின்றீர்களா... வாருங்கள் ஓட்டுத் தையல் பற்றி பார்க்கலாம். ஓட்டுத் தையல் புகைப்படத்தைப் பார்த்த உடனே அடடா இதுவா என்று நினைத்திருப்பீர்களே.

ஆம் இதே தான். ஒரு வட்டம் அல்லது முழுயான உருவம் போன்றவற்றை எளிதாக போட்டு முடிக்க இந்த ஓட்டுத் தையலைப் பயன்படுத்தலாம்.

அதாவது ஊசியில் ஓரிடத்தில் குத்தி வெளியே எடுத்து பின்னர் எண்ணிக்கையாக 5 இழை விட்டு மீண்டும் துணியில் ஊசியைக் குத்தி உள் வாங்கி பின்னர் அதே எண்ணிக்கையில் மீண்டும் ஊசியை வெளியே இழுத்தும் போடலாம்.

அல்லது ஊசியை துணியின் அடிப்பகுதியில் குத்தி எண்ணிக்கையாக 5 இழைகள் எடுத்துக் கொண்டு பின்னர் மீண்டும் வெளிப்பக்கமாக ஊசியைக் குத்தி எடுத்துக் கொண்டே போனால் ஓட்டுத் தையல் தயார்.

முதலில் நீங்கள் உங்கள் கைக்குட்டை, தலையணை உறைகளில் இந்த ஓட்டுத் தையலைப் பயன்படுத்தி சில பல பூக்களைப் போட்டுப் பாருங்கள். இதற்காக நீங்கள் சிரமப்படாதீர்கள். உங்கள் பழைய ஆடைகளில் ஏற்கனவே இருக்கும் டிசைன்களின் மீதே அப்படியே இந்த ஓட்டுத் தையலைப் பயன்படுத்தி பூ வேலைப்பாடு செய்யலாம்.

அதனை மேலும் மெருகூட்ட வேண்டும் எனில் ஒட்டுத் தையல் போடும் இடங்களில் ஆங்காங்கே சின்ன சின்ன சமிக்கிகளையும் ஊசியில் கோர்த்துக் கொண்டு தையல் போட்டுப் பாருங்கள்.

உங்கள் தோழி அணிந்திருந்த மிக விலை உயர்ந்த ஆடையைப் போன்று உங்கள் ஆடையும் ஜொலிப்பதை உணர்வீர்கள்.

அப்புறம் என்ன எல்லா பழைய ஆடைகளையும் பூ வேலை மற்றும் சமிக்கி சேர்த்து புதுசாக்குங்கள். அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் அம்மா அல்லது தோழிகள் திட்டுவதை.

http://tamil.webdunia.com/miscellaneous/woman/womanspecial/0807/03/1080703040_1.htm