நயன்தாராவின்
காதல் தோல்விகள் பற்றி – அவருக்கோர்
நல்ல நாயகன் இல்லையேயெனக்
கவலைப்படும்
தமிழ் ஊடகங்களுக்கு
எம்சமுதாயத்தில் -
போரினால் பாதிக்கப்பட்ட
கணவனையிழந்த
பெண்கள்--பெண்போராளிகள் பற்றி
கவலையேயில்லை! – அவர்கள்தம்
அடுத்தவேளை உணவிற்காக
அடுத்தவனின் "உண(ர்)விற்கானால்"
அதில் உங்களுக்கோர்
"தமிழ் உணர்வே" வந்துவிடும்!
அதுகொண்டதோர்
விபச்சார விளம்பரத்தையே விளாசிடுவீர்!
தமிழ்க்கலாசாரமும் விளக்கிடுவீர்!
பெண்கள் அல்ல விபச்சாரிகள்,
அதை ஊக்கிடும் -- நீங்களே
நல்ல விபச்சாரிகள்!
--லண்டன் விஜி 29/03/2012