INDIA: Violence by the BSF at Murshidabad, West...
எங்கள் தெருக்களில்
அமைதிப்பாதம் மிதித்துச் சிதறிய உடல்கள்
இழந்தது போக
நெஞ்சத்தில் ஆறாவடுவாய் எரியும் உணர்வுகள்
சுற்றிவளைப்பும்
சூழ்ந்து எக்காளமிட்டு சிரிப்புமாய்
கட்டிச் சுடுதரையில் ஏறிமிதித்த இந்தியப்பாதம்
எல்லைப்புறம் காவல் செய்கிறது
ஏவல் படைகள்
எம்மண் ஆடிய கோரதாண்டவம்
மனிதம் விழுங்கிய வதைமுகம் பேய்களாய்
தூது வருதலும்
தொடர் அழுத்தம் கொடுத்தலுமாய்
ஏய்த்துப்போதலை எப்படி ஏற்பீர்
அரக்கர் கரத்தே சிக்கிய உயிர்கள்
அழிவு கண்முன்
இந்தியக்கனவு இந்தியமோகம்
இலங்கை தமிழர் விழிகள் திறக்குக.
- கங்கா
19/01/2012