Language Selection

சுதேகு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

‘உலக அதிஸ்டக்காரனின்’ மரணம் !

யாமக்குச்சி (Tsutomu Yamaguchi) 16.03.1916ல் ஜப்பானில் பிறந்திருந்தார். ஒரு பொறியியல் வரைபட உருவாக்கக்காரனாக ‘மிக்சுபுசி’ கம்பனியில் கப்பல் கட்டுமான பகுதிப் பிரிவில் கடமையாற்றி வந்தார்.

அக்கம்பனியின் நிர்வாக வேலைகளின் நிமித்தம் அவர் நாகசாகியில் இருந்து கிரோசிமாவுக்கு வந்திருந்தார். தனது 3 மாதகால இப்பணியை முடிப்பதில் மும்முரமாக இருந்தவேளை: 1945ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 6ம் திகதி சுமார் காலை 8.15 மணியளவில் அமெரிக்காவின் பி -29 விமானம் அணுக்குண்டை வீசியது. இவர் இருந்த இடத்தில் இருந்து கிட்டத்தட்ட இரண்டு மைல் தொலைவில் இருந்த ‘லிற்ரில் போய்’ நகரத்தின் மீது அக் குண்டுவந்து வீழ்ந்தது. 1 இலட்சத்து 40 ஆயிரம் பேரும் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போனார்கள்.

 

அதிஷ்டவசமாக யாமக்குச்சி உயிருடன் தப்பினார். யாமக்குச்சியின் தோல் பட்டையில் ஏற்பட்ட பலத்த எரிகாயங்களுடன் அடுத்தநாள் இரவு புகைவண்டியை பிடித்து நாகசாகி ஆகிய தனது நகரத்துக்குத் திரும்பியிருந்தார். மருத்துவனையில் அவரின் அணுவீச்சு எரி காயங்களுக்கு ‘பண்டேஸ்’ போடப்பட்டது.

கிரோசிமாவின் மீது வீசப்பட்ட அணுக்குண்டை அடுத்து 3வது நாள் (09 ஓகஸ்ட 1945) இரண்டாவது தடவையாக நாகசாகியின் மீது அணுக்குண்டை வீசியது இரக்கமற்ற அமெரிக்கா. 74 ஆயிரம் பேரின் உயிரை இது காவுகொண்டும் இருந்தது. இந் நகரத்தின் மூன்றில் ஒரு பகுதி மண்ணுக்குள் மனித்தத்தோடு புதைந்தும் போனது. யாமக்குச்சி ஒரு பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டிருந்தார். தான் இனி உயிர்வாழ முடியாது என்று எண்ணியபோதும் இம்முறையும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!

 

ஒருவாறு அவர் வீட்டுக்கு வந்துமிருந்தார். தனது மனைவியும் சின்ன மகனும் உயிர் பிழைத்திருப்பதைக் கண்டார். இந்த இரண்டு அணுக்குண்டு வீச்சிலும் அழிந்து போனவர்கள் போக, மேலும் 2 இலட்சத்து 60 ஆயிரம் பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

1945 ஓகஸ்ட் 15 ல் ஜப்பான் சரணடைந்தது!

இதன் பின்னர், அணுக்குண்டு அவலங்கள் தொடர்பாக புத்தகங்களை இவர் எழுதினார். பாடல்களை எழுதினார். தொலைக்காட்சி ஆவணங்களையும் உருவாக்க உதவினார். இக் கொடிய குண்டு வீச்சால் பாதிக்கப்பட்டு புற்றுநோயுடன் 64 வருடங்கள் உயிர் வாழ்தபோது: இவரை ‘உலகின் அதிர்ஷ்டக்காரன்’ என அழைக்கப்பட்ட போதும் கடந்த ஓகஸ்டில் இவர் கவலைக்கிடமான நிலைக்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு 93 வயதுகள் ஆகியிருந்த போதும், இம்மாதம் 4 காம் திகதி காலமாகியும் விட்டார்.

இவரது நீண்டகால புற்றுநோய்கு மாதாந்த இலவச சிகிச்சையும் இலவச மரணச் செலவும் என்று நீண்ட காலம் வழங்கப்பட்ட போதிலும், அணுக்குண்டுத் தாக்குதலால் இவரது உடலில் இருந்த (பல்விதமான?)நோய்கள் பற்றிய மருத்துவ அறிக்கைகள் பகிரங்கமாக வெளியிடப் படவில்லை என்றும் ஒருசாரார் விசனம் தெரிவித்துள்ளனர். இவரது மகனும் புற்றுநோயால் 59 வயதில் மரணமானார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

 கட்டற்றுப் பெருகுகிறது! வேலையில்லாத் திண்டாட்டம்…

1945 ம் ஆண்டு 57 மில்லியன் மக்களில் 10 வீதத்தினர் வேலையில்லா திண்டாட்டத்தைச் சந்தித்திருந்தனர். இதனால் வீதிகள் தோறும் தொழிலாளி வர்க்கத்தின் வீறுகொண்ட போராட்டங்கள் வெடித்துக் கிளம்பின. இதே அளவு மக்களில் 25 மில்லியன் மக்கள் வேலை வாய்ப்பின்றி 2007ம் ஆண்டே வீதிக்குத் தள்ளப்பட்டும் விட்டனர்.

இருந்தும் இனி கம்யூனிசமோ, அதற்கான போராட்டங்களோ உருவாகாது என்று மேற்குலகு அரசுகள் ஆறுதல் வார்த்தைகளை அருளி வருகிறார்கள். இவ்வருட ஆரம்பத்தில் இஸ்பானியா, ஈர்லான்ட், பிரான்ஸ், யேர்மன் மற்றும் போலந்து போன்ற நாடுகள் 10 வீதத்துக்கு மேற்பட்ட வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பெற்றுள்ளது.

‘ஈயூ’ நாடுகளில் இதன் வேகம் அதிகரித்துள்ளது. 2008ல் 7.2 வீதமாக இருந்த வேலை வாய்ப்பின்மை, 2009ல் 10.1 வீதமாக எகிறியிருந்தது. இவ்வரும் 11 வீதமாக வளர்ந்துள்ளது. இவ்வருடம் இஸ்பானியா 20.5 வீதத்தையும், ஈர்லான்ட் 15.1 வீதத்தையும், போலந்து 12.0 வீதத்தையும், பிரான்ஸ் 10.9 வீதத்தையும், யேர்மன் 10.8 வீதத்தையும் கொண்டுள்ளது.

ஈரோ நாணயத்தைப் பாவிக்கும் நாடுகளின் முதலீடுகள்  -0.2 வீதமாக பூச்சியத்துக்கும் கீழ் இறங்கியுள்ளது. அமெரிக்க டாலர் பாவனை நாடுகளில் இது 1.9 வீதமாகவே உள்ளது. சீனாவின் முதலீடுகள் 11.1 வீதமாகவும் உள்ளது. மக்களின் அத்தியவசியப் பொருட்களின் விலை மொத்தமாக வீங்கியும் விட்டது. உதாரணமாக: அரிசி, உற்பத்தி மேடை விலையில் இருந்து உலகச் சந்தையில்  40 வீதத்தால் ஏற்றியே விற்கப்படுகிறது. மக்களின் நாளாந்த சீவியம் பூதாகரமான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு வருகிறது.
இருப்பினும் இந் நெருக்கடிகளில் இருந்து மீளுவதற்கு மக்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் சமூக காப்புறுதிகளை குறைக்கும் வழிகளில் இவர்களின் கைகள் நீண்டும் வருகிறது. நகரப் பெருக்கங்கள் அதற்கான மின்வலு உற்பத்திக்கான நெருக்கடிகள் மக்களின் வாழ்நிலையை மேலும் அமுக்கி வருகிறது. சூரிய மின் உற்பத்தி நகரங்களாக இவைகளை மாற்றி அமைத்து நெருக்கடிகளைக் குறைக்க, குறுக்கு வழி தேடுகிறார்கள்.
காபனீர் ஒக்ஸ்சைட்டின் பெருக்கத்துக்கான மாற்று வடிவங்களாக இவற்றைக் சுட்டிக் காட்டுகின்றனர். அடிப்படையில் பூமிக்கு அடியில் இருக்கும் காபனை தோண்டி எடுத்து பூமியில் எரிப்பதாலேயே இந்தச் சமநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்குப் பதிலீடாக பூமியின் மேற்பரப்பிலிருந்து தாவர எண்ணையையோ வேறு வழிமுறைகளையோ இந்த விஞ்ஞானம் கண்டறியவும் உபயோகிக்கவும் முற்படவில்லை.
ஆளும் வர்க்கங்கள் பூமியின் மீதோ அல்லது இயற்கையின் சமநிலையின் மீதோ ஏன் அது தனது மக்களின் மீதோ காதல் கொள்ளவில்லை. தனது சுரண்டும் வர்க்க அதிகார நலன்களுக்கு வெளியே எந்த நாசத்தையும் அது செய்யத் தயாராகவும் செய்தும் வருகிறது. இன்று மக்கள் எதிர் நோக்கிவரும் வேலையில்லாப் பிரச்சனையை விடவும் தனது அதிகாரத்தை தக்கவைக்கவும் அதற்கான எல்லாவகையான மாற்று வழிகளையும் தேடிக் கொண்டு ‘குசாலாக’ இருக்கிறது. இது மக்களின் விரோதம் பற்றி சிந்திக்காது.
மக்கள் தமது உரிமைக்காக வீதியில் இறங்கினாலும் பயங்கரவாதம் என்றும் கம்யூனிச பூதம் என்றும் மக்களை மேலும் மேலும் அடக்கி ஒடுக்குவார்களே தவிரவும், வேலையில்லாப் பிரச்சனைக்கான உண்மைக் காரணங்களை கூறி மக்கள் தீர்வுக்கு இவர்கள் ஒருபோதும் விடப் போவதுமில்லை, மக்கள் நலனுக்கு இடமளிக்கப் போவதுமில்லை..

மின்சாரக் கனவும், ‘கலிபோனியா’வும்…

மின்சார வலு உற்பத்தியானது இன்று பூவி சூடேறுவது தொடர்பாக சர்ச்சைக்குரிய பொருளாகி விட்டது. அதனால் சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வது தொடர்பாக மேற்குலகம் ‘அழுத்தமாக’ப் பேசி வருகிறது.

பூமிக்கு மேலே 36 ஆயிரம் கில்லோ மீற்றர் உயரத்தில் சுமார் ஒவ்வொரு நாளும் இந்த உலகம் சூரிய ஒளியைப் பெறமுடியும். இங்கே ஒரு சதுர மீற்றரில் பெறப்படும் சூரிய ஒளி, புவியின் மேற்பரப்பில் பெறப்படுவதை விட 5 மடங்கானது.

இவற்றைக் கணக்கில் கொண்டு விண்கலங்களை ஏவி சூரிய ஒளியை ‘மைக்ரோ’ அல்லது ‘ரேடியோ’ கதிர்களாக பூமிக்குக் கொண்டுவருவதை அமெரிக்கா முயற்சிக்கிறது. இவைகள் 2007ம் ஆண்டே ஆரம்பமாகியும் விட்டது. பூமிக்கு அனுப்பப்படும் இக் கதிர்களை ‘அன்ரனாக்கள்’ மூலம் உள்வாங்கி மின்சக்தியாக பிறப்பாக்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் மூலம் தற்பொழுது 800 ‘கிஜா’ வாற்றை மணித்தியாலத்தில் உற்பத்தி செய்யலாம் எனவும், 2016ல் 1700 ‘கிஜா’ வாற்றை மணித்தியால உற்பத்தியாகப் பெருக்கலாம் எனவும் எண்ணுகிறது. இதனூடாக 2 இலட்சத்து 50 ஆயிரம் பாவனையாளருக்கு மின்சாரத்தை தரமுடியுமெனவும் அது ஆதங்கப்படுகிறது.

உலகத் திட்டத்தின் படி இன்னும் 6 வருடங்களுக்குள் 25 சதவீதமான மின்சாரத்தை சூரிய ஒளியிலிருந்து உருவாக்குவதாக வடிவமைக்கப்படுகிறது. இது தொடர்பாக அமெரிக்க மற்றும் இராணுவத் தரப்பினரது அபிப்பிராயப் பார்வையின் படி:  இந்த உயரத்தில் ஏற்படும் தவறுகள், பழுதுகள், பிழைகள் தொடர்பாக ஏற்படும் செலவீனங்கள் மதிப்பிட முடியாத வகையில் உள்ளதாக அபிப்பிராயப் பட்டுள்ளது.

இன்று 36 ஆயிரம் கில்லோ மீற்றர் உயரத்தில் உலா வரும் விண்கலம், இராணுவ பயன்பாட்டுக்கான  ‘கொமினிக்கசூன்’ விண்கலம் மட்டுமே! விண்ணின் இராணுவ பயன்பாட்டுத் தளம் தவிர்க்க முடியாதபடி உற்பத்தித் தளமாகவும் மாறுகிறது. இன்று உற்பத்தியின் தேவைகள் ஏற்கனவே இராணுவ தேவையையை முதன்மைப்படுத்திய முதலிடத்தை நெருங்கியும் விட்டது. ஆக உற்பத்தித் தளம் இராணுவ உயர் தளத்தை ஆக்கிரமித்தும் வருகிறது….

இந் நிலையில் உற்பத்தியை உலக ஒழுங்குக்குள் இராணுவ மயமாக்குவதில் மேற்குலகங்களும் ஆளும் வர்க்கங்களும் (வல்லரசு சார்பு) தள்ளப்பட்டும் விட்டன. இதன் விளைவுகள் தென் கிழக்கு ஆசியாவான இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் இப்பொழுது  மூச்செறிந்து கொண்டும் இருக்கிறது!
இருக்கும் வீட்டின் கூரைகளை அவ் வீட்டுக்கான மின் உற்பத்தித் தளமாக இவ் ஆளும் வர்க்கங்கள் தீர்வாக முன்வைக்கிறது. கலிபோனியாவின் கனவு இவ்வாறு இருக்க, சீனா 220 பில்லியன் டொலர்களை காற்று, சூரியன்.. போன்ற சுத்தமான மின் உற்பத்திக்குச் செலவிடுகிறது. 2010ம் ஆண்டு சீனாவின் 13 பெரிய நகரங்களில் (சங்காய், டாலியன் உட்பட) மின்சாரக் கார்களைப் பாவனைக்குக் கொண்டு வருகிறது. 50 தொடக்கம் 70 வீதம் வரையான மிகப் பிரமாண்டமான சூரிய மின் உற்பத்தியை சீனா உருவாக்குகிறது.

தென் கொரியா இந்த மின்சார கார் உற்பத்திக்காக 60 பில்லியன் டொலரை 2012 வரை அது செலவழிக்கவுள்ளது. இதற்கு சீனா உறுதுணையாகச் செயற்படுகிறது. இவ் உற்பத்தியின் ஊடாக உலக சந்தையில் தென் கொரியா 2வீதத்தில் இருந்து 8 வீதத்துக்கு உயர்ந்து விடும் (2013) எனவும் கணிப்பிடப் படுகிறது.

இன்று இலங்கை உள்ளுர் உற்பத்திகளை உலகச் சந்தைக்கு முன்போலத் திறந்து விடுவது மேற்குலகுக்கு அவ்வளவு சுலபமானது அல்ல. பிராந்திய வல்லரசின் வீரியம் போன்றவற்றின் (முரண்பாடு) குறுக்கீடுகள், இலங்கையில் அதன் புதிய பாதுகாப்பு வணிகச் சந்தை மையம் போன்ற விருப்புக்கள், ஆளும் தரப்பை ஜனாதிபதித் தேர்தலிலும், வெற்றி தோல்விகளுக்கு அப்பால் எல்லா சந்தர்ப்பத்தையும் ஆளும் தரப்பைப் பயன்டுத்த நிர்பந்திக்கும்.

இலங்கையில் குருத்தெறிந்திருக்கும் புதிய தலைநகர் கனவும் ‘கலிபோனியா’வுக்கு எந்தவிதத்திலும் அதன் (பிராந்திய வல்லரசுகளுக்கு) நலனில் குறைந்ததும் அல்ல. எவ்வாறு கலிபோனியாக் கனவு இராணுவத்தள உயரத்தில் எப்படிச் சாத்தியப்பாட்டுக்கான முக்கியமோ, அதேபோல இலங்கையின் இன்றைய கனவும் அதன் இராணுவத்தளத்தில் சாத்தியப் பாட்டையும் கொண்டிருக்கிறது…

சுதேகு
ஜனவரி 2010