பேனாக்களுக்கு ஜலதோஸ்ஷம்
‘டிகிரியில்’
எகிறிக் காய்கிறது
நூற்றி எட்டில் (108 இல்).
கசாயமோ,
குடிணீரோ குடித்தும்
குலையாத குலைப்பன்.
தேர்தல் ‘வைரஸ்’
பரப்பிய நோயாம்.
இன்றும் தான் பார்த்தேனே,
அடுக்கடுக்காய் கட்டில் போட்டு
இணையத்தில்
படுத்திருந்த பேனாக்களை!
மூக்குப் பிடிக்கத்தான்
ஆட்களேயில்லை.
நாற்பது வருடமாய்
பக்கவாதத்தால்
பீடித்த
இன(பிண) அரசியல்!
இன்னும், இன்னும்..
பிடில் வாசிக்கும்
‘நீரோ’க்களுக்காக
எரிகிறது
இலங்கை.
வயவைக் குமரன்
250110