Language Selection

ஜெகதீசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புலம்பெயர் தேசங்கள் எங்கனும் புலிப் பினாமிகளால் நாளை மாவீரர் தினக் கூட்டஙகளுக்கு அறைகூவல் விடப்பட்டுள்ளன. இதன் பின்னால் பல காரணங்கள் உண்டு முக்கியமானது அழித்து ஒழிக்கப்பட்ட தலைமை உயிரோடு உள்ளது என்பது போன்ற மாஜயை ஏற்கனவே பரப்பியுள்ளனர் மேலும் கணிசமான அளவு தமிழ் மக்கள் தலைமை உயிரோடு உள்ளதாகவே இன்னமும் வீணான கற்பனையில் உள்ளனர் மக்கள் விழித்துக் கொள்ளும் முன் இன்றய நிலையை தமக்கு சாதகமாக்கி பணம் கறப்பதற்கு தமிழ் நாட்டின் கழிசடை அரசியல்வாதிகளின் கூட்டுடன் புறப்படடுள்ளனர்

 

இந்த தமிழ் நாட்டின் கழிசடை அரசியல்வாதிகள் எப்படி எமது 40 ஆண்டு கால போரட்டத்தினை தமது நலன்களிற்கு பயன்படுத்தினார்கள் என நீண்ட பட்டியலே வெளியிடலாம் இறுதியாக எமது மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக ஓலமிட்ட போது இந்த கழிசடை அரசியல்வாதிகள் தமது பாரளுமன்ற நாற்காலிக்காக எந்த இந்திய மத்திய அரசின் முழு ஆதரவுடன் எம் மக்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடத்தப்பட்டதோ அவர்களுடன் கைகோர்த்து கொஞ்சி குலாவியதுடன் எமது பிரச்சினை குறித்து வாய் ழூடி இருப்பதற்காக பெட்டி பெட்டியாக பணமும் கைமாறிக் கொண்டவர்கள் தான் இவர்கள்.

மேலும் இந்த கழிசடை அரசியல்வாதிகளான வைகோ ராமதாஸ் திருமாவளவன் போன்றோர்  தமிழ் நாட்டிலுள்ள புரட்சிகர அமைப்புகளினால் இந்திய மத்திய அரசினை அம்பலப்படுத்தி எமக்கு ஆதரவாக போராடிய போது அதனை மழுங்கடிக்கும் வேலையையே முனைப்பாக செய்தனர் தோழர் முத்துகுமாரின் மரண ஊர்வலம் ஒரு நல்ல உதாரணமாகும்

புலம்பெயர் தேசங்களில் உள்ள புலி உறுப்பினர்கள் பினாமிகள் இவர்களின் பின்னால் திரை மறைவில் இயங்கும் முதலாளித்துவ சிந்தனை கொண்ட புத்திஜீவிகள் தான் ஏகாதிபத்தியங்களுடன் கூட்டு சேர்ந்து புலிகளின் தலைமையை நயவஞ்கமாக முள்ளிவாய்க்கால் வரை கூட்டி வந்து கொலை செய்தனர்

இப்படியானவர்களின் மாவீரர் தினக் கூட்டமென்பது மாவீரர்களின் குடும்பத்தினர் உறவினர் மற்றும் தமிழ் மக்களை முட்டாள்களாக்கி மொட்டை அடிக்கும் நிகழ்வாகும்

இது வரை காலமும் நடந்த கொடிய யுத்தத்தில் களத்தில் போராடியவர்களுக்கும் மாற்று இயக்க அழித்தொழிப்பில் மற்றும் உட்கட்சி படு கொலைகளில் இறந்து போனவர்களுக்கும் மேலும் பல்லாயிரக்கணக்கில் அநியாயமாக உயிர்களை இழந்து போய்விட்ட சாதாரண தமிழ் சிங்கள மற்றும் முஸ்லீம் மக்களுக்கான உண்மையான மரியாதை செலுத்துதல் என்பது

முதலில் கடைசி ழூன்று தினங்களில் முள்ளிவாய்க்காலில் நடந்து முடிந்த ஏகாதிபத்தியங்களின் கூட்டு சதியை அம்பலப்படுத்தி அதற்கு துணை நின்ற புலத்து புலிகளை மக்களுக்கு இனம் காட்டப்பட வேண்டும்

இரண்டாவதாக மக்களினால் விடுதலைக்காக கடந்த காலங்களில் வாரி வழங்கப்பட்ட பல கோடிக்கணக்கான நிதி புலம்பெயர் தேசங்களில் புலிப் பினாமிகளால் தனி நபர் சொத்துக்களாகவும் வியாபார ழூலதனங்களாகவும் மற்றும் பணமாகவும் முடக்கப்பட்டுள்ளது. இவற்றினை பொது நிதியமாக்கி போரினால் சகலத்தினையும் இழந்து போயுள்ள பொது மக்களுக்கும் மற்றும் அங்கவீனராகிப போயுள்ள போராளிகளிற்கும் வழங்கப்பட வேண்டும்

ழூன்றாவது கடந்த பல சகாப்தங்களாக எம்மை சுற்றி படர்ந்திருக்கும் தரகு முதலாளித்துவ மற்றும் அரை நிலப்பிரபுத்துவ அரசியலையும் அதன் வழி வந்த விடுதலை புலிகளையும் பரந்து பட்ட மக்களின் பொருளாதார மற்றும் அரசியல் நலன்களை முன்னெடுக்கும் நோக்கில் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும்