யுக்ரேன் யுத்தம் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான கெடுபிடி யுத்தமாக மாறிவிட்டது. நேட்டோவுக்குள் பிளவுடன் கூடிய ஜரோப்பிய ஏகாதிபத்திய மேலாதிக்கம் தவிர்க்க முடியாதாகியிருக்கின்றது. இதுவரை காலம் அமெரிக்காவிடம் இருந்த உலக மேலாதிக்க முடிவுகளை அறிவிக்கும், ஒன்றிணைந்த ஐரோப்பிய ஏகாதிபத்திய முகாம் யுத்தத்தை நவீனமாக்கி - வீரியமாக்கி தன்னை முன்னிலைப்படுத்தி வருகின்றது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின் nஐர்மனியானது, யுத்தத்தில் ஏற்படுத்திய தீவிர மாற்றத்தை அடுத்து, ருசிய ஆக்கிரமிப்பு படைகளின் பாரிய யுத்தப் பின்னடைவுக்கு காரணமாகி இருக்கின்றது.

யுத்தத்தில் ருசிய ஆக்கிரமிப்புப் படைகளை நிர்முலமாக்கும் வண்ணம், ஐரோப்பா திடீரென வழங்கிய நவீன ஆயுதங்களே காரணமாகும். இதுவே இதுவரை நடந்து முடிந்த யுத்தத்தை தீர்மானித்து இருக்கின்றது. ருசியா யுத்தமுனைக்கு வந்த புதிய நவீன ஆயுதங்களை எதிர்கொள்ளும் வண்ணம், தனது நவீன ஆயுதங்களுடன் மீள முழு அழிவுகரமான புதிய யுத்;தத்தை தொடங்க இருக்கின்றது. யுத்தம் படிப்படியாக மூன்றாம் உலக யுத்தத்தை நோக்கி பயணத்தை தொடங்கியிருக்கின்றது.

இன்றைய உலக ஒழுங்கில் மீண்டும் பழைய அமைதி திரும்புவதற்கான எந்தச் சூழலும் கிடையாது. ஏகாதிபத்தியங்கள் கெடுபிடியான யுத்தங்களை நோக்கி, தங்கள் பொருளாதாரத்தை மாற்றி அமைக்க தொடங்கிவிட்டன.

நான்கு முனை கொண்ட ஏகாதிபத்திய முரண்பாடுகள் முற்றியிருக்கின்றது

அமெரிக்கா, ஐரோப்பா, ரூசியா, சீனா என்று நான்கு முனைகளில், பொருளாதார - இராணுவ – பிரதேச முரண்பாடுகள் கூர்மையடைந்துவிட்டது. இதை தங்கள் இராணுவ வடிவங்கள் மூலம் தீர்வு காணும் ஒரு உச்சக் கட்டத்தை எட்டி இருக்கின்றது.

யுக்ரேன் மீதான ருசிய ஆக்கிரமிப்பானது, அமெரிக்;க ஜரோப்பிய முரண்பாட்டை திரைமறைவில் தொடக்கி இருக்கின்றது. அதாவது நேட்டோவுக்கு எதிரான ருசியாவின் யுக்ரேன் ஆக்கிரமிப்பு யுத்தமானது, இன்னுமொரு முரண்பாட்டை தீர்க்கும் நிழல் யுத்தமாக பரிணமித்து வருகின்றது. நோட்டோவின் நலன்கள் யாருக்கானது என்பதை, தீர்மானிக்கும் முரண்பாடு முற்றி இருக்கின்றது.

அமெரிக்காவிற்கு நிகராக ஜரோப்பா யுக்ரேனில் பெற்ற மேலாதிக்கமானது, அமெரிக்கா எதிர்பாராத ஒன்று. பிரான்ஸ் - ஜெர்மனியின் கூட்டு முயற்சியுடன், அமெரிக்கா முதன்மை இடத்தில் இருந்து பின்தள்ளப்பட்ட இருக்கின்றது. புதிய முரண்பாடுகளை கொண்டதாக வளருகின்றது. அமெரிக்காவின் நலனா அல்லது ஜரோப்பாவின் நலனுக்கானதா நேட்டோ என்பது, எதிர்கால முரண்பாடாகும். இதுவே யுக்ரேனில் யுத்தமானது, எதிர்தாக்குதல் யுத்தமாக வடிவம் பெற்றுள்ளது.

யுக்ரேனிய யுத்த வெற்றி மக்களுக்கானதல்ல

யுக்ரேனிய யுத்தத்தை மக்கள் தமது விடுதலைக்காக எதிர் தாக்குதலை நடத்தவில்லை. ஜரோப்பிய ஏகாதிபத்தியமே, தன் உலக மேலாதிக்கத்தை நிலைநிறுத்த எதிர் யுத்தத்தை நடத்;துகின்றது. இந்த யுத்தத்தில் யுக்ரேன் வெற்றி பெற்றால், அமெரிக்காவை மிஞ்சிய உலக ஏகாதிபத்தியமாக ஐரோப்பா மாறும். தோற்றாலும் அமெரிக்காவுக்கும் - ஜரோப்பாவுக்கும் இடையில், புதிய உலக ஒழுங்கை தீர்மானிப்பதில், புதிய முரண்பாடுகள் முன்னுக்கு வரும்.

யுத்தத்தை அமெரிக்காவே தொடக்கி வைத்த போதும், முடிக்கப் போவது ஜரோப்பிய ஏகாதிபத்தியமே. அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை இந்த யுத்தத்தின் மூலம் இழந்துவிட்டது. நடக்கும் யுத்தம் அமெரிக்கா, ஐரோப்பா, ருசியாவுக்கு இடையிலானது. இதில் சீன ஏகாதிபத்தியமே அதிக லாபம் ஈட்டும்.

யுக்ரேனிய யுத்தத்தில் தீவிரமாக ஈடுபடுபவர்கள் இனவெறிப் பாசிட்டுகளே

அமெரிக்கா எப்படி முஸ்லீம் மத அடிப்படைவாதத்தை அரபு மற்றும் ஆப்கானிஸ்தான் மண்ணில் உருவாக்கி, யுத்தங்களையும் ஆக்கிரமிப்புகளையும் நடத்தினரோ, அதே வழியில் வெள்ளை இனவெறி நாசிகளை பலப்படுத்தியே, ஐரோப்பா களமிறங்கி இருக்கின்றது. ருசிய ஆக்கிரமிப்புக்கு எதிரான வெற்றியில் தீர்மானகாரமான சக்தியாக, நாசிகள் மாறி இருக்கின்றனர். ஜரோப்பிய நாசியக் கட்சிகள், வழமை போல் ருசிய தேசியவாத ருசிய ஆக்கிரமிப்பை ஆதரிக்க முடியாது தடுமாறுகின்றனர்.

யுத்தம் நீண்ட கெரில்லா யுத்தமாக மாறும் பட்சத்தில், யுக்ரேனில் ஜரோப்பா நாசிகள் ஒழுங்கிணையவும், ஜரோப்பா எங்கும் ஆயுதமேந்திய நாசிகளின் வன்முறைகளுக்கும் அதன் வளரச்சிக்கும் வழிகோலும்.

யுக்ரேன் யுத்தத்தில் வென்றால் இனவெறி பாசிசமே ஆட்சியை தீர்மானிக்கும். இன்றைய யுக்ரேனில் வாழ்கின்ற யுக்ரேனிய மக்கள் தொகையில் 30 சதவீதத்துக்கு மேலாக இருந்த ருசிய மக்கள் மேலான இனவெறித் தாக்குதல், இந்திய அகதி மாணவர்கள் மீதான இனவெறித் தாக்குதல் … பல மேற்கு ஊடகங்களில் வெளிவராத, மூடிமறைக்கப்பட்ட செய்தியாகும்.

மேற்கு ஊடகங்கள் தங்களது ருசியாவுக்கு எதிரான யுத்தத்தை ஆதரித்த பிரச்சாரத்தை முழு வீச்சில் மேற்கொண்டு வரும் இன்றைய சூழலில், மறுபக்கத்தில் யுத்த பிரச்சாரத்தின் பொய்மைகள் அம்பலமாகின்றன. இந்த உண்மைகளை மூடிமறைக்க, தனக்கு முரணான செய்திகளை தடைசெய்கின்றது. ருசியச் செய்திகள் முதல் சமூக வலைத்தளமான பேஸ்புக் வரை, தமக்கு எதிரான செய்திகளை தடைசெய்திருக்கின்றது.

இதன் மூலம் யுக்ரேனிய நாசிகளின் போர்க்குற்றங்களை மூடிமறைக்கும் சர்வதேச யுத்த பிரச்சாரத்துக்கு வெளிப்படையாக உதவி வருகின்றனார். அதேநேரம் ஜரோப்பாவில் இடதுசாரிகளின் யுத்த எதிர்ப்பு எழுச்சியை வலுவிழக்க வைக்கவும், ஊடகங்களின் தடை மேற்குக்கு அவசியமாக இருக்கின்றது.

தங்கள் தரப்பு யுத்த செய்திகளை மட்டும் கேட்குமாறு மக்களை கட்டாயப்படுத்தி, மறுதரப்பு செய்திகளையும் கேட்டு முடிவெடுக்கும் மனிதனின் சிந்தனைச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தியுள்ளனர்.