Thu02202020

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

*திருமண மந்திரங்களின் ஆபாசம்*

  • PDF

*திருமண மந்திரங்களின் ஆபாசம்*

வேத பண்டிதர்களே – ஒப்புதல்

இதற்கு பிறகும் பார்ப்பனர்களை அழைத்து திருமணம் நடத்தலாமா?

புரோகித திருமணங்களில் பார்ப்பனர்கள் உச்சரிக்கும் சமஸ்கிருத மந்திரங்கள் இழிவும் ஆபாசமும் நிறைந்தவை என்பதை வேத விற்பன்னரான அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாதாச்சாரியாரே கூறியிருக்கிறார். ராமானுஜ தாதாச்சாரி இறந்துபோன காஞ்சி சீனியர் சங்கராச்சாரியுடன் நெருக்கமாக இருந்தவர். இந்து மதம் எங்கே போகிறது? என்ற தலைப்பில் நக்கீரன் ஏட்டில் இவர் எழுதிய தொடர் வைதிக பார்ப்பனர்களை கதிகலங்க வைத்தது. தொடரை நிறுத்துமாறு பார்ப்பனர்களிடமிருந்து வந்த அழுத்தங்களை புறந்தள்ளிவிட்டு அவர் எழுதினார்.

திருமணங்களில் கூறப்படும் மந்திரங்கள் குறித்து அவர் எழுதிய பகுதியையும் அதே திருமண மந்திரங்கள் குறித்து கீழாத்தூர் சீனிவாசாச்சாரியார் எழுதி, லிட்டில் ப்ளவர் கம்பெனி வெளியிட்டுள்ள விவாஹ மந்த்ரார்த்த போதினி நூலிலிருந்தும் சில மந்த்ரங்களின் தொகுப்பு:

அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாதாச்சாரியாரின் “இந்து மதம் எங்கே போகிறது?” நூலிலிருந்து:

திருமணத்தில் வாத்யார்கள் அர்த்தம் தெரியாமல் ஓதும் மந்த்ரங்களுக்கு மேலும் உதாரணம் சொல்கிறேன் – ஒரு மந்திரத்தைப் பாருங்கள்.

“தாம்பூஷன் சிவதமாம் ஏவயஸ்வயஸ்யாம் பீஜம்

மனுஷ்யா பவந்த்தீயான ஊரு உஷதி

விஸ்ரயாதையஸ்யா முஷந்தஹா ப்ஷரே

பஷேபம்….”

இது வேதத்தில் சொல்லப்பட்ட மந்த்ரம் இதை கல்யாண மேடையிலே பெண்ணையும், மாப் பிள்ளையையும் உட்கார்த்தி வைத்து சத்தமாக சொல்கிறார் வாத்யார் (புரோகிதர்). இந்த மந்த்ரத்தின் அர்த்தம் புரிந்தால்… அந்த வாத்யாரை நீங்கள் வாத்சாயணர் என்றுதான் அழைப்பீர்கள்.

அப்படி என்ன சொல்கிறது இந்த மந்த்ரம்?

நான் அவளை கட்டிப்பிடிப்பேன். (அவளோடு உறவு கொள்ளும்பொழுது) அப்போது எங்களது அந்தரங்க பாகங்களை சரியாக பொருந்தச் செய்யுமாறு… தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும்.

இந்த மந்த்ரத்தின் அர்த்தத்தை இதைவிட நாகரிகமாக சொல்ல முடியாது. விளக்கமாக நான் சொல்லியிருப்பேன் என்றால்…. என் மீதும் என் வயதின் மீதும் உங்களுக்கு இருக்கும் மரியாதை போய்விடும். அப்படிப்பட்ட மந்த்ரம் அது.

என் இஷ்டமித்ரர் ஒருவருடைய மகளின் கல்யாணம் சமீபத்தில் நடந்தது. அந்தப் பெண் மகா புத்திசாலி. சமஸ்கிருதம் பயின்றவள். அவள் மணமேடையிலே உட்கார்ந்திருக்கும்போது… வாத்யார் இந்த மந்த்ரத்தை உரக்கச் சொல்ல….

“ஸ்வாமீ… நிறுத்துங்கோ” என்றாள் அவள். வாத்யார் வாயடைத்துவிட்டார். “இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமோ? பெண்ணும் மாப்ளையும் துணியில்லாம செய்யுற காரியத்தை… நீங்க பல பேர் முன்னாடி சொல்றேளே…”

“வாத்யார் அதன்பிறகு அந்த மந்த்ரத்தை சொல்ல வில்லை. இதை ஏன் சொல்கிறேன் என்றால், வாத்யார்கள் சடங்குகள் என்ற பெயரில் இன்ன அர்த்தம் என்றே தெரியாமல்… பல மந்த்ரங்களை உச்சரித்து வருகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டத் தான்” – என்று தாதாச்சாரி எழுதியுள்ளார்.

கிழாத்தூர் சீனிவாசாச்சாரி தனது நூலில் எழுதியிருப்பதாவது:

தேவர்களுடன் இந்த கன்னிகைக்குள்ள சம்பந்தம் மந்த்ரங்களால் கூறப்படுகிறது.

ஒவ்வொரு கன்னிகையும் வரிசையாக ஸோமன், கந்தர்வன், அக்னி என்னும் தேவர்களை முதலில் கணவனாக அடைந்த பிறகே, நான்காவதாக மனித ஜாதியில் பிறந்தவனைக் கணவனாக அடைகிறாள் என்னும் அர்த்தமுள்ள மந்த்ரத்தைக் கணவன் கூறுகிறான். (இம் மூன்று தேவர்களையும் இவள் கணவனாக அடைந்தாள் என்று கூறுவதற்கு, மேற்கண்ட மூன்று தேவர்களும் முறையே அக் கன்னிகைக்கு பலம், அழகு, யௌவனம் இவைகளை உடனிருந்து அளித்தனர் என்பதே உட்பொருள்.)

“ஸோபம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: / த்ருதீயோ அக்நிஷ்டே பதி: / துரீயஸ்தே மநுஷ்யஜா:/

“ஸோமன் முதலில் இவளை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது கணவன் அக்நி. உன்னுடைய நான்காவது கணவன் மனித ஜாதியில் பிறந்தவன்.”

“ஸோமோ (அ)தத் கந்தர்வாய கந்தர்வோ (அ) தத்அக்நயே / ரயிஞ்ச புத்ராகும்ச அதாத் அக்நிர் மஹ்யமதோ இமாம்.”

“ஸோமன் உன்னை கந்தர்வனுக்குக் கொடுத்தான். கந்தர்வன் அக்னிக்குக் கொடுத்தான். அக்னிதேவன் இவளுக்குச் செல்வத்தையும் மக்களையும் கொடுத்து, பிறகு எனக்குத் தந்தான்.”

அதாவது, “ஏ பெண்ணே! சந்திரன் உனக்கு பலத்தையும், கந்தர்வன் அழகையும், அக்னிதேவன் யௌவனத்தையும் அளித்து என் சுகத்திற்காக, நீ பிறந்த மனித ஜாதியில் பிறந்தவனான எனக்கு அளித்துள்ளார்கள். ஆகவே, நீ தெய்வாம்சத்துடன் வந்திருக்கிறாய்” என்று பெண்ணின் சிறப்பைக் கூற வந்தவையே இந்த மந்த்ரங்கள்.

அருந்ததியைப் பற்றிய மந்த்ரம்

ஸப்தர்ருஷ்ய: ப்ரதமாம் க்ருதிகாநா மருந்ததீம் / யத் த்ருவதாகும் ஹ நிந்யுஷ் ஷட்க்ருத்திகா முக்ய யோகம் வஹந்தீய மஸ்மாக மேத த்வஷ்டமீ //

“ஸப்தரிஷிகள், கிருத்திகை எனப் பெயர் கொண்ட தங்கள் மனைவிகளுக்குள்ளே முதலான வளான அருந்ததியை எப்படி நிலைத்திருக்கச் செய்தார்களோ, அப்படி.

https://www.facebook.com/permalink.php?story_fbid=341256229657292&id=100013187536450

Last Updated on Saturday, 16 September 2017 07:18