இணைந்த சுகாதார பட்டப்படிப்பிற்கான நான்காண்டு கால வகுப்புகளை மூன்றாண்டு காலமாக குறைத்தமைக்கு எதிராகவும் பல்கலைகழக மாணவர்கள் எதிர்கொள்ளும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்பு கோரியும் அனைத்து பல்கலைகழக மாணவர்கள் ஒன்றியம் தொடர்ச்சியாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்விவகாரத்தில் அரசாங்கம் கண்டுகொள்ளா கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. இதனை கண்டித்து அனைத்து பல்கலைகழக மாணவர்கள் 16ஆம் திகதி பல்கலைகழக மானிய ஆணைக்குழு முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்க்கொண்டு விட்டு கலைந்து சென்ற மாணவர்களை சிவில் உடை தரித்த பொலிசார் அடாத்தான முறையில் கைது செயத்துடன் கண்மூடித்தனமாக தாக்கி விளக்கமறியலில் வைத்துள்ளனர். அரசாங்கம் பல்கலைகழக மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள அடக்குமுறைக்கு எதிராகவும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் இடதுசாரி கட்சிகள் 17ஆம் திகதி 'நிப்போன் ஹேட்டலில்' ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தினர். அதில் கலந்து கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் வெளியிட்ட கருத்துக்களின் சாரம்சம்:
இணைந்த சுகாதார பட்டப்படிப்பிற்கான கால எல்லையை மீண்டும் நான்காண்டு காலமாக உயர்த்த கோரியும், கல்வியை வியாபார பொருளாக்கும் நிகழ்ச்சி நிரலை கைவிட கோரியும், மாணவர்கள் மீதான அடக்குமுறைகளை நிறுத்தக் கோரியும் அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியம் அமைதி வழியில் சத்தியாகிரக போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. பேராதனை பல்கலைகழக மாணவர்கள் 145 நாட்களுக்கு மேலாகவும், காலி மாணவர்கள் 138 நாட்களுக்கு மேலாகவும், ரஜரட்டை மாணவர்கள் 159 நாட்களுக்கு மேலாகவும் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் தற்போது பேராதனை பல்கலைகழக மாணவர்களும் சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது எமது பொறுப்பாகும்.
கடந்தகால அரசாங்கங்கள் கல்வி தொடர்பாக பின்பற்றிய கொள்கைகளின் பிரதிபலனே இன்று எழுச்சி பெற்றிருக்கும் போராட்டமாகும். ஒருபுறம் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி குறைப்பு, மறுபுறம் கல்வி வளர்ச்சி தொடர்பில் திட்டம் எதுவும் இல்லாமை. அதேவேளை கல்வியை எப்படி சந்தை பொருளாக்கலாம் என்பதிலேயே கடந்தகால அரசாங்கங்கள் கவனத்தை செலுத்தின. அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கா கல்வியை சந்தை பொருளாக்குவது எப்படி என்பதிலேயே கவனத்தை செலுத்தி வருகிறார். தற்பேதைய அரசின் 'மஹிந்த சிந்தனைக்கும்" முன்னைய ஐ.தே.கட்சி அரசின் 'இலங்கையை மீளக்கைப்பற்றல்" நிகழ்சி நிரலுக்கும் இடையில் எதுவித வேறுபாடுகளும் இல்லை. இவற்றின் பிரதிபலிப்புகள்தான் பல்கலைகழக வகுப்புகள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன. அரசாங்கம் இப்பிரச்சினையை தொழிற்சங்கங்கள் மீது பழிசுமத்தி தப்பித்து கொள்ள முயற்சிக்கிறது. இங்கு காணப்படும் பிரதான பிரச்சினை கல்வி தொடர்பில் தெளிவான கொள்கை இல்லாமையாகும். ஒரு சில வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதியின் வாசஸ்தலத்திற்க்கு முன்னாலும் ஆர்ப்பாட்டம் செய்யும் அளவுக்கு நாட்டில் உச்சக்கட்ட ஜனநாயக உரிமை இருப்பதாக காட்டிக் கொண்டனர். காரணம் இந்த நாட்களில் சர்வதேச இளைஞர் மாநாடு நடந்தது. வெளிநாடுகளில் இருந்து இழைஞர்கள் இங்கு சமூகமளித்திருந்தனர். தற்போது மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிட்டது.
நேற்று மீண்டும் பல்கலைகழக மானிய ஆணைக்குழு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டம் முடிவடைந்த பின்னர் கலைந்து சென்றபோது அவர்களை சிவில் உடைதரித்த பொலிசார் பின்தொடர்ந்தனர். இதனை அவதானித்த மாணவர்கள் மறைந்து செல்ல முயன்ற போது பத்து பதினைந்து பேர் அவர்களை சுற்றி வளைத்தபோது அவர்களிடம் 6 மாணவர்கள் சிக்கினர். அவர்களில் நால்வரை கடத்தி சென்றனர். இச்சம்பவம் பற்றி மாணவ தலைவர்கள், அவர்களது சட்டத்தரணிகள் மூலம் கடத்தப்பட்ட நால்வரும் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என விசாரித்தபோது, கடத்தல் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவித்த பொலிஸார் பின்னர் அவர்கள் கிருலப்பனை பொலிஸில் இருப்பதாக தெரிவித்தனர். ஏனைய 14 பேர் பேரூந்தில் ஏறி சென்றபோது அவர்களை பின்தொடர்ந்த சிவில் உடை தரித்த பொலிசார் மாணவர் ஒருவரிடம் பிடிவராந்து ஒன்றை காண்பித்து அவரை கைது செய்ய முயன்றிருக்கிறார். பெலிஸார் காண்பித்த பிடிவராந்தில் குறிப்பிட்ட மாணவன் பெயர் காணப்படாததினால் பிடிவராந்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர் தன்னுடையதல்ல என தெரிவித்த மாணவன் அதனை நிரூபிக்க தனது அடையாள அட்டையை கானண்பித்துள்ளார். அதனை ஏற்காத பொலிஸார் அவரை கைது செய்ய முயன்றபோது அவருடன் கூடஇருந்த மாணவர்கள் அவரை கைது செய்வது அநீதியானது என வாதிட்டுளார். இந்த சந்தர்ப்பத்தில் பேரூந்தில் ஏறிய சட்டபூர்வ பொலிஸார் மாணவர்கள் கடமையை செய்ய இடையூறு செய்ததாக கூறி பேரூந்தை கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்திற்க்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு வைத்து பொதுமக்கள் முன்னிலையில் மாணவார்களை மிகமேசமாக தாக்கியூள்ளனர். மாணவர்கள் படுகாயத்திற்கள்ளாகியிருப்பது தொடர்பில் பொலிஸாரிடம் கேட்டபோது அவர்கள் பொலிஸ் நிலையத்தில் கையளிக்கப்பட்டபோது தாக்கப்பட்டிருந்ததாக பொலிஸரால் கூறப்பட்டது. பின்னர் இம்மாணவர்கள் நீதிபதி முன் ஆஐர்படுத்தப்பட்டனர். அங்கு மாணவர் சார்பில் ஆஐரான சட்டத்தரணிகள் மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டிருப்பதனால் அவர்களை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பும்படி கேட்டுக்கொண்ட போதும் 18 மணித்தியாலங்களுக்குப் பின்னரே அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர். வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட மாணவர்களில் மூவர் அவசர சிகிச்சை பிரிவிலும், மற்றும் ஒருவர் தலையில் கடுமையாக தாக்கப்பட்டதில் இரத்தம் கண்ணில் இறங்கியிருந்ததால் கண் வைத்திய பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது மாணவர்களுக்கு மட்டும் நடக்கும் ஒன்றல்ல. கடந்த காலங்களில் இதுபோன்ற கடத்தல்கள், கைது செய்தல், தாக்கப்படுதல் போன்றவை நடந்துள்ளது.
அரசுக்கெதிரான அரசியலில் ஈடுபடுபவர்கள், ஊடகவியலாளர்கள் போன்றவர்கள் மீதாகவும் கட்டவிழ்த்து விடப்பட்டது. இந்தந நிலமையை நாட்டு மக்கள் சாயாக விளங்கிக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்படுகிறது, 4 வருட வகுப்புகள் 3 வருடமாக குறைக்கப்பட்டுள்ளது. இழந்த உரிமையை மீளப்பெறுவதற்காக போராடும் உரிமை மறுக்கப்படுகிறது.
ஐ.தே.கட்சி போன்ற கட்சிகள் இந்த பிரச்சினையில் இரண்டாம் பகுதியில்தான் கவனம் செலுத்துகின்றன. காரணம் முதலாவது பிரிவில் அவர்களுக்கும் உடன்பாடுள்ளது என்பதினாலாகும்.
தமது கல்வி கற்க்கும் உரிமைக்காக அமைதிவழியில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடும் பல்கலைகழக மாணவர்களுடன் ஜனநாயகரீதியில் பிரச்சினையை அணுகி தீர்வு காண்பதற்க்கு பதிலாக மாணவர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடும் அரசாங்கத்தின் எதேச்சாதிகார போக்கை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. சுதந்திரக்கல்வி உரிமையை பாதுகாக்க போராடும் மாணவர்களில் 18 பேர் சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இம்மாணவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். தற்போதைய அரசு பின்பற்றும் எதேச்சாதிகாரப் போக்குக்கு பல்கலைகழக மாணவர்கள் மீதான அடக்குமுறை சிறந்த எடுத்துக்காட்டாகும். கடத்தல், கைதுசெய்தல், தாக்கப்படுதல் போன்ற சம்பவங்கள் பல்கலைகழக மாணவர்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட்ட தொன்றல்ல. இந்த அரசாங்கம் தனது எதிரிகளாக கருதுபவர்களை அடக்கி ஒடுக்க கையாண்டு வரும் இச்செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் போக்கையே காணக் கூடியதாக உள்ளது. அரசாங்கத்தின் இந்த போக்கை முறியடிக்க ஏற்புடையதாக மக்கள் சார்பு அரசியல் கட்சிகள், பொது நிறுவனங்கள், சிவில் அமைப்புகள் அனைத்தையும் ஒன்றிணைத்து வீதிக்கிறங்கி போராட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இதற்க்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க இலங்கை ஆசிரிய சங்கம் தயாராக உள்ளது.
ராஜபக்ச அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை படிப்படியாக பறித்து வருகிறது. மக்களும் இதை படிப்படியாக புரிந்து வருகின்றனர். கல்வி தனியார்மயம், வைத்தியம் தனியார்மயம் என மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் தனியார்மயப்படுத்துவதில் ராஜபக்ஷ அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது. சுதந்திர கல்வியின் பாதுகாப்பை மையப்படுத்தியே மாணவர்களின் போராட்டங்கள் எழுச்சி பெற்று வருகின்றன. இந்த போராட்டங்களை சகிக்க முடியாத ராஜபக்ஷ அரசாங்கம் கட்டுமீறிய அடக்குமுறைகளை நேரடியாக மாணவர்கள் மீதாக கட்டவிழ்த்து விட்டுள்ளது. ராஜபக்ஷ அரசாங்கம் ராணுவ ஆட்சிக்குரிய குணாம்சங்களை கொண்ட ஒன்றாகவே காணப்படுகிறது. லலித்-குகனுக்கு என்ன நடந்தது. இந்த நிலமை தோற்கடிக்கப்பட வேண்டும். சிவில் உடை தரித்த பொலிஸாரே பொதுமக்கள் முன்நிலையில் பல்கலைகழக மாணவர்களை தாக்கியூள்ளனர். கல்வி உரிமைக்காக போராடியதற்காகவே மாணவர்கள் தாக்கப்பட்டுள்னர். ராஜபக்ஷ அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கை தோற்கடித்து அரசாங்கத்தை வீட்டுக்கனுப்புவதற்காக அனைத்து முற்போக்கு சக்திளையூம் அணிதிரட்டி வீதிக்கிறங்கி போராட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இதற்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க சோஸலிசக் கட்சி தயாராக உள்ளது.
மஹிந்த அரசாங்கம் சிங்கள இனவாதத்தை அடித்தளமாகக் கொண்டே செயல்படுகிறது. கல்வியை தனியார் மயப்படுத்தும் அரசாங்கத்தின் செயல்திட்டத்தை தோற்கடிக்க அனைத்து அனைத்து முற்போக்கு சக்திகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும். மாணவர்கள் தமது கல்வி உரிமையை பாதுகாக்க ஆர்ப்பாட்டம், ஊர்வலம், பாதயாத்திரை போன்றவற்றை முன்னெடுப்பதை தடுப்பது அப்பட்டமான ஜனநாயக உரிமைகளை மறுதலிப்பதாகும். மஹிந்த அரசாங்கம் வெளிப்படையாகவே மக்களின் ஜனநாயகா ரீதியிலான போராட்டங்களை அடக்குமுறைகளை பிரயேகித்து ஒடுக்கி வருகிறது. மாணவர்களின் கல்வி உரிமைக்கான அமைதிவழி போராட்டத்தை பொலிஸ் அராஜகததை பிரயோகித்து ஒடுக்கிவிட முயற்ச்சிக்கிறது. இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் மாணவர்களின் நியாயமான போராட்டத்தை வெற்றிபெற அனைத்து முற்போக்கு சக்திகளும் ஒன்றிணைந்து மாணவர்களுக்கு பாதுகாப்பு அரணாக செயல்பட வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. ராஜபக்ஷ அரசை வீட்டுக்கு அனுப்புவதற்காக அனைத்து முற்போக்கு சக்திகளையும் ஒன்றிணைப்பதற்கான முயற்சியில் அர்ப்ணிப்புடன் செயல்பட நவசமசமாஜக் கட்சி தயாராக இருக்கிறது.
150 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பல்கலைகழக மாணவர்கள் மீதான பொலிஸ் அராஜகத்தை ஏவி விட்டிருக்கும் மஹிந்த அரசாங்கத்தின் நடவடிக்கையை சோஸலிசக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மக்களின் பிரச்சினைகளை கலந்துரையாடி தீர்வுகாண தயாரில்லாத மஹிந்த அரசாங்கம் பல்கலைக்கழக மாணவர் பிரச்சினைக்கு அடக்குமுறை மூலம் தீர்வுகாண முயற்சிப்பதையே 16ஆம் திகதி சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது. இப்பிரச்சினையை வெறுமனே மாணவர் பிரச்சினையாக கருத முடியாது. மஹிந்த அரசாங்கத்தின் இந்த போக்கு விரிவாக செயல்படுவதற்கான அறிகுறிகளை வெளிப்படையாக காணக்கூடியதாக இருக்கிறது. இந்த நிலைமைக்கு முடிவு கட்ட அனைத்து முற்போக்கு சக்திகளும் கைகோர்த்து செயல்பட வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இவ்விடயத்தில் சோஸலிசக் கட்சி தனது உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கிறது.