Language Selection

போராட்டம் பத்திரிகை 04
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று நினைவு கூறப்படும் மே தினம் அதன் உண்மையான அர்த்தத்தோடு நினைவு கூறப்படுவதில்லை. அது ஒரு போலியாக மாற்றப்பட்டுள்ளது. இன்றைய நிலையில், முதலாளித்துவ வர்க்கமும், தொழிலாளர் வர்க்கமும் தனித்தனியாக மே தினத்தை நினைவு கூறுகின்றன. அதேபோல், முதலாளித்துவ வர்க்கமும், தொழிலாளர் வர்க்கமும் ஒன்றாக இணைந்து மே தினத்தைக் கொண்டாட முடியுமென்றும் சில செஞ்சட்டை மேதாவிகளும் கூறுகின்றனர். இந்த போலி தர்க்கங்களுக்குப் பதிலாக முதலாளித்துவத்திற்கு எதிராக ஒன்று சேர்ந்து போராடும் அரசியலை சமூகமயப்படுத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

 

 

முன்னிலை சோஷலிஸக் கட்சி என்ற வகையில் இம்முறை சர்வதேச தொழிலாளர் தின கோஷமாக 'சமவுடைமை வாழ்க்கை" என்பதன் ஊடாக சமூகத்தில் நீங்கள் தோற்றுவிக்கப்பபோகும் அரசியல் கருத்தாக்கம் எத்தகையது?

 

நவ தாராளமய முதலாளித்துவ சமூக முறை எங்களுக்கு உரிமையாக்கித்தந்துள்ள வாழ்கை முறைக்குப் பதிலாக, மனித சமூகத்திற்கு சிறந்ததொரு வாழ்க்கை முறையை பெற்றுக் கொள்ளக் கூடியவாறாக சமூகத்தை வழி நடத்துவதாகும். ஆகவே, 'சமவுடைமை வாழ்க்கை" என்ற கருத்தாக்கத்தின் மூலம் தற்போதைய வருத்தும் முதலாளித்துவ சமூகமுறை எங்களுக்கு உரிமையாக்கித் தந்திருக்கும் வாழ்க்கை முறையையும், அது, மனித நேயத்திற்கு எதிராக வஞ்சனையோடு உருவாக்கி வரும் அனைத்தையும் தூக்கி எறியும் செயற்பாடாகும். மனிதனால் மனித சாரத்தை நெருங்கக் கூடிய வாழ்க்கையொன்றை உரிமையாகும் செயற்பாடாகும். அதுதான் 'சமவுடைமை வாழ்க்கை" என்பது.

 

சர்வதேச தொழிலாளர் தினத்தை, சிறு முதலாளித்துவ மற்றும் முதலாளித்துவ அரசியல் கட்சிகளினதும் பிரச்சாரத்திற்கான தினமாகவும் மற்றும் கலாச்சார விழாவாகவும் ஆக்கப்பட்டிருக்கும் நிலையில், முன்னிலை சோஷலிஸக் கட்சி என்ற வகையில் நீங்கள் எப்படி வேறுபடுகிறீர்கள்?

 

முக்கியமான விடயம் என்னவென்றால், தொழிலாளர்களின் போராட்டம் ஹேமார்கட் சதுக்கத்தில் நடந்த தொழிலாளர்கள் மீதான கொலைவெறித் தாக்குதலை நினைவு கூறுமுகமாக துவங்கப்பட்ட மே தினம் குறித்து வர்க்கத்திற்கு உணரச் செய்யும் அரசியல் கருத்தாக இருப்பது, வெற்றி கொள்வதற்காக நிறுவனமயப்படுவதற்கும், போராடுவதற்கும் உள்ள தேவையேயாகும். ஆகவே, முதலாளித்துவ முறைக்குள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும்,

 

போராடா வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் வெற்றி கொள்ளவோ, முதலாளித்துவத்தை தோற்கடிக்கவோ முடியாது. எனவே இந்த முதலாளித்துவ முறைக்கு எதிராக ஒருங்கிணைய வேண்டிய கட்டாயத் தேவையை உறுதி செய்ய வேண்டியுள்ளது. அதேபோன்று, வர்க்க உணர்வையும் ஊட்ட வேண்டும். இதுதான் மே தினத்தில் தொடர்ந்து வந்த இடதுசாரி பாரம்பரியம். ஆனால், நவ தாராளமய முதலாளித்தில் உலக மட்டத்திலான இடதுசாரி இயக்கங்களின் சந்தர்ப்பவாதம் மற்றும் காட்டிக் கொடுப்புகள் ஊடாக, கூட்டணி சேருவதற்கான பாதையில் பயணித்து, முதலாளித்துவ வர்க்கத்தோடு இணைந்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாகவேதான் சில இடதுசாரி அமைப்புகள் முதலாளித்துவ வர்க்கத்தோடு சேர்ந்து மே தினத்தை நினைவுகூற நடவடிக்கை எடுத்திருந்தன. இறுதியில், தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல்

 

தேவைகளை அழித்துவிட்டு போலியான நினைவு கூறலொன்றை உருவாக்குவதற்கு ஏற்ற சந்தர்ப்பமொன்று முதலாளித்துவ கட்சிகள், சிறு முதலாளித்துவ கட்சிகள் அனைத்திற்கும், உருவாகியிருக்கிறது.

 

அதேபோன்று நவ தாராள முதலாளித்துவத்தில் அனைத்தும் முதலாளித்துவ கோட்பாட்டிற்கு ஏற்ப புரிய வைக்கும் செயற்பாடாகவும் இருக்கிறது. ஆகவே, இன்று மே தினம் என்று சொல்வது, உண்மையான அர்த்தத்தோடு உருவாக்கப்பட்ட கருத்தல்ல. அதற்குப் பதிலாக அது போலியாக மாற்றப்பட்டுள்ளது.

 

முதலாளித்துவ வர்க்கமும், மே தினத்தை நினைவு கூறுகிறது, தொழிலாளர் வர்க்கமும் மே தினத்தன்று நினைவு கூறுகிறது. முதலாளித்துவ வர்க்கமும், தொழிலாளர் வர்க்கமும் ஒன்றாகச் சேர்ந்து மே தினத்தை நினைவு கூற முடியுமென்றும் சிலர் கூறுகிறார்கள். இந்த போலிக்குப் பதிலாக, முதலாளித்துவ முறைக்கு எதிராக நிறுவனமாக வேண்டுமென்பதிலும், போராடும் அரசியலை சமூகமயமாக்க வேண்டுமென்பதிலும் நாங்கள் அசையாத நம்பிக்கை வைத்துள்ளோம்.

 

மேற் குறிப்பிட்ட போலியை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதன் மூலமாக அந்த நம்பிக்கையை தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் கட்டியெழுப்ப முடியும். ஆகவே நாங்கள் முன்னிலை சோஷலிஸக் கட்சி என்ற வகையில் முந்தைய மற்றும் நடைமுறையிலுள்ள பாரம்பரியங்களுக்கு புறம்பாக மே தினத்தோடு மட்டும் வரையறுக்கப்படாத மாற்று அரசியல் செயற்பாட்டுக்கான தினமாக மே தினத்தை கொண்டு வர முயன்று வருகிறோம்.

 

இலங்கை தொழிலாளர் வர்க்கம் என்ற வகையில், நிறுவனமாக்கும் நடவடிக்கையில் இறங்கும்போது, இயக்கம் என்ற வகையில், நீங்கள் எதிர்கொள்ளும் சவால் எத்தகையது?

 

பல்வேறு சவால்கள் இருக்கின்றன.பிரதானமாதுதான், இடதுசாரி இயக்கத்தின் துயரம் நிறைந்த அனுபவங்கள், தடம்புரளல்கள், காட்டிக் கொடுப்புக்கள், சீர்த்திருத்தவாத மற்றும் கூட்டணிவாத குட்டையில் மூழ்குதல். இவை காரணமாக வர்க்கம் நம்பிக்கை இழந்துள்ளது. ஆகவே முதலாளித்துவத்தை கவிழ்த்துவிட முடியும், இதை விடவும் நல்லதொரு சமூக முறையை அமைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை வர்க்கத்திற்கு இல்லாமலாகிவிட்டது. அதற்கான முழுப்பொறுப்பும் எங்களை சார்ந்தது. இரண்டாவது விடயம்தான், நவ தாராளமயத்திற்குள் முதலாளித்துவ கோட்பாடு மற்றும் அரச அடக்குமுறை கருவிகளினால் தொழிலாளர்கள் போலி மனநிலைக்குள் பலி கொடுக்கப்பட்டுள்ளார்கள்.

 

அதனாலேயே தொழிலாளர்கள் குறுகிய தனித்துவங்களுக்குள் கட்டுண்டு, பிரிந்துள்ளார்கள். மறுபக்கத்தில் அரசியல் அறிவு இல்லாதவர்களாகவும் காணப்படுகிறார்கள். ஆதலால் அவர்களை கூட்டுச் செற்பாடுகளிலும், போராட்டங்களிலும் ஈடுபடச் செய்வது கஷ்டமான காரியமாக இருக்கிறது.

 

இந்த நிலைமையை மாற்றியமைக் வேண்டும். இதனால் அமைப்பு ரீதியில் ஒன்று சேர்வதற்கான நம்பிக்கையையும் வழக்காறுகளையும் அவர்களிடத்தில் உருவாக்க வேண்டும். இன்னொரு விடயம் என்னவென்றால், வரலாற்றில் அநேகமான மக்கள் செயற்பாடுகள், எழுச்சிகள், முறைக்கு மாற்றமாக போராடுவதற்குப் பதிலாக முதலாளித்துவ முறையை தூக்கியெறியக் கூடிய முதலாளித்துவத்திற்கு எதிரான சிந்தனையை வர்க்கத்திற்குள் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.

 

ஆனால் இன்று என்ன நடந்திருக்கிறது. அவை இறுதியில் முதலாளித்துவத்தினால் உறிஞ்சப்படும் போராடடங்களாக மாறியிருக்கின்றன. அவ்வாறு உறிஞ்சிக் கொள்ளும் போராட்டங்களாக மாறுவதற்கு, அவற்றில் சரியானதும் அரசியல் கண்ணோட்டத்துடனுமான அறிவை கொண்டு செல்லும் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு வர்க்கத்தின் புரட்சிகர இயக்கமொன்று ஸ்தாபிக்கப்படாமையே காரணம். ஆகவே வர்க்கத்தை நிறுவனப்படுத்தும்போது வர்க்கத்திற்கு தலைமைத்துவமளிக்கக் கூடிய புரட்சிகர அமைப்பொன்றை உருவாக்குவதே இன்றைய தேவையாக உள்ளது.

 

தற்போதைய தொழிற் சங்க அமைப்பு தொடர்ப்பிலான அரசியல் படிப்பினை எத்தகையது?

 

இதனை உலக மட்டத்தில் எடுத்துப் பார்த்தால் துக்ககரமான அனுபவம் என்றுதான் கூற வேண்டியுள்ளது. ஒன்று, நிறுவனமாதல் என்ற விடயம், வர்க்கத்திற்குள் தொழிற்சங்கவாதத்திற்கும், பொருளாதாரவாதத்திற்கும் மட்டுப்பட்டுள்ளது. குறுகிய மறுசீரமைப்பைப் பெற்றுக் கொள்ளுதலலும் பொருளாதார கோஷங்களுக்குள் வர்க்கத்தை மட்டுப்படுத்தலுமேஇதற்குள் இருக்கிறது.

 

அதனால், இங்கே பயனீட்டுவாதமொன்று இருப்பது தெளிவாகவே தெரிகிறது. தொழிற்சங்க அமைப்புகள் முதலாளித்துவ கோட்பாட்டின் ஆயுதமாக வர்க்கத்திற்குள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. வர்க்கத்தை அரசியல் போராட்டங்களுக்கு அழைப்பதற்குப் பதிலாக, தொழிற்சங்க செயற்பாட்டினால் குறுகிய மறுசீரமைப்பிற்குள் நிற்த்தப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்த

 

நிலையை நாங்கள் முற்றாக நிராகரிக்க வேண்டியுள்ளது. அதேபோன்று இந்த நிலைமைக்கு எதிராக உலக மட்டத்தில் எதிர்விரோதமொன்றை காட்டுவதற்கு, இந்த துரோகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட செயற்பாட்டை வர்க்கத்துடனான செயற்பாட்டாக மாற்ற முடியாத நெருக்கடி இருப்பதை நாங்கள் காண்கிறோம். இந்த நெருக்கடியை தோற்கடித்து அனைத்து தொழிலாளர்களையும் ஓரணியில் திரட்ட வேண்டிய கடமைப் பொறுப்பு புரட்சிகர இயக்கத்திற்கு இருக்கின்றது.

 

இலங்கை பரட்சியின் சாரமான தொழிலாளர்களை வர்க்கமாக நிறுவனப்படுத்தும் புரட்கிகர அமைப்பு என்ற வகையில், உங்களது கண்ணோட்டம் மற்றும் நிறுவனமய தலையீடு எவ்வாறு இருக்க வேண்டும்?

 

இலங்கையின் புரட்சிவாத தொழிலாளர்கள் உள்ளிட்ட விவசாயிகள், மீனவர்கள், ஒடுக்கப்பட்ட பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் உட்பட அனைத்து ஒடுக்கப்பட்ட சக்திகளையும் நிறுவனப்படுத்த வேண்டும்.

 

இதற்கான முயற்சி, மேற் குறிப்பிட்ட அரசியலின் கீழ் மிகக் கஷ்டமான காரியமாக இருக்கின்றது. நம்பிக்கை சிதைவடைந்துள்ளது, அவர்களை சரியான அரசியல் வழக்காறுகளுக்குள் அழைத்துச் செல்லக் கூடிய சரியான அரசியல் தலைமையொன்றை வர்க்கத்திற்குள் உறுதி செய்வதில் நாங்கள் தோல்வியடைந்துள்ளோம். இந்த நிலைமையை மாற்றுவதற்காக சமூகத்தில் விரிவான அரசியல் தலையீடொன்று தேவைப்படுகிறது. அவர்கள் இருக்கும் இடத்திலிருந்தே ஆரம்பித்து, சமூகத்தை மாற்றியமைக்கக் கூடிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் வழக்காறொன்று தேவைப்படுகிறது. அந்த கஷ்டமான காரியத்திற்காக வர்க்கத்தை ஆழமான அரசியல் கருத்தாடலொன்றுக்கு இட்டுச் செல்லக் கூடிய சந்தர்ப்பம் என்ற வகையில்தான சர்வதேச மே தினம் எங்களுக்கு முக்கியமாக இருக்கின்றது.

 

ஆகவே, புரட்சிகர இயக்கம் என்ற வகையில், நாங்கள் தொடங்கவிருக்கும் அரசியல் கருத்தாடல், வர்க்கத்திற்குள் வழக்காறுவரை இட்டுச் செல்லக் வேண்டிய பொறுப்பு, நிறுவன மற்றும் கோட்பாட்டு ரீதியில் எங்கள் மீது இருக்கிறது.