இன்று கொள்கைளும், நோக்கங்களும், நடைமுறைகளுமற்ற, உதிரி வர்க்கங்களைக் கொண்டு குறுங்குழுக்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. இதேயடிப்படையிலேயே தனிநபர்கள் கூட அரசியல் குதர்க்கங்களையும், தர்க்கங்களையும் முன்வைத்து, தங்களை வேறுபடுத்துவதன் மூலம் தம்மை முன்னிறுத்துகின்றனர். இவை அனைத்தும் இலங்கையின் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்து முன்னெடுக்கப்படும் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் தோற்றத்துடன், அதற்கு எதிரான ஒன்றாக முனைப்பு பெற்று வருகின்றன.
புலி - அரசு சார்ந்த இரு பாசிசங்கள் அக்கம்பக்கமாக நிலவிய காலத்தில், தமில் பேசும் மக்கள் மத்தியில் இருந்த எல்லாவிதமான சமூக செயற்பாட்டுக் கூறுகளையும் புலிகளும் அரசும் அழித்தனர். இக்காலத்தில் நடைமுறை சார்ந்த சமூக-அரசியற் செயற்பாடுகள் அனைத்தும் முடக்கப்பட்ட நிலையில், ஒடுக்கப்பட்ட வர்க்க விடுதலைக்கான அரசியல் முற்றாகச் செயலிழந்து போனது. இந்த விசேடமான வரலாற்றுச் சூழலில் குழுக்கள் மற்றும் தனிநபர்கள் சார்ந்த சிந்தனைகளும் செயற்பாடுகளும் தவிர்க்க முடியாதாகவும், சில சந்தர்பங்களில் இவர்களின் இருப்புதேவையானதாகவும் தர்க்க ரீதியானதாகவும் கூட இருந்தது.
அதேநேரம் குறிந்த வரலாற்றுக் கட்டத்திலான தனிநபர்கள் மற்றும் குழுவாதச் சிந்தனைகளும் செயற்பாடுகளும், ஒரே திசைலான சமூக நோக்கில் இருந்ததில்லை. பாட்டாளி வர்க்கம் தன்னை வர்க்கமாக முன்னிறுத்தி செயற்படுவதற்கான ஒரு வடிவமாக இந்த சிந்தனைகள் இருந்தவரை தான் முற்போக்கானதாக இருந்தது. மற்றவை சமூகம் சாரதாகவும், தன்னை முதன்மைப்படுத்திய குறுங்குழுவாதமாகவோ அல்லது தனிநபர் வாதமாகவோ இருந்தன் மூலம், பாசித்துக்கு நிகரான பிற்போக்கான வரலாற்றுச் செயற்பாடாக இருந்தது.
சமூகம் சார்ந்து தேவையானதாகவும் தர்க்க ரீதியானதாகவும், தவிர்க்க முடியதாகவும் இருந்த தனிநபர் மற்றும் குறுங்குழுவாத சிந்தனைகள் மற்றும் செயற்பாடுகள் கூட, ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்த பாட்டாளி வர்க்க நடைமுறையிலான அரசியல் அமைப்பு உருவாகும் வரைதான் அது முற்போக்கானது. அதன் பின்னும் அப்போக்குத் தொடருமாயின், அவை அனைத்துமே பிற்போக்கானவை தான்.
யுத்தம் முடிவடைந்ததன் பின், பாட்டாளி வர்க்க இயக்கம் தன்னை மறுபடியும் மீள் உருவாக்கம் செய்து கொண்டபடி, முனைப்புடன் இயங்க முயற்சிக்கும் இன்றைய நிலையில், அதை முடக்கின்ற ஒன்றாகவே குறுங்குழுவாதமும் தனிநபர் வாதமும் நடைமுறையில் முன்னெடுக்கப்படுகிறது. பாட்டாளி வர்க்கம் தனது புத்துருவாகத்தின் பின், இன்று அது தனது குழந்தைப் பருவத்தில் காலடி எடுத்து வைத்திருக்கின்றது. ஆனால் அதைக் கொன்று விடும் முயற்சியில், நடைமுறையற்ற சிந்தனை முறை மூலமான எதிர் அரசியலை முன்வைக்கின்றனர்.
சமூக இயங்கம் என்பது குறித்த வரலாற்றுச் சூழலுடன் தொடர்புபட்டது. சமூகத்ததைக் கடந்த வெற்றுக் கோசங்களோ, வெறும் சிந்தனையலோ சமூக இயக்கத்தை அளக்க முடியாது. மாறாக சமூகத்தின் உள்ளார்ந்த எல்லா முரண்பாடுகளையும், அது சார்ந்த சிந்தனைகளையும், அதன் நடைமுறை இயக்கத்தில் வைத்து பரீட்சித்தாக வேண்டும். யார் நடைமுறை இயக்கத்தில் இருந்து விலகி இருக்கின்றனரோ, அவர்களின் சிந்தனைகள் என்பது சமூக இயக்கத்திலான சிந்தனைக்கு செற்பாட்டுக்கும் முரணாது.
உண்மையில் நடைமுறையிலான சமூக இயக்கத்தை இழுத்து விழ்த்துகின்ற குறுகிய செயற்பாடுகளே இன்று குறுங்குழுவாதம், தனிநபர்வாதமுமாகும். இக் குறுங்குழுக்களும்- தனிமனிதர்களும், சமூக அரசியற் செயற்பாடுகளிற் தம்மை இணைத்துக் கொள்ளது, அவ்வகைச் செயற்பாடுகளில் ஈடுபடும் சமூகநலம் சார் சக்திகளில் நடவடிக்கைகளில் முரண்பாடுகளைக் கண்டு பிடிக்கும் வேலைகளில் திளைத்துள்ளனர். இதுவே சமூக வெளியில் தம்மை நிலை நிறுத்துவதற்கான ஒரே நடைமுறையாக மேற்படி குறுங்க குழுக்களும் - தனிமனிதர்களும் கைக் கொண்டுள்ளனர்.
இன்றுள்ள சமூகப் பொருளாதார சூழலில் மனித சமூகமோ ஒடுக்குமுறையால் கையறு நிலையில் அந்தரிக்கின்றது. ஆனாலும் வாழ்கையின் பொது நெருக்கடியால், தன்னியல்பான போராட்டங்கள் அங்குமிங்குமாக நடக்கத்தான் செய்கின்றது. இன்னிலையில் இது பற்றி நடைமுறையற்ற இந்தக் குறுங்குழுவாத, தனிநபர்வாத நபர்களின் உபதேசங்களுக்கு மட்டும் குறைவேயில்லை. சமூக முரண்பாடுகளை குறை கூறி, அதிசயமான கற்பனையான நம்ப முடியாத தீர்வுகளைக் கூட இவர்கள் முன்வைக்கின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களும், அதற்காக போராடுபவர்களும் தங்கள் கருத்துகளை உள்வாங்கி, செற்பாடுமாறும் சமூகத்துக்கு வெளியிலிருந்தவாறு கோரிக்கை விடுகின்றனர். மேலும் இவர்கள் சமூக முரண்பாடுகளை கருத்தியல் ரீதியில் வழிநடத்தும் மேய்ப்பர்களகத் தம்மை முன்னிறுத்தியபடி , தங்கள் கருத்தை அங்கரிக்கக்கோரி, நடைமுறையில் சமூக முரண்பாடுகளுக்கு எதிராகப் போரடுவோர்களின் நடைமுறை சார்ந்த அரசியற் கருத்தியலை மறுக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக தங்களை சமூக புரட்சியாளராக காட்டவும்- முன்னிறுத்தவும் முற்படுகின்றனர்.
இதன் அடிபடையில் தனிமனித மற்றும் குறுங் குழுவாதமும்:
1.கருத்துகளை முன்வைப்பதன் மூலம், சமூக மாற்றம் நடந்து விடுவதாக நம்புகின்ற கற்பனைவாதிகளை அடிப்படையாக கொண்டது சிந்தனையாகவும்
2.நடைமுறையற்ற தங்கள் கருத்துகளை எற்று, மற்றவர்களே சமூக முரண்பாட்டுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற மேலாதிக்கத்தை கொண்டதான சிந்தனையாகவும்
3. தங்கள் சொந்த நடைமுறையற்ற தனது கருத்துகளைக் கொண்டு, நடைமுறையிலான சமூக இயக்கத்தை முடக்கின்ற குழப்புகின்ற குழிபறிகின்ற எதிர் அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்கின்றனர்.
முடிவாக:
மிகவும் அரிதான சில சமூகப் பொருளாதார- அரசியல் சூழல் மற்றும் சந்தர்பங்களில் சிறு குழுக்களும், தனிநபர்களும் முற்போக்கான வரலாற்றுக் கூறாக இருக்க முடிகின்றது. உதாரணமாக பாசிசம் அனைத்து சமூக நிறுவனங்களையும் அடக்கியொடுக்கிவிடும் போது, பாசிசத்தின் பொதுவான கெடுபிடிகளை எதிர்த்துப் போராட்ட வேண்டிய சூழல் தனி மனிதர்களுக்கும், குழுக்களுக்கும் உருவாகுகிறது. ஆனால் இந்த பாசிச வரலாற்றுச் சூழலைக் கடந்த பின்னான காலத்தில் மேற்படி குழுக்களும் தனிமனிதர்களும், தொடர்ந்தும் தமது இருப்பை நிறுத்த - பாசிச காலத்தில் இயங்கியது போல இயங்க முடியாது. மாறாக மக்கள் நலன் சார்ந்த அரசியலிலேயே சமூகம் சார்ந்து ஈடுபடவேண்டும். அவ்வாறு இயங்காவிடத்து, அவர்களின் இருப்பு என்பது, ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அதன் சமூக இயக்கத்துக்கும் எதிரானதாக இயங்குகின்றது.
ஆரம்பத்தில் கூறியது போல - யுத்தத்துக்குப் பின்னான இக்காலத்தில், ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்து இயங்கும் மறு சீரமைப்புப் பெற்ற- வளர்ந்து வரும் பாட்டாளி வர்க்க இயக்கம், தன்னைக் கழுத்தை நெரித்துக் கொல்ல முனையும், குறுங்குழுவாதம் மற்றும் தனிநபர்வாதங்களை இன்று எதிர் கொள்கின்றது. ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களை வர்க்கமாக அணிதிரட்டுகின்ற வரலாற்றுக் கடமையில், லும்பன்தனம் கொண்ட உதிரி வர்க்க சார்ந்த மக்கள் விரோதப் போக்குகளை இனம் கண்டு கொண்டு, எதிர் கொள்வது அவசியமான அரசியலாக எம்முன்னுள்ளது.