10042023பு
Last updateபு, 02 மார் 2022 7pm

ஒரு இந்துத்துவ நாய் ஊளையிடுகிறது!!!

"அந்த நாயக்கன் அன்று ராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலமாக கொண்டு வந்த பொழுதே அவனை செருப்பால் அடித்திருக்க வேண்டும்" என்று தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ராஜா என்ற நாய் குரைத்திருக்கிறது. செய்திருக்கலாம் ஏன் செய்யவில்லை? கிட்டத்தட்ட நூறு வருடங்கள் வாழ்ந்தானே! இப்போது சொல்வதை அவன் உயிருடன் வாழ்ந்த போது செய்து காட்டியிருக்கலாமே. ஈ.வே ராமசாமியின் ஒரு முடியைக் கூட இந்த நாய்களால் தொட்டிருக்க முடியுமா?

வர்க்க வேறுபாடுகள் இல்லாத பொதுவுடமை பொருளாதார அமைப்பு, உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி இல்லாத சமுதாயம், பெண்ணடிமைத்தனம் இல்லாத அன்பும், காதலும் சரிசமானமாக களிக்கும் ஆண்கள், பெண்கள், மூட நம்பிக்கைகளை வளர்க்காத கலைகள், இலக்கியங்கள் என்று அவன் சகலத்திலும் மானுடத்தை தூக்கிப் பிடித்தான், அவற்றிற்காக எழுதினான், பேசினான், போராடினான்.

 

இந்த பன்னாடைகள் மானுடத்தின் எதிரிகள். பணம் ஒன்று தான் வாழ்க்கையின் குறிக்கோள் என்று வாழ்பவர்கள். பிராமணன் தலையிலே இருந்து தோன்றினான் என்று பைத்தியக்கதைகளை பிதற்றுபவர்கள். (என்னுடைய இவ்வளவு கால வாழ்க்கையிலே தலையாலே பிறந்த பிராமணன் எவனையும் நான் கண்டதில்லை.) பெண்களிற்கு சொத்தில் உரிமை கிடையாது, பதிக்கு அடிமையாக இருப்பதையே விரதமாக கொண்ட பதிவிரதை, கணவன் இறந்தவுடன் அவன் எரியும் நெருப்பில் உடன் கட்டை ஏற வேண்டும் போன்ற இதுகளின் பெண்ணடிமைத்தனங்களின் பட்டியல் மிக நீண்டது. மோகினி வேடத்தில் இருந்த விஷ்ணுவும், சிவனும் கூடி அய்யப்பனை பெற்றார்கள் போன்ற அரும்பெரும் புராணங்கள், உழைப்பாளிகளை, பழங்குடி மக்களை, ஆரியர் தவிர்ந்த பிற மக்களை அசுரர்கள், ராட்சதர்கள், அடிமைகள் என்று கேவலப்படுத்துகிற கதைகள் தான் இதுகளின் கலைகள்.

 

இந்த மானிட விரோதிகளிற்கு அவன் தன்னுடைய பேச்சாலும், செயலாலும் மரண அடி கொடுத்தான். மிக எளிய தமிழில், மக்கள் மொழியில் அவன் பேசினான். சில உதாரணங்களைப் பார்ப்போம். "சாதிப்பிரிவுகள் நான்கில் அதாவது பிராமணர்கள், சத்திரியர்கள் (அரச குலத்தவர்கள்), வைசியர்கள் (வியாபார குலத்தவர்கள்), சூத்திரர்கள் என்பவர்களில் முதல் மூன்று வகுப்பினர் ஆரிய சம்பந்தப்பட்டவர்கள். கடைசி வகுப்பார் சூத்திரர்கள் இந்தியாவின் புராதனக்குடிகள். இந்த நிலை உள்ள நாடு உலகத்தில் எங்காவது இருக்கிறதா? தமிழர்களிற்கு இது தெரியவில்லை என்றால் தமிழனுக்கு மானம், அறிவு, தேசாபிமானம், சமூகாபிமானம், மொழி அபிமானம் இருப்பதாக எப்படி சொல்லிக் கொள்ள முடியும்"?

 

"எல்லாவற்றையும் விடக் கேவலமானது தமிழனுடைய சமய அபிமானமும்,கடவுள் அபிமானமும் ஆகும். தமிழனை இழிவுபடுத்திய கதைகளே சமய வேதங்கள். தமிழ் பண்டிதர்கள் வெட்கமில்லாமல் நாலாயிரப்பிரபந்தம், தேவாரம், கந்தபுராணம், ராமாயணம் முதலிய ஆரியர்-திராவிடர் போர்க்கதைகளை தமிழர்களின் வேதங்கள், தமிழர்களின் சமய ஆதாரங்கள் என்கிறார்கள். ஜெர்மனியன் இங்கிலாந்தை சின்னாபின்னாபடுத்தியதையும், ஆங்கிலேயரை திட்டி எழுதியதையும் ஆங்கிலேயருடைய வேதமாக கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா? ஆனால் தமிழர்கள் என்ன செய்கிறார்கள்? தமிழனுக்கு அப்படிப்பட்ட கதைகள் தான் மத ஆதாரங்களாக இருக்கின்றன. கதைகளில் வந்தவர்கள் தானே தமிழனுக்கு கடவுள்களாக இருக்கிறார்கள்".

 

பெரியார் சொல்கிறார் "கற்புக்காக புருசனின் மிருகச்செயலை பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கின்ற கொடுமையான மதங்கள், சட்டங்கள் மாய வேண்டும்". ராஜா போன்ற லூசுகள் பாராயணம் செய்யும் ராமாயணத்திலே ஒரு துணி துவைக்கும் தொழிலாளி ராவணன் தூக்கிக் கொண்ட சீதை எப்படி கற்புக்கரசி என்று கேட்டதாக வருகிறது. உடனே ராமன் கற்பை நிரூபிக்க சீதையை தீக்குழிக்க சொல்கிறான். இதைப் போன்ற மிருகச்செயல்களை கற்பிக்கும் புராணங்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதால் தான் அவர் ராமாயணத்தை எரித்தார். ராமனுக்கு செருப்பு மாலை போட்டார்.

 

"சாஸ்திர புராண இதிகாசங்கள் (தமிழர்களாலே ஆக்கப்பட்டாலும்) அவை யாவும் அடியோடு ஒழிக்கப்பட்டால் ஒழிய தமிழன் மனித உரிமையோடும் மானத்தோடும் வாழ்ந்து சமநிலை அடைய முடியவே முடியாது என்பதை உணருங்கள். மற்றும் அவை வடமொழியில் இருப்பதை விட தமிழில் இருப்பதே தமிழருக்கு மிகுதியும் கேடு செய்யக் கூடியதாகும். அன்றியும் அவை வெறும் கதை, காவியம், புராணம் ஆகிய உருவில் இருப்பதை விட இலக்கியம், நாடகம், இசை ஆகியவற்றின் உருவிலே இருப்பது மிக மிக கேடு செய்யும் என்பது எனது முடிந்த முடிபாகும்.

 

"எப்படியாவது இந்த புராணங்கள் கூறும் ராமன், கிருஸ்ணன், சிவன், சுப்பிரமணியன், காளி, கெளரி முதலிய கடவுள்களையும் அவர்களைப் பற்றிய கலை, இலக்கியம், சினிமா, சங்கீதம் முதலானவைகளை அடியோடு ஒழிக்க வேண்டியதே நமது முக்கியமும், முதன்மையும் ஆன கடமையாகும் என்று உறுதி கொள்ளுங்கள்"

 

இந்துமத பயங்கரவாதிகளின் அந்த நாளைய மணிமேகலை பிரசுரமான "தண்டனைகள் கொடுப்பது எப்படி" என்ற புத்தகமான மனுநீதியில் "தாழ்குலத்தான் உயர்குலத்தானோடு சரிசமமாக உட்கார முயற்சி செய்தால் அவன் பின்பக்கத்தை வெட்டி எறிந்து விடலாம் என்று தீர்ப்பு கூறுகிறது. (மனு அத்தியாயம் 7.281). ஆகா என்ன ஒரு கற்பனை. அப்ப பெரியாரை செருப்பாலே அடித்திருக்க வேண்டும் என்று சொன்ன இந்த நாய்க்கு ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிப்படி எதை வெட்ட வேண்டும்.!!!


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்