Language Selection

போராட்டம் பத்திரிகை 01
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"சிஸ்டத்தை மாற்றி சம உரிமையைப் பெறுவோம்"

கேள்வி யுத்தம் முடிவடைந்து 3 வருடங்கள் கடந்து விட்டன. யுத்தம் முடிந்த கையோடு வடக்கு கிழக்கு மக்களுக்கு உரிமைகளை பெற்றுத்தருவதாக அரசாங்கம் கூறியது. அந்த வாக்குறுதி நிறைவேறியுள்ளதா?

ஜுட்:வடக்கு கிழக்கு ம்களுக்கு உரிமைகளை பெற்றுக் கொடுப்பதாக கூறிய அரசாங்கம், உரிமைகளுக்குப் பதிலாக மக்களுக்க மிலிடரி மாதிரியான ஆட்சியைக கொடுத்திருக்கிறது. தொடர்ந்தும் தமிழ் மக்களை அடிமையாக்கி வைத்துக் கொண்டு தமது இனவாத அரசியல் நோக்கத்தை பூர்த்தி செய்துகொள்வதற்காக யுத்த வெற்றியை பயன்படுத்தி வரும் அரசாங்கம், தமிழர் என்ற காரணத்தாலேயே இந்தப் பிரதேசங்களில் வாழும் மக்கள் மீது தொடுக்கப்பட்டு வரும் விஷேட அடக்குமுறை வேலைத் திட்டம் பாரதூரமானதாகும்.

யுத்தம் நடைபெற்றவிதத்தை ஆராய்ந்து பார்த்தால் அந்தக்காலகட்டத்தில் குடியிருந்த மக்கள் எறிகணை தாக்குதலுக்கு அஞ்சி தம்முடைய வீடு வாசல்ளைக் கைவிட்டு 10-15 மைல்களுக்கு அப்பால் சென்று தற்காலிக குடிசைகளை அமைத்துக்கொண்டு வாழத் தலைப்பட்டார்கள். அந்த இடங்களுக்கு அருகிலும் எறிகணைகள் விழத் துவங்கியதால் தற்காலிக கூடாரங்களை சுருட்டிக் கொண்டு மேலும்10-15 தொலைவுக்குச் சென்றார்கள்.

இவ்வாறு இடத்துக்கிடம் மாறிய மக்களில் பெரும்பாலோனேர் உயிரிழந்தார்கள். இறுதியாக புதுக் குடியிருப்பு, புதுமாத்தளன் பகுதிகளில் இடம் பெயர் முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்கள். புதுக் குடியிருப்பு மக்களின் வாகனங்கள், டிராக்டர். மோட்டார் சைக்கிலள், துவிச்சக்கர வண்டி ஆகியன குவிக்கப்பட்டு கொளுத்தப்பட்டு இற்றுப் போய்க் கொண்டிருப்பதை இன்று கூட காண முடியும். இவ்வாறு இடம் பெயர் முகாம்களில் ஓரிரு வருடங்கள் வாழ்ந்த மக்களில் ஒரு பகுதியை தாம் வாழ்ந்த இடங்களுக்கு அனுப்பியிருக்கிறார்கள். அந்த இடங்களில் வீடுகளோ, கிணறுகளோ, கழிப்பிடங்களோ இல்லை. அவைகள் முற்றாக நாசமாக்கப்பட்டுள்ளன. சிலரது காணிகளை இராணுவம் கைப்பற்றிக் கொண்டுள்ளது. சிலர் வாழ்வதற்குத் தகுதியில்லாத காட்டுப் பகுதிகளில் கைவிடப்பட்டுள்ளார்கள்.

மீள் குடியேற்றம் என்பது இந்த லட்சணத்தில்தான் உள்ளது. பெற்றார்கள், உறவினர்கள், நண்பர்கள், தமக்கு நெருக்கமானவர்கள் இல்லாமலாக்கப்பட்டுள்ளமை, இருப்பிடங்கள் இல்லாமலாக்கப்பட்டுள்ளமை, மனோரீதியிலான வீழ்ச்சி, வாழ்க்கை சிதைவு, கடுமையான இராணுவமயத்துக்கு மத்தியில் தமது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு அரசாங்கத்தினி ஒத்துழைப்போ, நியாயமான தலையீடோ கிடைப்பதில்லை. யுத்தத்தினால் அழிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் சமூக வாழ்க்கை, பொருளாதார வாழ்க்கை, கலாச்சார வாழ்க்கை ஆகியவற்றை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஆகக் குறைந்த தலையீடைக் கூட செய்யாத அரசாங்கம், மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கும் என்று நம்பிக்கை வைக்க முடியாது.

கேள்வி:தமிழ் மக்களின் தலைவர்களாக பிள்ளையான், கருணா, டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களை தமிழர்களின் தலைவர்களாக அரசாங்கம் முன்னிலை படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் கே.பியைக் கூட மேடைக்கு அழைக்க அரசாங்கம் முதயாராகி வருகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் இந்த தலைமையை ஏற்றுக் கொள்கிறார்களா?

ஜுட்:நிபந்தனையில்லாமல் முதலாளித்துவ அரசாங்கத்தின் மடியில் அமர்வதற்கும் முதலாளித்து நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றபடி எதையும் செய்வதற்கும் விருப்பத்துடன் தயாராக இருக்கும் சிலரை தமிழ் மக்களின் தலைவர்களாகக் காட்ட அரசாங்கம் முயற்சி செய்கிறது. அரசாங்கத்தினது இவ்வாறான அரசியல் குழுக்களினதும் அரசியல் நடவடிக்கைகளுக்காக ஒடுக்கப்ட்ட தமிழ் மக்கள் இராணுவத்தைக் கொண்டு பலவந்தமாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அந்தத் தலைமையை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

கேள்வி: தமிழ் மக்களின் தலைவர்களாக தமிழ் தேசியக் கூட்டணி முன்னிலை பெறுகிறது. நீங்கள் அவர்களையும் விமர்சிக்கிறீர்கள். இந்த விமர்சனத்துக்கு அடிப்படை என்ன?

ஜுட் :தமிழ் தேசியக் கூட்டடணி தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகான இந்தியா உள்ளிட்ட வல்லாதிக்க நாடுகளின் தலையீட்டையே எதிர்பார்க்கிறது. தமது பொருளாதார, அரசியல் நோக்கங்களை பூர்த்தி செய்துக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்துவதற்காக தமிழ் மக்களின் பிரச்சினைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குத் தேவைப்படுகிறது. இந்திய அரசாங்கம் கூட தமது பிராந்திய அரசியல் பலத்தை நோக்கமாகக் கொண்டே தமிழ் மக்களின் பிரச்சினையை முகாமைத்துவம் செயகிறது. இவ்வாறாக இந்தியா உள்ளிட்ட வல்லாதிக்க நாடுகள் விடயத்தில் நம்பிக்கை வைத்து செயல்டுவதால் தமிழ் முதலாளித்துவ கனவான்களின் அரசியல் இருப்பை மட்டுமே உறுதி செய்ய முடியும். ஒடுக்கப்பட் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை.

கேள்வி : சம உரிமைகள் இயக்கம் எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டது? அதில் பங்கேற்பவர்கள் யார்?

ஜுட் : பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் சிங்கள, தமிழ் முஸ்லிம் என்ற வகையிலும் இன தனித்துவங்களுக்கு ஏற்பவும், மத அடையாளங்களுக்கு ஏற்பவும் மக்களை பிரித்து வேறாக்கி ஆட்சி செய்தார்கள்.

முதலாளித்துவ ஆளும் வர்க்கம் ஒருமுறை சிஙகள இனவாதத்தையும் , மறுமுறை தமிழ் இனவாதத்தையும், மேலுமொரு முறை முஸ்லிம் இனவாதத்தையும் தமது ஆட்சியின் தேவைக்காக வரலாறு பூராவும் பயன்படுத்தி வந்ததன் விளைவாகத்தான சிங்கள தமிழ் முஸ்லிம் உயிர்கள் ஆயிரக்கணக்கில் காவு கொள்ளப்பட்ட மூன்று தசாப்த கால யுத்தத்துக்கு வழிவகுக்கப்பட்டது. அதனால் இன்றும் கூட சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் பரஸ்பர நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. யுத்தத்துக்குப் பின்னரான கடந்த காலங்களில் முதலாளித்துவ அரசாங்கத்தினால எடுக்கப்பட்ட நடவடிக்கை மூலமாகவும் மக்கள் ஒருவரையொருவர் முறைத்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இனவாத யுத்த வெற்றிகள் எப்போதுமே தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களுக்கு அல்லாமல், முதலாளித்துவ ஆளும் வர்க்கத்துக்கு மாத்திரம் வெற்றிகளை கொடுத்திருப்பதை சொல்ல வேண்டியதில்லை. இந்த பின்னணியல் தேசிய தனித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட, ஒருவரையொருவர் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் அரசியல் காரணமாக உண்மையான வர்க்கப் பிரச்சினை அடிபட்டு இன மற்றும் மத தனித்துவங்களை முன்னிலைபடுத்தி அவற்றைப் பெற்றுக் கொள்ளும் போராட்டத்துக்குள் ஒடுக்கப்பட்ட மக்கள் சிக்க வைக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறாக நடைமுறையிலுள்ள பிற்போக்குத்தனம் காரணமாக சிங்கள, தமிழ், முஸிலிம் ஒடுக்கப்பட்ட மக்கள் தமது உரிமைகள் என்று அறிந்துக் கொள்வது, அனைத்து ஒடுக்கப்ட்ட மக்களுக்கும் மறுக்கப்பட்ட உரிமைகளையல்ல, தமது தேசிய தனித்துவம் சார்ந்தவற்றை பெற்றுக் கொள்வதைத் தான் அவர்கள் உரிமை என்று நினைக்கிறரார்கள். இதனால் மக்களின் உண்மையான பிரச்சினைகள் மறைக்கப்படுகின்றன. இப்படியாக உண்மையான வர்க்க பிரச்சினை அடிபடுத்திவிட்டு சிங்களவனுக்கு எதிராக தமிழன், தமிழனுக்கு எதிராக சிங்களவன் என்ற வகையில் உண்மையான வர்க்க முரண்பாட்டை வேறுபக்கம் திருப்பப்பட்டிருக்கிறது. உண்மையாகவே அனைத்து ஒடுக்கப்ட்ட மக்களும் தமது வர்க்கத்தின் உரிமைகளை வென்றுக் கொள்வதற்கு ஒன்று சேர்வதாயிருந்தால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சம உரிமையை பெற்றுக் கொள்ளும் போராட்டத்தை துவங்க வேண்டும். சம உரிமை இயக்கத்தின் அடிப்படை நோக்கமாக இருப்பது, இந்நாட்டில் வாழும் அனைத்து சிங்கள, தமிழ், முஸ்லிம் தேசியப்பிரஜைகளுக்கு எல்லா விதத்திலும் சம உரிமைகள் இருக்க வேண்டும் கல்வியில், சுகாதாரத்தில், பொருளாதாரத்தில் வேலை வாய்ப்பில் மற்றும் அடிப்படைத்தேவைகளை வழங்குவதில் சம உரிமை கிடைக்க வேண்டும். அதாவது இனம், மதம், மொழி, குலம் அந்தஸ்து என்ற வசையில். அதற்காக ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைத்து மக்கள் தொகையில் குறைந்த விகிதாரத்தைக் கொண்டுள்ள மிழ் முஸ்லிம் உள்ளிட்ட ஏனைய தேசியப் பிரஜைகளுக்கும் சமஉரிமைகளைப் வென்றெடுக்கும் போராட்டத்தைத் துவங்க வேண்டும்.அதனை வெறுமனே வார்த்தைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல், இனவாதத்தைத் தோற்கடித்து, ஒடுக்கப்பட்ட தேசிய மக்களுக்கான சம உரிமைகளை வென்றுக் கொள்வதற்காக போராடுவதே எமது நோக்கமாக இருக்கிறது. மட்டுமல்லாமல், உரிமைகளுக்காக உண்மையாகவே போராடும் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஒடுக்கப்பட்ட மக்களின், புத்தி ஜீவிகளின் மனிதநேயர்களின் மத்திய நிலையமாக இதனைக் கட்டியெழுப்ப வேண்டும்.

கேள்வி :எதிர் காலத்தில் சம உரிமை இயக்கம் என்ற வகையில் இனவாதத்தை ஒழிக்கவும், மக்களுக்கு சம உரிமையை வழங்கவும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் எத்தகையதாக இருக்கும்?

ஜுட் : முதலாவதாக யுத்தத்தினால் நாசமாக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். யுத்தத்தினால் ஏற்பட்ட உயரிழப்புக்கள் மற்றும் சொத்தழிப்புக்களுக்காக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான இழப்பீடைப் பெற்றுக் கொள்ளும் உரிமையை ஏற்றுக் கொண்டு, அதற்காக நாங்கள் எல்லோரும் சேர்ந்து போராட வேண்டும். காணி மற்றும் ஏனைய சொத்துக்களை அரசாங்கத்தின் தலையீட்டோடு அபகரித்துக் கொள்வதற்கு எதிராகவும், விவசாயத்துக்கான நிலம், நீர், பசளை உள்ளிட்ட ஏனைய நிவாரணங்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும் நாங்கள் எல்லோரும் சேர்ந்து போராட வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கைதிகளினதும் தகவல்களை அவர்களது உறவினர்களுக்கு வெளிப்படுத்துவதோடு, அவர்களை உடனே விடுதலை செய்து கொள்வதற்காக அரசாங்கத்தை நாங்கள் வற்புறுத்துகிறோம். இவ்வாறாக வடக்கு கிழக்கு மக்களின் அழிக்கப்பட்ட பொருளாதார, சமூக, கலாச்சார வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்காக சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைத்து மக்களோடும் சேர்ந்து போராடுவது எங்களது நோக்கமாக இருக்கிறது.

மலை நாட்டு மற்றும் கீழை நாட்டு இறப்பர் தோட்டங்களை அண்டி வாழும் தமிழ் தொழிலாளர் மக்களுக்கு உண்மையான குடிமகனுக்குறிய அடிப்படை உரிமைகள், அதாவது. வீடு, கல்வி, சுகாதாரம், நியாயமான சம்பளம் ஆகிய வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்காக அந்த மக்களோடு சேர்ந்து போராடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இன்று முஸ்லிம் மக்களுக்கு எதிரான அரசாங்கத்தின் சிங்கள இனவாத நோக்கத்தை நிறைவேற்றக் கூடிய பல்வேறு செயற்பாடுகளை நாங்கள் பார்க்கிறோம். முஸ்லிம் பள்ளிவாயல்களை உடைப்பதற்காக சிங்கள மக்களை தூண்டுதல், முஸ்லிம் வியாபாரிகளின் கடைகளில் பொருட்களை வாங்காதிருக்குமாறு வற்புறுத்தும் விதத்தில் தர்ம போதனை செய்தல் போன்ற செயல்களை நாங்கள் காண்கிறோம். இது பௌத்த பிக்குகளின் தனிப்பட்ட நோக்கமல்ல, அரசாங்கத்தின் குறுகிய இனவாத அரசியல் நோக்கத்துக்காக மேற்கொள்ளப்படும் அரசாங்கத்தின் திட்டமிட்ட செயலாகும் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இங்கே உண்மையான அரசியல் எதிரியை அறிந்து, முஸ்லிம் மக்களோடு சேர்ந்து அதற்கெதிராகப் போராடுவதும் எங்களது நோக்கமாக இருக்கிறது. இவ்வாறாக சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களோடு சேர்ந்து இனவாதத்தை தோற்கடித்து சம உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக போராடுவோம்.

கேள்வி : வடக்கில் பாரிய அடக்குமுறையொன்று நிலவுகிறது. அவ்வாறான ஆபத்தோடு தான் நீங்களும் வடக்கில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறீர்கள். மக்கள் போராட்ட இயக்கத்தின் லலித் மற்றும் குகன் ஆகியோர் கடத்தப்பட்டார்கள். இது வரை அவர்கள் பற்றிய தகவல் இல்லை. இந்த நிலைமையில் நீங்கள் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் என்ன?

ஜுட் :யுத்தம் முடிந்து சில வருடங்களாகிவிட்டன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவமய ஆட்சியே நடைமுறையில் இருக்கிறது. தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கைது செய்வதற்கும், தடுத்து வைப்பதற்கும் வதை செய்வதற்கும் பொதுவான சட்ட திட்டங்கள் நீதி தர்மங்கள் அரசாங்கத்துக்குத் தேவைப்படுவதாகத் தெரியவில்லை. அதன் முழு உரிமையும் அரசாங்கப் படைகளின் கைகளிலேயே இருக்கிறது. அரசாங்கத்தின் உத்தியோக மற்றும் உத்தியோகப்பற்றற்ற ஆயுதக் குழுக்களின் ஊடாக நாடுபூராவும் செயல்படுத்தப்பட்டு வரும் காணாமலாக்கல் மற்றும் கடத்தப்படல் போன்றவற்றையும் தாண்டிய விஷேட நிலைமையொன்று வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருக்கிறது. யுத்தத்தின் வெற்றியை தொடர்ந்து ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை அடிமைகளாக வைத்துக் கொண்டு தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவர்களது இயலாமையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் அரசாங்கம், தமிழர் என்ற காரணத்தினாலேயே இந்தப் பிரதேச மக்கள் மீது தொடுக்கப்படடிருக்கும் அடக்குமுறை மோசமானதாகும். எல்டீடீயின் தோல்வி, தமிழ் மக்களின் தோல்வி என்று தெரியும் விதமாக செயல்படுவதன் மூலம் ராஜக்ஷ அரசாங்கத்தின் வர்க்க மற்றும் இனவாத கட்சி அரசியல் நோக்கத்தை சரியாக அறிந்துக் கொள்ள வேண்டும்.

நிருவாக நடவடிக்கைகள் மற்றும் சிவில் நடவடிக்கைகள் அனைத்தையும் பாதுகாப்புப் படைகளே செய்கின்றன. வடக்கு மற்கும் கிழக்கு பிரதேசங்களில் வாழும் மக்கள் அரசாங்கத்தினதும் அரசாங்கத்தின் அனுசரணையைப் பெற்ற அரசியல் குழுக்களினதும் அரசியல் நடவடிக்கைகளுக்காக ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ராணுவம் பலவந்தமாக அழைத்துச் செல்வதோடு, வேறு அரசியல் குழுக்களுக்கு அரசியலில் ஈடுபடும் ஜனநாயக உரிமையைப் பறிப்பதற்கு அடக்குமுறையைக் கையாள்கிறது.

வடக்கில் யுத்தம் முடிவடைந்த கையோடு ஒடுக்கப்பட்ட மக்களோடு கைகோர்ப்பதற்காக தெற்கிலிருந்து வந்த தோழர் லலித்தும், அதற்காக வடக்கிலிருந்து வேலை செய்த தோழர் குகனும் அரசாங்கத்தின் பாதுகாப்புப்படைகளால் கடத்தப்பட்டார்கள். இது தான் அரசாங்கத்தின் உண்மையான தந்திரம்.

மக்களின் வாழும் சுதந்திரத்தையும், தான் விரும்பும் அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமையையும் பெற்றுக் கொள்வதற்காக மக்களோடு சேர்ந்து எங்களுக்கிருக்கும் ஆகக் கூடிய ஜனநாயக உரிமைகளின் கீழ் போராட்டத்தில் ஈடுபட நாங்கள் தயாராக இருக்கிறோம். நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் அவ்வாறான செயற்பாட்டுக்கு சென்றுக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி :நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக பெரும்பாலானவர்கள் மேற்கத்தைய நாடுகளையும், இந்தியாவையும் எதிர்ப்பார்த்திருக்கிறார்கள். அது குறித்து உங்களுடைய கருத்து என்ன?

ஜுட் :தமிழ் மக்களின் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காக என்ற போர்வையில் வல்லாதிக்க நாடுகளும் இந்தியாவும் தமது அரசியல் நோக்கங்களுக்காக தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஏலம் போடும் செயலில் இறங்கியுள்ளன.

தமிழ் நிலங்களை தமது பொருளாதாரத் திட்டங்களுக்காக விலைக்கு வாங்கும் இந்தியாவின் திட்டம் குறித்து சிறந்த உதாரணம், சாம்பூர் விஷேட பொருளாதார வலயம். அதே போன்று இந்தியா உள்ளிட்ட ஏனைய ஏகாதிபத்திய நாடுகள் இலங்கையை தமது அரசியல் நோக்கங்களுக்காக முகாமைத்துவம் செய்வதற்கு வற்புறுத்துவதற்கான ஆயுதமாக தமிழ் மக்களின் பிரச்சினைகளை பயன்படுத்துகிறார்களேயன்றி, அவற்றைத் தீர்ப்பதற்காக தலையிடுவதில்லை. தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமாயிருந்தால் அவர்களுக்கு தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்ந்து இருந்துக் கொண்டே இருக்க வேண்டும். அதுதான் இந்தியா உள்ளிட்ட ஏகாதிபத்தியவாதிகளின் நோக்கம்.

குறிப்பு: போராட்டம் பத்திரிக்கை இதழ் ஒன்றில் (ஜனவரி 2013) வெளிவந்த நேர்காணல் இது