இன்று இலங்கையில் நிலவும் இனமுரண்பாட்டை, மத முரண்பாட்டை எப்படிக் கையாள்வது என்ற கேள்விக்கு விடைகாணவேண்டும். நாங்களும் இனவாதியாக தொடர்வதா, மதவாதிகளாக இருப்பதா என்ற அடிப்படையான கேள்விக்கு, பகுத்தறிவுள்ள அனைவரும் சிந்திக்கவும், பதிலளிக்கவும் வேண்டும். தவறான கண்ணோட்டத்தையும், நடத்தைகளையும் மறுத்து, அதற்கு எதிராக வாழ்தலும் போராடுதலும், சுயவிசாரணை விமர்சனபூர்வமாக செய்வதும் தான், அடிப்படையான அரசியல் நேர்மையாகும். இந்தவகையில் சமூக விரோதம் கொண்ட இனவாதத்தை, சமூகம் சார்ந்து எப்படி எதிர்த்து நிற்கின்றோம் என்பதை நடைமுறையில் நிறுவியாகவேண்டும். இன்றுள்ள அரசியல் பணி இதுதான். இதைத்தான் இன்று சமவுரிமை இயக்கம் உங்கள் முன் நடைமுறையாகவும், நடைமுறையாக்கவும் கோருகின்றது.
{play}http://www.tamilcircle.net/audio/Ilakkiya_london_raya/Ilakkiya_london_raya.mp3{/play}