இது ஒருசுனாமியல்ல
சூழ்ச்சிகள் திரண்டழித்த வரலாறு
நீதியும் மனிதநேயக் குரல்களும்
படைகளை சூழவிட்டு
பரிதவித்த உயிர்களை பலியிட்ட அழிப்பு
பொறிக்குள் வீழென
காவுகொடுக்கப்பட்ட காட்டிக்கொடுப்பு
கோலாலம்பூர் சேதிகள்
மக்களிற்கு சொல்லப் படவேண்டும்
பின்னப்பட்ட சதிவலைப்
பின்னணிகளை சொல்லிவிடுங்கள்
வாடிவிடாது பயிர்
வேரிருக்கும் விதையிருக்கும் துளிரும் தழைக்கும்
ஆலவிருட்சமாய் பரவும்
எங்கள் வீதியும் தெருக்களும்
வித்தாகிய கொடைகளால்
நாளை முளையெழும்பக் காத்துக்கிடக்கிறது
பின்னப்பட்ட சதிவலைப்
பின்னணிகளை சொல்லிவிடுங்கள்
மீள நிமிர்வதற்கு
மிஞ்சி வந்தோர் வாழ வழிவிடுங்கள்
கடந்துவந்த கொடுகாலம்
மீளச் சூழாதிருக்க
மூடியபேச்சுக்களின் முடிச்சுக்களை அவிழுங்கள்
சிந்தியகுருதி போதும்
குண்டுபட்டுச்சிதறியோடி அலறி எல்லாம் வீழ்ந்ததேன்
நாடுகடந்து தமிழீழ குமாரர்களே
அன்னியக்கூட்டோடு போட்ட ஒப்புதல் யாதெனத்கூறுக?
நாளைய தலைமுறைக்கு
எம்பலமே எம்வாழ்வை விடுவிக்கும் நம்பிக்கை பிறக்கட்டும்
-11/10/2012