07302021வெ
Last updateபு, 28 ஜூலை 2021 10am

பழ-றிச்சட் உரை

கடந்த 27-28-29-30 ம் திகதிகளில் யாழ்ப்பாண பழ்கலைக்கழகத்தில் பாரிய அத்து மீறல்கள் இடம்பெற்றிருக்கின்றன.மாணவ தலைவர்கள் செயலாளர்கள் என பலர் கைது செய்யப்பட்டுள்ளர் இன்று வரைக்கும் எதுவித விசாரனையும் நடத்தப்படவில்லை.இறந்த தங்களது உறவினர்களுக்காக தீபம் ஏற்றிய யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது இராணுவத்தரால் காடைத்தனமான அடக்கு முறை பிரயோகிக்கப்பட்டுள்ளது.போலி அபிவிருத்தியைக் காட்டி இளைஞர்களை அவர்களது வலையில் சிக்க வைக்க இந்த அரசு எத்தனிக்கிறது.

பழ-றிச்சட்  உரை

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=_xTHMQTUg0c

இதற்கு ஒத்துழைப்பு வழங்காவிடின் அரசு இவர்களை பயங்கர வாதிகள் என்று முத்திரை குத்தி விடுகிறது.பல்கலைக் கழகத்த்திற்குள் சுற்றி வளைத்து இராணுவத்தினர் தேடுதல் நடாத்துகின்றனர். அப்பாவி மாணவர்களை கைது செய்து நீதிக்கு புறம்பாக அவர்களை நீதிமண்றத்தில் ஆஜர்படுத்தாது விசாரனை நடத்துகின்றனர் இதுவே மகிந்தவின் நீதி.; இவ்வாறு இன்று கொழும்பில் நடைபெற்ற சமஉரிமை இயக்கத்தின் பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய இயக்கத்தின் உபசெயலாளர் ப.றிச்சட் கூறினார் அவர்தொடர்ந்து உரையாற்றுகையில்

மாணவர்களின் கைது நடவடிக்கைக்கு பிரதான காரணம் இறந்த தங்களது உறவுகளுக்கு தீபம் ஏற்றியதே. எவ்வளவு கொடுமைகளை நிகழ்த்துகிறது மகிந்த அரசு.அரச சார்புள்ள சிறி ரெலோ அலுவலகம் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதெனக் கூறி பல்கலைக்கழக மாணரவர்கள் கைது செய்யப்பட;டுள்ளார்கள். நாட்டில் மிலேச்சத்தனம் மேலோங்கி காணப்படுகின்றது. இப்படியான ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் தொடருமானால் நாட்டில் அமைதி இன்மை ஏற்படும் அதற்கும் இந்த அரசுதான் பொறுப்புக் கூற வேண்டும்.மகிந்தவின் இராணுவ ஆட்சியை இல்லாதொழிக்க அனைவரும் முன் வாருங்கள் என நாட்டின் சகல மக்களுக்கும் அறைகூவல் விடுத்தார்.


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்