ஈழப்படுகொலைக் கோரம்
காணொளிகளாய் பரவியபோது
கண்கள் குளமாகி பெருக்கெடுத்தோடியதாம்
கருணாநிதி முதல்வரம்மா
அன்னை சோனியாவுக்கும் தானாம்
எல்லாம்
ஆசிய அணையுடைத்து
மகிந்தகுடும்பத்தை
வாரியள்ளிப்போகப்போகிறதாம்
பாருங்கள்
பாரதத்தாய் படும் அவலத்தை
யாருக்காய் இந்த உயிர்போகிறது
ஜயோ இந்த அவலம்
இன்னமும் ஏன்
இந்திய தேசத்தை எழுப்பவில்லை
என் குழந்தை
எனும் உணர்வு ஏன்கிளம்பவில்லை
இதுகும் முள்ளிவாய்க்கால்
மனிதத்தை தின்பதில்
மன்மோகன்சிங்கும் மகிந்தவும்
எல்லாத்தேசமும் ஓரணியில்
தெருவிறங்கிப்போராடி
இந்தியதேசம் விடியுமெனின்
அருகிருக்கும்
தேசமக்களிற்கு அதுபோதும் உறவுகளே!
13/04/2012