உலக சமாதான சட்டப்புத்தகத்தில்

சிறிலங்கா வெற்றி கொண்டு விட்டது

கோத்தபாயவின் யுத்தவெறி

அவமானப்பட்டியலில்

வெற்றியைத் தேடிக்கொடுத்திருக்கிறது

 

எங்கள் தேசக்குழந்தைகள்

குதூகலித்துக்கிடக்கிறார்கள்

எல்லோரிடமுமிருந்த துப்பாக்கிகளையும்

ராஜபக்சக்கள் மீட்டெடுத்து விட்டார்கள்

அகலத்திறந்து கிடக்கிறது

இரத்தத்தால் தோய்த்தெடுக்கப்பட்ட தீவு

சூரியக்குளியலிற்காய் சிவந்து கிடக்கிறது

வாருங்கள்

சுற்றுலாத்தளங்கள் வரவேற்கிறது

12/06/2012