பீகார் , நிலப்பிரபுத்துவ கொடுகோன்மையும் மேல்சாதி ஆதிக்கவெறியும் கோலோச்சுகின்ற இந்திய மாநிலம் இராஜபுத்திரர்கள், ப+மிகார், குர்மி , யாதவ் போன்ற மேல்சாதி நிலப்பிரபுக்களும் , சாதி ஆதிக்க சக்திகளும் தான் கிராமப்புறங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து அதிகாரம் செலுத்தி வருகின்றனர். இவர்களே தேர்தலில் நின்று வெற்றி பெற்று எம். எல். ஏ , எம்.பி , மந்திரி பதவிகளை கைப்பற்றிக் கொள்கின்றனர் அரசு அதிகாரிகள். பொலிசு, ஓட்டுக்கட்சித் தலமை அனைவரும் கைப்பாவைகள் தான்.
இம் மத்திய கால அடக்குமுறையையும் சுரண்டலையும் எதிர்த்து புரட்சிகர இயக்கங்களிலும் , விவசாய சங்கங்களிலும் இணைந்து போராடும் தாழ்த்தப்பட்டவர்களையும் கூலி-ஏழை விவசாயிகளையும் ஒடுக்குவதற்காகவே "சேனைகள்" என்ற பெயரில் சாதிக்கொரு கொலைப்படைகளை உருவாக்கியுள்ளனர் இந்நிலப்பிரபுக்கள்.
எனவே ஆயுதந்தாங்கிப் படுகொலைகள் புரிந்து வரும் இந்த எதிர்ப்புரட்சிக்கும்பலை எதிர்த்து வரும் நக்சல்பாரிப் புரட்சியாளர்களான மாவோயிச கம்ய+னிச மையத்தினர் (எம்.சி..சி) தங்களைத் தற்காத்துக்கொள்ளவும் , நிலப்பிரபுக்களின் நிலங்களையும் , விளைச்சலையும் கைப்பற்றி மறுவிநியேகம் செய்யவும் , தங்களின் செல்வாக்குள்ள பகுதிகளில் வரிவசூல் செய்யவும் , தங்களின் ஆணைகளை-தீர்ப்புகளை அமுல்படுத்தவும் தற்காப்புக்குளுக்களையும் ,கெரில்லாப்படைகளையும் கட்டி போராடி வருகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் 20 ந் திகதியன்று மாவோயிச கம்ய+னிச மையத்தின் (எம் .சி .சி) கெரில்லாக் குழவினைச் சேர்ந்த 200 ற்கு மதிகமான தோழர்கள் இம் மாநிலத்தின் மீது தாக்குதலொன்றை நடாத்தினர். 5 பொலிசார் இத் தாக்குதலின் போது உயிரிழந்ததுடன் பொலீசு நிலையம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. பதினான்கு கைத்துப் பாக்கிகளையும் 1000 சுற்றுக்கான ரவைகளையும் புரட்சியாளர்கள் கைப்பற்றிச்சென்றனர். தாக்குதல் நடந்த பின்பு "மாவோயிச கம்ய+னிச மையம்" வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில் "பொலீசாரைக் கொல்வது எங்கள் எண்ணமல்ல பொலீசுநிலையத்தை தீக்கிரையாக்குதும் , ஆயுதங்களை கைப்பற்றுவதும் தான் எங்களது திட்டம் . நாங்கள் இன்னும் பல பொலீசாரைக் கொன்றிருக்கமுடியும் ஆனால் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை நாங்கள் சில பொலீசாரை பிடித்து வைத்திருந்து பின்னர் விடுவித்து விட்டோம். நெருக்கடியான கட்டத்திலும் தற்காப்பிற்காகவும் தான் நாங்கள் தாக்கவேண்டியுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளனர். இவ் உண்மைகளை மழுப்பிவிட்டு ஆளும் வர்க்கமும் , முதலாளித்துவ பத்திரிகைகளும் மாவோயிச கம்ய+னிச மைய புரட்சியாளர்களை "வன்முறையாளர்கள்" என தூற்றி வருகின்றனர்.
ஆனால் டிகாரி பகுதியைச் சுற்றி வாழும் பெரும்பாலான உழைக்கும் மக்கள் இத்தாக்குதலை ஆதரித்துள்ளனர் . கோன்ச் எனும் கிராமத்தைச்சேர்ந்த ராம்வதார் "நாங்கள் ஒருபோதும் எம்.சி . சி செயல்வீரர்களைக்கண்டு அஞ்சியதில்லை. கிரிமினல்கள் பொலீசுக்காரனாகவோ, அரசியல்வாதியாகவோ , இல்லை சாதாரண நபராகவோ எந்தப்போர்வையிலிருந்தாலும் எம.சி.சி அக்கிரிமினல்களைக் கொன்றொழித்து நன்மை புரிகின்றது" என வெளிப்படைளாகவே பத்திரிகைளுக்கு பேட்டியளித்துள்ளார். நக்சல்பாரிப் புரட்சியாளர்களின் கீழ் அணிதிரண்டுள்ள பீகாரின் கூலி -ஏழை விவசாயிகள் நிலத்திற்காகவும் சனநாயக உரிமைகளுக்காகவும்தான் ஆயுதம் ஏந்தியுள்ளார்கள்.
இவ் வர்க்கப் போர் ஒரு புதிய விடியலுக்கானது . எனவே இது நிச்சயமாக ஒரு மாலை நேர விருந்தினைப்போல இருக்கமுடியாது .
நன்றி
தகவல்-புதிய ஜனநாயகம்.