Language Selection

சமர் - 19 : 05/09 -1996
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சரிநிகர் 92ல் மனித உரிமைக ளுக்கான பல்கலைக்கழக ஆசிரி யர் சங்க உறுப்பினர் கலாநிதி சிறிதரனின் வாக்குமூலத்தைப் பார்ப்போம்:-


"புலிகளின் பிரதான அரசியல், யுத்தம் யுத்தம் என்பது, தீய சக்தி யாக தொழிற்படுவதாகும். புலி களின் தீய இயல்பு, சிங்கள அரசை மிகவும் பயமுறுத்தலுக்கு உள்ளாக்குகின்றது. இச் செயலி னால் சிங்கள, தமிழ் மக்களிடை யே நம்பகமற்ற தன்மை ஏற்படுகிறது.’’

என்று புலம்பும் சிறிதரன் இன வாதிகளின் காவடியாக எல்லாம் புலிகளே எனக் கூறுகின்றார். புலி களின் தோற்றமும், அதன் அடிப்ப டையும் இனவாத என்ற சிங்கள அரசு சார்ந்து உருவானதே. தமிழ்- சிங்கள மக்கள் நம்பகமற்ற தன்மை புலிகளுக்கு முன்பே இதே இனவாத அடிப்படையில் இருந்தது. ஆனால் இன்று சந்தி ரிக்காவின் சீலையில் தொங்கும் கலாநிதிகளான சிறிதரன் புலிகள் மீது குற்றம் சாட்டுவதன் மூலம் தனது இனவெறி பச்சோந்தித் தனத்தை மூடி மறைத்துவிட முடியுமா என்ன? ‘’தமிழ் மக்களுக்கு புலிகளைத் தவிர வேறு வழியில்லையா?’’ என்று தலைப்பிட்டதன் மூலம் மாற்றுத் தலைமை இனவாத சந்திரிகா அரசே தமிழ் மக்களின் மாற்றுத் தலைமை எனப் பிரகடனம் செய்கின்றனர். சபாஷ்!மௌனம் 6ல் இனவெறி ஆசிரியர் தலையங்கத்தில்

‘’சிறிலங்கா அரசினதும், பெரும் தேசிய இன வெறியாளரதும் களிப் பையும், குதுகெலத்தையும் இறுமாந்த உரைகளையும் பார்த்தால்.... எல்லாள      னை வெற்றிகொண்ட துட்டகைமுனு வின் உள்ளக் கிடக்கையும் இனவெறி வக்கிரத்தையம் பறைசாற்றுகிறது.’’

இப்படி மௌனம் மௌனமாக இருப்பதாக நடித்தபடி பச்சை இன வாதிகளாக வரலாற்றையே புரட்டி விடுபவர்களாக மாறியது ஏன்தானோ? புலிகள் கூட இப்படி இவ்வரலாற்றைப் புரட்டியது கிடையாது. எல்லாளன், துட்டகைமுனு இடையி லான யுத்தம் இன அடிப்படையிலானர் என சிங்கள இனவெறியார்களின் வரிசையில் மௌனம் அணிவகுப்பது ஏனோ? எல்லாளன், துட்டகைமுனு யுத்தம் கி.மு (145 - 101) செய்த காலத்தில் தேசிய இனங்களே இருந்திருக்க வில்லை என்ற வரலாறு கூட இந்த போலி மார்க் சியவாதிகளுக்கு ஏன் தெரியாது போனது? தெரிந்து கொள்ள ஈழமுரசில் வெளிவரும் காக்கை வன்னியன் முதல்... மற்றும் புலியின் முக்கிய பிரமுகரான கனடா இராச ரத்தினம் எழுதிய தமிழீழமும் நாடும் அரசும் என்ற புத்தகத்தை படித்தாலே உங்கள் மார்க்சிய மூளையின் இனவெறித்தனம் பச்சையாகவே வெளிப்படும். எல்லாளன் படையில் சிங்களவர்களும், துட்டகைமுனுப் படையில் தமிழர்களும் போராடி இருந்ததையும், எல்லாளன் கொல் லப்ட்ட பின் துட்டகைமுனு அவனை மதித்து ஆயிரங்கால் மண்டபத்தை எல்லாளனுக்காக் கட்டி அனைவரையும் கட்டாய வணக்கம் செலுத்தப் பணித்தான். அங்கு இன வேறுபாடு இருக்கவில்லை. ஆனால் மௌனம் பச்சை இனவெறியாக மாறி சிங்கள இன வெறியர்களின் வரிசையில் பின்பக்கமாகப் போய் நின்று கூச்சல் எழுப்புவது ஏனோ? மார்க்சிசத்தை கைவிட்டு அதை பெயருக்கு பிழைப்பு நடத்துப வர்களின் உண்மை முகம் இப்படித்தான் பளீச்சென முகத்தில டிக்கும்.

மௌனத்தின் ஆசிரியர் தலை யங்கத்தில் இன்னு மொரு ஏகாதிபத்தி  யத்தை நோக்கி அழைக்கும்  இன்னு மொரு பொன்மொழிகளைப் பாhப்போம்.

"இந்த ஐம்பதாம் ஆண்டின் நிறைவின் பின்பு ஐ.நா என்பதானது, வீடுபற்றி எரிந்து முடிந்த பின்னர் வந்துசேரும் ஒரு தீயணைப்புப் படைக்கு மேல் அதன் பங்கையாற்ற முடியாதிருப்  பதேன்?’’

என்ற கேள்வியை எழுப்பும் மௌனம் கேட்பது என்ன? முன்கூட்டியே தலையிட்டு மறுகாலனியாக்கும் படியே! நீங்கள் இல்லாமல் போனதுதான் இங்கு பிரச்சினைகள். நீங்கள் நெருப்பு எரியும் முன்னமே நெருப்பு அணைக்கும் கருவியுடன் வந்துவிடவேண்டும் என்கின்றனர். எரிப்பவன் யார்? ஐ.நா வை ஆட்டிப்  படைக்கும் மேல்நிலை வல்லரசுகளே! நெருப்பை எரியவிட்ட பின், அதில் குளிர்காய்ந்தபின் அணைப்பது போல் நடித்து அங்கிருப்பவைகளை கொள் ளையடிப்பதே ஐ.நாவின் தொழில்இ இந்த வரலாறு எல்லா சாதாரண அறிவுள்ளோரக்கும் நன்றாகத் தெரி  யும். சொந்த நாட்டை அடகுவைக்க தயாராக உள்ள மௌனம், எங்கள் நாட்டில் ஐ.நாவை தலையிட மறை முகமாக மகுடம் ஊதி அழைப்பு விடுகின்றனர். எம்மக்கள் ஒருமுறை ஐ.நாவில் அங்கம் வகிக்கும் இந்தியாப் படைகளின் கொட்டத்தை அடக்கு  முறையை அனுபவித்தார்கள். அப்போது இவர்கள் அவர்களின் செல்லப்பிள்ளைகள். இன்று ஐ.நா   வைக் கோருவது எம்மக்ளை மேலும் அடக்கி ஒடுக்க, தேசிய இன அடையளத்தை துடைத்தெறிய வகை செய்யும் ஒரு பச்சைத்துரோகமாகும். ஐ.நா உலகில் மக்களுக்காக எதையுமே செய்தது கிடையாது. மாறாக மேல்நிலை வல்லரசுகளை பாதுகாக்கவும், விரல்விட்டு எண்ணக்   கூடிய பன்னாட்டு நிதிநிறுவனத்தைப் பாதுகாக்கவும் எல்லாவித ஆக்கிர மிப்பையும் நடத்தும் ஒரு சர்வாதிகார மக்கள் விரோத அமைப்பாகும். போலி மார்க்சிச வேடதாரிகளான மௌனத்   தின் முகத்தில் பளீச்சென மின்னும் ஏகாதிபத்திய விசுவாசக் கோரிக்கை யாக எழுந்ததே மௌனத்தின் இந்த  ராஜீவ் கொலைதொடர்பாக புலிகளின் நிலையற்ற வாக்குமூலங்கள்.

1991 -06- 12 இந்தியன் எஸ்பிரஸ் சுக்கு கிட்டு வழங்கிய பேட்டியில் கூறியதை சற்றுப் பார்ப்போம்.

தமிழ்நாட்டில் சில தீவிரவாதக் குழுக்கள் செயற்படுகின்றன. அவை அதிகாரபூர்வ பத்திரிகைகள் கூட நடத்துகின்றன. புதிய ஜனநாயகம், புதியகலாச்சாரம் ஆகிய அதி தீவிர வாதப் பத்திரிகைகள் லண்டனில் கூட விநியோகிக்கப்படுகின்றன. ராஜீவின் கொலைகாரன் எனச் சந்தேகிக்கப்படும் குர்தா அணிந்த ஆசாமி அந்தப் பத்திரிகைகளின் நிருபர்களின் ஒரு வராக இருக்குமென்று நான் நினைக் கின்றேன்..................... அப்பெண் தமிழ் நாட்டுப் பெண்போலத்தான் தெரிகின் றாள்.

திலகர் ஜூனியவிகடனுக்கு 21-01-1996ல் வழங்கிய பேட்டியில்

சாட்சியங்கள் மறைக்கப்படுகின்றன. அதில் ஈடுபட்ட சில பெரியமனி தர்களின் பெயர்கள் வராமல் பார்த்துக் கொள்ளப்படுகின்றது...... ராஜீவ் கொலை ஒரு ஜோடிக்கப்பட்ட விஷயம் தான்.... ஆனால் தனியாகச் சில ஈழத்தமிழர்கள் சம்மந்தப்படுத்தப் பட்டிருப்பதுதான் வேதனையான விஷயம் இப்படித் திலகர் கூற, முன்னர் கிட்டு புதிய ஜனநாயகம் மீது பழிகூற நாளைய புலித்தலைவர்கள் எப்படிக் கூறுவர்? எனக் கற்பனை செய்து பாருங்கள்! அப்போது புரியும் புலிகளின் அரசியலின் நோக்கம்பற்றி.

அண்மையில் புலிசார்பு ஈழமுரசில் ஒரு வாசகர் ஒருவர் புதியஜனநாயகம் பற்றி கேட்ட கேள்விக்கு ஈழமுரசு கூறியது:- அது ஒரு பார்பான பத்திரிகையென்று. பத்திரிகை வாசிக்காத சினிமா புத்தகம் வாசிக்கும் வாசகர்கள் ஈழமுரசு வாசிப்பவர்களாயின் புதிய ஜனநாயம் பார்ப்பான பத்திரிகையென நம்பிக்கொண்டிருப்பர் உண்மையைத் தேடுபவர்கள் ஒருக்காலும் ஈழமுரசின் காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய இப்பொய் யை நம்புவார்களென ஈழமுரசு முட்டாள் தனமான நினைக்கிறதோ?

மௌனம் 6ல் பிரான்ஸ் சுவாமித் திரோன் பற்றி ‘’இவர் தீவிர வலதுசாரியாகவும் கத்தோலிக்க தேசி யவாதியாகவும், சோசலிசவாதியாகவும், மார்க்சிசவாதியாகவும் விளங்கிய இவர் ஐரோப்பிய கூட்டாட்சியை நேசிப்பவ ராகவும், மதசார்பற்றவராவும் வெளிப் பாட்டைக் கொண்டிருந்தார்’’

வாழ்க மௌனத்தின் கணிப்பீடுகள். ஒரு மனிதன் எல்லாமாக ஓரே நேரத்தில் இருப்பது எப்படியோ? எல்லாமாக இருக்க முடியும் என்பத னூடக மாhக்சியத்தையே ஏற்றுக் கொண்டால் ஒருவன் மிகுதி எல்லா வற்றையும் கொண்டு அதற்காக செயற்பட முடியும் என்கின்றனர். அதாவது அதை அங்கீகரிக்க மறை முகமாகக் கோருகின்றனர். அது சரி, பிரான்ஸ் சுவாமித்திரோன் ஒரு மார்க் சிசவாதியாம் வாழ்க, ஓர் ஏகாதிபத் தியத்தின் ஆட்சிப்பீடத்தில் இருந்து உழைக்கும் மக்களை

அடக்கிய ஒரு மக்கள் விரோதியாவான்.

சரிநிகர் 98ல் ‘’சொந்த மண்ணிலேயே வேறு மனிதனாய்’’ எனத் தலைப்பிட்ட எஸ்.மனோரஞ்சனின் சிங்கள் மொழி பெயர்ப்புக் கட்டுரையில் இருந்தது. யாழ் சென்ற பத்திரிகையாளர் குழுவில் இருந்த இவர் முதற்கோரிக்கையாக இராணுவத்திடம் கேட்டது.

‘’நான் எனது வீட்டைப் பார்க்க முடியுமா? தற்போது அவ்விடத்தில் வசிக்கும் எனது உறவினர்கள் பற்றி அவருக்குக் கூறினேன். அவ்வீடு நல்லூர் கோவிலில் இருந்து 1 கிலோ மீற்றர் தூரத்தைவிட குறைவான தூரத்திலேயே அமைந்திரந்தது..........’’

‘’ எனினும் நான் எனது கிராமத்துக்குள்ளே நுழையும் போதே பல வீடுகள் சேதம் அடைந்திருப்பதை கண்ணுற்றேன். இறுதியில் நான் எனது வீட்டைக் கண்டுபிடித்தேன்.  அங்கு கூரை இருக்கவில்லை. சுவர் வெடித்திருந்தது. ‘’

‘’என்னுடன் இருந்த வீரர்கள் நிலத்தை நோக்கினர். அயலவர்களிடம் அவ் வீட்டில் இருந்தவாகளைப் பற்றி விசாரித்தேன். அயலில் வேறு ஒரு வீட்டில் தங்கியிருப்பதாக அவர்கள் கூறினர்.

‘’ பிரச்சனையில்லை ஆயினும்!’’

‘’நான் அவாகளைக் காணத் தயாராகிக் கொண்டே வீரர்களிடம் கூறினேன் ‘நான் தனினே செல்கிறேன்’ ....’’

இல்லை இல்லை நாங்களும் வருகிறோம்........’’

அப்படியில்லை இராணுவம் வந்துபோவதை புலிகள் அறிந்தால் அவர்களால் பிரச்சனை ஏற்படு மல்லவா?’’

இவ்வாறு திரும்பிச் செல்லும் போது என்னுடன் இருந்த இராணுவ வீரன் இவ்வாறு குறிப்பிட்டான்’’

‘’ எனக்குத் துக்கமாக இருந்தது. ஒரு சொல்லாது பேசவில்லையே. கட்டிய ணைத்து அழுதது மட்டும்தான். எப்படி இந்த மக்கள் வாழ்கின்றாhகள்.....?என ஒர் அழகான கட்டுக்கதையை நல்ல வர்ணனையுடன் மனோரஞ்சன் இணைத் துள்ளர். ஒரு பெரும் தேசிய இனவாதி தனது

ஆக்கிரமிப்பை எப்படி பச்சையாக மறைப்பாரோ அதுபோன்றே மனோரஞ் சனும் செய்துள்ளார். அது சரி பொய் சொல்லப் போனாலும் பொருந்தச் சொல்ல வேண்டும் ஜனநாயகவாதி மனோரஞ்சன் அவர்களே!

ஏனெனில் மனோரஞ்சனுக்கு யாழ்ப்பாணத்தில் ஒரு வீடு கிடையாது என்பது சிங்கள மக்களுக்குத் தெரியாதுதானே. ஆனால் தமிழ் மக்களுக்கும் இப்படி ரீல் விட முடியுமா?

‘’இராணுவத்தை நல்லதாக மனிதாபி மான மெச்சத்தக் கவர்களாக காட்ட ஒரு கற்பனை வீட்டை யாழ்ப்பா ணத்தில் கட்டிய மனோரஞ்சன் இராணுவம் கூறும்போது நிலத்தை நோக்கினர், எனக்குத் துக்கமாக இருந்தது எனக் கூறிய மனோரஞ்சன் இராணுவம் அங்கு உள்ளேவரின் புலிகள் கொண்டு விடுவர் தம் உறவினர்களை என்று கூறுவதன் மூலம் சமநிலையைக் கூட இழந்த தைத் தவிர புலிப்பேய் பிடித்த புலி எதிர்ப்பாளராக, சிங்கள இனவா தியாக மாறியதை இந்தப் பொய்க் கட்டுக் கதையே நிறுவிவிடுகிறது.  மேலும் ஆதாரம் தேவையா என்ன?