Language Selection

சமர் - 20 : 01 -1997
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உயிர்ப்பு-6 வெளிவந்துள்ளது. வழமைபோல மார்க்சிசத்தின் மீது இம்முறையும் சேறடிப்புத்தான். இம்முறை ஆசிரியர்தலையங்கங்கள், டிசம்பர் 1994 வெளியாகிய அ.மார்க்சின் "தேசியம் ஒரு கற்பிதம்" என்ற பகுதிக்குள் உள்ளடங்கியுள்ளது. தேசம் என்பது ஒரு கற்பிதம் என்ற வரையறையில் தொடங்கி அ.மர்க்ஸ் அதில் குறிப்பிட்ட சிவத்தம்பியின் சைவ வேளாளர் சித்தாந்தமே தேசியம் என்ற எல்லையைத் தாண்டிவிடவில்லை.

அடுத்து இம்முறை இதழோ முஸ்லிம் தேசம்பற்றிய சிறப்பிதழாக வெளிவந்துள்ளதுடன், ஆசிரியர் தலையங்கத்தில் தேசியம் பற்றிய வலிந்தெடுத்த திணிக்கும் அரசியல் முடிவுக்கு எதிராகவே யதார்த்த உண்மைகளை "முஸ்லிம் தேசம்" பற்றிய கட்டுரை அவர்களையும் மீறி கொண்டுவந்துள்ளது. அத்துடன் முஸ்லிம் தேசம் என்ற கட்டுரை சுயமுரண்பாட்டின் மொத்த வடிவமாகவே உள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இம்முரண்பாடு தலைக்குத் தொப்பியைச் சரிக்கட்ட எடுத்த முயற்சியால் அவர்களின் தேசியம் என்ற மாhக்சிசவிரோதப் போக்கு வெகுவாக அம்பலமாகிவிட்டது. இனிநாம் கட்டுரையின் சில பகதிகளை சுருக்கமாக ஆராய்வோம்:-

உயிர்ப்பினர் குறிப்பிடுகின்றனர்:- "தேசியவாதம் தொடர்பாக நாம் முகம்கொடுக்கும் இன்னுமொரு முக்கிய பிரச்சினை, தேசியவாதம் முற்போக்கானதா? அல்லது பிற்போக்கானதா? என்ற பிரச்சினையாகும்..... மரபார்ந்த மார்க்சியத்தில் பொதுவில் சித்தாந்தம் பற்றி புரிதல் பேதியளவு எட்டப்படவில்லை என்பதை விமர்ச்சிக்கும் அமைப்பியலாளர்கள் சிலர், சித்தாந்தம் என்பதை விரிவாக ஆராய முனைந்துள்ளனர். அவாகளின் கருத்துப்படி வெகுஜன சித்தாந்தங்கள் (Popular ideolagies) என்பதைப் பொதுவில் நடுநிலையானவையாகும் இவை வேறு எந்தச் சித்தாந்தத்துடன் இணைந்து (யுசவைஉரடயவந பண்ணப்பட்டு) உள்ளனவோ அதனைப் பொறுத்து இந்த வெகுஜன சித்தாந்தங்களும் முற்போக்கு அல்லது பிற்போக்கு பாத்திரங்களை ஆற்றுகின்றது. மதம், தேசியவாதம் என்பன வெகுஜன சித்தாந்தங்களுக்கு சிறந்த உதாரணங்களாகும்.... இவ்வாறே தேசியவாதம் கூட அத்துடன் இணைந்துள்ள எனைய சித்தாங்களைப் பொறுத்தே பிற்போக்கு அல்லது முற்போக்கு பாத்திரங்களை ஆற்றுகின்றது.  எனவே தேசியவாதம் தன்னளவில் முற்போக்கானதோ அல்லது பிற்போக்கானதோ அல்ல. மாறாக அதை முன் எடுத்துச் செல்லும் சமுக சக்திகளின் தன்மையைப் பொறுத்தே அந்தத் தேசியவாதத்தின் பண்பும் நிர்ணயிக்கப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்டதொரு தேசியவாதமானது பிற்போக்குப் பாத்திரம் ஆற்றுவது என்பதற்காக புரட்சியாளர்கள்  அந்த தேசிய இயக்கங்களையே ஒட்டுமொத்தமாக நிராகரித்து விடாமல் குறிப்பிட்ட தேசியவாதத்துடன் இணைந்துள்ள பிற்போக்கு சித்தாந்தங்களை அகற்றி....." என தமது வர்க்கமற்ற தேசிய எல்லையில் இருந்து தமது மார்க்சியவிரோதக் கருத்தியலைத் தொடர்கின்றனர்.

முதல் எமது வரியிலேயே அவாகளின் அரசியற் பம்மாத்தை தேலுரிக்க முடியும். அதாவது அவர்கள் கூறுவதுபோல் பிற்போக்கு தேசியவாதத்துடன் இணைந்து அதன் பிற்போக்கை அகற்றும் பணியில் முற்போக்கை கையாள ஜெர்மனிய கிட்லரின் தேசியத்துடன், தென்னாபிரிக்க வெள்ளை-இன நிறத்தேசியத்துடன், அமெரிக்க வெள்ளையின நிறத்தேசியத்துடன், சிறிலங்கா சிங்கள இனவெறித் தேசியத்துடன், ஐரோப்பிய நிறவெறி நாசிச தேசியத்துடன், இந்திய பாரதிய ஜனதாவின் இந்துத் தேசியத்துடனும் இணைந்து அதன் பிற்போக்கு அம்சங்களைக் களைந்து முற்போக்காக் கோரும் அதாவது உயிர்ப்பின் வர்க்கமற்ற தெய்வீக அரசியல்தான் என்ன? விளக்குவீர்களா?

பொதுவில் ஒடுக்கும் எல்லாத் தேசியமும் எப்பொழுதுமே பிற்போக்கானது. இது என்னவென்றால் ஸ்ராலினின் கூறுகளையும், அதன் அரசியல் போக்கின் சரியான அரசியல் மதிப்பீடுகளையும் மறுக்கும் போக்கில் உயிர்ப்பின் சிங்கள இனவாதத் தேசியத்துடன் இணைந்து அதை முற்போக்காக மாற்றக் கோருகின்றனர். வேறொன்றுமில்லை. அதாவது, சிங்கள முற்போக்குவாதிகளை சிங்கள இனவாதத் தேசியத்தில் இணைந்து அதன் முற்போக்கான தேசிய பாதையை அடைந்து முக்திபெற கோருகின்றனர். அதுசரி இருக்குது எனக் கூறும் சிங்கள முற்போக்குத் தேசியத்தை இக்கட்டுரையில் ஒரு வரியில் தன்னும் அடையாளப்படுத்த முடியாத உயிர்ப்பின் அரசியல் வங்குரோத்துக்கு முதலில் முற்போக்குப் பாத்திரத்தைக் கொடுக்க ஆளெயில்லை, இதுக்கிடையில் மீள மீள ஒரே வார்த்தையைக் கூறிக் கரடிவிடும் இவர்கள் அதில் எந்தத் தெளிவையும் காட்டமுடியாத பேதமை ஏன்?

அதுசரி, வெகுஜன சித்தாந்தம் நடுநிலையானது என வேறு றீல் விடுகின்றனர். மக்கள் எந்தச் சித்தாந்தமும் இன்றி உலவும் சதைப்பிண்டங்கள் என்கின்றனர். அழகாக ஆணித்தரமாக உலகைக் கொள்ளையடிப்பவர்களுக்காக இப்படி சேவை செய்வதன் மூலம், மாhக்சிசத்தின் சரியாக கூறுகளை மறுதலிக்கின்றனர். இது ஒரு கரத்துமுதல்வாத நியாயப்படுத்தலாகும். சிந்தனை என்பது பொருளிலிருந்து தோன்ற முடியுமே ஒழிய சிந்தனையிலிருந்து ஒரு பொழுதுமே பொருள் தோன்ற முடியாது.

(உதாரணமாக) தேசியம் என்ற சிந்தனை யாதார்த்த மக்கள் கூட்டத்தின் இருப்பிலிருந்து (இதுதான் இதன் பொருள்) தோன்றுகின்றது. மாறாக தேசியத்திலிருந்து மக்கள் கூட்டத்திற்கு சிந்தனை தோன்றுவதில்லை. ஆகவே தேசியம் குறித்த வெகுஜன சிந்தனை எப்போதும் நடுநிலையாக இருப்பதில்லை. மாறாக மக்கள் கூட்டத்தின் வாழ்நிலையின் பிரதிபலிப்பாகவே வெளிப்படுகின்றது. இது எந்த வாழ்நிலை சார்ந்த கருத்துப்போக்கு அம்மக்களின் சிந்தனையாக இருக்கின்றதோ அதன்போக்கில் பிரதிபலிக்கின்றது. உலகம் ஏகாதிபத்திய உலக ஒழுங்கில் உள்ளவரை, பாட்டாளி முதல் அனைத்து பிரிவு மக்களும் முதலாளித்துவ வாழ்நிலையின் அதன் சிந்தனைப் போக்கில் சிந்திக்கின்றனர், செயற்படுகின்றனர்.

எனவே வெளிப்படும் சிந்தனைப் போக்கு அதன் இருப்புக்கான அடிப்படை வழிகளில் எப்போதும் பிரதிபலிக்கின்றது. இதன்மீதான ஒரேயோர் எதிர்நிலைச் சிந்தனைப்போக்கு பாட்டாளிவர்க்க சிந்தனையாகும். இது தவிர்ந்த அனைத்துச் சிந்தனைப்போக்கும் இந்த உலக ஒழுங்குள் உட்பட்ட பல சீர்திரத்தம் கொண்ட பிரிவுகளேயாகும்.

பொதுமக்கள் சித்தாந்தம் என்பது தனியாக இந்த உலக ஒழுங்குக்கு வெளியே கிடையவே கிடையாது. அப்படி இருக்குமெனக் கூறுவது அசல் கருத்துமுதல்வாதக் கற்பனையேயாகும். பொதுமக்கள் எப்போதும் வௌவேறு தளத்தில் இவ்வுலக சிந்தனைப்போக்கை கொண்டு செயற்படுகின்றனர். பொதுமக்கள் சித்தாந்தம் நடுநிலையானது எனக் கூறுவதன் மூலம் வெளியிலிருந்துவரும் சித்தாந்தவாதிகள் புறநிலையாக வானத்திலிருந்து விழுபவர்களாக இனம்காட்ட முனைகின்றனர். முன்னேறிய சித்தாந்தவாதிகளைப் பொறுத்தவரை அவர்கள் அம்மக்களுக்குள் இரந்துதான் உருவாகுகின்றனர். அதன்போக்கில் நியாயப்படுத்துபவர்களும், அதை தெளிவாக முறித்துக்கொண்டு வெளிப்படுபவர்கள்தான் முன்னேறிய சித்தாந்தாவாதிகள். இவர்களின் உருவாக்கம் என்பது மக்களின் சிந்தனைத் தளத்தில் இருந்துதானே ஒழிய வெளியிலிருந்து அல்ல.

மக்கள் எப்போதும் ஒரு சித்தாந்த எல்லைக்குள் கட்டுப்பட்டு உள்ளனர். உலகம் உழப்பை, அதன் போக்கில் உற்பத்திச் சாதனத்தையும் சார்ந்துள்ள வரை அது இரண்டுபட்டு உள்ளவரை மக்கள் அதன்போக்கில் இரண்டுபட்டுள்ளனர். அதனால் சிந்தனையும் இரண்டாக பிளவுபட்டே உள்ளது.

(உதாரணமான) ஒருவன் இன்னொருவனின் கழுத்தைப்படித்து நெரித்துக்கொள்கின்ற இடத்தில் மக்கள் கூட்டம் அதில் ஒருவன் சார்ந்து நிச்சயமாக இயங்கவேண்டும். அதைத்தடுத்தல் என்பது கொலைகாரனுக்கு எதிரானதாக இருக்கும். பேசாமல் நடுநிலை என்று சொல்லின், நியாயம் கிடையாது - அது கொல்பவனுக்கு துணையானது. ஒரு மனிதனின் சித்தாந்தம் இந்த நடவடிக்கை ஒருபக்கம் சார்ந்து செயற்படுகிறதே ஒழிய நடுநிலை என்று கூறுவது உயிர்ப்பின் இந்த உலக ஒழுங்கு சார்ந்த அரசியல் நியாயமாகும். ஒரு பெண்ணை ஓர் ஆண் கற்பழிக்கும் போது அவ்விடத்தில் நான் நடுநிலையெனின், அல்லது அதில் மக்கள் சித்தாந்தம் நடுநிலையானது எனின் இங்கு கற்பழிப்பு ஆணாதிக்கம் சார்பில் நடுநிலையால் நியாயப்படுத்தப்படுகின்றது.

உயிர்ப்பு மீள மீள ஓரே வரிமூலம் கதைவிடுவார்கள். எனவே நாம் மேலும் சில நடைமுறைகளை ஆராய்வோம். முஸ்லிம் மக்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றப் பட்டபோது தமிழ்பேசும் மக்கள் சித்தாந்தமின்றி நடுநிலையாக நின்றனர் என்பது உயிர்ப்பின் அரசியல் முடிவாக எடுக்கவேண்டும். ஆனால் யதார்த்தத்தில் மக்கள் அதை ஒன்றில் எதிர்க்கின்றனர். மற்றவர்கள் கண்டும் காணாமல் போவதன் மூலம் ஆதரிக்கின்றனர். எம்மண்ணில் அராஜகத்துக்கு எதிராக எழுந்த போராட்டத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் குறிப்பிடத்தக்கது. இதில் ஈரோசும், யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் தாம் நடுநிலையென அறிவித்தது. இதைக் கோட்ப்பாட்டளவில் கூறியவர் சிவத்தம்பி. பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அராஜகப் பேர்வழிகளுக்கும் இடையில் நடுநிலை என்றால் அது அதன் அராஜக சார்பை, அதன் துணைபோதலை மறுப்பதேயாகும்.

இந்தியாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அதை எதிர்க்காத இந்தியா இந்துமக்கள் நமுநிலை சித்தாந்தத்தைக் கொண்டிருந்தாhகள் என்பது உயிர்ப்பின் கோட்பாட்டு முடிவு. இது ஒரு மோசடி! மாறாக இந்தியா மக்கள் இதை எதிர்க்காத நிலையென்பது அதன் இடிப்புக்கு ஆதரவானதேயாகும். இப்படி உயிhப்பின் வர்க்கமற்ற, முற்போக்கு பிற்போக்கற்ற நடுநிலைக் கோட்பாடு மேலும் மேலும் அகலமாக நிர்வானப்படுத்த முடியும். இது போதும்.

அவர்கள் முன்வைத்த ஒர் உதாரணத்தை எடுத்துவைத்து ஆராய்வோம்.

"கிறிஸ்தவ மதாமானது புரட்சியாளர்களிடம் விடுதலை இறையியலாகவும் (Liberation theology)  பிற்போக்காளரிடத்தில் பழைமைவாதத்திற்கு முண்டு கொடுப்பதாகவும்...." உள்ளது எனக் கதைவிடுகிறார்கள். அதாவது கிறிஸ்தவ மதம் நடுநிலையானது, இரண்டு பக்கமும் பயன்படுத்தப் படுகின்றது எனக் கூறுவதன் மூலம் காதுக்குப் பூச்சுத்துகின்றனர். நடுநிலையானது எனின் அது புரட்சியைச் செய்யுமெனின் நீங்கள் அத்தத்துவத்தைக் கொண்டே புரட்சி செய்ய முடியும். ஏனெனில் நடுநிலை எப்போதும் காலத்தைக் கடந்த எப்பொழுதுமே நடுநிலையானது. ஆனால் அதை உயிர்ப்பு ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளனர். ஏனெனில் அம்hலப்பட்டால் மார்க்சிசத்தை சேறடிக்க முடியாதல்லவா?

கிறிஸ்தவ இறையியல் என்பத அதன் அடிப்படை சித்தாந்தத்தில் சில பகுதி ஒடுக்குமுறையை விமர்சிக்கின்றது. இந்த விமர்சனம் என்பது அங்கிருந்த மக்களின் எழுச்சியின் வடிவாக உருவானதே கிறிஸ்தவ சித்தாந்தம். இந்த சித்தாந்தம் என்பது சுரண்டல் ஒழுங்கக்கு உட்பட்ட ஒரு சீர்திருத்தல் மட்டுமேயாகும்.  இச்சித்தாந்தங்கள் சாதாரண மக்கள் முதல் அடக்கியள்பவன் வரை நியாயப்படுத்தக் கூடிய பல கூறுகளை தன்னகத்தே உள்ளடக்கியிருந்தது. இதில் மக்கள், மதவாதிகள், மன்னர்கள் தமக்குச் சார்பானதையே உயர்த்திப் பிடித்தனரே ஒழிய அது நடுநிலையாக இருந்ததில்லை. அது இருக்கும் சமூகத்தினை பேண செய்யும் சீர்திருத்தங்கள், மக்களை ஏமாற்றி அடக்கிவைக்கும் நடவடிக்கையாகும். உதாரணமாக இதே கிறிஸ்தவ சித்தாந்தம் பெண்கள் மீது முழமையாக அடக்குமுறையைக் கொண்டிருந்தது. இதை சாதாரண மக்கள் முதல் கொண்டு மன்னர்வரையும் ஏற்றிருந்தனர். இதுபொன்ற பொதுத்தன்மையில் தான் அச் சித்தாந்தம் உருவாகுகின்றது. இது நேரெதிரான இருமக்கள் பிரிவையம் முரண்பாட்டுடன் இணைத்துவைத்துள்ளது. இங்கு தத்துவம் நடுநிலையாக இருந்ததில்லை.

உதாரணமாக இன்றுள்ள ஏகாதிபத்திய உலக ஒழுங்கை எடுத்துக்கொள்ளின்  சாதாரண மக்கள் முதல்  உலக ஆளும் ஏகாதிபத்திய பீடங்கள் வரை ஏற்றுக்கொள்ளும் வகையில்  இந்த சித்தாந்தம் உள்ளது. முரண்பாடுகள் எப்போதும் சில அர்ப்பதீர்வுகள் மூலம் சமாளிக்கப்படும் போது பெரும்பாலான மக்கள் இதை அனுசரித்து நியாயப்படுத்தி நிற்கின்றனர். இங்கு மக்கள் நடுநிலை சித்தாந்தவாதியாக கற்பனையில் இருப்பதில்லை. மக்கள் தாம் விடுதலையாக இருப்பதாக எண்ணவைப்பதன் மூலம் உலகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதை மறுக்கும் உயிர்ப்பு பொதுமக்கள் நடுநிலையாளர்கள் என்ற சித்தாந்தத்துக்குள் உள்ளனர் எனக் கூறி இந்த உலக ஏகாதிபத்திய ஒழுங்கை மறைமுகமாக ஆதரித்து நிற்கின்றனர்.

அடுத்து ஒருதேசமமும், அதன் மீதான சுயநிர்ணயம் குறித்த ஸ்ராலினின் ஆய்வுகளை இவர்கள் கேலிசெய்கின்றனர். ஸ்ராலின் ஒரு தெசமாக அது சுயநிர்ணயத்துடன் இருக்கவேண்டின் மொழி, பிரதேசம், பொருளாதாரம், கலாசாரம் என்பன இருக்கவேண்டுமென வரையறுத்தார். இந்த ஆய்வு மிகச்சரியானது மட்டுமன்றி, அது மட்டுமே ஒரு தேசத்தின் அடிப்படை அம்சமாகும். இதை மறுக்கும் உயிhப்பு "தேசம் குறித்த ஸ்ராலின் முன்மொழிந்த வரையறைகள் நவீன சமூகங்களின் வரலாற்றில்  கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. பல சமூகங்களின் தேசிய உரிமைகள் பறிக்கப்படவும், தேச இருப்புக்கள் சிதைக்கப்படவும், தமது வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்படவும், ஸ்ராலினின் வரையறைகள் காரணமாயின..... ஸ்ராலின் வரையறுத்த பிரதேசம், மொழி, பொருளாதாரம், கலாசரம் என்பவற்றை பூரணத்துவப்படுத்தாத சமுகங்கள் மட்டுமின்றி, மதம், நிறம், புர்வீகம், இனம் (சுயஉந) பொதுவான வரலாற்று அனுபவம்.... போன்ற புதிய கூறுகளின் அடிப்படையில் தம்மை ஒன்றிணைத்த சமூகங்கள்  தேசங்களாக உருவாகியுள்ளன." எனக் கூறும் உயிர்ப்பு ஸ்ராலினின் வரையறையை மீறி உருவான சமுகம் ஒன்றைத்தன்னும் (100 பக்கக் கட்டுரையில்) காட்டமுடியவில்லை. ஸ்ராலினின் வரையறைக்கு உட்பட்ட, உட்படாத மக்கள் கூட்டம்மீது  நடாத்தப்பட்ட உலக வன்முறைகளை எல்லாம் கூட்டியள்ளி வந்து ஸ்ராலின் மீது கொட்டி இட்டுக்கட்டி குற்றம்சாட்டும் மாhக்சிச விரோதிகளின் உண்மை நலன் சுரண்டும் வர்கங்களைப் பாதுகாப்பதே!

அதுசரி, ஸ்ராலின் வரையறையை விமர்சிக்கும் இந்த நடுநிலை சித்தாந்த புதிர்களின் கோட்பாட்டை ஆராய்வோம்:- ஸ்ராலின் வரையறையான மொழி, பிரதேசம், பொருளாதாரம், கலாசாரம் என்ற இந்த நான்கும் இன்றி எந்த ஒரு தேசமும் உருவாக முடியாது. ஒரு மொழியின்றியோ, ஒரு பிரதேசமின்றியோ, ஒரு பொருளாதாரம் இன்றியோ, ஒரு கலாசாரம் இன்றியோ ஒரு தேசம் உருவாகமுடியும் என்று கூறுபவர்கள் உண்மையில் மக்களுக்கு கரடிவிடுகின்றனர். நவீன உலம் என மீள மீள கூறும் இவர்களின் உலகில் ஒரு நாட்டைத்தன்னும் அப்படிக் காட்டமுடியாது. இதில் ஏதாவதொன்று இன்றி ஒரு நாடு உயிர்வாழ்தல் அல்ல உருவாகவே முடியாது. முடியும் முடிந்தது எனின் இவர்களின் தேசியம் பற்றிய 102 பக்கக் கட்டுரையில் ஒரு நாட்டைக்கூட காட்டமுடியவில்லை என்பதை வாசகர்கள் தெளிவாகக் கவனிக்க வேண்டும்.

இவர்கள் வைக்கும் புதிய கூறுகளான மதம், நிறம், பூர்வீகம், இனம், மற்றும் விட்டுவிட்ட சாதியம் போன்ற எது இல்லை என்றாலும் ஸ்ராலினின் நான்கு அடிப்படையும் கட்டாயமாக இருக்கவேண்டும். மதம், நிறம், இனம், பூர்வீகம், சாதியம்... போன்றன எல்லாம் இருந்தும் மொழி, பிரதேசம், பொருளாதாரம், கலாசாரம் என்ற நான்கில் ஏதாவது ஒன்று இல்லை என்றாலும் ஒரு தேசம் உருவாக முடியாது. இது நடைமுறையுடன் கூடிய சமுகவிஞ்ஞான முடிவாகும்.

மார்க்சிய விரோத ஸ்ராலின் எதிர்ப்பு முடிவை முதலில் எடுக்கும் உயிர்ப்பு பின் தனது தத்துவத்துக்கு விளக்கம் காட்ட ஏதேதோ சொல்ல முனைகின்றனர். ஆனால் அது விஞ்ஞான உண்மைகளை மறுதலிக்கின்றது. ஸ்ராலின் வரையறை எது ஒன்று இன்றியும் ஒரு தேசம் உருவாக முடியும் எனக் கூறின், உண்மையில் அதன் பிரிந்து செல்லும் சுயநிர்ணயம் இல்லை என்பதைக் கூறாமல் கூறி அம்மக்களை ஏமாற்றுவதாகும். ஏமாற்றுவது மட்டுமன்றி அத்தேசியம் வளர்த்தெடுக்கப்படவேண்டிய தேவையை மறுப்பதன் மூலம் அந்தப் பிரிவு மக்களின்  வளர்ச்சியை திட்டமிட்டு தடுப்பதாகும். இது செங்கொடியை ஆட்டியபடி செங்கொடிக்கு எதிராக இயங்குவது போலாகும்.

இந்த நான்கு கூறுகளில் ஏதாவது ஒன்று இல்லையெனினும், அல்லது அவைகளின் வளர்ச்சி பெற வேண்டியிருப்பின் அவைகளை தேசமென வரையறுப்பது அவர்களின் பெயரால் அவர்கள் மீது ஒரு சேறடிப்பாகும். தேசம் என்பது வாழ்நிலையில் மட்டும் கொண்டு வரையறுப்பதாகும். இவர்கள் குறிப்பிடும் மதம், நிறம், பூர்வீகம், இனம்... எது இருப்பினும் அவர்கள் ஸ:ராலின் குறிப்பிட்ட நான்கில் ஒன்று இல்லையெனினும், அல்லது பகுதியளவு இருப்பினும் ஒரு தேசமாக உருவாக முடியாது. உருவாக முடியுமென்று கற்பனையில் நடைமுறைக்கு அப்பாற்பட்ட ஒரு கருத்து உருவமாக மட்டுமே இருக்கும். மதம், நிறம், இனம், ப+ர்வீகம்..... ஏதாவத ஒன்று ஒரு தேச உருவாக்கத்தின்போது முதன்மைபெறின் அது ஸ்ராலினின் நான்கு அடிப்படைகளின் மீது மட்டுமே கருக்கொள்கிறது. தேசம் உருவாக வேண்டின் அத்தேசியத்திற்கு எதிராக இன்னுமொரு தேசிய ஒடுக்குமுறை உள்ளபோது மட்டுமே இந்த ஏகாதிபத்திய ஒழுங்குக்குள் சாத்தியமானது.

இந்த ஒடுக்குமுறை என்பது ஆளம் வர்க்கம் தனது சுரண்டலை தகவமைத்துக் கொள்ளும் வகையில் இனம், பூர்வீகம், மதம், நிறம், சாதீயம், மொழி, கலாச்சாரம், பிரதேசம், பொருளாதாரம் என எதையாவது ஒன்றை முதன்மையாக முன்தள்ள முடியும். அது எதுவாக இருந்தாலும் எப்பொழுதும் அதன் பிரிவு நலன் வர்க்கம் சார்ந்ததே! அது அந்த மக்களின்  வசதியான கண்ணி எது என்பதைத் தேர்ந்தெடுக்கும் சுரண்டும் பிரிவுகள் அதைக்கொண்டே தேசியமுரண்பாட்டை முன்தள்ளுகின்றன. இதனால் பாதிக்கப்படும் மற்றைய பிரிவு அந்நலன் இழப்பை ஈடுகட்ட எதிர்த்தேசியத்தை முன்தள்ளுகின்றது. இதை உதாரணங்களாளப் பாhப்பின்

* இலங்கையில் இன்றுள்ள தேசிய இனமுரண்பாட்டுக்கான அடிப்படை என்ன? பிரிட்டீஸ் ஆட்சியாளர் பிரித்தாளும் கொள்கையில் தொடங்கிய இனமுரண்பாடு, சிங்கள மக்களின் பிரிட்டீஸ்சுக்கு எதிரான நீண்ட ஆரம்பபோராட்டங்களால் வித்திடப்பட்டது. நிர்வாக அலகுக்கு தேவையான பிரிவுகளை உருவாக்குவதில்  பிரிட்டீஸ் அமைப்பு தமிழ் பிரிவுகளை சார்ந்திருந்தது. இப்பிரிவு இலங்கையில் ஆளும் ஓர் இனமாக நிர்வாகத்துறைகளில் அமர்ந்துகொண்டது. பிரிட்டீஸ் ஆட்சியில் கொள்ளைகளையும், சுரண்டல்களையும் செய்துகொடுக்கும் பிரிவாக உருவான தமிழ் பிரிவுகள் மீது, சிங்கள மக்களின் இயல்பான போர்குணாம்சம் வெளிப்பட்டது. தமிழ் பிரிவுகள் தமக்குக் கிடைத்த இந்த சலுகைகளைப் பயன்படுத்தி சிங்களக் கிராமப்புறங்களைச் சூறையாடினர். இங்கு இதற்கு எதிராக சரியான அடையாளப்படுத்தல் மட்டுமே சுதந்திரத்திற்கானதும், வர்க்க அடிப்படையிலான ஒரு தேசிய போராட்டமாக மலந்திருக்கும்.

மாறாக சிங்கள இனத்துக்குள் இருந்த அதேவேலைகளையே செய்ய தமிழருடன் போட்டிபோட்ட  பிரிவுகள் அதைத் தமிழ் விரேத போக்காக அம்மக்களின் இயல்பாக இருந்த அதே போக்கில் வளர்த்தெடுத்தனர் இந்த தமிழ், சிங்கள ஆளும் பிரிவுக்கு இடையில் சுரண்டுவதில் இருந்த போட்டி என்பது படிப்படியாக சிங்கப்பிரிவு கைப்பற்றிக் கொண்டதில் இருந்து, அதை இழந்த பிரிவு போராட்டங்களைத் தொடுக்கிறது. இது வளர்ச்சியும் போது ஒரு தேசத்தின் இருப்புக்கே அது அச்சுறுத்தலாக அமைகிறது. இது எல்லாத்துறைகளில் விரிவுபடுகிறது. எனவே இங்கு தேசியம் என்பது ஒரு சுரண்டும் நலன்சார்ந்து அதன் இருப்பின் மீது கட்டியமைக்கப் படுகின்றது.

*அடுத்து இந்தியாவில் பாரதஜனதாவின் மதத் தேசியத்தை ஆராய்வோம். பார்ப்பான ஆதிக்கத்துடன்  சுரண்டல் சமுகம்மீது தொடர்ச்சியாக அதன் இருத்தலுக்கு அச்சுறுத்தல் எழுப்பப்பட்டு வருறிறது. பின்தங்கிய பிரிவுகளின் எழுச்சிகள், முன்பு எல்லாமே பார்பான் என்று இருந்தநிலை இன்று பங்கிடப்படுகிறது. இந்நிலையில் பார்ப்பானுக்கு தனது நிலையை தக்கவைக்கவும், மேலும் தனக்கு சதகமான வகையில் மாற்றியமைக்கவும் தேவைப்படுவது ஒரு தேசியம். அந்தத் தேசியம் இந்துத்தேசியம் ஆகம்.

இது முஸ்லிம்களுக்கு எதிரான இந்துத் தேசியமாக இனம்காட்டப்படுவதன் மூலம் தனது சுரண்டலை மறைக்கவும், இதன் மூலம் தனது ஆட்சியை ஸ்தாபிப்பதன் மூலம் தனது சுரண்டும் நலன்களைக் காப்பாற்றவும் முடியும். இங்கு இந்தியாவின் இந்துத் தேசிய உணர்வு தன்னிச்சையாக, வர்க்கசார்பின்றி பிறப்பதுமில்லை. மாறாக இது ஒரு நடுநிலையாகவும் செயற்படுவதுமில்லை மாறாக அம்மக்களிடம் இருக்கக் கூடிய இந்து உணர்வுளை அதன் போக்கில்  சுரண்டும் வர்க்கம் தனக்கு சாதகமாக மாற்றியமைக்கிறது. எனவே இங்கு தேசியம் என்பது சுரண்டும் வர்க்கம் சார்ந்த முதலாளித்துவ கோரிக்கையாக பரிணாமிக்கின்றது.

* ஐரோப்பிய நாசிய இன, நிற தேசியத்தை ஆராயின் அது இன்றுள்ள வேலையில்லாத் திண்டாட்டத்தில் விரிவுபடுகிறது. ஒரு வெள்ளையினத்தவன் வேலை யின்றி இருக்க, ஒரு கருப்பு இனத்தவன் வேலைசெய்யும் போக்கு வெள்ளை முதலாளியை விட யூத முதலாளிகள் அதிகம் சுரண்டுபவர்களாக இருந்தனர். இது இயல்பில் இந்த வெள்ளையின மக்களின் பல்வேறு பிரச்சனையில் பதியப்படும் போது வெளிநாட்டவரே காரணமென அவன் முன் வருகிறது. இதைத் தனக்கு சாதகமாக்கும் ஐரோப்பிய வெள்ளையின ஆளும் முதலாளிகள் அவர்களின் போக்கை வளர்த்தெடுக்கும் பணியில் நாசிகளாகத் தம்மை இனம்காட்டுகின்றனர். இந்த நாசி தேசியம் அடிப்படையில் அந்த வெள்ளையின மக்கள் மத்தியில் உள்ள பிரச்சினைக்கு சுரண்டும் வர்க்கமே காரணம் என்பதை மறைக்கும் வகையில்  முன்னெடுக்கும் முதலாளித்துவ தேசியவாதமே ஆகும்.

நாம் முஸ்லிம் மக்கள் தொடர்பான பிரச்சனையில் அவர்கள் சுயநிர்ணயத்துக்கு உரியவர்கள் என்பதை முதன்முதலாக அங்கீகரித்தவர்கள். இது எந்தவகையில் என்றால் மொத்த முஸ்லீம் மக்கள் சார்பாக அல்ல. மாறாக கிழக்கில் வாழும் ஒரு குறித்த பிரதேசம், ஒருமொழி, கலாசாரம், பொருளாதாரம் என்பவற்றைக் கொண்ட முஸ்லிம் மக்களை மட்டும் உள்ளடக்கியேயாக அவர்களை நோக்கி வளர்த்தெடுக்கபடவேண்டிய வகையில் கிழக்குப் பகுதி தவிர்ந்த பகுதிகளில் உள்ளவர்கள் உள்ளனர். முஸ்லிம் தேசிய இனமாக முற்றாகப் பரிணாமித்து விட்டது என்ற உயிர்ப்பின் எடுகோள் எப்போதும் அத்தேசிய இனத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் ஒரு கடிவாளமாகும். முஸ்லிம் தேசிய இனம் தனது குறித்த கிழக்கு பகுதியை மையமாக வைத்து மேலும் வளர்த்தெடுக்கப்பட வேண்டிய ஒரு தேசிய இனமாக உள்ளது. இது சுயநிர்ணயம் என்ற அச்சாணியில் ஒரு தேசமாகப் பரிணாமித்து வருகிறது.

அடுத்து உயிர்ப்பின் இன்னுமொரு மார்க்சிய விரோத தன்மையைப் பார்ப்போம்:-

"நாம் தேசியவாதத்தை தனியான ஒரு கட்டமைப்பு என்கிறோம். இப்படியாக தேசியவாதத்தை நாம் பொருளாதாரத்திலிருந்து வேறுபட்ட கட்டமைப்பாக கருதினால், தேசம் என்பது வர்க்கம் என்பதிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றது என்பதை சரியாகக் குறித்துக் கொள்வது முக்கியமானதல்லவா? வர்க்கம், தேசம் என்பவற்றுக்கு இடையிலான மிகவும் அடிப்படையான வேறுபாடு வர்க்கம் என்பது புறநிலை சார்ந்தது, தேசம் என்பது அகநிலை சார்ந்தது என்பதாகும்" என உயிர்ப்பு தனியாகவும் அடையாளப்படுத்தியும் உள்ளனர்.

இந்த உயிர்ப்பின் வார்த்தைகளில் "முக்கியமானதல்லவா?" எனக் குறிப்பிட்டவர்கள்  தமது முஸ்லிம் மக்கள் கட்டுரையில் அதைக் கடைப்பிடிக்க முடிந்ததா?  எனப் பார்ப்போம். அவர்களே முஸ்லிம் மக்களின் தேசிய இன உருவாக்கத்தின் வர்க்கப் பாத்திரத்தை மறுக்காத பக்கத்தை நாம் மீள எடுத்து வைப்பதன் மூலம் அவாகளின் கோட்பாடு எப்படி நசிந்து ஒண்டுக்கும் உதவாமல் பிய்ந்து போகிறது எனப் பார்ப்போம்.

"ஒரு புறம் தென்னிலங்கை முஸ்லிம்களின் ஒரு பிரிவினர் வர்த்தகத்தில் பெற்றிருந்த செல்வாக்குக் காரணமாக, அவர்கள் மீது சிங்கள வர்த்தகர்களும் சிங்கள இனவாதிகளும் இவர்களின் அரசியல் பிரதிநிதிகளும் விரோதம் கொண்டிருந்தனர். இவர்கள் தென்னிலங்கை முஸ்லிம் பிரிவினரின் வர்த்தக மேலான்மையை அகற்றி அங்கு தமது மோலான்மையை ஏற்படுத்த முயன்றனர்."

"...... இலங்கையை ஆக்கிரமித்த போத்துக்கீசரை முதல்முதலாக எதிர்த்தவர்கள்  தெற்கு முஸ்லிம்கள் தான்...... தெற்கு முஸ்லிம்களின் வர்த்தகத் தளங்களை போத்துக்கீசர் தமதுடமையாக்கியதோடு, முஸ்லிம்களின் சமுக கலாசார நடவடிக்கைகளையும் வர்த்தகத்தையும் சிதைப்பதற்காக பல்வேறு சட்டங்களையும், கூடுதல் வரிகளையும் விதித்தனர்."

"......"இலங்கை முஸ்லிம் மக்கள் தமிழர்களே" என்றும் எனவே அவர்களுக்கு தனியான சட்டசபை பிரதிநித்துவம் தேவையில்லை என்று சேர்.பொன். இராமநாதன் போன்ற தமிழ்த் தலைவர்கள் வாதிட்டார்கள்."

"தெற்கு முஸ்லிம் தலைமை, இலங்கை முஸ்லிம் மக்களுக்குரிய சரியான சட்டசபை பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொண்ட காலப் பகுதியில், தெற்கு முஸ்லிம்கள்  வர்த்தகத்துறையில் மீண்டும் முன்னேற்றமடையத் தொடங்கினர். "

"..... சிங்கள சமுகத்தில் புதிதாக வர்த்தக முதலாளித்துவப் பிரிவுகள் உருவாகிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் அன்றைய அமைப்பில் வர்த்தக ரீதியாக மேலான்மை பெறுவதற்கு வர்த்தகத்தில் நீண்டகால பாரம்பரியத்தையும், செல்வாக்கையும் கொண்டிருந்த தெற்கு முஸ்லிம் வர்த்தகப் பிரிவினருடன்  போட்டியிட வேண்டியிருந்தது..... இத்தகைய வர்த்தக போட்டியின் விளைவாக சிங்கள வர்த்தகர்கள்  தெற்கு முஸ்லிம் மக்கள் மீது பகைமை கொள்ளத் தொடங்கினார்கள்..... சித்தாந்தத் தளத்தில்  முஸ்லிம்களக்கு எதிரான தமது உணர்ச்சிகளை வெளிப்படுத்தினர்..... இவர்களின் எழுத்துக்களில்  தெற்கு முஸ்லிம் வியாபாரிகள் தான்  பிரதான "அந்நியர்"களாக வெளிப்படுத்தப்பட்டனர். "மண்ணின் மைந்தர்களான" சிங்கள மக்களின் அவலங்கள் அனைத்திற்கும் "அந்நியர்களான" தெற்கு முஸ்லிம் வியாபாரிகளே பிரதான காரணமென இவர்கள் எழுதினார்கள்."

"....இத்தகைய யுத்தகால (1ம் உலகயுத்தம்) சீரழிவினால் இலங்கை மக்கள் (குறிப்பாக சிங்கள மக்கள்) அமைதியிழக்கத் தொடங்கினர். இத்தகைய அமைதியற்ற, கொந்தளிப்பான சூழ்நிலையை, சிங்கள வர்த்தகர்களும், அவர்களின் படித்த பிரிவினரும் உரிய முறையில் பயன்படுத்திக் கொண்டனர். "தந்திரமிக்க முஸ்லிம் வியாபாரிகள், அப்பாவி சிங்கள் மக்களை ஏமாற்றி சுரண்டுவதனால்தான்  அவர்களின் வாழ்க்கை மோசமடைந்திருக்கிறது." என இவர்கள்---"

"....இவ்வாறு தெற்கு முஸ்லிம்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் அடக்கப்பட்டபோது, பொன்.இராமநாதன் சிறையிடப்பட்ட சிங்கள் மக்கள் சார்பாக, இங்கு வந்துசென்று மகாராணியிடம் வாதாடினார். ....இத் தமிழ்த்தலைவர்கள் தாம் அரசியலில் பிரதிநிதித்துவப் படுத்திய பிரிவினரின் நலன்களையும்@ சமுக, பொருளாதார ஆதிக்கத்தையும் போணுவதற்காக தம்மை ஒத்த சிங்கள உயர்சாதியான "கொல்" பிரிவைச் சேர்ந்த சிங்கள அரசியல் தலைமையுடன் நெருக்கமான உறவுகளை போணிவந்தார்கள்."

"....முஸ்லிம்களை தமது அதிகாரத்தின் கீழ் வைப்பதன் மூலமாக தமக்கும் தாம் பிரதிநிதித்துவப் படுத்திய பிரிவினருக்கும் கிடைக்கக் கூடிய நலன்களை அடிப்படையாகக் கொண்டே அவர்கள் அவ்வாறு வாதிட்டார்கள். முஸ்லிம் அரசியற் தலைமையாக செயற்படக் கூடிய சந்தர்ப்பம் இந்த தமிழ்த் தலைமையிடமிருந்து பறிக்கப்பட்டவுடன் அவர்கள் முஸ்லிம்களை "பிறராகவும்" விரோதிகளாகவும் கருதிச் செயற்பட்டதை....."

இப்படியாக உயிர்ப்பின் வரிகளாகவே ஒன்றல்ல 20 மேற்பட்ட மேற்கோள்களை இவர்களின் கட்டுரையின் ஒழுங்கிலேயெ எடுத்துவைக்க முடியும். இங்கு தேசிய உருவாக்கம் என்பது அகநிலை சார்ந்ததல்ல, புறநிலையாக பங்காற்றுவதை இவர்களின் வரிகளே அம்பலமாக்குகிறது. முதலாளித்துவ சுரண்டும் வாக்கம் சார்ந்து தமது நலன்களை நிறுத்திக் கொள்ள முஸ்லிம், தமிழ், சிங்கள, மலையக தலைமைகள் ஒன்றுடன் ஒன்று காலத்துக்குக் காலம் இணைந்து செயற்பட்டுள்ளனர். இந்த இணைவுகள் மூலம் தமது வர்க்க நிலையைப் பேணுவதன் மூலம் தேசிய இனங்களை எதிர்நிலைக்கு நகர்த்தி மோதவிடுவதன் மூலம் குளிர் காய்ந்தனர். இந்த தேசிய இன மோதல் என்பது பண்பியல் ரீதியில் விரிவுபட்ட மாற்றங்கள், அத்தலைமையையே தூக்கி எறிவதுடன், போராட்டம் புதிய பரிணாமத்திற்கு நகர்கிறது. இந்த நகர்வு என்பது எப்பொழுதும் இருக்கும் சமுக அரசியல் பொருளாதாரப் போக்கிற்குடன் நகர்கிறது. இதற்கு முன்னேறிய பாட்டாளி வர்க்கத் தலைமை தலையீட்டை நகர்த்துவதன் மூலம் சரியான தேசியத்தை பிரதியிட முடியும். ஆனால் இது நடுநிலையில் இருந்து அல்ல. எதிர்நிலையில் உள்ளவர்களை மறு எல்லைக்கு அழைத்துவருவதில் தான் சார்ந்துள்ளது.

உயிர்ப்பின் வர்க்கமற்ற கரடிவிடும் கதைகளை அவர்களின் தொடர்ச்சியான கட்டுரையே புட்டுப் புட்டு வைக்கிறது. வரலாறும், அதன் இயங்கியலும் எப்போதும் ஒரு நடைமுறைப் பாடமாக விரிந்து கிடப்பதேயாகும். அதை மறுதலிப்பின் இக்கட்டுரையை எழுதவே முடியாது. உண்மையில் தேசிய உருவாக்கத்தில் பங்குபற்றிய எல்லாக் காரணிகளையும் தொகுப்பதில்  சார்ந்துள்ளது. அக்காரணங்கள் என்னதான் தலை கீழாக நின்றாலும் சுரண்டும் வர்க்க நலனைச் சார்ந்து நிற்பதைத் தெளிவாக்காமல் விடாது.

அடுத்து முஸ்லிம் காங்கிரஸ் பற்றிய விமர்சனத்தில் அஸ்ரப் மீது ஒருதலைப் பட்சமாக தாக்குதலை குரொதவழியில் தொடங்குகின்றனர். முஸ்லிம் காங்கிரசை சிதைத்தது அஸ்ரப் என்ற தனிநபர் என கட்டுரையெங்கிலும் கூற முயல்கின்றனர். முஸ்லிம் காங்கிரசின் அரசியல் தான் என்ன? என ஓரிடத்தில் தன்னிலும் ஆராய முற்படவில்லை. முஸ்லிம் காங்கிரஸ் அரசியலும்-அதன் வர்க்கத்தன்மையும் தான் அதன் மொத்தத் துரோகத்துக்கும் மூல ஊற்று என்பதை கூறாமல் பூசி மெழுகுகின்றனர். இந்த 100 பக்கக் கட்டுரையில் ஓர் இடத்தில் தன்னும் தேசிய இயக்கங்களிள் அரசியல் என்ன? அதன் பங்கு என்ன? என ஆராய வேண்டியதை மிகத் திட்டமிட்ட முறையிலேயே மறைத்துள்ளனர். தேசிய இயக்கத்தின் அரசியலைத் தொடின் உயிர்ப்பின் அரசியல் நாறிப்போய்விடும் என்பது தெரிந்ததல்லவா? அதுதான் இந்த இருட்டடிப்பு. அஸ்ராப்பின் தனிப்பண்புகளே அதாவது "SLMC தனது சொந்த மக்களின் அரசியற் தேவைகளை நிறைவேற்றாமல் தவறியமைக்கு குறிப்பாக அதன் தலைவரின் அரசியல் பண்புகளும் இலக்குக்களுமே பிரதான காரணிகளாக அமைகிறது" என்ற உயிர்ப்பின் கண்டுபிடிப்பு நகைப்புக்குரியது. எனெனில் உயிர்ப்பின் அரசியல் எப்படி அவர்களின் எல்லாவற்றையும் தீர்மானித்து விடுகிறதோ அதேபோல ளுடுஆஊ யின் அரசியல்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. இன்று சிலர் புலிகளின் மக்கள் விரோத நிலைகளுக்கு பிரபாகரன் தான் காரணம் எனக் கூறுவதும், இன்னும் ஒரு பிரிவினர் இதற்கும் தலைவருக்கும் தொடர்பில்லை என்ற கூற்றுக்குமிடையில் உயிர்ப்பின் அரசியல் எவ்வளவு தரமிழந்து போகிறது என்பதை ஒப்பிட முடியும். புலியும் சரி, ளுடுஆஊ யும் சரி, ஏன் உயிர்ப்பும் சரி அதன் வர்க்க அரசியல் தான் அவற்றின் எல்லாவற்றையும் தீர்மானித்து விடுகிறது.

அடுத்து உயிர்ப்பின் புரட்சிகர போராட்ட அரசியல் காட்டிக் கொடுப்பை பார்ப்போம்

"பொதுவில் தேர்தல்கள், ஒரு சமுகத்தின் அரசியல் உணர்வை ஓரளவு அளவிடக் கூடிய "அரசியல் மானியாக" பயன்படுகின்றன என்பது உண்மையே. எனினும் தேர்தல் வெற்றிகளால் மட்டும் ஒரு சமுகம் தனது உரிமைகளை வென்று கொள்ள முடியாது. ஒரு சமுகம் தனது அரசியல் ஒற்றுமையையும், அபிலாசைகளையும் வெளிப்படுத்துகிள்ற பிரச்சாரக் களமாக மட்டுமே தேர்தலைப் பயன்படுத்த முடியும்." என்றதன் மூலம் உயிர்ப்பு பிரச்சாரத்துக்காக எனக் கூறி தேர்தலில் நிற்கப் போவதற்கு முன்கூட்டியே ஆலவட்டம் போடுகின்றனர். அதைவிட சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையக மக்களின்  முற்போக்குப் பிரிவை பிரச்சாரத்துக்காக தேர்தலில் நிற்க முடியும் என்கின்றனர்.

ஜனநாயகம் அற்ற ஒரு நாட்டில் தேர்தல் பிரச்சார நடைமுறைக்குள் உள்ளதே எனக் கூறுவது ஒரு மாபெரும் மோசடியாகும். இலங்கையின் கடந்தகால வரலாற்று அனுபவங்களையும், படிப்பினைகளையும் சும்மா மறந்து போகும்படி கூறும் உயிர்ப்பின் தூக்க மாத்திரைகளே இவைகள். மூன்றாம் உலக நாடுகள் மீது முதலாளித்துவ அரசுவடிவத்தைத் திணித்ததன் மூலம் அச்சமுகங்கள் பெயரளவில் ஜனநாயகம் கொண்ட நாடுகளாகவுள்ளது. அங்கு கருத்துச் சுதந்திரம் என்பது கிடையாது. இங்கு புரட்சிகர கருத்துச் சுதந்திரம் உயிர்வாழ்கிறது என்றால் அது சட்டவிரோதமாக மட்டுமேயாகும். இங்கு தேர்தல் ஒரு புரட்சிர அமைப்பின் களமாக இருப்பது இல்லை.

இதுபோன்று உயிர்ப்பின் கட்டுரை முழுக்கவே அடுக்கடுக்காக புரடஇசிகர அரசியலுக்கு எதிராக வடிவமைத்துள்ளனர். மலையக மக்கள் முன்னணியின் வழியை தொடர வேண்டுமென இடையில் முஸ்லிம் மக்களுக்கு ஆலோசனை கூறுகின்றனர், அவர்களின் துரோக அரசியல் பாதையில். அடுத்து கொரிலா இயக்கம் பற்றி புலிகளின் அண்மைய தோல்வி பற்றி அரசியல் மதிப்படுதலில் இருந்து விலகி ஓடுகின்றனர். இப்படி கட்டுரை முழுக்க விமர்சிக்க முடியும். இவ்விதழில் அதற்கு இடம் போதாது. உயிர்ப்பின் மொத்த அரசியல் அவலத்தையும் மேலுள்ள எமது விமர்சனமே அம்பலப்டுபதத்த போதுமானது. உயிர்ப்பு முடிந்தால் விவாதிக்க முன்வாருங்கள். அது உங்கலால் ஒருக்காலுமே முடியாது என்பதை உங்கள் அரசியலிலிருந்து நாமும், வாசகரும் நன்கறிவோம்.