அண்மையில் சர்வதேச மன்னிப்பு சபை பிரான்சில் இனவாதம் வளர்ந்து வருவதையும், அரசு இனவாதத்திற்கு துணை போவதையும் கண்டித்துள்ளது. லுபென் தலைமையிலான் நாசிக்கட்சி 30 லட்சம் வெளிநாட்டவரை உடன் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் எனக் கோரும் அதேநேரம், 25லட்சம் பிரஞ்சு பிரஜா உரிமை பெற்றவர்களைப் பற்றி மறுபரிசீலனை செய்யவேண்டும் எனவும் கூறி தீவிரமான பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது.

இவ் நாசிக்கட்சிக்கு மிக அருகில் தம் கொள்கையைக் கொண்டுள்ள இன்றைய சிராக் தலைமையிலான ஆளும் கட்சியின் வெளிநாட்டவருக்கு எதிரான கொள்கைகள் நாசிக்கட்சியின் கொள்கைக்கு 25சத வீதமாக உயாத்தியுள்ளது. அண்மைக் காலமாக வெளிநாட்டவருக்கு எதிராக அடுத்தடுத்து புதிய கடும் சட்டங்கள் வெளிவந்த வண்ணமே உள்ளன. இங்குள்ள இடதுசாரிகள் எனக் கூறும் சோசலிசக் கட்சி, கமினிசக் கட்சி, ரொக்சியக் கட்சி என்பன எந்தவிதமான் எதிர்ப்புப் போராட்டத்தையும் நடத்தமுடியாத வகையில் சீரழிந்து செயலிழந்துபோய் உள்ளனர்.

இஸரேலிய யூதருக்கு ஆபத்து என்றவுடன் வரிந்துகட்டி வீதியில் இறங்கும் இந்தப் போலி இடதுசாரிகள் தொழிலாளிகளுக்கு ஆதரவாகவோ, இனவாதத்திற்கு எதிராகவோ வீதியில் இறங்கத் தயாரற்று ஓர் இனவாதிகளாகச் சீரழிந்து செல்கின்றனர்.