Language Selection

சமர் - 20 : 01 -1997
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

10-4-96 ல் ஐ.நா ஆய்வறிக்கை ஒன்றின் புள்ளி விபரத்தின்படி ஓர் ஏழைநாட்டில் வாழ்பவனின் வருமானத்தை விட பணக்கார நாடொன்றில் வாழ்பவனின் வருமானம் 18 மடங்கு அதிகமாகவுள்ளது. இது 1960களில் 13.3 மடங்காக மட்டுமே இருந்தது.

உலக செல்வத்தில் 80வீதத்தை அனுபவிக்கும் பணக்கார நாட்டைச்சேர்ந்த 20 பேர் உலக மாசு, பட்டினிக்கு என அனைத்துக்கும் காரணகர்தா ஆவர். உலக செல்வத்தில் 20வீதத்தை அனுபவிப்பவர் மொத்த உலக சனத்தொகையில் 80வீதமானேர் என்பத குறிப்பிடத்தக்கது. அதேநேரம் இதில் 20வீதம் பேர் படு ஏழைகளான இவர்கள் உலக செல்வத்தில் பெறுவது என்னவோ 1.5வீதங்கள் மட்டுமேயாகும்.

உலக செல்வம் சரிசமமாக எல்லோருக்கும் பங்கிடப்படாமல் உள்ளது. இதுவே உலக வறுமை, நோய்நொடி...... எல்லாத்துக்கும் காரணமாகும். இதுவே உலக யுத்தத்திற்கும் காரணமாகும். 1969ல் உலக பொருளாதார வளத்தில் 4.9 வீதத்தைக் கொண்டிருந்த இந்த ஏழைநாடுகள் இன்று 3.6வீதத்தை மட்டுமே கொண்டுள்ளது.  விரல்விட்டு எண்ணக்கூடிய பணக்கார நாடுகள் 96.4வீதத்தை கட்டுப்படுத்த அதன் டாங்கல் ஒப்பந்தம் துணைபோகிறது.  மறுகாலனியாக உலகம் மாறிவரும் இன்றைய நாட்களில் தேவை ஒரு தேசிய புரட்சியாகும். அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையும், உலக செல்வத்தை சரிசமமாகப் பரிமாறும் ஒரு புரட்சி மட்டுமே உலகிலுள்ள பிரச்சனைகளுக்குத் தீர்iவுகளை முன் வைக்கும்.

எகிப்தில் கூடிய பயங்கரவாதத் தலைவர்களின் பரங்கரவாத ஒழிப்புப் பற்றிய பிரகடனம்

பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்த யூத இனவெறியர்கள் 2ம் உலகயுத்தின் பின் மிகமோசமான ஒரு காட்டாட்சியை நடத்திவந்தனர். ஜனநாயகம் பற்றி உரத்துக் கத்தும் ஏகாதிபத்தியங்கள் சாமரம் வீச, இஸ்ரேலிய இனவெறியர்கள் இந்த மண்ணின் உரிமையாளர்களை, அவர்களின் ஜனநாயக உரிமைகளை அடக்கியொடுக்கி சுடகாடாக படுகொலைகளின் மூலம் இராணுவ ஆட்சிகளை இந்த ஜனநாயகத்தின் பேரில் நடத்தினர். இதை எதிர்த்துப் போராடிய மண்ணின் மைந்தர்களான பாஸ்தீன வீரர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி பயங்கரவாத காட்டாச்சி நடத்தினர். கொள்ளை, கொலை, கற்பழிப்பு...ஊடாகவே இஸ்ரேல் என்ற இந்த நாடு உருவானது.

இந்நிலையில் தான் இன்று யுத்தத்தின் அவசியம் அரசியல் இல்லாது போனதால் அமெரிக்கா தலைமையில் ஒரு துரோக ஒப்பந்தம் பாலஸ்தீன மக்கள் மீது திணிக்கப்பட்டது. இத்துரோகத்திற்கு அராபத் தலைமை தாங்க சொந்த மண்ணை அடகு வைத்து விபச்சாரம் செய்வதுடன், கடந்த பல பத்துவருட போராட்டத் தியகங்களையும், உணர்வுகளையும் கொச்சைப்படுத்தி ஏகாதிபத்தியங்களுக்குச் சேவகம் செய்ய பாலஸ்தீன மக்களையும் அழைத்துள்ளது. இந்நிலையில் தான் பாலஸ்தீன மக்கள் அதை எதிர்த்து போராடப் புறப்பட்டுள்ளனர். இந்த வகையில் போராடும் ~அமாஸ்| என்ற அமைப்பு சொந்த மக்களைச் சார்ந்து அவர்களை போராட்த்தில் இணைப்பதற்குப் பதில் தனிநபர் பயங்கரவாத வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனர். இஸ்ரேல் ஆக்கிரமித்த பாலஸ்தீன மண்ணிலுள்ள யூதக் குடியிருப்புக்கள் மீது தொடர்ச்சியான மனித வெடிகுண்டுத் தாக்குதலை நடத்தினர்.

இதன் மூலம் பல அப்பாவிப் பொதுமக்களை கொன்றதன் மூலம் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை கறைபடிய வைத்தனர். இஸ்ரேலிய இனவெறி பாசிச அரச பயங்கரவாதத்தை எதிர்கொள்ள ~அமாஸ்| தேர்ந்தெடுத்த வழி என்பது, பாலஸ்தீன மண்ணின் மைந்தர்களின் போராட்ட அடிப்படையை, எமதுமண் என்ற உரிமையை சர்வதேச சமூகம் முன் மறுதலிப்பதலிப்பதற்கு இட்டுச் சென்றுள்ளது. தொடர் குண்டு வெடிப்புக்களைத் தொடர்ந்து மேற்கு நாடுகள் எங்கும் ஆர்ப்பாட்டங்களும், மணிக்கணக்கான செய்தி ஊடகங்களின் ஒப்பாரி எனவும் தொடர்ந்தது. பிரான்ஸ் ஆளம் கட்சியும், எதிர்க் கட்சிகளும் கூட்டாகச்சேர்ந்து ஆhப்பாட்டம் நடத்தினர். இதேநேரம் இக்கட்சிகள் உள்நாட்டில் நடந்த தொழிலாளர் போராட்டத்தில் ஈடுபடவில்லை. இது மேற்கு நாடுகள் எங்கும் ஒரெ மாதியாக நடந்தன. ஆம் மேற்கு நாடுகளில் உள்ள ஆட்சியாhhகளினதும், முதலாளிகளினதும் யூத ஆதிக்கத்தை பறைசாற்றியது.  ஆளும்பீட யூத விசுவாசத்தை வெளிப்படுத்த மறுபக்கம் யூத எதிர்ப்பு எங்கும் விரிவுபட்டுள்ளது. அது நாசிகட்கு வழங்கப்பட்ட தங்கத்தட்டாக இந்நிகழ்ச்சிகள் உள்ளது.

இத்தொடர் குண்டுவெடிப்புக்களைத் தொடாந்து பயங்கரவாத ஒழிப்பு என்ற கூச்சலின் ஊடாக எகிப்தில் பலநாடுகளின் ஆளும் தலைவர்கள் கூடி, எதிர்காலத்தில் மக்கள் போராட்டத்தையே பயங்கரவாத பூச்சாண்டி காட்டி அடக்க ஒரு பிரச்சார மேடையாகப் பயன்படுத்தினர். ஆம், இதுபோன்ற ஒரு கற்பனையான பயங்கரவாத தோற்றத்தை பரப்ப |அமாஸ்| போன்ற குழக்களின் தனிநபர் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக அமைகின்றன.  எகிப்தில் கூடிய பயங்கரவாதத் தலைவர்களின் ஜனநாயகம் பற்றிய பிதற்றலும், பயங்கரவாத ஒழிப்பையும், எமது துரோகத் தலைவர்களின் ஜனநாயகத்துடனும், துரோகத்துடனும் நாம் ஒப்பிட்டு இனம்கான முடியும்.

எதிர்காலத்தில் மக்களைச் சாராத, தனிநபர் பயங்கரவாதத் தாக்குதல்கள் கடுமையான பின் விளைவுகளை அப்போராட்டத்தில் நியாயங்கள் மீது நிகழவுள்ளது. இந்தவகையில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடாத்தும் ~அமாஸ்|, புலிகள், அல்ஜீரியாக் குழக்கள்... எனப் பல குழக்களின் நடவடிக்கைகள் அவர்ளின் போராட்ட நடவடிக்கையின் பின்னுள்ள நியாயத்தையே குழிதோண்டி புதைத்துவிடும் அளவிற்கு இட்டுச் செல்லும்.

அப்பாவி மக்களைப் பாதிக்காத வகையில், அரசுயந்திரத்தின் மீதும் தாக்குதலை நடாத்துவதும், அதை மக்களை இணைத்துக்கொள்வதன் மூலம் வெகுஜனப் போராட்டமாக மாற்றுவதும் இதுபொன்ற தனிநபர் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களின் சுயவிமர்சனத்துடன் கூடிய கடமையாகும்.

ஈழப்போராட்ட வரலாற்றில் மீளவும் ஒரு துரோக வரலாறு

அண்மையில் கொழும்பிலிருந்து வெளியாகும் சரிநிகர் வரமுடியாத வகையில் பல்கலைக்கழக ஆசிரியர் குழு தடுத்து நிறுத்தியது. ஆசிரியரை மாற்றவும், செய்திகளை மாற்றவும் என எண்ணற்ற வேண்டுகோளுடன், பத்திரிகை ஆசிரியர் குழுமீது தமது அழுத்தத்தைப் பிரயோகித்தினர். இதன் தொடர்ச்சியில் ஆசிரியர், உழியர்கள் ஒரு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சமரசத்தின் பின் பத்திரிகை வெளிவந்ததுடன் ஒரு பாரிய மாற்றத்தைக் கொண்டிருந்தது.

முன்பு பத்திரிகை ஆசிரியர் ஓரிரண்டாக இருந்து தீடீரென எட்டாக உயர்ந்ததுடன், இரு கருத்து நிலைகளையும் சமப்படுத்தும் வகையில்அங்கு 4 ஆக எட்டு ஆசிரியர்கள் போடப்பட்டிருந்தது. இதில் என்ன கருத்து முரண்பாடு என ஆராயின், தமிழ்ப் பேசும் மக்கள் மீதான சிங்கள இன ஒடுக்குமுறையை, சிங்கள இராணுவ அடி, உதை, படுகொலையை.... மற்றும் தமிழ்த் தேச சுயநிர்ணயத்தை உயர்;த்துவது, எழுதுவது புலிசார்பு என முத்திரை குத்தும் பல்கலைக்கழக ஆசிரியர்குழு அதை எதிர்த்து பத்திரிகையை வழிநடத்தக் கோரினர். அதாவது இவைகளை அம்பலப்படுத்துவதை முன்னெடுப்பதை விடுத்து புலிகள் செய்வதை மட்டும் உயர்த்தும் படி கோருகின்றனர்.

ஓர் இனம் அழிவுநிலையில் இன்றுள்ளது. அதை அரசானது உச்சக்கட்ட நிலையில் ஒடுக்க, புலிகள் குறும்தேசிய நிலையில் நின்று அதை ஊக்குவிக்க பல்கலைக்கழக ஆசிரியர் குழு தேசிய இனம் அழியும் நிலையை மூடிமறைத்து அதை அழிக்க புலி பயங்கரவாதம் காட்டி ஊக்குவிக்கின்றனர். இந்நிலைமை என்பது கடந்த பலகுழுக்கள் நடந்த உடைந்த சிதறிப்போன போது பல உட்படு கொலைகளை சந்தித்து அதன் வழியில் இன்று மீளவும் பல்கலைக் கழக ஆசிரியர் குழு வெளியில் இருந்தபடி, சரிநிகருக்குள் சதிகளை நடத்த தமது இன்றைய அரசு, ஏகாதிபத்தியச் சார்பு என்ற பலமான நிலையில் நின்று திணிக்கின்றனர். இவர்களை எதிர்க்கும் பிரிவின் பலவீனமான, பாதுகாப்பற்ற, புலிமுத்திரை குத்தப்பட்டு இனவாதத்தாக்குதலை எதிர்க்க முடியாத இன்றைய நிலையில் பல்கலைக் கழக ஆசிரியர் குழு அவர்களைக் கடந்து உயர் பாதுகாப்பு நிலைகளில் நின்று சரிநிகரைக் கைப்பற்றி தமிழ்த் தேசிய இனத்திற்கு எதிராக திருப்பிவிட முனைகின்றனர்.

புதிய ஆசிரியர் குழு எதிர்காலத்தில் மேலும் மோதலுக்கு நகரும் என்பதை அதன் குழுத்தெரிவு எட்டாகும் போதே தெளிவாகிவிடுகின்றது. இந்தப் பச்சோந்திகளான பல்கலைக்கழக ஆசிரியர் குழக்களின் மனிதாபிமான, ஜனநாயக வேடத்தை நாம் சரியாக இனம்கண்டு கொள்வதும், எதிர்த்துப் போராடுவதும் இன்றைய வரலாற்றுத் தேவையாகவே எம்முன் உள்ளது.