குருஷ்டிஷ்தான் தொழிலாளர் கட்சியை அழிக்கும் நோக்கில் துருக்கிய பாசிச இராணுவசர்வாதிகாரிகள் தமது எல்லையைக் கடந்து ஈராக்கினுள் புகுந்து தாக்குதலை நடாத்தி 998 பேருக்குமேல் படுகொலை செய்துள்ளதுடன், தொடந்து ஆக்கிரமிப்பை நடாத்திவருகின்றனர்.
உலகில் மனித உரிமை மீறலில் அதிகளவு ஈடுபடும் முதல் நாடு துருக்கிதான் என 1997 ஆம் ஆண்டு சர்வதேச மனித உரிமைகள் சங்கம் தனது அறிக்கையில் அண்மையில் வெளியிட்டிருந்தது.
அந்தளவுக்கு மனித உரிமைமீறலில் ஈடுபடும் துருக்கி தனது எல்லையைக் கடந்து ஈராக்கினுள் புகுந்த போது கூட, ஜனநாயகக் காவலர்கள் ஏனோ தானோ எனக் கண்டு கொள்ளவில்லை. ஏன்?
துருக்கியில் திறந்த சந்தை உள்ளவரை அங்கு மனித உரிமை மீறல் என்பது கேள்விக்குரியது அல்ல என்பதே ஜனநாயக ஏகாதிபத்தியத்தின் நிலை. ஆனால் வடகொரியா, கிய+பா , சீனா , லிபியா போன்ற நாடுகள் அகலத்திறந்த சந்தையை தக்க வைத்திருக்கும் வரை அங்கு மனித உரிமை மீறல்
என்ளும்ம் சர்வாதிகாரப் போக்கு எனவும் நாம் கூறுவோம் என்பது ஏகாதிபத்திய அகராதி.
ஒடுக்கப்பட்ட மக்களாகிய நாம் இந்த மனித உரிமைக்குப் பின் உள்ள மோசடியைக் கபடத்தை இனம் கண்டு கொள்ளுவதன் மூலம் இவர்களின் நோக்கத்தைத் தவிடு பொடியாக்க முன்வரவேண்டும்.
துருக்கிய ஆக்கிரமிப்பாளரால் சுட்டுக் கொல்லப்பட்ட குருடிஸ் மக்களுக்கும் போராளிகளுக:கும் எமது வீரவணக்கத்தைத் தெரிவிக்கத் தயங்கக் கூடாது. அதேநேரத் ஆக்கிரமிப்பாளனுக்கு எதிரான போரை முன்னெடுக்கும் குருட்டிஷ் தொழிலாளர்கட்சிக்கு எமது கரங்களை உயர்த்தி ஆதரவு தெரிவிப்பது அமது சர்வதேசக்கடமையாகும்.
நடுநிலையின் பெயரால் நிதிஉதவி வழங்கி 2ஆம் உலக யுத்தத்தை நடாத்திய சுவிஸ்
2ஆம் உலகயுத்தம் வெறும் நாசிக் கட்சியின் தனித்துவமான விளைவல்ல. மாறாக மேற்கு நாடுகள் நாசிக்கட்சிகள் ஊக்குவித்து யுத்தத்தைத் தொடங்க எல்லாவித உதவிகளையும் வழங்கினர்.
இதன் பின்னணியில் கம்யுனிச ஒழிப் பும், சோவியத்தின் மீது தாக்குதலைத் தொடுத்தல் என்ற கனவுகளைக் கொண்டு மேற்கு நாடுகள் ஜெர்மனிய நாசிகளை பலப்படுத்தினர். நாசியுத்தம் மேற்கு நாடுகளின் காலனிகளைக் கோரிய போதிலும் தமக்கிடையில் அவற்றைப் பங்கிட்டும் விட்டுக் கொடுத் தும் சோவியத் மீதான தாக்குதலை ஊக்குவித்தன.
சோவியத் ய+னியன் பகிரங்கமாக நாசிகளுக்கு எதிரான ஐக்கிய முன்ன ணி கோரிக்கையைத் தொடர்ச்சியாக மேற்கு ஜனநாயகவாதிகள் நிராகரித்து ஜெர்மனிய நாசிகளுடன் சமரசம் கண்ட னர் இந்நிலையில் விழித்துக் கொண்ட சோவியத் ஜெர்மனியுடன் போர்தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து யுத்தத் தைத் தவிர்த்துக் கொள்ள முனைந்தது.
இந்நிலையில் யுத்தம் மேற்கு நாடுக
ளுக்கு நகர்ந்தது. யுத்தம் மேற்கு நாடுகள் புகும் எனக் கனவு காணாத மேற்கு அரசுகள், யுத்தத்தைத் தடுத்து நிறுத்த கோரிய சோவியத்துடன் காலம் தாழ்த்தியே ஐக்கியத்திற்கு முன்வந் தனர்.
இந்நிலையில் ஜெர்மனி யுத்தத்தை நடத்த தேவையான பணத்தையும் வளத்தையும் பெற்றுக் கொள்ள , ஜெர்மனி சுவிஸ் என்ற நாட்டை நடு நிலையாக விட்டு வைத்தது.
சுவிஸ் நடுநிலையின் பெயரில் ஜெர்மனிக்குத் தேவையான வளத்தை வாரி வழங்கியது. நாசிகளினால் படுகொலை செய்யப்பட்ட பல இலட்சக் கணக்கான ய+தர்களின் சொத்துக்களை பெற்றுக் கொண்டு அதற்குப்பதிலாக யுத்த தளபாட உதவியை வாரிவழங்கி யது. இந்த வகையில் அண்மையில் சுவிஸின் சதிதிட்டம் அம்பலமாகி யுள்ளதுடன் பல நாசிகள் கொள்ளையடித்துப் பதுக்கி வைத்து இருக்கவும் உதவி வழங்கியதுடன் யுத்தத்திற்குப் பின் அதைக் கடத்திச் செல்லவும் துணைசெய்தது அம்பலமா கியுள்ளது. உலகின் பல
மோசடிக்கார்களினதும், போதைவஸ்து கடத்தல்காரர்களினதும் பணத்தை பதுக்குவதில் எந்த இலக்குமின்றி ஜனநாயகத்தின் பெயரிலும் சுரண்டலை நியாயப்படுத்தும் கோட்பாட்டின் அடிப்படையிலும் தொடர்கிறது. இதைப்பதுக்கிப் பாதுகாத்கும் கொள்ளைக்காரர்கள் உலகம்தான் இன்று உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
சனநாய அமெரிக்காவின் உலக சனநாயகம் காக்கும் இராணுவத்தில் அண்மையில் அமெரிக் இராணுவத் திலிருந்த அமெரிக்கப் பெண்களின் குரல்கள் மூடிமறைப்புக்களையும் மீறி வெளிவந்தபோது அது அமெரிக்கா வையே உலுக்கியெடுத்தது.
அமெரிக்க ஜனநாயக இராணுவத்தில் இரண்டு இலட்சம் பெண்கள் அங்கம் வகிக்கின்றனர். இது மொத்த அமெரிக்க இராணுவத்தில் 13 வீதமாகும். இதில் 50 000 பெண்கள் ஆய்வுக்குட்படுத் தப்பட்ட போது 52 வீதமான பெண்கள் இராணுவத்தில் பணிபுரிந்த ஆண் இராணுவத்தினரால் பாலியல் வன்மு றைக்கு (கற்பழிப்புக்குப் பதிலாக பாலி யல் வன்முறை பாவிக்கப்படுகிறது) உட்படுத்தப்பட்டிருப்பது வெளியாகி யுள்ளது.
மூடிமறைத்துப் புகைந்து கொண்டிருந்த இந்த உண்மை ஜெஸிக்காவினால் பகி ரங்கமாகியுள்ளது. இந்தப் பெண்ணை பாலியல்வன்முறைக்குட்படுத்திய உயர்அதிகாரி மூன்று பெண்களை ஒன்பது தடவை பாலியல் வன்முறைக்குட் படுத்திய விடயமும் தற்போது அம்பலமாகியுள்ளது.
இச்சம்பவத்தை பற்றிய விசாரணைகளை நடாத்தவும், இலவச தொலைபேசி சேவையை ஏற்படுத்தியபோது 3930 தொலைபேசி அழைப்புக்கள் வந்திருந் தன. அநேகமான வன்முறைகள் உயர்அதிகாரிக்கும் பயிற்சிக்கு வந்த பெண்க ளுக்கும் இடையிலானவையாக இருந் துள்ளது. கட்டாய இராணுவ சேவையை வலியுறுத்தும் ஆணாதிக்க வெறியர்க ளுக்கு இப் பெண்கள் இனிப்பான பொம்மைகளே.
இந்த இராணுவம்தான் உலகில் சிறந்தது. இந்த இராணுவம் தான் உலகஜனநாயக காவலன். இதுதான் உலகப் பொலிஸ்காரின் ஜனநாயக ஆக்கிரமிப்புக்குள்ளாகும் நாட்டுப் பெண்கள் இவர்களிடம் சிக்கினால் சிட்டுக்குருவிதான்.அதுபலாத்காரமாகவும் விபச்சாரமாகவும் மாற்றும் வித்தை வல்லமைதான் உலகப்பன்னாட்டு முத லாளிகள் இவர்களுக்கு கொடுக்கும் பரிசு.
பன்னாட்டு முதலாளிக்கும் உலக கொள்ளையடிப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்குப் பதிலீடாக ஆக்கிரமிப்பு நாட்டுப் பெண்கள் உட்பட சொந்த நாட்டுப் பெண்களையும் ஜனநாயத்தின் பெயரால் வன்முறைசெய்ய உதவும். அதைமறைக்கவும் முயலும் அமெரிக்க கனவுகளை நனவுகளை நாம் வேறுப்பது எப்போது என்பதே எம்முன் உள்ள ஒரே கேள்வியாகும்.