Language Selection

சமர் - 22 :11 - 1997
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சரிநிகர் 122 இல் ''ஆணில்ப+த்த கலாப+ர்வமும் முகிழ்த்த ரசனையும்'' என சுவீஸ்  ரவீந்திரன் ஒரு விமர்சனக் கடிதம் எழுதியிருந்தார்.   அதில் வரும் மார்க்சிய விரோத கருத்துத் திணிப்பபை அம்பலப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரையை சமரில் எமுதுகிறோம்.   சரிநி கர்   திட்டமிட்டு எமது கருத்தை பிரசுரிக்க மறுத்து வருகின்ற நிலையில், எமது கருத்தை சரிநிகரில் எழுதமுடி யாத நிலையிலேயே  நாம் இதனை சமரில் எழுதுகின்றோம். நாம் அனுப்பிய பல கட்டுரைகள் இதுவரை பிரசுரிக்கப்  படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் தேசியப்பிரச்சனை தொடர்பாக ஒரு விவவாதம் என்ற தலைப்பிட்டு '' மார்க்கசியமும் தேசிய மும் '' என்ற புத்தகத்திலிருந்து  கேசவனின் கட்டுரையை சரிநிகர் 116 இல் பிரசுரித்தவர்கள் அந்த புத்தகத்தை யொட்டிய விமர்சனம் சமர் 17 இல் வெளிவந்திருந்தது. ஆனால் விவாதம் நிகழ்ந்தது எனக் குறிப்பிட்ட சரிநிகர்  அதை பிரசுரிக்க வேண்டும் என்ற விவாதப் பண்பைக் கூட  இழந்து போ யுள்ளது.

கேசவனும்  அவரைச் சேர்ந்த சரிநிகர் பிரிவும்  தமது கட்டுரைகளை எழுதி வெளியிட்டு அதற்கு விவாதம் எனப் பெயரிட்டவர்கள்,  சமரில் வெளிவந்தி ருந்த   ஒரு படத்தை  அக்கட்டுரைக் குள்  பிரசுரித்து இருப்பதுதான் அதை விட மிகவும் மோசமானது.

தமது   சித்தாந்த குரு அந்தோணிசாமி மார்க்ஸ் அவர்களை அறிமுகம் செய்ய விரும்பிய சரிநிகரின்  மார்க்சிய திரிபு வாத பிரிவு  சரிநிகர் 114 இல் ஒரு மூடிமறைக்கப்பட்ட அரசியல் விபச்சா ரத்தை செய்து இருந்தனர்.  அதை அம்பலப்படுத்திய எமது விமர்சனத்தை  சநிநிகர் பிரசுரிக்க மறுத்ததென்பது அவர்களின் நோக்கத்தையே தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

இவ்வாறு சநிநிகர் இன்று விவாதம், விமர்னம் என்ற பெயரில் செய்வது ஒரு தலைபட்சமான கருத்து திணிப்பை, அரசியல் விபச்சாரத்தை  அம்பலப்ப டுத்தி சமர் தொடர்ந்து  எழுவதைத் தவிர வேறுவழியில்லை.

இனி  இரவீந்திரனின் விமர்சனத்திற்கு வருவோம்.

ஒளவை ஆணாதிக்க அழகியலை எதிர்த்து எழுதிய விமர்சனத்தைத் தொடர்ந்து, பலரும் விமர்சனங்களை முன் வைத்திருந்தனர்.  இங்கு இரவிந் திரனின் விமர்சனம் பற்றியும் அதேநேரம் அதே இதழில் யமுனா ராயேந்திரன, ரவீந்திரனுடன் ஒன்றுபட்ட ஆணாதிக்க விமர்சனத்தை யும் இக்கட்டுரை கேள்விக்குள்ளாக்கி றது.

அழகியல் தொடர்பான தமது கருத்து நிலை என்ன என்பதை   ரவீந்திரனோ, (ஆணாதிக்கத்துக்கு வெளியில்) யமுனா   தெளிவுபடுத்த முடியாது போயுள்ளனர்.  ஆணாதிக்க அழகியலை எதிர்ப்பதாகக் கூறும் இவர்கள்  இருவரும் ஒர் அழகி யல் உண்டு என்பதை கூறவருகின்றனர் ஆனால் அது என்ன என்பதையோ அதன் வரையறையையோ கொடுக்க முடியாது போயுள்ளனர்.

ஒரு பொருளின் அழகியல் என்பது  என்னவாக உள்ளது என அறிவியல் ரீத pயாக நாம் ஆராய்வோம்:-  ஒரு பொரு ளின் வேறுபட்ட தன்மையை  அழகி யலாகக் காட்டி விடுகின்றனர்.  வேறு பட்ட தன்மை என்பது  எப்படி எதனால் ஏற்படுகிறது ? நாம் வாழும் சூழல்

(காலநிலை, இயற்கை அமைப்பு,  நீண்ட பரிணாம வளர்ச்சி, பொருளாதார பலம், சாதி, மதம்,  இனம் , நிறம் , தொழிநுட்ப வளர்ச்சி, ஆதிக்கம் )  என எண்ணற்ற கூறுகளின்   தொகுப்பில்தான் ஒரே பொருளின் வேறுபட்ட தன்மை பேணப்படுகிறது. ஒரு பெண்ணையோ ஆணையோ எடுப்பின் ஒரு பெண்ணுக்கும் ஒரு பெண்ணுக்கும், ஒர் ஆணுக்கும்  ஒர் ஆணுக்கும் இடை  யில் உள்ள வேறுபாட்டை நியாயப்படுத் தும் எல்லா அடிப்படையும், அதேபோல   ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில்

(விதிவிலக்காக  இன உற்பத்தி உறுப்புக்களைத்தவர ) உள்ள வேறு பாட்டை நியாயப்படுத்தும் எல்லா அடிப்படைகளும், அடிப்படையில்  மனி தன் மேல் சவாரி செய்யும் வௌவேறு  வடிவங்களேயாகும்.

ஆபிரிக்க கறுப்பு இன பெண்ணையும்,  சைரேயில் கையேந்தும் பெண்ணையும், வெள்ளையினப் பெண்ணையும்,  பள்ளர் இனப் பெண்ணையும்,  கல்லுடைக்கும் பெண்ணையும்  பார்பானிய பெண்ணை யும், ஒப்பிட்ட வேறுபாட்டில்  என்ன அழகியலை விளக்க முடியும் ? என்ன வரைவிலக்கணத்தைக் கொடுக் முடியும்?  அந்த வேறுபட்ட தன்மையும்  சமநுகர் வை சமுதாயம் அடையும் போது  இயல்பாகக் கடக்க முடியும் இது நிறம்,  என அனைத்தையும் கடந்த ஒரு பொதுத்தன்மையைகப் பெறமுடியும்.

குறைந்தபட்சம்  பொருளாதாரப் பலம் பெற்ற ஐரோப்பாவில்  மக்களுக்குள் (உருவம், நிறம்...) இந்த வேறுபாடு அருகி வருவதை மூன்றாம் உலகத் துடன் ஒப்பிட்டு  இனம் காணமுடியும்.

மனிதனின் கண்ணுக்குத் தெரியும் புற அகஅழகை நியாயப்படுத்தும் கோட் பாட்டு வடிவங்கள் அனைத்தும் இந்த சுரண்டும் உலகின் வௌவெறு வடிவங் களாகும்.  நாம் உண்மையில்  இந்த சமுதாயத்தில் எதை அடையாளப்படுத்த வேண்டும்? மனித நேயத்தை, மனித பண்பை , நேர்மை, தன்மானத்தை, போராடும் பண்பை, மதிக்கும் பண்பை , அன்பை , ஆதரவை , அச்சமின்மையை  தேடும் பண்பை. . . எனப் பலவற்றை

வர்க்க கண்ணோட்டத்தில் காணவேண் டும்.  இதற்கு அழகியல் எனப் பொது வாக வரையறுப்பதன் மூலம்  இதன் உயிர் மூச்சை கொன்றுவிடுவதாகும்.

நாம் ஒரு பொருளின் வடிவம்,  உள் ளடக்கம் , பொருளியல் பண்பு , அது செயற்படும் தன்மை,  அதன் பயன்பாடு, சொல்லும் வடிவம் என அனைத்தையும்  பொருளில் தேட வேண்டும் இதைவிடுத் து அழகு, கவர்ச்சி கலாப+ர்வமானது எனச் சொல்வது  மகா மோசடியாகும்.

ஒரு படைப்பு அது எதுவாக இருந்தா லும்  அதை வெறும் பண்டமாக

ஐரோப்பிய உற்பத்திப் பொருட்களைப் போல (பழவகை, இறைச்சிவகை)  விற் பனைக்காக ஏமாற்றுக்காகப் படைப் பதை  மறுபக்கம் எதிர்க்க வேண்டும். மாறாக அதன் உள்ளடக்கம் அதன் அறிவுப+ர்வமான  எல்லா உட்கூறுகளை யும் வெளிக் கொணரும் வகையில்,  அது தனது நுணுக்கமான கலைத்திற னைக் கொண்டிருக்க வேண்டும்.

இது அப்பொருளின் பயன்பாட்டினை மீறியதாக  இருக்ககூடாது.  ஒரு சிறுகதை, கதை என எதை எடுத்தாலும் எந்த ஒரு சொல்லோ வரியோ  சம்பந்த மில்லாது வரின் அது கலை என்பதல்ல மாறாக கலைத்தன்மை குறைந்த வெளிப்பாடாகும்.

ஒன்றைப் பயன்படுத்தும் போது  அது அப்பொருளின் பயன்பாட்டின் வெற்றிக் கானதாக ? இருக்க வேண்டும்.  இது பயன்பாட்டின் வாதம் என யாரும் கூறின்   உண்மையில் அதை மறுத்தபடி அதை யே செய்ய முயலுகின்றனர். இது சுரண்டும் வர்க்கத்தை பாதுகாக்கத்தான்.

இது மனிதனை மந்தையாக மாற்றுவ தற்கு அப்பால்  பெரிதாக வேறு எதுவும் இல்லை. ஒரு பொருளின் அதன் மரபை மறுக்காத  இடைவெளியைக் கடத்தல்,  என்ற உலக ஏற்றத்தாழ்வைக் கடக்கும் போது நிகழ்ந்துவிடும். அதை நோக்கிய எமது  கருத்துத் தளம் இயங்க வேண் டும்.  அதை மறுத்த நியாயப்படுத்தும் வௌவேறு கோட்பாடு,  தனக்குள் அடிப்படையில் பிளவை வைத்திருக்கச் செய்யும்  ஒரு தீவிர முயற்சியயாகும்.

இதை ரவீந்திரன், யமுனா ராஜேந்திரன் எப்டிச் செய்ய முனைகிறார்கள் என்பதை அவர்களின் வரிகளிலிருந்தே ஆராய்வோம்.  ரவீந்திரன் கூறுவதைப் பார்ப்போம்:-

'' துள்ளியோடும் மானைப்பார்த்து ரசிக்கின்றோம. புலிகளின் வரிகளைப் பார்த்து ரசிக்கின்றோம் எங்கும் கலாப+ர்வமாக ரசிப்பது  கலாப+ர்வமற்று ரசிப்பது  என்று வரையறை செய்வ தில்லை.  ரசிக்கின்றோம் உண்மை ரசனை மறுக்கப்படுவது இல்லை.  அழகியல் மறுக்கப்படுவதில்லை ''  என்கிறார் ரவீந்திரன்.

கலாப+ர்வமாக ரசிப்பது  என எழுதிய  கே.எஸ் சிவகுமாரனின்  ஆணாதிக்க அழகியலை மறுக்கப் போனவர்   அதைக் கடந்தவரா என்றால் இல்லை.  மாறாக அதையே வேறு ஒரு வடிவில் நியாயப்படுத்தி விடுகிறார்.  அதைப்பார்ப் போம்.

‘’ரசனை மறுக்கப்படுவதில்லை அழகி யல் மறுக்கப்படுவதில்லை’’  என்று கூறும் இவர்   அவை எந்தளவில் எந்தக் கோட்பாட்டில்  உண்டு என எந்த ஒரு விளக்கத்தையும் தரவில்லை.  பெண்ணை ரசிக்க முடியும் பெண் அழகியலை மறுக்க முடியாது  என்பது தான் ரவீந்திரன் சுற்றி வளைத்துச் சொல்லும்  மறுவிளக்கமாகும். ஆனால் அதை  அப்பட்டமாக மூடிமறைக்க, அது  ஆணாதிக்க அழகியலாக இருக்கக் கூடாது என்பது ஆணாதிக்க ஆணின்  அங்கலாப்பன்றி வேறு ஒன் றும் இல்லை.

மூன்று வயது பச்சிளம் குழந்தையின் சிரிப்பு,  அழகு,  துள்ளியாடும் அழகு  என அனைத்தையும் ரசிக்க   அழ கைக்காண முடியும் என்பது  ரவீந்தி ரனின் எடுகோளாகவுள்ளது.

நல்லது உங்கள் குழந்தைக்கும் ஆபி ரிக்க நாட்டில் அடுத்த நேரத்துக் கஞ்கிக்கு கையேந்தும்  எலும்புகள் கையேந்தும் அழகும்   இலங்கையில்  அலைந்துதிரியும் காய்ந்து போன குழந்தைக்கும் இடையில் என்ன அழகி யல் ரனனை உண்டு,  என்ன அழகு வேறுபாடுண்டு என்று விளக்க முடியுமா?

ஒருவன் ஒரு குழந்தையின் அழகை ரசனையைப் பற்றி பேசுவானாயின்  அவன் சுயநலம் பிடித்த   அதேநேரம் சுரண்டும் வர்க்க கோட்பாடின் எல்லைக் குள் திரிபவரர்களே.

ஒரு குழந்தையின் ஆரோக்கியம்  அதன் கல்வி  என்பவற்றை ஒரு பெற்றோர் பெற்றுக் கொள்ளப் போராடும்  அதே நேரம், அது மற்றப் பிள்ளைக்குப்  மறுக்கப்படுவதையிட்டுப் போராடாத அழகியல்   ரசனை முகமூடி வெறுக் கப்பட வேண்டியவை. துள்ளிக்குதிக்கும் மான்,  வரிப்புலி புற அழகைப் பற்றி பேசுபவன்  அதன் வாழ்வியலைப் பேசுபவன்  உண்மையில் பலவற்றை மறைக்க விரும்புகிறான்.  மான் புலியின் வடிவம் , வரிகளின் நிறம் என்பன இயற்கையை பரிணமிக்கும்  உயிர் வாழும் போராட்டம் என்ற எல்லைக்குள் ளானவை. அவற்றுக்கிடையான உணவுக் கான போராட்டம் மட்டுமே உண்டு. ஆனால் மனிதர்களுக்கு  உள்ளது போல் சூறையாடும் தன்மை கிடையாது.

இந்த உயிர்வாழும் போரில் மனிதன்  சூறையாடும் பொருளாதாரத்துக்கு இயற்கையை எப்படி அழிக்கின்றான் என்று அதன் இயல்பை சேதத்திற்குள் ளாக்குகின்றான்  எனப் பேசமுடியாத அழகு வெறுக்கத்தக்கது, கேவலமானது.

அடுத்து ஒளவை கூறும் ஒன்றை எடுத்து ரவீந்திரன் கூறுவதைப் பார்ப்போம் .

‘’நமக்குத் தேவை பெண்ணைப் பெண் ணாகச் சித்தரிப்பதேயன்றி ஆண்களின் கண்ணோட்டத்தில் பெண்ணைச் சித்தரிப் பதல்ல என்ற ஆழமான கருத்தோட்டத் தை ஊன்றியபடி நிற்கிறார். இதைப் பொதுப்புத்தியுடன் முகம் கொடுப்பது சரியல்ல.’’ என்கிறார் ரவீந்திரன். இது அடிப்படையில் தவறான வாதம். பெண்ணை பெண்ணாக எப்படிச் சித்தரிப்பது? இங்கு கேள்விக்குள்ளாக்கு வது அழகியல் என்பதால், பெண்மீதான ஒடுக்குமுறை மீதானது அல்ல இவ்விவா தம். அவள் ஒரு பெண் எனக் கூறுவது கூட மனித பிளவின் அடிப்படையாகும்.  பெண் ஆண் அடையாளங்களைக்கடந்து (இன உறுப்புக்கள் விதிவிலக்காக)  அனைத்தையும் சாதிக்கும்  கோட்பாடு தான் மனிதனின் சமநிலையை கோருவதாகும்.

இதைமறுக்கும்  கோட்பாட்டுத் துறை யில் பெண் ஒடுக்குமுறையைத் தனி யாக அடையாளப்படுத்துவது  அல்ல. மாறாக பெண் ஆண் என்ற  கோட்பாடுகளை செயற்தளங்களை தகர்த்தால்  மட்டுமே ஒரு சரியான நோக்கு நிலையும்  ஒரு சரியான கோட்டுப்பாட்டிற்கு அடையாளமாகும்.

ரவீந்திரன் இன்னொர் இடத்தில்

'' பெண்களின் தலைமயிரிலிருந்து  யோனிவரை அழகைப் பற்றிய வரைவுகளைப் யார் செய்தார்கள்? ஆண்களின் கண்ணோட்டத்தில் இல்லையா, என்பதே கேள்வி.  (அக, புற அழகு உள்ளிட்ட)  பெண்மை எனும் கருத்தாக்கத்தைப் தந்ததும் ஆண்கள்தான்.'' என்கிற ரவீந்திரன்  வசதியாக ‘ஆண்மை’ என்ற  கருத்தாக்கத்தை வரையறுத்த ஆண்க ளை மறந்து விடுகிறார்.

யார் வரையறை செய்தது  என்ற வரையறைக்குள்   பிரச்சனையை முடித்துவிட முனைகிறார்.  பிரச்சனை  யார் வரையறை செய்தது என்பது அல்ல. மாறாக இது கோட்பாட் டுப் பிரச்சனையாக, வர்க்கப் பிரச்சனையாக உள்ளது. பெண் அழகுக்கு ஒரு விளக்கம் ஆணாதிக்கம் அற்ற ஒரு  சமுதாயத்தில்  கொடுக்க முடியும் என்கிறார். ஆணாதிக்கம் அற்ற ஒரு பெண் ஆண் புற அக நிலையில் பெண் அழகியலை விளக்க  கொடுக்க முடி யும். இப்படி கூறுவது என்பது மூடிம றைக்கப்பட்ட ஆணாதிக்கமாகும்.

புற, அக அழகு பற்றிய சிந்தனை  வர்க்க சமுதாயத்தில் மனிதக் கண்டு பிடிப்பில் எழுப்பட்ட கருத்தே. அந்தக் கண்டுபிடித்தல் என்பது  உலகுபற்றிய பார்வை சார்ந்ததே. மனிதன் அதைக் கடக்க வேண்டுமா? இல்லையா? என்பதே கேள்வியாகும். அதைவிடுத்து நியாயப்படுத்த கோட்பாடு கொடுப்ப தல்ல.

அடுத்து ரவீந்திரன் கூறுவதைப் பார்ப்போம்:-

'' இப்படி ஆண் நோக்கில் கற்பிதப்ப டுத்தப்பட்ட  பெண்ணின் அழகியலை மீறி கலாப+ர்வமாக ரசிப்பது என்பதை விளங்கக் கடினமாக இருக்கிறது.  ஒரு பெண்ணைக் கலாப+ர்வமாக ரசித்த  நாலுவரிகளைக் கே.எஸ். எஸ் எழுதிக்காட்டுவாரானால்  சிலவேளை எமது கருத்தைப் பரிசீலிக்க உதவலாம்.’’ எனப் பிரகடனம் செய்யும் ரவீந்திரன்  ஆண் நோக்கில் இல்லாத அழகியலில் நான்கு வரிகளை எதிக்காட்டியிருக் கலாம் அல்லவா. ஆனால் அவரால் முடியாது.  பாவம் கே.எஸ்.எஸ் விவா திப்பதும்  ரவீந்திரனின் விவாதிப்பதும், பாதுகாக்க நினைப்பது  ஒரேவிடயம் தான் என்ற உண்மையை மறைப்பது தான் இருவருக்கும் இடையிலான அடிப்படை வேறுபாடாகும்.

அது சரி இந்த ரவீந்திரன் முதல் இவர்களின் சித்தாந்த குரு  அந்தோனிசாமி வரை  கற்பிதம் என்ற சொல்லை அடிக்கடி பல விடயத்தில் பயன்படுத்துகின்றனர். இந்த கற்பிதம் தொடர்பான ஒரு விரிவான விளக்கம்  சமரின் பிறிதொரு வெளியீட்டில் விவாதிக்கவுள்ளோம். இருந்தபோதும் சுருக்கமாகப் பார்ப்போம்.

கற்பிதம் என்பது மாயை அதாவது இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டுவது என்ற விளக்கத்தை மீறி கற்பிதம் என்ற  சொல்லுக்கு வேறு அர்த்தம் கிடையாது. ஆண் நோக்கில் கற்பிதம் செய்யப்பட்டது என்பது இல்லாத ஒன்றை பற்றி கற்பிதமாக உள்ளதாக காட்டமுனைவதன் நோக்கம் என்ன? அதன் நோக்கம் பொருளை மறுப்பதாகும்.  கருத்தை முதன்மையா னதாக இட்டுக் கட்டுவதாகும் . இன்று புலிகளுக்கு எதிராக  எழுதின் புலிகள் சுடுவார்கள் எனக் கூறுவது கற்பிதமாக இருப்பதில்லை. மாறாக சுட முன் சரி சுட்டபின் சரி  அது கற்பிதமானதல்ல.  அதாவது அது நடக்கும் பொருளாக உள்ளது என்பது உண்மையே.  இதை விடுத்து புலி சுடும் என்பது கற்பிதம் எனின்,  உண்மையில் அதற்கு எதிரா கப் போராட வேண்டிய உணர்வையும்  தற்காப்பையும் மறுதலிக்கும் திசைதிருப்பும் சதியுமே எஞ்சியிருக்கும்.

தமிழ் ஈழவிடுதலைப் போராட்டம் தீவிர மடையமுன் பல்வேறு முதலாளித்துவ இடதுசாரி குழுவினர் தேசியம் என்ற ஒன்று கிடையாது  அது கற்பிக்கப்டு கிறது என்ற அதையே இன்று கோட்பா டாக்கி தேசியம் முதல் எல்லா கூறுக ளும் கூறுவது என்பது அதன் பொருளை மறுப்பதாகும்.

ஆணாதிக்கம் கற்பிதம் என ஒரு பெண் கூறின் பெண்ணியம் கற்பித்தல் என் ஒருவன் கூறின் அவனின் நோக்கம் தெளிவானது. ஆணாதிக்கம் என்ற ஒன்று இல்லாமல் அதைக் கூறுவதா கவும் பெண்விடுதலை என்ற ஒன்று இல்லாமல் அதைக் கூறுவது என்றவகையில், ' கற்பிதம் என்ற சொல்லினூடாக  ஆணாதிக்கம் என்ற ஆணாதிக்க கருத்தியலைப் பாது காக்கவும், பெண்ணியம் என்ற விடுத லைத் தத்துவத்தை மறுப்பதுமாகும். ஒரு பொருளின் தன்மை அதன் இருப்பை மறுப்பதனூடாக  அதன் உண்மையை இந்த உலகத்தில்  எப்படி உள்ளது என்பதைக் காணமுடி யாது  இருத்திவைக்கும் ஏகாதிபத்தியம் சார்ந்த கோட்பாட்டினை  மையப்புள்ளீ யே கற்பிதமாகும்.

மனித குலத்தின் ஆரம்பத்தில் இல்லா த உள்ள ஒன்றை  கற்பிதம் செய்வதா க அதற்கு  மறுவிளக்கம் (அடிக்கடி மறு வாசிப்பு செய்பவர்கள் அல்லவா) கொடுத்து அதையே கூறுகின்றோம் என வாதிட முயலலாம்.

அப்படிப் பார்த்தால் உலகமே கற்பிதம் தான்  ப+மியே கற்பிதம் தான்.  இந்த சூரியக் குடும்பமே ஏன் எல்லாக் கோடானுகோடி  சூரியக் குடும்பமும் கற்பிதமே.

எல்லாம் கற்பிதம் எனில் எதற்காகப் போராட வேண்டும் என்ற கேள்விக்கு  இட்டுச் சென்று போராட்ட குணாம் சத்தை, வாழ்வுக்கான நியாயப் போராட் டத்தை   மறுதலித்து ஏகாதிபத்தியத் திற்கு சேவை செய்ய  முனைகின்றன.

ஒரு பொருளோ அதைச் சார்ந்த  செயலாக இல்லாத வரைதான்  அது கற்பிதம். அது பொருளாக  செயலாகி உள்ளவரை அதைக் கற்பிதம்  என்று முன்மொழியும் அடிப்படையில்,  இந்த உலகை சுரண்டும் கோட்பாட்டின் பல் வேறு  வடிவங்களேயொழிய   விடுத லைக்கான தத்துவமல்ல.

அடுத்து ரவிந்திரன் கட்டுடைக்கும் கோட்பாட்டைப் பார்பபோம்.

'' எதிர்மறைகளின் கவர்ச்சி ''  என்ற விதி இயற்கை விஞ்ஞானம் சார்ந்தது.  பெண் மீதான கவர்ச்சியோ பாலியலை மையமாக வைத்துப் பின்னப்பட்டது.

(அது இயற்கையாய் பெறப்பட்டது அல்ல.)   பாலியல் சம்பந்தப்பட்ட கண்ணோட்டம் இனவுற்பத்தியை  அடிப்படையாகக் கொண்டது.  இதனா லேயே ஆண் பெண் எதிர்பாலுறவு மட்டும்  ஏற்கப்பட்டது, இயற்கையானது.  எனக் கற்பிதம் செய்யப்பட்டது.  ஓரினச் சேர்க்கை இயற்கைக்கு மாறானதாகக் கற்பிதப்படுத்தப்பட்டது,  மறுக்கப்பட்டது. மறைவிடத்துக்குத் தள்ளப்பட்டது. ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் மனிதர்கள் இல்லையா?'  எனக் கேட்டு எழுதும் ரவீந்திரனின் இந்த வாதம் ஒன்றுக்கு ஒன்று முரணா கிப் போய்விடுகிறது ஏன்?  ரவீந்திரனின் கூற்றில் இயற்கை விஞ்ஞானம் சார்ந்த எதிர்மறை கவர்ச்சி பாலியல் சம்பந்தப் பட்ட  கருத் தோட்டம் இனவுற்பத்தியை அடிப்படை யாகக் கொண்டது என சரி யாக வாதிட்ட பின்  பாலியலை ஓரினச் சேர்க்கைக்குப் பொருத்த முனைவது   முரண்பாடானது போல ஓரினச்சோக் கைக் கோட்பாட்டின் தோல்வியும் ஆகும்.

இயற்கையின் எல்லா உயிரினத்தின் மூலமும் ஒன்றே ஆகும்.  அதன் பிளவுகள் பரிணாமத்தால் அமைந்த போது,   உயிரியல் விதி இனப் பெருக்ககத்தைக் கோருகிறது.  இதன் விளைவாக மனிதனில் ஆண் பெண் இனப் பெருக்க அடிப்படை  வேறுபாடு   இயற்கையில் பரணமித்தது. இந்த ஆண் பெண் உறவினூடாக இனவிருத்தியைத் தூண்ட உருவான உணர்ச்சியே இன்ப மாகும். தூண்டப்படும் உணர்ச்சி ஆண் பெண் கலவியைத் தூண்டுகிறது. இது இயற்கை விஞ்ஞானமாக உள்ளது. பின்னால் பாலியலாக உருவாக்கி  நுகர்வாக   மாற்றிய போதுதான்  பாலி யல் நுகர்வுக் கலாச்சாரம் தோற்றப் பெறுகிறது.  ஆண் பெண்ணுக்கு இடையில் ஏற்பட்ட  இயற்கையான இனவிருத்தி  உணர்ச்சி இன்று நுகர்வுப் பண்டமாக  மாறியுள்ளது. இந்த நுகர்வு  இயற்கை யை மீறிய நுகர்வாக அதிகரிக்கும் போது,  இயற்கையின் தேர்வை அழிக்கின்ற வகையில் மாறிவிடுகின்றது.

இரவீந்திரன் கூறும் இனப் பெருக்கப் பாலியல், பின்னால்  ஓரினச் சேர்க் கைக்கும் நுகர்வுப் பண்டமாக எப்படி  தடம் புரண்டது என்பதைக் கூறிவிளக்க முடியவில்லை. ஓரினச் சேர்க்கை எப்படித் தோன்றியது ? இது ஆணாதிக் கத்தின் கொடையே ஒழிய  மனித சுதந்திர வேட்கையின்  விளைவுகள் அல்ல.

ஆணாதிக்கம் ஆண் பெண்ணுக்கு இடையில் ஏற்படுத்திய பிளவுதான்  ஓரினச் சேர்க்கையின் தொடக்கப் புள்ளி.  ஆண் பெண்ணுக்கு இடையில் இயற்கையாக இருந்த உணர்ச்சி  இனப் பெருக்கத்துடன் தொடர்புடைய தாக இருந்தது. மனித குல வராலாற் றில் ஆண், பெண்ணுக்கு இடையில் இருந்த சுதந்திரமான இனப் பெருக்க முறையை சுரண்டலுடன் ஆணாதிக்கம்  தனக்குச் சாதமாக்கிய போது, ஆணுக் கும் - பெண்ணுக்கு இடையில் இருந்த சுதந்திரமான இனப் பெருக்க உணர்ச்சி யும் முடிவு வந்தது.   இனப் பெருக்க உணர்ச்சி மட்டுப்படுத்தப்பட்டு அடக்கப்பட்டது. இந்நிலையில் அந்த ஆண்பெண்  ஓரினச் சேர்க்கையைத் தேர்ந்தெடுக்கும்(சமரசமாக ஆணாதிக்கத் துடன்)  முதல்படியைக் கைக் கொண்டனர்.

அத்துடன் உருவான அரசுகள் தமது குடிமக்களைக் கட்டுப்படுத்தவும்,  அயல் அரசுகளை அடக்கவும் என ஆண்களைக் கொண்ட நிரந்தர இராணு வத்தை உருவாக்கியது. அத்துடன்   ஆண்களின்றித் தனிமையில் பெண்களை ஆயிரக்கணக்கில் அந்தப்புரங்களுக்கு  இட்டுச் சென்றனர். இந்த ஆண் பெண் கள் தமது இனவிருத்தியின் உணர்ச்சிக ளை தீர்த்துக் கொள்ள முடியாத ஆணாதிக்க சுரண்டல் சமுதாய அமைப்பில், இச் சமூக அமைப்புக்குள் சமரசம் செய்வோர், ஓரினச் சேர்க்கை யில் ஈடுபடுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

அந்த அடக்குமுறைக்கு எதிராகப் போராடுவதற்குப் பதில் இச் சமூகத்துக் குள் - ஆணாதிக்கத்துக்குள் -  ஒரு மாற்றுதலை வந்தடைந்தது. பாலியல் மறுக்கப்பட்ட சமூகம் உண்மையில் போராடி இருக்க வேண்டியது  இனவிருத்திக்கான உணர்ச்சியைப் தீர்த்துக் கொள்ளும் போராட்டத்தையே  முன்னெடுத்துக் கொடுக்கவேண்டும். இதைவிடுத்து ஆணாதிக்க சமூகத்துக்குள் சமரசம் செய்யும் போக்கு... இதில்தான் ஆண் பெண் சமுதாயத்தை   மீறிய ஒழித்த உறவைக் கொண்டது.

ஓரினச் சேர்க்கை  ஆணாதிக்கம் கொடுத்த பரிசுகளே!  அதைத் தங்கத் தட்டில் ஏந்தும் ரவீந்திரன் அ. மார்க்ஸ்   அதை நியாhய்பபடுத்தி போhடவும் செய்கின்றனர். அதற்கான சரசபாஷை களையும் எழுதுகின்றனர்.  இந்த ஆணாதிக்கத்தினை நாம் எதிர்த்து

போராடுவது  ஒரு சமூகப் பற்றாளனின் பணியாகும். அது மட்டும் சரியான கோட்பாட்டுத் தத்துவமாகும்.  ஆணா திக்கம் பெண்களை கொடுமைப்படுத்து வதற்கு எதிராக மட்டுமானதுதான் போராட்ட அல்ல. அதன் பக்க விளளை வுகளையும் எதிhர்த்துப் போராடுவதாகும். ஆண் பெண் உறவுதான் இயற்கையின் தேர்வு. இதை மறுக்கும் இரவிந்திரன் இயற்கை விஞ்ஞானப்படி அதை நிறுவ முடியுமா? ஆண் - பெண் இனப் பெருக்கம் இயற்கைத் தேர்வு, அதன் உணர்ச்சி இயற்கையின் விளைவு, இதை மறுக்கும்  ரவீற்ந்திரன் அது '' இயற்கையால் பெறப்பட்டது அல்ல.''  என்று கூறுவது  விஞ்ஞானத்திற்கப் பாற்பட்டது. இப்படிக் கூறியபடி ‘’ஓரினச் சேர்க்கையை இயற்கைக்கு மாறானதாகக் கற்பிக்கப்ட்டது’’  என்பதனூடாக ஆணாதிக்கத்தின் தோற்றத்தை,  அதன் விளைவுகளைப் பொத்தி பாதுகாக்க  முனைப்பு பெற்றுள்ளனர்.

இப்படியாகப் பல கருத்துக்கள் ரவீந்திரனின் கட்டுரை முழுவதிலும் அடங்கியுள்ளது.  இனி இந்த கருத்தை யொத்த  யமுனா ராஜேந்திரனின் கருத்துக்களைப் பார்ப்போம்:-

''பெண்ணிலைவாத உளவியல் பகுப்பாய்வு விமர்சனம் '' கட்டுடைப்பு விமர்சனம்   போன்ற முறையிலான அணுகுமுறைகள் பரவலாக  இடம் பெறவில்லை. ரவிக்குமாரின் ‘நாக் அவுட்’ பற்றிய விமர்சனமும் அ.ராமசாமியின் சில விமர்சனங்களும்  தமிழில் இந்தக் கூறுகளைக் கொண்டிருக்கின்றது '' என யமுனா ராஜேந்திரன் கூறுகிறார்.

இவர் கட்டுடைப்பைக் கோருகின்றார்.  இருக்கும் சமுதாயத்தைதக் கட்டுடைத்த சமுதாயத்தைக் கோர வேண்டும் என் கிறார்.  இருக்கும் நிலப்பிரபுத்துவ பெண்ணடிமைக்குப் பதில்  ஏகாதிபத் திய உலக அரசு,  தேசிய உற்பத்திக் குப் பதில் பன்னாட்டு நிறுவனங்கள் என  எல்லாவற்றிற்கும் கட்டுடைக்க கோரு கின்றார்.  ஏகாதிபத்தியம் இன்று கோருவது என்ன?  இருக்கும் எல்லைதாண்டி வெளியே வா!  இருப்பதைக் கட்டுடை!! மொழியா, மதமா,  தேசப் பொருளாதாரமா, நடனமா, ஆண்பெண் உறவா, எதுவாக இருந்தாலும் அதனைக் கட்டுடைத்து  வெளியில் வா என்கிறது இந்தக் கட்டுரை.  சமூகமீறலை முற்போக்காக காட்டுவதன் மூலம்,  இருக்கும் பிற்போக்கு சமுகமீறலை முற்போக்கா னதாக மட்டுமே  இருக்கும் என்று கூறுவதன்மூலம்,  இந்த சமுதாயத்திற் குள் இருத்தி வைத்திருக்கும்,  இந்த சமுதாயத்தைப் புரட்டிப்போடும் முயற்சியைத் தடுக்கவும், கட்டுடைப்பு கோரப்படகிறது.  நிலப்பிரபுத்தவப் பெண்மைக்குள்  ஏகாதிபத்திய ஆட்டம் ஆடுவதும்  மடோனாவுடன் இந்திய கலாச்சார ஆண் ஆடுவதும் கூட கட்டுடைப்புத்தான்.  இதிலிருந்து தான் இவர் பம்பாய் என்ற இந்துவத்தை பாதுகாத்த திரைப்படத்தையும்,  இந்திரா என்ற சாதி அமைப்பைப் பாதுகாத்த திரைப்படத்தையும்,  இந்தியன்  என்ற இந்திய ஆக்கிரமிப்புப் படத்தையும் நியாயப்படுத்த முடிந்தது. இதேபோல் இவரது ஏனைய திரைப்பட விமர்சனங்களும் அதில் இருக்கும் ஒரு சில மீறலை  கட்டுடைப்பைக் காட்டியே செய்ய முனைகின்றார். இந்தக் கட்டுடைப்பு என்பது அடிப்படையில் இந்த வர்க்க உலகத்தைப்பேண முனை யும் அதே நேரம்,   இந்த சமுகத்தை ஒரளவுக்குத் முற்போக்காக சித்தரிப் பதன் மூலம்  இவரகள் செய்வது,  சமூகத்தைக் கடந்து செல்வதாகக் காட்டி அதைப் பேணமுயல்வதாகும். இருக்கும் ஆணாதிக்க சமுக ஒழுங்கில்,  ஒரு பெண் அதை மீறி வெளியில் வரும் போது அப்  பெண் ஆணாதிக்கத்திற்கு எதிரான சமுக அமைப்பை  கோருவது சரியானது. மாறாக கட்டுடைத்து விபச்சார ஏகாதிபத்திய சீரழிவைக் கோருவது, இந்த ஏகாதிபத்திய கனவுக் குள் நீடிக்கும் இனித்த ஆணாதிக்கத் தொடர்ச்சியுமாகும். ரவிக்குமாரை உதாரணமாகக் காட்டும்  யமுனா,  பார்ப்பனிய ‘இந்திய ருடே’யைக் கிழித்து  மலம் துடைத்து... கலகம், இறுதியில்  கட்டுடைத்த போது... அதே கையால் இந்திய ருடேக்கு எழுதிய போது, பார்பனியத்தை கட்டுடைத்த ரவிக்குமா ரின் புகழ் மேன்மைக்குரிய பார்ப்பனியம் தான். யமுனா ராஜேந்திரன் வேறு இடத்தில் அழகு வேறு கவரச்சி வேறு  ரேயின் படங்களும் பாலுமகேந்திராவின் படங்களும் டி. ராஜேந்தரின் படங்களும்  அவர்கள் சித்தரிக்கும் பெண் விம்பங்க ளும் இருக்கும் வித்தியாசங்களை உணர முடியுமானால்  அழகு, கலா ப+ர்வ கவர்ச்சி போன்றவற்றிற்கான நடைமுறை வித்தியாசத்தை அறிய முடியும்  என ஒரு நடைமுறை விளக் கத்தை இவர் தர முயலுகின்றார். இவர்கள் மூவரின் படங்களும் குறிப்பாக ஸத்யஜத்ரேயின் படம் உப்பட ஆணா திக்க சுரண்டலை பேணும் பெண் அழகியல் எல்லைக்குள்  அமைந்ததே. சமுதாயக்கலகத்தைக் கோராத  அதன் எல்லைக்குள் குறிப்ப்பாக  நடுத்தர வர்க்க எல்லையைத் தாண்டியவை அல்ல இம்மூவரின் படங்களும். இங்கு அவர்கள் குறிப்பிடும் அழகு கலாப+ர்வம், கவர்ச்சி  என்பன ஒரே அளவுகளில் செயல்படுத்தப்படுகின்றதே ஒழிய வௌ வேறுதளத்தில் அல்ல. பண்பியல் மாறுபாடு மட்டுமே உண்டு. ஆணாதிக்க  ஆண்களின் அழகு எதுவோ  அதைக் கொண்ட பெண், மூவருடைய படங்க ளிலும் பவனி வருகிறாள்  இந்த ஆணாதிக்க அழகு கொண்டிராத ஒரு பெண்ணை  இவர்களால் படம் பிடிக்க முடியவில்லை ஏன்.? ஒரு ஏழையின் மார்புகச்சையின்றிய முகப்பொலிவின்றிய  வாழும் வாழ்க்கை  புறத் தோற்றத்தை யோ அல்லது  அக உண்மையோ ஸத்ஜித் ரேயினால் கொண்டுவர முடிய வில்லை.  ஒரே பெண், ஆனால் அதன் புற, அக உண்மையை நிராகரித்து  ஒரே மாதிரியான நடிகைகளை மூவரும் தமது திரைப்படங்களில் கொண்டு வருகின்றனர். இதற்கு கொடுக்கும் வௌவேறு மாற்றம்  சில பண்பியல் வேறுபாட்டைக் காட்டுகின்றது. ஆனால் இந்திய வௌவேறு  ஆணாதிக்கப் பிரிவுகளில் இவை தனித்தனியாக  ஒன்றாக ரசிக்கப் படுபவை. வௌவே றானது என்பது பொய்யானவை. பண்பியல் வேறுபாட்டைத் தவிர அதன் வெளப்பாடு ஒன்றே.  அடுத்த வரியில் அதை விரிவாக்கும் இவர்  ‘’ரேயின் பெண்’’ எளிமையான பெண் என சோடிப்பது காதுக்குப் ப+ச்சுத்துவதாகும்.  ரேயின் பெண் ஒரு நடுத்தரவர்க்கப் பெண்.  நடைமுறை வாழ்வில் சமுக அந்தஸத்தில்  உயர்ந்த இடத்தில் வாழும் தசைப்பிடிப்பான முகத்தில்  எண்ணை வடியாத,   நகம் உடையாத,  கழுத்துத் தொங்காத, மார்பு தொங்காத,   காய்ந்து போகாத கால்களையுடைய பெண்தான் ரேயின் தெரிவும். இதுதான் ஆணாதிக்க அழகியலின் மையம் .

இயற்கையில் 90 வீதமான பெண்கள்  உழைத்து உழைத்து எண்ணை வடியும் முகத்தடன்   கைகள் மரத்துப் போய் ஒட்டிய வயிற்றுடன்  கால்கள் எலும்பு களாகி  தலையிழுக்காது மயிர் தடித்துப் போன  புறவடிவம் உடையவர்கள்.

அப் பெண்ணின் உன்னத போர்க்குணத்துடன், சோகத் துடன்   கொள்ளையடிப்பதற்கு எதிரான குரலுடன், ஆணாதிக்கச் சுமைகளுடன் உள்ளiவை. ஆனால் ரேயின் பெண் உழைக்காத  வசதியான மேல்மட்ட  பெண்ணுக்கு சட்டை மாட்டியதுக்கு அப்பால் அதை எளிமையான பெண் எனச் சொல்லுவது யதார்த்தத்தை மறுப்பதாகும். ஏனெனில் யமுனா போன் றவர்கள் உண்மையான யதார்த்த உலகை வெளிக் கொண்டுவருவதை   (ரேயைப் போல்) அவர்களிள் வர்க்க பசத்துடன்  எதிர்பவர்களாவர். இவர் இன்னுமொரு இடத்தில்  சிவகுமாரின் விமர்சனம் ‘’மதம் சார்ந்த நிலப்பிரபுத் துவ  அறிவியல்  அழகியல் சொல் லாடல்களிலிருந்து  இவர் இன்னும் தன்னை மீட்டுக் கொள்ளவில்லை’’  எனக் கூறுவதன் மூலம் மதம் சாராத நிலப்பிரபுத்துவம் சாராத அழகியல் உண்டு என்கிறார். அது  வேறு ஒன்று மல்ல முதலாளித்தவ ஏகாதிபத்திய அழகியலே தான். பாட்டாளிவர்க்க அழகியல் என்பது கிடையாது பெண் ணுக்கு இடையில் வேறுபாட்டைபக் கோரும்,  மனிதரிடையே பிளவைக் கோரும் வியாபாபார தந்திரத்தை பாட்டாளி வர்க்கம் மறுக்கிறது. யமுனா கூறும்  ‘’சினிமாக் கலையின் நுன்களத் திற்குள் விமர்சனம் அமைவது வளர்ச்சியுற்றது’’ என்கிறார். அது... இது... ஆழமாக பார்த்தல்...  என்ற ப+ச்சாண்டி காட்டி மனித பிள வுகளை நியாயப்படுத்ததும் முயற்சியாகும். இதுவே இவரின் தொடர்ச்சியான சினிமா விமர்சனங்களில் (பார்க்க  ஈழமுரசு ) கட்டுடைப்பைத் தேடி அதன் சாமரம் வீசும் நுண் சினிமா  விமர்சனம் கண்டு, அதற்காக தங்கப் பரிசசினை வழங்குகிறார். எந்த விமர்சனமும் எந்த சமூக அடிப்படையாகக் கொண்டது  என்பதே முக்கியம். மனி தனைப் பிளவுபடுத்தும்  மனித இனத்துக்கு யார் எதிரியோ  அவைகளை எதிர்த்த  விமர்சன முறை மட்டுமே  உண்மையானதும் ஆழமானதும் ஆகும். தலைகீழான  மாற்றத்தை மறுத்தபடி, இருப்பதைக் கட்டுடைக்கும் இயற்கையை மறுக்கும் கோட் பாட்டு வடிவங்கள், இன்றைய  உலகின் ஒழுங்கைப் பேணும் ஒரு முயற்சியின் தொடர்ச்சியாகும். இதையே ரவீந்திரனு யமுனா ராஜேந்திரனும்  செய்ய நினைக்கின் றனர் அவ்வளவே.