தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பிரதித் தலைவர் சு.று.ஆவ விNதிலக்கா நீர், மற்றும் தொலைபேசி விலை உயர்வு தொடர்பாக குறிப்பிடும் போது, உலக வங்கியின் கட்டாயப்படுத்தலாலே இந்த விலை அதிகரிப்பு என்று குறிப்பிட்டு, இந்த அதிகரிப்பை கடந்த வருடமே அமுல்படுத்த கோரியிருந்தனர் எனவும் குறிப்பிட்டார். அமச்சர்களின் இழுத்தடிப்புத்தான் இந்த ஏப்பிரலில் அமுலுக்குவர காரணமென்று வேறு அறிவித்தார். இன்று அமைச்சர், அரசுக்கு மீறிய அரசாக உள்ளது. உலக வங்கியே ஆகும். இதன் இயக்கம் அமெரிக்காவின் கையில் உள்ளது.  ஏகாதிபத்தியங்கள், உலக வங்கி ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் மேலும் ஏழையாக்கியும் பணக்காரரை மேலும் பணக்காரனாக்கும் இன்றைய உலக சனநாயகத்தை உடைக்காதவரை மக்களுக்கு சனநாயகம் இல்லை என்பதை இது காட்வில்லையா? இது உங்கள் மூளைகளில் உறைக்கவில்லையா?