சரிநிகர் 124 இல் திட்டமிட்ட மார்க்சிய விரோத கோட்பாட்டை வெளிப்படுத்தும் மூன்று செய்திக் கட்டுரைகள் வெளிவந்திருந்தன. தலித்தியக் குறிபுக்கள், பின் நவீனத்துவமும் பின் காலனித்துவமும் சிலபுதிய புத்தகங்கள் என்ற வௌவேறு தலைப்புகளில் வெளியாகிய செய்திக்ள மட்டுமின்றி அண்மைக்காலமாக சரிநிகரில் அதிகளவு மார்க்சிய விரோதக்கருத்துக்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இதில் ஒன்றைப்பின்னோக்கிப் பார்க்கின்றபோது சரிநிகரில் நடந்த வேலை நிறுத்தத்தின் பின் புதிய ஆசிரியர் குழு ஒன்றை ஏற்படுத்திய நோக்கம் வர்க்கவிடுதலைக்கு எதிராக செயல் தளத்தை இலய்கையில, அதுவும் தமிழில் செய்ய முனைந்ததையே இது காட்டுகிறது.
இதற்கு ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்டு அதன் நிதி உதவியினால் இயங்கிவரும் ‘மேர்ச்’ என்ற நிறுவனத்தினூடாக வெளிவரும் சரிநிகரில் என்ன அரசியலை வெளிப்படுத்த வேண்டும் என்பதையும் அண்மைய சரிநிகர் பத்திரிகைகள் வெளிக்காட்டுகின்றன.
'' நாம் பின் நவீனத்துவமும் '' கட்டுரை வேறுஒரு விமர்சனக்கட்டுரையில் இதே சமரில் ஆய்வுக்குட்படுத்தியுள்ளோம். மற்றைய இரு கட்டுரைகளையும் பார்ப்போம்.
"தலித் என்ற பெயரில் அணிதிரள்வது முற்போக்கானது சமூகவிடுதலைக்கு அவசியமானது. உயர்சாதியை எதிர்க்க உதவுகின்றது’’ எனப் பலவாக தலித்திய குறிப்பில் 'அருந்ததியன்' குறிப்பிடுகிறார்.
இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் ஏகாதிபத்திய எடுபிடிகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட '' தலித்தியத்'' தைத்தான் இன்று மார்க்சியவிரோதிகள் உயிர்மூச்சாக உயர்த்திப்பிடிக்கிறார்கள். தலித்தியவரலாறும் அதன் உருவாக்கமும் ஏகாதிபத்திய கிறிஸ்தவ நிறுவனங் களால் அமெரிக்க கருப்பின மக்களுக் குள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்பதும் தலித்திய வரலாறாகும்.
தலித் என்பது தனக்குள் சாதி ஒடுக்கு முறையை பேணியபடி ஒடுக்கப்ட்ட மக்களாக அணிதிரள முயன்றவர்களை பிளவுகளை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட சமூகப்பிளவே தலித்தியம். தலித்தியம் மூலம் எப்படி விடுதலையடைய முடியும் அதன் கோட்பாடு என்ன? அதிலுள்ள முரண்பாட்டுப்பிரிவின் அரசியல் நிலை என்ன? எதுவும் அற்ற சமூகமாற்றத்திற்கு அணிதிரள்வதைத் தடுக்க தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஒருவாக்கப்ட்ட அமைப்பே ' தலித்' என்ற சவக்குழி.
தீண்டத்தகாதவர்ளை காந்தி என்ற சாதித் திமிர்பிடித்த உயர்சாதிக்காரன் ‘அரிசனன்’ என்று அழைத்து எப்படி இந்தியப்புரட்சியை தடுத்து தாழ்த்தப் பட்டவர்களை தனியாக அடையாளப்ப டுத்தி பிளவுபடுத்தி தடுத்தது போல், இன்று உலகமயமாக்கத்திற்கு எதிரான புரட்சியைத் தடுக்க ஏகாதிபத்திய முன்வைப்புத்தான் தலித்தியம் என்ற இனிப்புத் தடவிய சாதி பேசும் சாதி அமைப்பு.
தலித்திளத்துக்குள் உள்ள சாதிப்பி ளவை கூட மாற்றமுடியாத இந்த தலித்தியம் சரி, ஒரு சாதியின் பெயரால் அமைப்பாகும் ஒரு சாதியும் சரி, இந்த சாதி அமைப்பைப் பேணுவதற்கும் அதன் மூலம் சில சலுகைகளை பெறுவதற்கும் அப்பால், இத்தலித்தியம் தாழ்த்தப்பட்ட மக்கள் பெற்றுக் கொள்ள எதையுமே பெறிறுக் கொடுக்காது. ஆனால் மார்க்சியவிரோதிகள் இதை முன்னெடுப்ப தன் மூலம் சாதியை ஒழிக்க முனையும் ஒரு வர்க்கப்புரட்டசியைத் தடுப்ப தன் மூலம் தமது எஜமானர்களான ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்கின்றனர்.
உயர்சாதிக்காரன் சாதிசங்கம் வைத்திருந்தால் நான் ஏன் வைத்தி ருக்க முடியாது என்று கேட்பது முஸ்லீம் அப்பாவி மக்களை ஈழத்தமிழ் இயக்கங்கள் கொல்லுவதால், ஏன் முஸ்லீம் ஊர்காவல்படையினர் தமிழரை கொல்லக்கூடாது என்று கேட்பதற்குச் சமனாகும்.
சமன்பாட்டிற்குள் சிக்கிக் கொண்டு சாதியை வேறு ஒரு வடிவில் பாதுகாப்பது என்பது உண்மையாக சமூக அக்கறை கொண்டவர்கள் வெட்கப்படவேண்டிய ஒன்றாகும்
மாறாக சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் (வர்க்கமாக) அணிதிரண்டு பதிலடி கொடுப்பதன் மூலம் தான், நாம் சாதியை கடந்து ஒரு பரந்து பட்ட விடுதலையை அடையமுடியும். இதைவிடுத்து தலித்தாகவோ அல்லது ஏதோ ஒரு சாதியின் பெயரால் அணிதிரள்வது என்பது எப்படி ஒரு சாதியைக் கடந்து விடுதலை அடைய முடியும் என்ற ஒரு அற்ப கேள்வியைக் கூட கேட்கமுடியாத இந்த ஆய்வு அறி வாளிகளின் நோக்கத்தை நாம் அறி வற்றவர்களாக நின்றுதான் உயர்த்த முடியும். இதை உயர்த்தும் மற்றுமொரு பிரதிநிதிகளில் ஒருவர் 'புதிய நல்லபுத்தகம் ' என்ற தலைப்பில் சத்யா என்ற மாhக்சிய விரோதியின் அறிமுகத்தைப் பார்ப்போம்.
அ. மாhக்ஸ் , ரவிக்குமார் என்ற இந்திய திரிபுவாத மார்க்சியவிரோத ஏகாதிபத்திய கைக்கூலிகளின் புத்த கத்தையே நல்ல புத்தகம் என்று எமக்கு அறிமுகம் செய்கின்றார் சேற்றில் இறங்கி விட்டால் மலத்தைத்தான் உண்ண வேண்டும் இதற்கு சத்தியா என்ன விதி விலக்கா? இதில்விடியல் பதிப்பகம் பற்றியும் நல்ல புத்தகங்களை விடியல் பதிப்பகம் கொண்டுவருவதாகவும் கூறும் சத்யா, இந்த விடியல் பதிப்பகத்திற்கு எப்படி திடீர் எனப் பணம் வந்தது என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும். எப்படி இந்த மார்க்சிச விரோதக் கும்பலின் வெளியீடுகளை மட்டும் வெளியிடுவதன் மர்மம் தான் என்ன? என்பதற்கு காலம் நிச்சயம் பதில் தரும். சத்யா கூறுவதைப்பார்ப்போம்.
'' அ. மார்கசும் ரவிக்குமாரும் எழுதி யும் மொழிபெயர்த்தும் வெளியிட்டுள்ள னர். ''தமிழகத்தின் தற்போதைய அசைவியக்கமாக தற்போது இவர்கள் தான் உள்ளார்கள். இவர்களசை சுற்றி யும் இவர்களாலேயுமே வாதப்பிரதி வாதங்களால் எழுந்து ஒர் ஆரோக்கி யத்திற்கு இட்டுச் சென்று கொண்டிருக்கி றது. என்று அண்மையில் தமிழகம் சென்று வந்த ஒரு நண்பர் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.'' எனச் சத்யா சத்தியம் செய்கிறார்.
அசைவியக்கம் எங்கே இவர்களைச் சுற்றித்தான் என ஒப்புக் கொள்ளும் இவரே ' மாங்காய் மடையன் போல்'' ஏதோ சாதித்துப் புரட்டுவதாக கதை திரித்து கதைவிடுவதும் கதைய ளப்பதும் இவர்களின் கைவந்த தொழில். இதே சத்யா முன்பு அ. மார்க்ஸ் அறிமுகத் செய்து கரடி விட்ட போது நாம் எழுதிய விமர்சனத்தை
(சரிநிகர் குப்பையில் தேடி பார்க்கவும்) பார்த்தால் இவர்களின் சுயரூபம் எல்லோருக்கும் புரியும்.
இன்று தமிழ் நாட்டிலும் இந்தியாவி லும் எழுந்து வரும் வர்க்கப் போராட் டத்தை எப்படி சிதைக்கலாம் என, ஏகாதிபத்தியதிதின் கனவுகளில் சிக்கி யவர்கள் தான் இந்த அ.மார்கஸ் ரவிக்குமார் போன்ற பேர்வழிகள். இந்த குழுவுக்கு முடிவற்ற முரண்பாடுகளுடன் பெருத்த சில பெருச்சாளிகள் தமக்குள் தாம் கதைத்த பின் அதை அச்சிட கிடைத்த வாய்ப்பை பெற்று ஊருக்கு கூவி விற்கிறார்கள். பரந்து பட்ட மக்கள் ஆதரவு கொண்ட நடைமுறை பேராட்ட அமைப்புக்கள் தமது செய்திப் பத்திரிகையைக் கூட வெளிக் கொண்டு வர முடியாத நிலையில் இன்றைய இந்திய புரட்சிகர நிலையில், மக்களிடம் அந்நியப்பட்ட தமக்குள் பேசிக்கொள் ளும் ஒரு சிறு கும்பல், எப்படி அடுக்கடுக்காகப் புத்தகம் கொண்டு வரமுடிகிறது என்பதை புரட்சிகர நடைமுறையுடன் பாருங்கள் அப்போது புரியும் உங்களுக்கு.
மேற்கு நாட்டுக் கோட்பாடு சரக்குகளை நிராகரிப்போம் என்று உரத்த தொனியில் கூறியபடி, அது மார்க்சியமாக இனம் காட்டி பின் கடத்தல்காரர் போல் பின்பக்கமாக மேக்கு நாட்டுச் சரக்கையே திரைக்குப் பின்னால் விற்பது போல மீள திரித்து புரட்டியும் விரிவாக்கியும் கடைவிரிக்கும் மர்மம், இந்த சரிநிகர் மாறிமாறி வௌவெறு பெயர்களில் எழுதும் எழுத்தாளர் வல்லுனர்களுக்குப் புரியாது போனது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. இன்று இலங்கையில் பிழைக்கும் வழி என்ன தெரியுமா? புரட்சியைப் பற்றி , மார்க்சியத்தைப் பற்றி கேளாத கேள்வி கேட்டு அதை எதிர்த்துப் போராடினால் நல்ல வாழ்க்கை கிடைக்கும் , பிழைப்பு, புகழ் எல்லாம் கிடைக்கும் என்பது நடைமுறையான உண்மையாகும். அதுதான் இந்தகஷ்டப்பட்டு அறிமுகங்கள் பராட்டுக்கள் விளக்கங்கள் கூட்டங்கள் எனப் பிழைக்கும் வழியில் மக்களுக்கு எதிராகச் செயற்படும் நச்சுககாளான்களாக விதைத்தவர்க ளின் துணையுடன் எழுதும் தளத்தை யும் அதை செய்யும் வசதியையும் பெற்றுச் செயற்படுகின்றனர். என்பதை நாம் புரியத் தவறின் வரலாற்றில் மேலும் மக்கள் விரோதத் துரோகிகள் உருவாவதைத் தவிர்க்க முடியாது. இதை எதிர்த்து போராடுவது இன்று வரலாற்றின் தவிர்க்கமுடியாத முதற்பணியாகும்