சரிநிகர் 114 இல் (ஜனவரி 23 பெப் 05 1997)இதழில் ''சரிநிகர் போற்றுவது இல்லை''எனத் தலைப்பிட்டு அ.மார்க்ஸ், சத்யா என இருவர் பெயர் போட்டு ஒரு செய்தி வெளியாகியிருந்தது. இதை எடுத்த எடுப்பில் பார்த்தால் யார் எமுதியது என்ற குழப்பமே வாசகர்களுக்கு எஞ்சும்.
கட்டுரையை வாசிக்கும் போதே அ.மார்க்சை மறைமுகத் தலைப்பிட்டு அறிமுகம் செய்யும் நோக்கில் அதன் ஆதரவாகக் சத்தியா செயற்பட்டுள்ளது புரியும்.
இச் செய்தியில் மறைத்த விடயத்தைச் சுட்டிக்காட்டி நாம் எழுதிய விமர்சனத்தை வழக்கம் போல் குப்பைக்குள் வீசிவிட்டது சரிநிகர். இனி அவர்கள் என்ன கூறமுற்படுகிறார்கள் எனப் பார்ப்போம்.
நவஉலக செய்திகளை தமிழில் கொண்டு வந்து தமிழில் பரப்பும் ஒரு மேதை எனப் பாராட்டும் சத்யா இலங்கை இந்தியாவில் நவினத்தின் ஒரு நிழலும் இல்லாத உலக ஒழுங்கைப் பற்றிக் கதைக்கத் தயாரில்லை. 90 வீதமான மக்கள் கிராமப்புற சேரி வாழ்க்கையிலும் பட்டினியிலும் வாழ்கின் றனர். 10 வீதமான மேட்டுக்குடியின் சீரழிவை எடுத்து பின் நலினத்துவம் என கூறி அ. மார்க்ஸ் போன்றோர் ஏகாதிபத்தியக் கனவைப்ப+ர்த்தி செய்ய கோட்பாட்டு வடிவம் கொடுக்கின்றனர்.
இது ஒரு புறம் இருக்க சத்யா மேலும் அ.மார்க்ஸினதும் அவரின் நிறப்பிரி கைப் பத்திரிகைக் குழுவினரும் தீவிர நிலைப்பாட்டை எடுத்ததாகக் கூறிப் பாராட்டுகிறார்.
1994 ஆம் ஆண்டு ‘இந்தியா ரூடே’யின் சிறப்புமலரின் பார்ப்பனத்திமிரைக் கண்டித்து நிறப்பிரிகை ஆசரியர் குழு இந்தியா ரூடேயைக் கிழித்து மலம் துடைத்து இந்தியா ரூடேயிற்கே அனுப்பினர். நல்ல நடவடிக்கைதான். இதைத்தான் சரிநிகர் 114 -ல- இனை வாசிக்கும் ஒரு வாசகன் நம்புவான். ஆனால் இன்னும் ஒர் உண்மையை சத்தியாவும்ஈ சரிநிகரும் திட்டமிட்டு மறைத்துவிட்டனர்.
1995 ஆம் ஆண்டு அதே இந்திய பார்ப்பன சிறப்பு மலருக்கு அந்தோ னிப்பிள்ளை மார்க்சின் வலது கரமும் நிறப்பிரிகை ஆசிரியருமான ரவிக்குமார் கதை எழுதி வெளிவந்த கதையை சத்யா உட்பட சரிநிகர் மறைத்துவிட் டது. அ.மார்க்சின் கலகம் என்பது மோசடியாகும். தமக்கான பங்கை கோரிய கலகமே தவிர கொள்கை கிடையாது. இது சத்யா கூறுவது போல எமக்கு "தன்னடக்கமானன வார்த்தை யல்ல" கோபத்திற்குரிய கணைகளாகும். இதைமூடிமறைத்து சத்யா, சரிநிகர் ஆசி ரியர் குழுவும் தேவைதான் உங்க ளுக்கு சரிசமன் என்ற பெயரில் ''சரிநிகர் "" என்ற ஒரு பத்திரிகை . வாழ்க நடுநிலைமை தவறாத பக்கச்சார்பு செம்மல்களின் இலவச மூடிமறைத்த பொய் விளம்பரங்கள்.
இதைவிட இந்த சிறப்பிரிகை குழுவி னரின் வேறுசில மோசடிகளைப் பார்ப் போம்.
ஈழத்துக்கவிஞர் செல்வி எழுதிய கவி தைக்கு சர்வதேச விருது ஒன்று கிடைத்ததை நாம் எல்லோரும் அறிந்ததல்லவா. அந்த நேரம் அந்தக் கவிஞர் புலிகளின் வதை முகாமில் சிக்கி இதுவரை வெளிவரவில்லை.
(இந்த விருது கிடைத்த நேரம் பாலசிங்கம் இவர் குறித்து விசாரணை முடிய விடிவிப்பதாக அறிவித்தும் இருந்தார்)
இந்த பெண் கவிஞரை விடக் கோரி மனித உரிமையை மதிக்க கோரியும் அந்தோனிப்பிள்ளை மார்க்ஸ் உட்பட பலர் கையெழுத்திட்டு ஒர் அறிக்கையை பகிரங்கமாக வெளியிட்டது நாம் எல்லோரும் அறிவோம். இந்த அந்தோ னிப்பிள்ளை இரகசியமாக பாரிஸ் வந்த போது இதைப் புரட்சியின் கலகமாகக் கருதிய நண்பர்கள் அதைப்பாராட்ட திடுகிட்டு அ,மார்கஸ் எனது விருப்பம் இன்றியே எனது பெயரைப் போட்டு விட்டார்கள் என்றார். அ.மார்க்ஸ் புலி யின் தயவை நாடியதைத் தொடர்ந்து செல்வியின் கைது ஜனநாயகம் எனக் நினைக்கின்றார் போலும் கேட்டுப்பாருங் கள் அ,மார்க்சையும் நிறப்பிரிகை பத்திரி கைக் குழுவையும்.
அடுத்த கதையைப் பார்ப்போம். அண்மையில் பாரிசில் நாதன், கஜன் படுகொலையைக் கண்டித்து நிறப்பிரி கைக் குழுவும் வேறு பலரும் சேர்ந்து கண்டன அறிக்கை விடுத்து பிரஞ்சுத் தூதுவராலயத்தின் முன்னால் ஆர்ப்பாட் டம் செய்தனர். நல்ல விடயம். மக்கள் மீது சவாரி செய்வதே கொலைகாரரின் நோக்கம் என்பதால் அது தெளிவாகக் கண்டிக்கப்ட வேண்டும் என்பது எல்லா ஜனநாயகவாதிகளினதும் விருப்பமாகும். இதேநேரம் இதே பாரிசில் அ,மார்க்ஸ் அவர்களின் ஐரோப்பிய விஜயத்தின் போது கொல்லப்பட்ட சபாலிங்கம் கொலை பற்றி ஏன் இவர்கள் அலட்டிக் கொள்ளவில்லை. விஜயம் தொடர்பாக எழுதிய புத்தகத்தில் கூட ஒருவரி குறிப்பிடவில்லை. அ,மார்க்சின் பாரிஸ் விஜயம் இதற்குள் முழுமை பெற்று சுருங்கிய மன உழைச்சலைக் கூட புத்தகம் கொண்டு வரவில்லை ஏன்?
சபாலிங்கம் கொலையின் போதும் சரி கஜன் நாதன் கொலையின் போதும் சரி சபாலிங்கம் பற்றிக் கதைக்காத அரசி யல் தான் என்ன, அ,மார்க்ஸ் என்ற புரட்சி எழுத்தாளரோ?
இவர்களுடன் கூட்டு அரசியல் நடத்த எஸ் வி பற்றி பார்ப்போம்.
அண்மையில் ஐரோப்பிய விஜயம் செய்த தீவிர அரசியல் விமர்சகர் எஸ்வி நான் அரசியல் கதைக்க மாட்டேன் ஏன் எனில் அரசியல் கதைப்பின் ஜனநாயகம். எனக் கேள்வி எழும் . தனது சந்தர்ப்பத்தை அரசியல் பிழைப்புக்கு வேட்டு வைத்து விடும் என்பதால் அரசியல் கதைக்க மாட்டேன். புரிகிறதல்லவா, இவர்களின் பம்மாத்து அரசியல்.