பிரஞ்சு தேர்தல் ஜனாதிபதியின் விருப்பை மீறியவகையில் முடிந்துள்ளது. ஜனாதிபதிக்கு சார்பான பாரளுமன்றத் தில் இருந்து அறுதிப் பெரும்பான்மை இன்னமும் ஒருவருட ஆளும் தகுதியை கொண்டு இருந்த நிலையில் காலம் செல்லச் செல்ல வெற்றி நிச்சயம் அற்ற தன்மை என்பது தேர்தலை வேகப்படுத்தியது.
இத்தேர்தல் முடிவுகள் யார்க்கும் பெரும்பான்மையின்றி ஒரு கூட்டணி ஆட்சி உருவாகியுள்ளது. தம்மை இடது சாரிகள் எனக் கூறிக் கொள்ளும் சோசலிசக் கட்சியும் பச்சைக்கட்சியும் கமினிச கட்சியும் ஆட்சியில் அமர்ந்து சுரண்டலை பாதுகாக்கவும் தொடரவும் சபதம் எடுத்துள்ளனர்.
மக்கள் இந்த வாக்களிப்பில் யார் எம்மை குறையச் சுரண்டுவார்கள் என்ற கனவு கள் மட்டுமே முன்னையவர்களைவிட இவர்களைத் தேர்ந்தெடுக்க முனைந்தனர். இவர்கள் சுரண்டுவதிலும் கொள்ளையடிப்பதிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை பலமுறை நிறுவியவர்கள். இவர்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ள கம்யுனிசப் போலிகள் தமது வர்க்கப் போராட்டவரலாற்றை தொலைத்து நீண்ட பல வருடங்களாக முதலாளித்துவத்திற்கு சேவை செய்து வருகின்றனர். இங்கு இந்தத் தேர்தலை ஜனநாயகம் எனப்பீற்றும் இந்த சுரண்டும் கனவான்கள் எப்படி ஆட்சியை அமைக்கின்றனர் எனப் பார்ப்பபோம்.
பிரான்சில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் வாக்களிக்க பதிந்தோரில், சோசலிசக் கட்சி பெற்ற வாக்குவீதம் 16.5 வீதம் மட்டுமே. இன்று ஆட்சி அமைத்துள்ள கூட்டணி
அரசு பெற்ற மொத்த வாக்கு வீதம் அண்ணளவாக25 வீதத்தைவிடக் குறைவாகும்.
இன்று ஆட்சி பீடம் ஏறியுள்ள அரசு வெறும் 25 வீத மக்களின் விருப்பத் தின் பெயரிலும் பொய்யான பல வாக் குறுதிகளின் பெயரிலும் ஆட்சிப் பீடம் ஏறியுள்ளது. இந்த 25 வீதத்தின் வெற்றியைத்தான் உன்னத மக்கள் ஜனநாயகம் எனக் கூறும் வெட்கக் கேடான பொய்யை கூறுவதன் மூலம் உண்மையாக்கி விட முனைகின்றனர்.
இருக்கும் 20 வீதம் அரசு சார்புதுறை யை தனியார் மயமாக்க கோரும் உலக ஒழுங்குகள் இவ் அரசு தனியார்மய மாக்க மாட்டோம் என்ற பொய்பிரகட னங்களை வழங்கியுள்ளது.
உதாரணமாக மினசாரத்துறையை தனி யார்மயமாக்க கோரும் இன்றைய நிலை யில் அதன் லாப கட்டமைப்பைப் பார்ப்போம்.
ஒரு மின்சார யுனிற்றில் உற்பத்தி செலவு இன்று 0.10 பிரஞ் சென்றிம் ஆகும். ஆனால் பாவனையாளர்களுக்கு ஒரு யுனிற் விற்பது 76 சென்றிக்கும் ஆகும். இதைவிட இதற்கு 21.5 வீத பாவனை வரியும் சேவைக்கட்டணமும் உண்டு. மக்கள் சேவைக்கட்டணம் பாவனை வரியை விடுத்து உற்பத்தியை விட இன்று அரசு பெறும் லாபத்தை ஒரு யுனிற்றுக்கு பார்ப்பின் 760 மடங்காகும்.இது மொத்தமாக பார்ப்பின் கிட்டத்தட்ட 1000 மடங்காகும்.
இன்று ஒரு யுனிற்றுக்கு 760 மடங்கு லாபம் தரும் ஒரு அரசுதுறையை தனி யார் மயமாக்க கோரும் உலக வங்கியின் கோரிக்கையை ஒரு சிலருக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் ஒர் அங்கமே ஒழிய மக்களின் நலன்களின் பெயரில் அல்ல.
இன்று பிரான்ஸ் என்பது இனித்தேவையில்லை ஐரோப்பாவே எமக்கு வேண்டும் என்று தேர்தல் கூட்டத்தில் எழுப்பிய குரல்கள் அடிப்படையில் உலகமயமதாதலின் ஐரோப்பிய பங்கைத் தக்க வைக்க பிரஞ்சு பொரு ளாராரத்தைக் கைவிடத் தயாராக வுள்ளனர். இன்று ஐரோப்பாவில் எழுந்து வரும் தனித்தனிப் போராட்டமும்
ஐரோப்பிய மயமாக்கலின் அடிப்படை யை கேள்விக்குள்ளாக்கின்றது.
ஐரோப்பியலில் மலிவு கூலி, மலி வுற்பத்தி எங்கு உள்ளதோ எங்கு தொழிலாளர்கள் வசதியாக சுரண்ட முடிகிறதோ அங்கு உற்பத்தியை நகர்த்து மற்றதை மூடு என்ற கோசமும் எங்கு எதிர்ப்பு உள்ளதோ அதைவிடுத்து மற்றதை மூடு என்ற கோசமும் ஐரோப் பிய மயமாதலின் பெரும் பண்பாக வுள்ளது. இதற்கு எதிரான தேசியப் போராட்டம் எழுவது மட்டும் இன்றி
ஐரோப்பிய பொது வேலைநேரம் பொது கூலி எனப்பலவற்றை கோரும் வகையில் கூட்டுப் போராட்டங்கள் நாள்தோறும் ஐரோப்பாவில் தொடர்கிறது. இந்;த
ஐரோப்பிய மயமாதலினை எதிர்ப்பதில் போலி கம்யுனிஸ்ட்கட்சியும் நாசிக்கட்சியும் தீவிரமாகவுள்ளது.
நாசிக்கட்சியின் வளர்ச்சி மட்டுமே இத்தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றி எனக்கூறும் அளவுக்கு வீறு கொண்டு எழுகின்றனர்.
வேலையில்லாத்திண்டாட்டம் அதிகரிக்க அதிகரிக்க அவர்களின் செல்வாக்கு அதிகரிப்பதை புள்ளி விபரங்கள் காட்டு கின்றன. இந்த வாக்களிப்பில் நாசிக் கட்சி பெற்ற சராசரியைவிட அதிகம் வாக்களித்தோர் யார் எனப் பார்போம்.
ஆண்கள் 18 வீதமும் 25 - 34 வயதுக்கு இடைப்பட்டோர் 19 வீதமும் முதலாளியின் முன்னணித்தலைவர்கள் 23 வீதமும் தொழிலாளர் 24 வீதமும,; வேலையற்றோர் 22 வீதமும் தனியார் வேலைப்பிரிவு 19 வீதமும் சராசரி பட்டம் பெற்றோர் 20 வீதமும் என வாக்களிப்பு நாசிகளை நோக்கி சார்பா வுள்ளது. நாசிக்கட்சி பெற்ற 15 வீதத்தை விட இது அதிகமானது மட்டு மின்றி சமூக நெருக்கடி அதிகரிக்க அதிகரிக்க மேல் கீழ் என இரு பிரிவு நாசிகளுக்கு வாக்களிப்பதில் அதிகமாக ஈடுபடுகின்றனர்.
கம்யுனிசக்கட்சியிக் துரோகம் என்பது தொழிலாளர்களின் 14 வீதத்தையும் வேலையற்றோரின் 13 வீதத்தையும் அரசதுறையில் 13 வீதத்தையுமே பெற முடிந்தது. நாசிக்கட்சியுடன் ஒப்பிடும் போது இவர்களின் துரோகம் அடிப்ப டை வர்க்கம் இவர்களிடமிருந்து வில கிச்செல்வதையே காட்டுகிறது.
1974 இல் இந்த நாசிக்கட்சி பெற்ற வாக்குகள் 0.73 வீதமாகும். ஆனால் இன்று 15 வீதத்தைத் தனதாக்கியதுடன் பாராளுமன்றத்திற்கு முதல்முதலாக ஒரு பிரதிநிதியை அனுப்பியுள்ளது. அத்துடன் சட்டவிரோத பொலிஸ்படை அமைத்து பொலிஸ் உடையில் கூட சோதனையில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. இன்று பொலிஸ் மற்றும் போக்குவரத்துத் துறையில் இக்கட் சிக்கு 28 வீத ஆதரவுள்ளது மட்டுமின்றி பொலிஸ் பகிரங்கமாகவே நாசிசார்பாக செயல்படுவதுடன், வெளிநாட்டவரைப் துன்புறுத்திப் பழிவாங்குகிறது. இந்த நாசிக்கட்சித்தலைவர் லுபேன்
தேர்தலுக்கு முன் சோசலிசக் கட்சிப் பெண் வேட்பாளரைத் தாக்கியதன் மூலம் தனது பாசிசத்தை இனம் காட்டினார்.
இன்று மாறிச் செல்லும் நிறவாத பாசிச நிலையைத் தடுத்து நிறுத்த வேண்டின் அதற்கு எதிராக பாட்டாளி வர்க்க தலைமையில் போராடும் ஒரேயொரு பாதை மட்டும் எஞ்சியுள் ளது.
இன்று பிரான்சில் சிறுசிறு குழுக்களாக பல குழுக்கள் உருவாகியுள்ளதுடன் சில மா. லெ. மா சிந்தனை வழி செயல்பட முனைகின்றன. இத்தேர்தல் தீவிர இடதுசாரிப்பிரிவு 6 இலட்சத்திற் கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது. இதற்கு ரொக்ஸிய திரிபுவாதிகள் உள்ளடக்கிய இந்த மொத்த வாக்களர்களில் தான் எதிர்கால சரியான முன்னணி கட்சி தோன்றும் சாத்தியப்பாடுள்ளது. உலசில் உள்ள எல்லா நாடுகளும் அதில் வாழும் தேசிய முதலாளிகள் உள்ளிட்ட மக்கள் பிரிவும் உலகமயமாதலை எதிர்த்து பன்னாட்டு நிறுவனத்திற்கு எதிராக போராட தத்தம் வர்க்க நிலையில் முயலுகின்றன. அதை சரி யாகப் புரிந்து அணிதிரட்டுவதன் மூலம் உலக மயமாதலுக்கு எதிரான போராட்டத்தை தேசியப் போராட்டங்களை வர்க்கப்போராட்டமாக முன்னெடுத்து வெல்ல முடியும். இதைத் தவறவிடின் இத்தேசியம் பாசிசத் தேசி யமாக மாறும் இது உலகில் எல்லா மக்களினதும் எல்லா நாடுகளினதும் பிரச்சனையாகும். உலகமயமாதலை எதிர்த்து தேசியமும் உலகமயமாதலை எதிர்த்து வர்க்கப் போராட்டமும் உன்று இணையும் போது அது உலகப் புரட்சிக்கு ஒவ்வொரு நபரும் தயாராவை சுட்டிக்காட்டும்.