Language Selection

சமர் - 23 : 07 -1998
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

1-07 ஐனவரி 1998 ஈழமுரசு இதழில் ' சின்ன விளக்கம் ஆனால்---நீண்டு போயிட்டுது " என தலைப்பிட்ட அலசல் ஒன்றை சடையர் செய்து இருந்தார். nஐர்மனியில் இருந்து ஈழமுரசுக்கு எழுதும் கருணாமூர்த்தி இனவாதத்தில் நின்று எழுதவேண்டாம் என கேட்;கப் போக புலிகளின் பினாமி பத்திரிகையான ஈழமுரசு முதல் முதலில் புலிகளின் வரலாற்றில் இனவாதத்தின் ஒட்டுமொத்த வடிவை வெளிகாட்டி இருந்தனர்.  அதை கொஞ்சம் பார்ப்போம்.

' சிங்களவன் தமிழனை கொன்றொழித்தால் நமக்கென்ன என்று முகம் திருப்பி நம்மவர் சிலர்... கொழும்பில் குண்டென்றால்.... எல்லைப்புறத்தில்.... திட்டமிட்ட குடியிருப்பில்  வெடிப்பென்றால் அடித்துப் பதறி.... மோட்டு வேலை... அப்பாவிகள் எத்தனைபேர் என்று கணக்குத் தேடுவினம்.

பக்குவமாய்... சிங்களவரை பாசாங்குடன் விளிக்க வேண்டும்...என்பது சரிதான்...மெத்தச்சரி. ஆனால் தற்போது ஒத்துவராதாம். ஒருவேளை... தமிழீழம் விடுதலையடைந்த பின்னர்... தமிழர்களை பயங்கரவாதிகள் எண்டு சிங்களவர்கள் விளிக்காதகாலம் வந்த பின்னால்.... ஒருவேளை சாத்தியப்படும். அதுவரை சொல்லிலும் செயலிலும்... எழுதும் போக்கிலும் கடுமை இருப்பது தவிர்க்கமுடியாதே." என சடையர் கூறுகின்றார்.

தமிழ் மக்களை கொல்வதையிட்டு அலட்டிக்கொள்ளாதவன் எப்படி சிங்களவன் கொல்லும் போது அலட்டிகொள்ள முடியும் என்பது எழுதியவருக்கே வெளிச்சம.; சொந்த வாழ்க்கையில் சுகம் காண்பவன் தமிழன் என்றோ சிங்களவன் என்றோ கவலைப்படுவதில்லை. எனவே இங்கு அப்பாவி மக்களையிட்டு கவலைப்படுகிறான் எனின் அவன் எந்த இனம் எனப் பார்ப்பதில்லை. அது தமிழனா சிங்களவனா என பிரிப்பதுமில்லை .

கொழும்பில் குண்டு எனினும் எல்லைப்புறத்தில் தாக்குதல் எனினும் எல்லாவற்றையிட்டும் விமர்சிப்பவர்கள் அல்ல உன்மையான மனிதர்கள். எதை எதையெல்லாம் தாக்குதல்களின் பின் உரிமைகோராமல் விடப்படுகின்றதோ அதை அதை எல்லாம் விமர்சிக்க முனைகின்றனர். உரிமை கோரமறுக்கும் போதே அங்கு தவறை மறைமுகமாக கொண்டுள்ளதையும் அதை விமர்சிப்பதையிட்டும் தான் சடையர் சொந்த வாழ்க்கையில் சுகம் தேடுபவர் என முத்திரை குத்தி சேறடிக்கின்றார்.

ஒரு தாக்குதல் உரிமை கோர முடியாத வகையில் மனிதயுரிமை மீறலைக்கொண்டதாயின் அனைத்து தாக்குதலும் விமசனத்துக்கும் கண்டனத்துக்குரியது அல்லவா? கொழும்பிலும் எல்லைப்புறத்திலும் இராணுவ மற்றும் இராணுவ பொருளாதார இலக்குகள் தாக்குதலுக்கு உள்ளாகும்போது அதை நாம் எதிர்த்து அல்ல வரவேற்கும் அதே நேரம் தாக்குதல்காரர்களின் அரசியலை மட்டுமே விமர்சனத்துக்குள்ளாக்கின்றோம். ஏன்? தமிழ் மக்களின்விடுதலைப் போராட்டம் வெற்றி பெறவேண்டின் சரியான ஒரு அரசியல் மார்க்கம் தேவை என்ற ஒரே ஒரு நல்ல நோக்கோடு மட்டும்தான்.

பக்குவமாக சிங்களவரை அழைப்பது இப்போது ஒத்துவாராது என்பது எவ்வளவு முட்டாள்தனம். ஒரு சாதாரண சிங்கள மகனைக் கூட எதிரியாக பார்க்கும் போக்கும் அவனை எதிர் நிலைக்கு பிடித்து இழுத்து தள்ளும் வகையில் தான் பேசுவோம் என நியாயப்படுத்தும் ஈழமுரசினது, புலியின் அரசியலும் தமிழ் மக்கள் விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான நிலைப்பாடு; உள்ளடங்கியதாகும். இனவாத அரசையும் சிங்களமக்களையும் வேறுபடுத்துவது அவசியம். ஆனால் சிங்கள மக்களை அரவகை;கவேண்டும.; அவர்களை எமது போராட்டத்திற்கு சார்பாக அணிதிரட்டி அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும வியட்நாமில் நடந்தது போல்.  இது அல்லவா சிறந்த யுத்த தந்திரம்.

நாங்கள் ஆண்டாண்டு காலமாய் அடக்கப்பட்டு வந்த இனம்... திட்டமிட்டு அழிக்கப்பட்டு வந்த இனம். ஆனால்.... அடக்கப்படும் சிங்கள இனத்தில் இருந்து ஒரு மனிதாபிமானியும் தமிழரைக் காக்கப் புறப்படேல்ல  எந்த சிங்கள அறிவு ஐPவியும் தமிழருக்காக போராட்டம் நடத்தேல்ல. எந்த சிங்கள முற்போக்கு வாதியும்... தமிழரைக் காக்க கொடி பிடிச்சுக் களம் இறங்கேல்ல. ஐPவகாருண்யம் நிறைந்த எந்த புத்தமதத் துறவியும் தமிழரின் நிலைகுறித்து கண்ணீர் வடிக்கத் தயாராக இல்லை. என சிங்கள இனத்தை சடையர் குறிப்பிடுவது உண்மைக்கு புறம்பானது.

ஏன் விடுதலைப் புலிகளின் தலைவர்களில்  சிலர் முதல் சிங்கள பிரதிநிதிளை வரவேற்று விட்ட அறிக்கைகள்;, செய்திகள் சடையரின் கூற்றுக்கு எதிராக உள்ளது. சிங்கள மக்கள் எமது எதிரி இல்லை எனக் கூற்றுக்கள் பல. தமிழ் மக்களுக்காக சிங்களப் புத்தி ஐPவிகள் பலர் குரல் கொடுத்தனர் கொடுக்கின்றனர். ஆனால் அது ஒரு அரசியல் அலையாக இல்லை என்பது உண்மை தான். இது ஏன் ? . சர்வதேச சூழல் இன்று ஒடுக்கப்பட்ட பாட்டாளிவர்க்க அமைப்புக்களை நாசம் செய்து சிதைத்துள்ளது. இதனால் இலங்கையிலும் அதன் சிதைவிலிருந்து ஒரு புரட்சிகர அமைப்பு உருவாகவில்லை. இதை செய்ய சொந்த புரட்சிகர இனம் தயாரில்லாத வகையில் இனவாதமும், குட்டிபூர்சுவா துஏP  இயக்கமும் இனம் காண முன்வரத் தடையாக இருந்தன. இன்னுமொரு புறத்தில் புலிகளின் தாக்குதல்கள் சாதாரண சிங்கள மக்களுக்குள் நடத்தப்படும் நிலையில், சிங்கள இனவாதம் நிறுவனப்படுத்தப்படுகின்றது.

இதிலீருந்து மீள்வதற்கு சாதாரண மக்களை இனம் கண்டு அவர்களை அணிதிரட்டும் வகையிலும், புலிகளின் நடவடிக்கை அமைவது அவசியம். மறுபுறத்தில் சிங்கள புரட்சிகர பிரிவுகள் இலங்கை நிலைமையை சரியாக ஆய்வு செய்து  மட்டும் தான் இன்று தமிழ்மக்களின் பிரச்சனைக்கு சரியான தீர்வை வழங்கும். தமிழ் ஒடுக்கப்பட்ட மக்கள் தம்மை சரியாக அணிதிரட்டிக் கொள்வதும் அவசியமாகும். எனவே போராடும் நாம் அவர்களை எம்பக்கம் வென்று எடுக்க போராட வேண்டுமே ஒழிய எதிர்த்து அன்னியப்படுத்துவது ஒரு சிறந்த புத்திசாலித்தனமான யுத்த தந்திரம் அல்ல.

' இப்ப ....குண்டடிச்சாலும் பயங்கரவாதிகள். குடல் அறுத்தாலும் பயங்கரவாதியள் .. இது தான் சிங்களத்தில தமிழருக்கு வைக்கப்பட்ட பெயர். உலக அரங்கில மனிதப் படுகொலைகளுக்கும் இனப்படுகொலைகளுக்கும் இந்தப் பதம் நல்ல கவசமாக இருக்கிறபடியால் .. சிங்கள அரசாங்கம் இலாவகமாகச் சுழட்டியாடுது. "

' பயங்கரவாதி " என்பது எல்லா ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்துக்கு உலக அரசுகள் சேர்ந்தும், தனித்தும் கொடுக்கும் பெயர் தான். அரசுகள் சொல்வதையிட்டு ஒரு சரியான விடுதலை இயக்கம் அலட்டிக் கொள்ளத்தேவையில்லை. ஏனெனின் ஒடுக்கப்பட்ட மக்களை சார்ந்து அல்லவா நாம் உள்ளோம். ஒடுக்கப்பட்ட மக்களை சார்ந்து இல்லாத ஒரு நிலையில் தான் அரசு சொல்வதையிட்டு பயம் வருகின்றது. புலிகள் இன்று ஒடுக்கப்பட்ட மக்களின் நலனிலிருந்து விலகி உள்ள நிலையில் இராணுவவாதத்துக்குள் சிக்கி அதையே அரசியலாக்கி உள்ள நிலையில் தான் இப்பயங்கரவாதம் என்ற சொல் பீதியூட்டுவதானதாகவுள்ளது. இந்நிலையில் தாக்குதல்கள் மிகவும் அவதானத்துடன் நடத்தப்பட வேண்டும். அதாவது அரசு-இராணுவ இலக்குகளுக்கு வெளியில் பொதுமக்களுக்குள் தாக்குதல் பாயும்போது, ஒடுக்கும் அரசுகள் முத்திரை குத்த விரும்பிய பயங்கரவாத முத்திரை பொதுமக்கள் அபிப்பிராயமாக மாறுகின்றது. இதுதான் ஒரு போராட்ட இயக்கத்தை சிதைத்து அழிக்கின்றது. இதன் முழுப்பொறுப்பும்  ஒரு விடுதலை இயக்கத்தினதும், அதன் அரசியல் -இராணுவ மூல உபாயத்தின் மீது சாரும். வெளியில் அல்ல.  உதாரணமாக முஸ்லீம் மக்களை வெளியேற்றியது, அநுராதபுரத் தாக்குதல்  ( இதை பாலசிங்கம் ஓத்துக் கொண்டார் ). .. போன்றன நல்ல எடுத்துக்காட்டு.

 

' உண்மையில் எங்கட இனத்திலதான்.. மனிதாபிமானமும் மனித உரிமை மீதான பற்றுதலும் உலகம் தழுவிய பரந்த அன்புப் பிணைப்பும் கொண்ட ஐPவாத்மாக்கள் இருக்குதெண்டது உண்மை. சிலபேர் அறிவும் ஆற்றலும் உலகப் பண்பியலும் நாகரீகமும் மனதளவில் வாய்க்கப்பெற்ற நல்ல மனிதர்களாக நடிக்கிறது. அவர்கள், தமிழீழ தேசத்தவன், தமிழன் எண்ட எல்லை கடந்து மனிதன் என்ற பெருங்கடலில் நீச்சலடிக்கிற அதிலும், முழுமனித இனத்தையே நேசிக்கக் கற்றுக் கொண்ட மகாத்மாக்களாக நடிக்கிறது "

இப்படி எழுதும் சடையர் இதில் உண்மையில் நல்ல மனிதாபிமானம் உடையோர் எம்மினத்தில் தான் உள்ளர் எனக் கூறி பின் அதற்கு முரணாக, நடிப்பதாக அதையே சேறடிக்கின்றார்.

உண்மையான மனிதாபிமானமும் , மனித உரிமை மீதும் உலகம் தழுவிய பார்வை கொண்டோரும் எம்மினத்தில் தான் இல்லை எனலாம். அந்தளவுக்கு இனவாதத்துக்குள்ளும் சாதிய மற்றும் பிற்போக்கு மதவாதத்துக்குள்ளும் சிக்கி மற்றைய இனங்களை உலகளாவிய ரீதியில் எதிரியாகப் பார்க்கும் போக்கு விரவி ஆழப்பதிந்துள்ளது. இருக்கக்கூடிய சில நல்ல மனிதரைத்தான் சடையர் நடிப்பதாகக் கூறுவதன் மூலம் அவர்களைக் கொச்சைப்படுத்தி சேறடிக்க முனைகிறார் அவ்வளவே. இது எம் தேச விடுதலைப் போராட்டத்துக்கும் உலக மக்களின் பரந்த ஆதரவைப் பெறுவதிலும் தடையாக உள்ள இனவாத அரசியலாகும். இது களையப்படுவது அவசரமும் அவசியமுமான பணியாகும்.

05 பெவ்ருவரி ஈழமுரசில் பாரிசில் வெளிவரும் லுமொடை பத்திரிகைக்கு பலஸ்தீன விடுதலை இயக்கம் காமஸ் பிரதிநிதி ஷேக் அகமத் யசின் வழங்கிய பேட்டியை ஈழமுரசு தமது நிலைக்கு சார்பாக போட்டு இருந்தனர். அதில் தற்கொலை தாக்குதலில் அப்பாவி இஷ்ரேலியர்கள் கொல்லப்படுவதை ஒட்டிய கேள்விக்கு அவர் அப்பாவி பலஸ்தீன மக்களை கொல்லும் வரை இதை செய்வோம் எனக் கூறி உள்ளார். ஒரு இராணுவத்துக்கும் விடுதலை இயக்கத்துக்கும் இடையில் உள்ள அடிப்படை வேறுபாட்டை மறுக்கும் போக்கில் தான் இப் பேட்டி உள்ளது. ஒரு இராணுவம் என்பது ஒரு கூலிப்படை . ஒரு விடுதலை இயக்கம் மக்களின் விடுதலைக்காக போராடும் இயக்கம் தனது மக்கள் என்று மட்டும் பார்ப்பது இல்லை. மற்றைய மக்களை இட்டு அக்கறைப்படுகிறது. மற்றைய மக்களை தனக்கு சார்பாக விடுதலைப் போராட்டத்துக்காக அணிதிரட்டுகிறது.

வியட்நாம் மக்கள் அமெரிக்க அப்பாவி மக்களைக் கொல்லவில்லை. மாறாக தனக்கு சார்பாக மாற்றி அமெரிக்காவிலேயே வியட்நாமுக்காக போராட்டத்தை நடத்தியது. இது உலகில் பல பலவாக வரலாறாக உள்ளது.

இதை மறுத்து ர்யஅயள  புலிகள் போன்றோர் அப்பாவி மக்களுக்குள் நடத்தும் தாக்குதல் விடுதலை இயக்கத்தையும் , போராட்டத்தையும் சிதைக்கின்றது.

இதை பார்க்க மறுத்து கூலி இராணுவமாக வேறுபாடு இன்றி தான் இருப்போம் என்றால் விடுதலைப் போராட்டம் உருப்பட்ட மாதிரித்தான்.