01_2005.jpg

ஜெகத்குரு கைது என்றால் ஜெகம் முழுதும் பொய்ப்பிரச்சாரம் செய்ய வேண்டாமா? உலகெங்கிலும் (குறிப்பாக அமெரிக்காவில்) குடியேறியுள்ள ஆர்.எஸ்.எஸ். அம்பிகள், இணையத் தளங்கள், மின்னஞ்சல், சாட்ரூம் போன்ற எல்லா வடிவங்களையும் பயன்படுத்தி நடத்தி வரும் பொய்ப் பிரச்சாரத்திற்கு சில சான்றுகளைக் கீழே தருகிறோம்.

இது அக்கிரகாரத்திற்குள் அவாள் பேசிக் கொள்வதற்கு இணையானது. இதையே எல்லாத் தமிழ் வாசகர்களுக்கும் ஏற்ப கொஞ்சம் பாலிஷ் செய்து கொடுத்தால் அதுதான் தினமலர், ஜூ.வி!

 

ஸ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி அவர்களை போலீசு அதிகாரிகள் திரும்பத் திரும்ப அடித்தே ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியிருக்கிறார்கள். அவர் 3 நாளாகச் சாப்பிடவேயில்லை. உயர் போலீசு அதிகாரிகள் அவரைக் கறி தின்னச் சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள்  இது வேலூர்ச் சிறையில் உள்ள பக்தியுணர்வுள்ள ஒரு போலீசுகாரர் நமக்கு தெரிவித்த தகவல். ஸ்வாமிகளைக் கையாள்பவர்களில் பெரும்பான்மையினர் கிறித்தவ அதிகாரிகள். இந்தத் தகவலை வேலூர்ச் சிறை வாசலிலிருந்து இ.மெயில் அனுப்புகிறேன். இது உண்மை. அவசரம். ஸ்வாமிகளை மீட்க ஏதாவது செய்யுங்கள்!

 

ஹிந்துஸிதா, சீனியர் மெம்பர்
காலை 11.38, 15.11.2004

 கறி தின்ன வைக்கிறார்களா? மனித உரிமைக் கவுன்சில் எங்கே? மீடியா அங்கே என்ன செய்கிறது? எல்லோரும் ரம்ஜான் கொண்டாட்டத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்களா? நடப்பது
முகலாயர் ஆட்சியா?

யோதா விக்ரமாதித்யா, 15/11/2004


 

உயர்நீதி மன்றத்தில் நடந்த மோதல் பற்றி:

 பிராமணர்களைக் கொல்லப் போகிறார்கள் என்று நான் சொன்னபோது பலர் கேலி செய்தீர்கள். இதோ, உயர்நீதி மன்ற விசாரணையைப் பார்க்கப் போன பிராமணப் புரோகிதர்களைக் கொலை செய்ய முயன்றிருக்கிறார்கள் திராவிடக் கட்சிக்காரர்கள். இவர்களுக்கு என்னதான் வேண்டும்? வேண்டிய அளவு பிராமணர்களைக் கொல்லட்டும். பிராமணப் பெண்களைக் கற்பழிக்கட்டும். வேறு என்ன செய்துவிடப் போகிறார்கள்?

 

 ஜனாதிபதி அவர்களே, நீங்கள் சிறந்த விஞ்ஞானி. ஆனால் உங்கள் இதயம் வேலை செய்யவில்லையா? சநாதன தருமத்தின் சிறகுகள் தீப்பிடித்து எரிகின்றன. நீங்கள் அக்கினிச் சிறகுகள் தந்த புகழ் மேல் ஒய்யாரமாக உட்கார்ந்திருக்கிறீர்களா? இதுவரை நீங்கள் ஒரு அறிக்கை கூட விடவில்லை. வெட்கமாக இல்லையா? பதவி மேலே அவ்வளவு ஆசையா? ஒரு முசுலீம் பயங்கரவாதி கையால்தான் உங்களுக்குச் சாவு!

 

சனாதன்

 


பக்தர்களின் குரல்!

 பெரியவாள் கைதானதிலிருந்து கடந்த 3 வாரமாக என் குடும்பமே தூங்கவில்லை. நாஸ்ட்ரடாமஸ் இதைப் பற்றிச் சோதிடம் சொல்லியிருக்கிறார். ""வெறுப்படைந்த பெண்ணின் மனஉறுதி முனிவரைச் சிறை பிடிக்கும். பால் சார்ந்த உணவைச் சாப்பிடும் மக்களுடைய அழிவின் தொடக்கமிது. அவர்கள் வடக்கு நோக்கி விரட்டப்படுவார்கள்'' என்கிறார் நாஸ்ட்ரடாமஸ். ஜெயலலிதாவின் கோபம்  சுவாமிகள் கைது  தயிர்சாதம் சாப்பிடும் நம் கதி?

 

ஆஷா

 தி.மு.க.காரர்கள் வெடிவெடித்துக் கொண்டாடியிருக்கிறார்கள். சங்கரராமனைக் கொன்றது போலவே தமிழ்நாட்டில் உள்ள எல்லா பிராமணர்களையும் கொல்ல வேண்டும் என்று பத்திரிக் கைக்குப் பேட்டியே கொடுக்கிறார்கள். தி.மு.க. ரவுடிகளுக்குப் பயந்து பிராமணர்கள் எல்லோரும் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். இதுதான் காஞ்சிபுரத்தில் நிலைமை.

 

 போன தேர்தலில் ஜெயா தோற்றார். இப்போது ஆட்சியில் இருப்பதற்கான தார்மீக உரிமையையும் இழந்து விட்டார். 356ஐப் பயன்படுத்தி இந்த ஆட்சியை உடனே கலைக்க வேண்டும். கொடுங்கோல் ஆட்சியை ஒழித்து ஸ்வாமிகளின் புகழை மீட்க வேண்டும்.

 

எ. ஸ்ரீநிவாஸ், சிம்லா