Language Selection

சமர் - 23 : 07 -1998
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சரிநகர் 131 இல் காலம் பத்திரிகையில் இருந்து மறுபிரசுரம் செய்யப்பட்ட பேராசிரியர் சிவத்தம்பியின் 'மேலிருந்து திணிக்கப்படுகின்ற அரசு அதிகாரமே தமிழ் பிரக்ஞைக்கு ஓர் அரசியல் வடிவத்தைக் கொடுக்கின்றது ' என்று தலைப்பிட்டு வழங்கிய பேட்டியில் -

'........ முஸ்லீம் மக்களை எங்களிடமிருந்து பிரிக்க முடியாதிருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். அதாவது முஸ்லீம் மக்களுக்குச் செய்யப்பட்டது பிழை என்பதை எடுத்துக் கூறுகிற அளவுக்கு (யார்?) அதை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கும் (யார்?) தமிழ் தேசியம் சுயவிமர்சனம் செய்துள்ளதனை நீங்கள் பார்க்க வேண்டும். ' (அடைப்புக் குறிக்குள் யார் என எழுதியது நாம் )

'நான் சொல்லும் தமிழ் பிரக்ஞையில் தன்னைத் தானே திருத்திக் கொள்ளும் (யார்?) சுயவிமர்சன ஆற்றல் இருக்கின்றதென்றே கருதுகின்றேன்.' என சிவத்தம்பி மனித உரிமை மீறல் எல்லாம் சரியாகி விட்டது, மன்னிப்பு கோரப்பட்டு விட்டது என கரடிவிட்டு தனது சொந்த அரசியல் சோரத்தை மிக அழகாக இனம் காட்டியுள்ளார்.

இது அண்மைக்காலமாக உலகெங்கும் போப், கிளிங்டன், சிராக் என உலக ஆளும் அதிகார வர்க்கத் தலைவர்களிலிருந்து கீழ் வரை அடிக்கடி கடந்த கால நிகழ்வுகளுக்கு பாவ மன்னிப்பு கோரப்படுகின்றது. ஒரு வார்த்தை  பத்தாண்டுக்கு சமூக கொந்தளிப்பை தணிக்க முடியும் என்ற நப்பாசை நம்பிக்கை  ஊடாக எழுந்து வரும் கபடம் தான் உலகு எங்கும் அடிக்கடி நடக்கிறது.

இது ஒரு புறம் தொடர மறுபுறம் தன்னார்வக்குழுக்களுக்கு (Nபுழு) சமாந்தரமாக, உலக பணக்கார கோமாளிகள் சமூக சேவைக்கு எனப் பணம் கொடுத்து, ஏழைகளுடன் உட்கார்ந்து சினிமா நாடகத்தை தமது ஆடம்பர அட்டகாசத்துடன் தொடரும் வியாபாரம் கொடிகட்டிப்பறக்கின்றது.

இந்த வழியில் இலங்கையில் சந்திரிகா ஆட்சி ஏறிய உடன்  எல்லாம் மாறிவிட்டது என்றும் இலங்கையில் ஐனநாயகத் தெய்வமான சந்திரிகாவை போற்றுவது என ஒரு கூட்டம் காவடி எடுத்து ஆடுகின்றனர்.

இந்த சந்திரிகாவின் மிக கொடூரமான வக்கிரமான மனித முகம் இழந்த இனவாத பாசிச ஒடுக்குமுறை, இன்னுமொரு புறத்தில் சில புத்திஐPவிகளை புலிகளின் செயல்களுக்கு மனித முகம் கொடுக்க கடும் முயற்சி செய்கின்றனர்.

இந்த வகையில் சிவத்தம்பி, nஐயபாலன், போன்றோர் இம்முயற்சியில் இழுபட்டு கறுப்பை வெள்ளையாக்க நாய் வாலை நிமிர்த்த முனைவது போல் தீவிரமாக முனைகின்றனர்.

முஸ்லீம் மக்கள் அன்று புலிகளின் கால்களில் விழுந்து கெஞ்சியபோதும் எந்தவிதமான ஈவு இரக்கமும் இன்றி துரத்தியதை, இன்று சுயவிமர்சனம் செய்துள்ளனர் என்கிறார் சிவத்தம்பி.

செய்தது பிழை என எடுத்துக்கூறக்கூடியளவுக்கு அதை ஏற்றுக் கொள்ளுமளவுக்கு தமிழ் மண்ணில் தமிழ் பிரக்ஞை இருக்கின்றது என்கின்றார் சிவத்தம்பி.

அதாவது புலிகள் சுயவிமர்சனம் செய்துள்ளனர். அதை செய்யும் அளவுக்கு தமிழ் மக்களுக்கு கருத்துச் சுதந்திரம் புலிகள் வழங்கியுள்ளனர் என்கின்றார். நாம் இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருந்த வரை புலிகள் சுயவிமர்சனம் செய்யவில்லை. ஏன் முஸ்லீம் மக்கள் மீளவும் யாழ் சென்று வாழ முடியும் என ஒரு வார்த்தையை சொல்ல முடியாத தமிழ் பிரக்ஞை தான், சிவத்தம்பி என்ற பச்சோந்தி மூடி பாதுகாக்க கவசம் இடுகின்றார்.

அதாவது nஐயபாலன் புலிகள் திருந்தி விட்டனர், மாற்றம் நிகழ்ந்துள்ளது (ஐரோப்பிய இலக்கிய சந்திப்பில்) என்றதைப் போல், சிவத்தம்பி சுயவிமர்சனம் நடந்துள்ளது அதை தட்டிக் கேட்கும் அளவுக்கு தமிழ்மண்ணில் விமர்சன சுதந்திரம் உண்டு என்கிறார்.

இந்த விமர்சன சுதந்திரத்தை கோருவதால் தான் நாளை நாம் சுடப்படலாம். சுடப்படலாம் என்பதற்காக நாம் விமர்சன சுதந்திரத்தை கோருவதை கைவிட்டு பச்சோந்தி ஆகிவிட முடியாது. இன்று சிவத்தம்பி, nஐயபாலன் பச்சோந்தியாகி கூறுகின்றனர் மாற்றம் நிகழ்ந்துள்ளது, சுயவிமர்சனம் செய்யும் உரிமையை புலிகள் அங்கீகரித்துள்ளனர் என்று.  ஆனால் நாளை நாம் மற்றும் எம்மைப் போல் உள்ளோர் ஐனநாயகத்தை புலிகளிடம் கோரியும் இனவாத சிங்கள அரசை எதிர்த்தும் போராடும் போது, படுகொலை செய்யப்பட்டால் அதற்கு கம்பளம் விரித்து அழைத்து வருவதில் சிவத்தம்பியின், nஐயபாலனின் சேவை இன்றைய நியாயப்படுத்தலை சார்ந்து தான் இருக்கும் என்பது ஒன்றும் அதிசயமாக இருந்து விடப்போவதில்லை.

அங்கு விமர்சன சுதந்திரம் உண்டு என்கிறார்கள். யாருக்கு ஐயா காதில் பூ வைக்கப் முனைகின்றீர்கள்.

சந்திரிகா ஒரு ஐனநாயகத்தின் காவல் தெய்வம் என்ற கூற ஒரு கூட்டம், புலிகள் சுயவிமர்சனம் செய்யும் சுதந்திரத்தை வழங்கும் ஐனநாயக வாதிகள் எனச் சொல்ல ஒரு கூட்டம். நடக்கட்டும,; மேளதாள பரிவட்டம்;. அப்போது தான் மனித உரிமை என்றால் என்ன எனத் தெரியாது மக்கள் மனித உரிமை மீறலுக்கே தாளம் போடுவர். இதன் மூலம் ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்ய அழகாகமுடியும் அல்லவா?

இன்று கொழும்பில் அமெரிக்கா விரித்துள்ள சிலந்தி வலையில், மற்றும் சர்வதேச நிதிகள் (Nபுழு)  விரித்துள்ள வலையில், விட்டில் பூச்சியாய் விழுந்து போய், மனித அடிப்படைக் கோட்பாடுகளையே துவம்சம் செய்வது மட்டுமன்றி, அவர்களே இன்னுமொரு வழியில் பின்நவீனத்துவ கோட்பாடுகளை மாற்றாக முன்வைப்பது இலங்கை நிலையாக உள்ளது.

சிவத்தம்பி எப்படி புலிகள் சுயவிமர்சனம் செய்தனர் யாரிடம் செய்தனர், எப்படி மாற்றுக் கருத்துச் சுதந்திரத்தை அநுமதித்தனர் என்பதை சொல்லியிருக்கலாம். ஆனால் அவருக்கு வாயெழாது தகரத்தை தங்கமென காதில் பூ வைக்க உரைகல்லை உலைக்குள் போடத்தானேவேனும்.

சந்திரிகா என்ற பாசிச இனவாதிகள் வெண்தாமரை இயக்கம் தொடங்க, சிவத்தம்பி - nஐயபாலன் செந்தாமரை இயக்கம் தொடங்குகின்றனர் அவ்வளவே.

புலிகள் திருந்த வேண்டின், அது புலிகளின் அரசியலில் நடக்க வேண்டும். அது இந்தப் புலிகள் என்ற கட்டமைப்பில், இந்த அரசியல் இராணுவப் போக்கில் சாத்தியமில்லை. ஏன் பிரபாகரன் மனப்பூர்வமாக விரும்பினால் கூட சாத்தியமில்லை. இயக்கம் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு ஏற்ப சுயவிமர்சனம் இன்றி வளைந்து கொடுக்க சிலவேளை முனையலாம். ஆனால் அது நெருக்கடிகள் இல்லாதபோது மீளவும் அது அதுவாகவே இருக்கும்.

சிலவேளையில் நாம் கற்பனையில் விரும்பின், அப்படி மாறிவிட்டதாகக் கூறி (சந்திரிகாவைக் காட்டுவது போல்) ஏமாற்றலாம்.

நாம் இந்த சிவத்தம்பியின் கடந்தகால  நிலையை கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம். 1986 இல் குறிப்பாக யாழ் மண்ணையும், தமிழ் ஈழத்தையும் உலுக்கிய யாழ் பல்கலைக் கழகத்தின் ஐனநாயகத்துக்கான போராட்டம் நடந்தபோது சிவத்தம்பி என்ன செய்தார் எனப் பார்ப்போம்.

இன்று புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களின் வெகுஐன அமைப்புக்கள் பல, போராட்டத்துக்கு ஆதரவாக அறிக்கை விட்டதுடன், நேரடியாக அடையாள உண்ணாவிரதம் மற்றும் போராட்டத்தில் கணிசமானோர் பங்கு கொண்டனர். (பார்க்க யாழ் பல்கலைக் கழக ஆவணங்கள், படங்கள்)

இப்படி தழிழ் ஈழ மக்கள் தமது ஐனநாயகத்துக்கான போராட்டமாக கண்ட இப்போராட்டத்தை நசுக்க, சிவத்தம்பி அணிந்த வேடம் நடுநிலையின் பெயரில் புலிவேஷத்துக்கு முகமூடி போட்டது தான்.

புலிகளுடன் பேசுவதாகக் காட்டிக் கொண்டு  புலிகளாகவே யாழ் பல்கலைக்கழக மாணவர்களுடனும், மக்களுடனும் பேசிய சிவத்தம்பி, புலிகளைவிட மிக மோசமான நிபந்தனைகளை கோரிக்கைகளை புலி சார்பாக முன்வைத்து போராட்டத்தைக் கைவிடக் கோரினார்.

இந்தப் பேச்சுவார்த்தையின் நடுநிலைத்தன்மையின் புலி சார்பை அம்பலப்படுத்திய யாழ் பல்கலைக் கழக மாணவர்கள்,  ஜனநாயகத்தைப் பாதுகாக்க இப்பேச்சு வார்த்தையை முறித்த போது, புலிகள் விட்ட துண்டுப்பிரசுரம் சிவத்தம்பியின் மிக மோசமான புலி சார்பு நடுநிலையை அம்பலப்படுத்தியது. சிவத்தம்பி முன்வைத்த நிபந்தனையை விட புலிகள் கீழ் இறங்கி விட்ட அறிக்கை தான் இப் போராட்டத்தையும் அதன் போக்கையும் இனம் காட்டியது. அத்துடன் சிவத்தம்பியின் நடுநிலைத் தன்மையும் அம்பலமானது.

புலிகள் விட்ட துண்டுப்பிரசுரத்தில் மக்களுக்கு, எழுத்து, பேச்சு, கருத்து, பத்திரிகைச் சுதந்திரத்தை வழங்குவது "புலிகளை அரசியல் அனாதைகளாக்கி விடும்" என புலிகள் கூறி இதைக் கோருவது தீயசக்திகள் தான் என விட்ட துண்டுப்பிரசுரம் தான், அன்றைய அப்போராட்டத்தையும், சிவத்தம்பியின் நடுநிலை புலிவேஷத்தையும் தெளிவாக்கியது.

இன்று சிவத்தம்பி மக்களுக்கு எழுத்து, பேச்சு, கருத்து, பத்திரிகை சுதந்திரத்தை புலிகள் வழங்கியுள்ளனர் என மறைமுகமாக தமிழ்பிரக்ஞை ஊடாக விமர்சனம் நடந்துள்ளது. அதைச் சொல்ல கேட்க நிலைமை மாறியுள்ளது  என்பதன் ஊடாக, புலிகள் அரசியல் அனாதைகள் ஆகாது எல்லாம் இனிதே நிறைவேறிவிட்டது என கரடி விடுகிறார்.

விஜிதரன் கொல்லப்பட்ட அந்த நாள் தான், சிவத்தம்பி கொன்றவர்களுடன் கூடிக் குலாவினார்.

அன்று ஜனநாயகததுக்காக போராடிய மாணவர்களுடன் முஸ்லீம் மக்கள் கைகோர்த்தனர். அதை முறியடிக்க, முறியடித்த பெருமையில் சிவத்தம்பிக்கு நிறையவே பங்கும் சேவையும் உண்டு.

முஸ்லீம் மக்களை வெளியேற்றவும், பின்னால் படுகொலை செய்யப்பட்ட பல ஜனநாயகவாதிகளை கொல்லவும், அன்றே சிவத்தம்பி முன் கையெழுத்து ஜனநாயகப் போராட்டத்தில் மாணவர்களுடன் நின்று போராடுவதற்குப் பதில், அதை நசுக்க உதவியவர்.

இன்று சுயவிமர்சனம் என்று நீங்கள் உங்களுக்குள் (புலியின் ஆள் அல்லவா?) நினைப்பதையா , இன்று எமக்கு சொல்ல முனைகிறீர்கள் எனக் கேட்கத் தோன்றுகிறது.

அன்று 1987 இல் இந்தியா இலங்கை ஒப்பந்தத்தின் போது புலிகளின் நிர்வாக அலகில் முதல் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று ( இதை அவர் சொல்லியும் திரிந்தார்) நாயாக அலைந்து கிடைக்காத போதா, உங்கள் சுயவிமர்சனம் வந்தது.

முஸ்லீம் மக்களை வெளியேற்றிய போது 1986 இல் அன்று யார் ஜனநாயகத்திற்காக போராடினார்களோ, ஆதரித்தனரோ அவர்கள் தான் இதை விமர்சனம் செய்தனர், எதிர்த்துக் குரல் கொடுத்தனர். உங்களைப் போன்ற பச்சோந்திகள் அல்ல.

இன்று புலிகளிடம் ஜனநாயகத்தைக் கோருபவர்கள் நீங்கள் அல்ல. அவர்கள் தான். நீங்கள் ஜனநாயகம் கிடைத்துவிட்டது எனக் கதைவிட்டு அதையும் மூட்டை கட்டி சவக்குழிக்குள் தள்ளிவிடலாம் எனக் கனவு காண்கிறீர்கள். ஆனால் ஜனநாயகம் இன்று கிளிங்ரனின் பொக்கற்றில் தான் உள்ளது.