பொல்போட்டுக்கு எமது சிவப்பஞ்சலி

அண்மையில் இறந்து போன கம்பூச்சியாவின் போர்க்குணம் கொண்ட வீரமிக்க மார்க்சியவாதியான பொல்போட், ஏகாதிபத்திய கொள்ளைக்காரர்களை நாட்டைவிட்டு துரத்தியடித்ததுடன், சொந்தப் பொருளாதாரத்ததை கட்டியமைக்கும் போராட்டத்தில், உள்நாட்டு எதிர்புரட்சியும் ஏகாதிபத்திய சதிகளும் சோவியத்ஆக்கிரமிப்பும் ஆக்கிரமிப்பாளன் விட்டுச் சென்ற அழிவுகளும் சேர்ந்து பாரிய நெருக்கடிகள் ஊடாக நாட்டை மீட்யெடுக்க போராடினர்.

இதன் தொடர்ச்சியில் வியட்நாம் ஆக்கிரமிப்பும் அதன் தொடர்ச்சியில் பின்வாங்கிச் சென்று தொடர்ந்தும்போராடினர். இருந்த போதும் போரட்டத்தில் விட்ட தவறுகள் போராட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தியது.

மறுபுறம் ஏகாதிபத்தியம், கம்பூச்சிய போராட்ட புதல்வார்கள் மீது தமது கடந்தகால தோல்விகள் மற்றும் தொடர்ச்சியான சுரண்டலை நடத்தும் கனவுகளுடன் சர்வதேச ரீதியாக அவதூறு பொழிந்து தள்ளுகின்றது.

அதைப் பொறுக்கி எடுக்கும் முற்போக்கு மூகமுடி போட்ட நயவஞ்சகர்கள்; மனிதாபிமான பெயரில் கடை விரிக்கின்றனர்.

வரலாறு கம்பூட்சிய புரட்சிகர வரலாற்றை தனக்கே உரிய வகையில் விமர்சனக் கண்கொண்டு மீளப்பெறுவதை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது.