"தென்னாசிய சமூகத்தில் பெண்நிலைவாதம்" என்ற தலைப்பில் லஷ்மியால் மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரை தென்னாசிய பெண்கள் அமைப்பு பிரதிநிதிகளால் எழுதப்பட்ட நூலில் இருந்து தமது கோட்பாட்டு இணக்கத்துடன் விசுவாசமாக எடுத்து எக்ஸிலில் முன்வைத்துள்ளார். இதை ஆராய்வோம்.

 

 

"சமூகத்தில் நிலவும் பால் அடிப்படையிலான ஒடுக்குதல், ஆணாதிக்கம், தந்தைவழி சமூகம் என்பவற்றின் இருப்பைக் கண்டுகொண்டு, இவற்றிற்கு எதிரான ஏதாவது நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒருவர் பெண்நிலைவாதி ஆவார்." எனக்கூறும் கட்டுரை பெண்கள் மீதான ஒடுக்குமுறையை மறைமுகமாக மறுத்தும், இயங்கியலை மறுத்தும் பெண் விடுதலையின் ஆரம்ப பார்வையே ஆணாதிக்கத்தில் இருந்து தொடங்குகின்றது.

முதலில் ஒரு பெண் பெண்ணாக இருக்கிறாள் எனின் அவளின் ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தான் அவள் உயிர்வாழ்கின்றாள். ஆணாதிக்க சுரண்டலுக்கு எதிரான போராட்டம் இன்றி உலகில் எந்தப் பெண்ணும் உயிர்வாழவில்லை. இதுதான் பெண் உயிர் வாழ்தலின் அடிப்படையாகும். ஆணால் இப்போராட்டம் தன்னியல்பாக நாள் தோறும் அவர்களை அறியாமலும் அறிந்தும் நீடித்தவண்ணம் உள்ளது. முதலில் ஒரு பெண் பெண்ணாக இருக்கும் போக்கில் போராட்டம் பிரிக்க முடியாத அம்சமாக இருக்கின்றது. ஆகவே போராட்டத்தை ஆணாதிக்கத்துக்கு எதிராக தெரிந்தும் தெரியாமலும் தன்னிச்சையாகவும் செய்யும் அணைவரும் பெண்ணிலைவாதிகளாக இருப்பதில்லை. மாறாக பெண்களாக உள்ளனர்.

பெண்ணிலைவாதி  பெண்ஓடுக்கு முறை எப்படி தொடங்கியது என்பதை தெரிந்து கொண்டு அதை எப்படி ஒழித்துக் கட்ட முடியும் என்பதை விஞ்ஞான பூர்வமாக புரிந்து அதற்க்காக போராடுபவர்கள் மட்டும்தான் பெண்ணிலைவாதிகள் ஆவர். சமூதாயத்தில் பெண் ஒடுக்குமுறை தொடங்க காரணமான சுரண்டலில் தொடங்கி, பெண்ணை சுரண்ட அடிமையாக்கிய தொடர்ச்சியில் பெண் மீதான பாலியல் சுரண்டலை தொடங்கியது முதல் இதை ஒழித்துக் கட்டும் போராட்டத்தில் இறுதியானதும் முடிவானதுமான சுரண்டலை ஒழித்துக் கட்டும் போராட்டத்துடன் தொடர்புடையது என்பதை புரிந்து அதற்க்காக போராடாத எவரும் பெண்ணிலைவாதியாக இருப்பதில்லை. ஏனெனின் இதை மறுக்கும் யாரும் பெண்களுக்கு சலுகை கோருவதற்க்கு அப்பால் ஆணாதிக்கத்தை ஒழித்துக்கட்ட போராடுவதில்லை.

இன்று பொதுவாக ஆணாதிக்கத்தை ஒழித்துக் கட்டுவதை மறுக்கின்ற, புரிந்து கொள்ளாத பலர் பெண்ணிலைவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர். இந்த வகையில் இருக்கும் சமூக எல்லையை தாண்ட கோரும் (கட்டுடைப்பை) எல்லா செயல்களிலும், ஈடுபடும் அனைவரும் பெண்நிலைவாத வேடம் போட்டுக்கொள்கின்றனர். ஒரு கவர்ச்சி மொடலிஸ்ற் முதல் சீர்திருத்தத்தை முன்வைக்கும் அனைவரும் உண்மையில் பெண்நிலைவாத வேஷத்துடன் ஆணாதிக்க இருத்தலுக்காக முண்டுகொடுக்கின்றனர். அதாவது சமூகத்தில் வேறுபட்ட பல்வேறு ஒடுக்குமுறைகளில் ஒடுக்குவதற்க்கு சாதகமாக இருந்தபடி  பெண்நிலைவாதிகள் வேஷத்துடன் பெண்களை ஏமாற்றி சீரழிக்க ஆளும்வர்க்கங்களால் கோட்பாட்டு செயல் தளங்கள் இடப்படுகின்றன. இன்று ஏகாதிபத்தியத்தால் பெண்விடுதலை கோசங்களுடன் கட்டியமைக்கப்பட்டு களத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தன்னவர் பெண் விடுதலைக் குழுக்களின் பிரதிநிதிகள் கூட பெண்நிலைவாதியாக உலாவருகின்றனர். இன்னுமொருபுறத்தில் மாறுபட்ட பொருளாதார (நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ, ஏகாதிபத்திய) இடைவெளிகளில் பெண்களின் ஒடுக்குமுறையின் வடிவங்கள் மாறுபடும் போது, அதைமறுத்து (பிந்தியதை) மற்றையதை கோரும் போது பெண்விடுதலையாக காட்டப்படுகின்றது.

சமுதாயத்தின் ஒடுக்கப்பட்ட ஒட்டுமொத்த நலனுக்கும், ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட பெண்களின் விடுதலைக்கும் உதவும் வகையில் இல்லாத எல்லா பெண்நிலைவாதக் கோரிக்கையும் ஆணாதிக்கத்தை தக்கவைக்கும் முயற்சியின் அங்கமாக உள்ளதுடன், மனிதப் பிளவுகளில் உயிர் வாழும் நச்சுக்காளானாக உள்ளனர். பெண்நிலைவாதி யார் என்ற விளக்கத்தின் ஊடாக ஏகாதிபத்திய நஞ்சுகளுக்கும் பால்வார்த்து வளர்க்க விரும்பும் தொடர்ச்சியில்தான் இக்கட்டுரை நகர்கின்றது. பெண்விடுதலையை அடையும்வழியில் முன்வைக்கும் மோசடித்தனத்தை பார்ப்போம்

".......ஒருத்திஃஒருவன் பெண்நிலைவாதியாக இருப்பதற்க்கு ஒரு குழவில் அல்லது ஒரு அமைப்பில் அங்கம் வகிக்கவேண்டிய அவசியமில்லை. இருந்தாலும் எதையாவது காத்திரமாகச் செய்வதற்க்கு ஒரு குழுவில்ஃ அமைப்பில் இருத்தல் நன்று."  எவ்வளவு மோசடி. பெண் விடுதலைடைய அமைப்பின்றி சாத்தியம் என்பது இருக்கும் ஆணாதிக்க சமூகத்தை கட்டிக்காக்கும் நனவான கனவுகளில் பெண் விடுதலையின் பெயரால் முன்வைப்பதுமாகும். தனிநபர் அமைப்புக்கு வெளியில் காத்திரமாக எதுவும் செய்ய முடியாது என்பதை மறைமுகமாக ஒத்துக் கொண்டு போராடாத பெண்விடுதலையின் பெயரில், புத்தக மார்க்சியவாதிகள் போல் பெண் திண்ணை விடுதலை பேசுவதை அங்கீகரித்து பிழைக்க பின்நிற்க்கவில்லை.

இதைச் செழுமைப்படுத்தும் வகையில் "பெண்நிலைவாதியாக இருப்பதற்க்கு சொற்க்கள் அல்லது சொற்கட்டுகளைத்  தெரிந்து வைத்திருக்கவேண்டிய அவசியமில்லை. ஒரு கோட்பாடு அல்லது தத்துவத்தைக் கொண்டிருக்கத் தேவையில்லை. தேவையானது எல்லாம் ஆணாதிக்கத்தைக் கண்டுகொள்ளலும், இரட்டை நிலைப்பாடுகளையும், அநீதியையும் ஆணாதிக்கத்தையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான துணிவைக் கொண்டிருப்பதும் தான்." என்று கூறுவதன் மூலம் ஆணாதிக்கத்தை தக்க வைக்க கோட்பாடற்ற பூர்ஷ்சுவா பெண்களை, ஆண்களை பெண்நிலைவாதிகளாக முன்மொழிகின்றனர்.  இதையே திரொக்சி கட்சி உறுப்பினராக இருப்பதுக்கு எல்லாத் தொழிலாளிக்கும் தகுதி உண்டு எனச் சொன்னதைத் தான் பெண்ணிலை வாதத்துக்கும் பூர்சுவா பெண்நிலைவாதிகள் மீள முன்வைக்கின்றனர்.

ஆணாதிக்க அமைப்பில் பெண்கள் வாக்களிக்கும் உரிமையை மட்டும் கோரும் பெண் பெண்நிலைவாதியாக சித்தரிப்பதன் மூலம் பெண்களை ஏமாற்றி பிழைக்க பூர்ஷ்சுவா வர்க்கம் முயல்கின்றது. இந்தியாவில் பார்ப்பாணிய பாரதியஐனதாக் கட்சிப் பெண்கள் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் ஆணாதிக்கத்தை எதிர்த்து போராடுகின்றனர். ஏன் பராளுமன்றத்தில் பெண்பிரதிநிதித்த்துக்காக போராடுகின்றது. அண்மையில் இந்தியாவில் அழகுராணி போட்டியை எதிர்த்து சிவசேனை பெண்கள் அமைப்பு நிலப்பிரபுத்துவ இந்து கோட்பாட்டில் போராட, பட்டாளிவர்க்கம் ஏகாதிபத்திய ஆணாதிக்க பண்பாட்டை எதிர்த்து பாட்டாளி வர்க்க பண்பாட்டை உயர்த்தி போரிட்டன. இங்கு இரு போராட்டமும் நேர் எதிர்த்தன்மை கொண்டன. இங்கு ஆணாதிக்கத்தை எதிர்த்த என்ற எல்லைக்குள் பெண்ணிலைவாதியாக சிவசேனை பெண்கள் அமைப்பை அங்கீகாரிக்க முடியாது.

நடைமுறையில் இயல்பாக எப்போதும் பெண்கள் கோட்பாடு தெரிந்தோ தெரியாமலோ ஆணாதிக்கத்துக்கு எதிராக எப்போதும் போராடியபடிதான் உயிர்வாழ்கின்றனர். இவைகள் ஊடாக சில வெற்றிகளைப் பெறவோ, சலுகைகளை பெறவோ முடிகின்றது. இவை இறுதியான வெற்றிக்கு இட்டுச் செல்லும் போராட்டத்தை நடத்திவிடுவதில்லை. இவர்கள் பெண்நிலைவாதிகளாக இருந்துவிடுவதில்லை. மாறாக தம் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதால் மட்டும் பெண்களாக உள்ளனர். பெண்நிலைவாதிகள் இவர்களில் இருந்து மாறுபட்டு பெண்ணின் ஒடுக்குமுறையை விடுதலையை விஞ்ஞானபூர்வமாக புரிந்து சமூகத்தின் அனைத்து ஒடுக்குமுறையையும் ஒடுக்கும் மக்கள் சார்பாக நின்று, முரணின்றி எதிர்த்து போராட தத்துவார்த்த அமைப்பைக் கோருபவளும் அமைப்பில் இருப்பவள் மட்டும்தான் பெண்நிலைவாதியாவர். இதற்க்கு வெளியில் பெண்ணின் ஒடுக்குமுறையில் ஏதாவது ஒன்றை உயர்த்தும் போது இவை ஐனநாயகக் கோரிக்கையாக மட்டும் இருக்கின்றது. இது சில சலுகைகளை ஆணாதிக்கத்திடம் பகிர்ந்துண்ண கோருவதற்க்கு அப்பால் ஆணாதிக்கத்துடன் இணைந்துகொள்கின்றன. இன்று காணப்படும் பெரும்பாலான அமைப்புகள் இந்த எல்லைக்குள்தான் செயல்படுகின்றன. விஞ்ஞான பூர்வமாக ஆணாதிக்கத்தை ஒழித்துக்கட்ட ஒருபெண்நிலைவாத அமைப்பு உருவாகும் பட்சத்தில் இச்சமூக அமைப்பு ஆட்டம் காணத்தொடங்கிவிடும். இது சமூகத்தின் எல்லா முரண்பாடுகள் மீதும் போராடுவதன் மூலம் இச்சமூக அமைப்பை தலைகீழாக்கிவிடுகின்றது. இதுமட்டும் தான் பெண்நிலைவாதியின் ஒரே பாதையாக இருக்கமுடியும். இதை மறுத்து வைக்கும் வாதத்தைப் பார்ப்போம்.

"இதனுடைய இறுதித்தீர்வு ஒரு குழுவின்மேல் இன்னொன்று வெற்றிவாகை சூடுவதில்லை. (இந்தச் சந்தர்ப்பத்தில், பெண் ஆணின் மேல்) ஆணினால் சமூகத்தின் எல்லா விஷயங்களிலும் ஒரு மீள்சிந்தனை, ஒரு மீளமைப்பு. ஏனைய வர்க்கங்கள் தந்தைவழி ஆதிக்கஃஆணாதிக்க அமைப்பினுள்ளேயே தங்களுடைய குறிக்கோள்களை அடையமுடியும் தங்களுடைய விரோதிகளை வென்றோ அல்லது அழித்தோ அவர்கள் வெற்றியை அடையமுடியும். அவர்கள் உள் வர்க்க, சாதி, மத, இன வேறுபாடுகளற்ற ஒரு பொது காரணத்தைக் கண்டுபிடிக்கமுடியும். ஆனால் பெண்கள் அமைப்புஃ இயக்கம் இவைகளில் எதையும் செய்ய முடியாது. அது அதனுள்ளேயே வர்க்கம் மற்றும் வேறுபாடுகளைக் களைந்து வெல்லுதல் வேண்டும். அது சமூகத்தின் சாராம்சத்தை மாற்ற வேண்டும். அது விரோதப்போக்கைத் திசை திருப்ப வேண்டும்." என்று தமது பெண்விடுதலை கண்டுபிடிப்பை கூடி உண்ணும் போக்கில் முன்வைக்கும் வாதத்தைப் பார்ப்போம்

ஆண்களின் போராட்டங்கள் முரண்பாடற்ற பொதுகோரிக்கையில் வெல்ல முடியும் என்கின்றனர். அதாவது எக்ஸில், மற்றும் இலக்கிய சந்திப்பு வகையாறுகளும் தான் எதுவித குறிக்கோள்களுமின்றி இருக்க முடிகின்றது. சமூகத்தின் உயிர் ஒட்டமுள்ள எல்லாப் பிரச்சனைகளிலும் பொது நீர்ரோட்டம் ஒன்றை ஆண் சரி பெண் சரி வந்தடைய இந்த வர்க்க சமுதாயத்தில் ஒருக்காலும் முடியாது. எல்லா முரண்பாடுகளும், எல்லா கோரிக்கைகளும் வர்க்க சமுதாய பிளவுகளால் எதிர்நிலைப் போராட்டத்துக்கு உட்பட்டுத்தான் யதார்த்ததில் உள்ளது. பெண்விடுதலைப் போராட்டம் ஆண் பெண் வேறுபாடின்றி ஒரே தளங்களில் நடப்பதுடன் பொதுவாக ஆண் சார்பு நிலைக்கு எதிராக நடக்கின்றது. இங்கு விரோதப் போக்கை இல்லாது ஒழிக்கும் கற்பனைகளில் அல்ல மாறாக ஆணாதிக்க கருத்து நிலைக்கு எதிரான, அதன் ஆதிக்க பிரிவுகளுக்கு எதிராக  விரோதத்துடன் போராடக் கோருகின்றது உண்மையான பெண்நிலைவாதம்.

ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டம் சமூகத்தின் அனைத்து முரண்பாட்டுக்கும் வெளியில் நடக்க முடியும் என்பது கற்பனையான கருத்துமுதல்வாதம். மாறாக பெண்விடுதலை என்பது மற்றைய முரண்பாடுகளுக்குள் புதைந்து போய்யுள்ளது. பெண் ஒடுக்குமுறை மற்றைய முரண்பாட்டுக்கு வெளியில் உருவானவையல்ல. சுரண்டல் எப்போது தொடங்கியதோ அப்போதே பெண்மீதான ஒடுக்குமுறை தொடங்கியதுடன், அதன் வேறுபட்ட பண்பியல் மாற்றங்கள் காலத்துக்கு காலம் இணைந்து கொண்டன.  பெண்நிலைவாதிகள் எனக் கூறிக்கொள்ளும் பலர் சுரண்டலை பேசுவதில்லை என சபதம் எடுத்துதான் பெண்விடுதலை பேசமுனைகின்றனர். அதாவது பெண் எப்படி ஒடுக்குமுறைக்குள் உள்ளாக்கப்பட்டாள் என்ற வரலாற்று உண்மையை பார்க்க மறுப்பதும், பின் எம் ஒடுக்குமுறைக்கு எதிராக நாம் போராடக் கூடாது எனக் கேட்பதன் மூலம் பெண்விடுதலை பேசுவதாக பாசாங்கு செய்கின்றனர். இங்கு இவர்கள் ஆணாதிக்கவாதிகளிடம் சலுகைகளை கோரிப் போராடுகின்றனரேயொழிய ஆணாதிக்கத்தை ஒழித்துக் கட்டப் போராடுவதிலை. ஆணாதிக்கத்தை ஒழித்துக் கட்ட வேண்டுமாயின் அது ஆணாதிக்க சுரண்டல் சமூகத்துக்கு எதிராக போராடும் ஒரேஒரு பாதையில் மட்டும் நிகழ்வதாக உள்ளது. ஏன்எனின் பெண் ஒடுக்குமுறை சுரண்டலை தொடங்கியதில் இருந்துதான் உருவானது. மருத்துவர் போல் அடிப்படை கராணத்தை தெரிந்து மருத்துவம் செய்வது போல் ஆணாதிக்கத்தை ஆராய மறுக்கும் அரசியல் நோக்கம் கபடம் நிறைந்தது.

இன்றைய சுரண்டல் சமுதாயத்தை பற்றி கேள்விகேட்க்காத அமைதிப் பெண்நிலைவாதம் பேசி சலுகைகள் கேட்பதன் மூலம், தொடர்ந்தும் ஆணாதிக்க சுரண்டல் சமுதாயத்தை காப்பாற்ற கனவான நனவுகளுடன் செயல்படுகின்றனர். இதுதான் வேறுபாடுகளை களைந்த பெண்நிலை அமைப்புகளை எக்ஸில் போல் முன்வைக்கின்றனர். வர்க்க சமுதாயத்தில் வர்க்க எல்லை தாண்டாத நிலையில், வர்க்கம் கடந்த போராட்டம் நடத்த வேண்டும் என்பது நஞ்சுத்தனமான ஆணாதிக்க முன்மொழிவாகும். பெண்விடுதலையை கோரிப் போராடும் போது ஆணாதிக்க சுரண்டலை இனம் கண்டு அதற்க்கு எதிராக வர்க்க எல்லைக்குள் போராடுவதன் மூலம், எந்த வர்க்கம் பெண்ஓடுக்குமுறையின் காரணமாக யதார்த்தத்தில் உள்ளதோ அதை ஒழித்துக் கட்ட போராடுகின்றது.

நாம் இந்த பெண்நிலைவாத ஆணாதிக்கவாதிகளின் அடுத்த கூற்றைப் பார்ப்போம். "ஏனைய பல ’இசம்’கள் தரமுடியாததை பெண்நிலைவாதம் தரமுடியும் என்று நாங்கள் நிச்சயமாக நம்புகின்றோம். இவற்றில் அநேகமானவை மனித குலத்தின் பாதியை மறந்தன அல்லது புறக்கணித்தன" என்று தமது ஆணாதிக்க ’இசம்’மை முன்வைக்கின்றனர். இந்த ஆணாதிக்க  இசத்தைப் பார்ப்போம்.

பெண்நிலைவாதம் எப்படி தனியாக ஆணாதிக்கத்தை ஒழித்துக் கட்டும் எனக்கூற முடியாத வார்த்தைப் புரட்ச்சிதான் ஆணாதிக்க இசமாக வெளிவருகின்றது. பெண்நிலைவாதம் எப்படி எங்கிருந்து சமுதாயத்துக்குள் புகுந்துகொண்டது. ஆணாதிக்க சமுதாயத்தின் ஒடுக்கு முறைகளில் பிறக்கும் போராட்டம் அதன் இருப்புகளை கேள்விக்குள்ளாக்குவதன் ஊடாக, அதற்க்கு எதிரான போராட்டத்தில் மட்டும்தான் பெண்நிலைவாதம் இருக்கமுடியும். இதைமுன்வைக்காத பெண்நிலைவாதம் உண்மையில் ஆணாதிக்க பெண்நிலைவாதமாக உள்ளது. மற்றைய இசங்கள் தரமுடியாததை பெண்நிலைவாதம் தரமுடியும் என்கிற போது, எதைக் குறித்த தாக்குதலாக வெளிவருகின்றது என்பதை ஆராய்வோம்.

பெண்விடுதலை முன்வைத்த ஒரே கோட்பாடு மார்க்சியமாக உள்ளது. மற்றைய எல்லாம் பெண்களுக்கு சலுகைகளை கோரிணவே ஓழிய பெண்விடுதலையை அதன் தொடக்க ஓடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தில் கோரவில்லை. மார்க்சியம் சரிபாதி பெண்களின் விடுதலையை பேசவில்லை என்று மறைமுகமாக கூற முனைவது சுரண்டல் வர்க்கத்தைப் பாதுகாக்க முனையும் போக்கில், பெண்விடுதலையின் பெயரில் முன்வைக்கும் ஆணாதிக்க நனவுகளில் முளைத்தெழுகின்றது.

மார்க்சியம் மட்டும்தான் பெண்விடுதலையை சரியாக இனம்காட்டுவதனூடாக, அதை ஏற்றுக் கொண்ட பெண்கள் அமைப்பு மட்டும்தான் பெண்நிலைவாத நிலைப்பாட்டில் மிகச்சரியாகவும் ஆராய்ந்து போராடுகின்றனர். ஏனெனின் பெண் ஒடுக்கு முறை ஆணாதிக்க சுரண்டல் சமுதாய விளைவுகளாக உள்ளதால் அதை எதிர்த்து போராட்டத்துக்கு வெளியில் பெண்விடுதலை சாத்தியமில்லை. இதற்கு வெளியில் பெண்நிலைவாத இசங்கள் எல்லாம் சுரண்டல் சமுதாயத்தை கேள்விக்குள்ளாக்கி போராடாத சமரச சலுகைக்காக ஆணாதிக்க சமூகத்திடம் கையேந்துகின்றன. மார்க்சியம் மட்டும்தான் சமுதாயத்தின் எல்லா முரண்பாடுகள் மீதும் முரண்நிலையின்றி பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக நியாயமாக யதார்த்ததில் போராடிக் கொண்டிருக்கும் ஒரேயொரு தத்துவமாக, போராட்ட அமைப்பாக உள்ளது. இதை யாராலும் மறுக்கமுடியாது.