Language Selection

சமர் - 24 : 10 -1998
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சரிநிகர் 144 இல் ஸ்பாட்டகஸ்தாசன் என்பவர் ஜெர்மனியில் இருந்து வாசகர் கடிதம் ஒன்று எழுதியிருந்தார். இவர் சரிநிகரில் வெளிவந்த எம்.ஆர்.ஸ்ராலினுடைய விமர்சனத்தை விமர்சித்த தொடர்ச்சியில், இலக்கியச் சந்திப்பில் ஜெயபாலன் புலிகள் திருந்திவிட்டனர் எனக் கூறியதை "சமர்" விமர்சித்து கருத்து வெளியிட்டிருந்ததை "பொய்ச் செய்தி" எனக் குறிப்பிட்டு பலகருத்துகளை வெளியிட்டிருந்தார்.

 

 

நாம், ஜெயபாலனை தொட்டு வெளியாகிய பலவிதமான கருத்துக்குள் செல்வதைத் தவிர்த்துக் கொண்டு குறிப்பாக ஆராய்கின்றோம்.

முதலில் எம்.ஆர்.ஸ்ராலின் என்ற பெயர்களைப் பாவிப்பவர்கள், புனை பெயரை தெரிவு செய்யும் போது ஸ்ராலின் உடைய பொதுக் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டவராக இருக்க வேண்டும். இல்லாது ஸ்ராலின் பெயரைப் பயன் படுத்துபவர்கள் உண்மையில் ஸ்ராலினுக்கு சேறுயாடிக்கு தொடர்ச்சியில் தான் இப்பெயர் பயன்படுத்தப்படுகிறது. இன்று இந்த எம்.ஆர்.ஸ்ராலின் கோட்பாடற்ற கூட்டத்தின் உறுப்பினர் ஆவர். அண்மையில் சுகிக்க கூட்டிய கூட்டத் தொடரில் முன்நின்று பங்கு கொண்டு சுகித்தவர்.  எப்போதும் ஸ்தாபனத்தையும் கோட்பாட்டையும் உயர்த்திப் பிடித்த ஸ்ராலினை அலங்கோலப் படுத்தும் வழமையான முயற்ச்சியின் தொடர்ச்சியில் அவர் பெயரை திட்டமிட்டு இவர்கள் பயன்படுத்துகின்றனர்.

இன்று மார்க்ஸின் பெயரில் உள்ள மார்க்சியத்தை எதிர்க்கும் அ.மார்க்ஸ் மார்க்சின் (அது அவரின் சொந்தப் பெயராக இருந்த போதும்) பெயரால் வரலாற்றில் நீடிக்கும் பொய்மையை நாம்கேள்விக்கு உள்ளாக்கவேண்டும். அவரின் பெயரில் உள்ள கோட்பாட்டை எதிர்ப்பவர் அப்பெயரில் ஒட்டிக் கொள்ளும் போலித்தனம் கேவலமானது. பெரும் கோட்பாட்டு எதிப்பாளர் தன்பெயரை தூக்கியெறிய முடியாத கேள்விக்குள்ளாக்கல் மோசடியானதே.

சமர் இதழில், 1997 இல் நடந்த இலக்கியச் சந்திப்பில் ஜெயபாலன் புலிகள் திருந்தி விட்டனரென ஒப்பாரி வைத்தை விமர்சித்ததை, பொய் எனச் சொல்லி சரிநிகரில் எழுதிய ஸ்பாட்டகஸ்தாசன் வேறுயாருமல்ல ஜெயபாலனின் சொந்த தம்பி என்பதுதான் விசித்திரமானது. இங்கு தம்பி விமர்சிக்க கூடாது என்பதல்ல மாறாக தனது ரொக்சிய கோட்பாட்டால் அண்ணன் ஜெயபாலனின் முதலாளித்துவ புலம்பல்களை விமர்சித்தல்லவா இருக்கவேண்டும். இதைத்தான் ரொக்சியவாதிகளிடம் மக்கள் எதிர்பார்ப்பார்கள். அண்ணன் என்றால் கொள்கை கோட்பாடேல்லாம் அரோகராதான் போலும்.

சமர் "பொய் சொன்னது" எனக் கூறும் ஜெயபாலனின் தம்பி ஒற்றைவரியில் ஆதாரமின்றி புலம்புகின்றார். அதுசரி உங்களால் ஆதாரமாக மறுக்க முடியுமா? ஏன் உங்கள் பாரிஸ் இலக்கிய சகாக்கள் ஜெயபாலன் புலிகள் திருந்திவிட்டனர் எனக்கூறி புலம்பியதை கசெட்டில் பதிவுபண்ணி வைத்துள்ளனர். முடிந்தால் அதில் இருந்து ஆதாரமாக மறுங்கள் பார்க்கலாமே.

ஏன் அன்று ஜெயபாலன் தான் புலித்தலைவர்களை சந்தித்த யதார்த்தத்தையும், அவர்களில் மாற்றம் நிகழ்ந்ததாக புலம்பிய போது, சபை முணுமுணுக்கச் செய்தது. அப்போது புலிகள் கூறுவதுபோல் யதார்த்தம் தெரியாத நீங்கள் (மறைமுகமாக விமர்சிப்பதை எதிர்த்து புலிகளைப் போல்) (இதையே தம்பி மீள இக்கட்டுரையில் முன்வைக்கின்றார்.) எனக் கூறி  புலி திருந்திய கதையை புலம்பினார்.

புலிகளின் ஐனநாயக மறுப்பை, இல்லை எனக் கூற மண்ணின் யதார்த்தம் தேவையாகிவிடுகிறது. இலக்கியச் சந்திப்பில் புலிகள்பற்றி ஜெயபாலனின் யதார்த்தமற்ற புலம்பல் அடிப்படையில் ஜெயபாலனின் நக்கிப்பிழைக்கும் கழிசடை அரசியலின் ஊற்று மூலமாக உள்ளது. இதை இலக்கிய சந்திப்பில் ஜெயபாலனின் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய நித்தியானந்தனும் ஜெயபாலனும் பரிமாறிக் கொண்ட பதிவான செய்தியில் இருந்து பார்ப்போம்.

நித்தியாணந்தன் யெயபாலனை காட்டுமிராண்டி மனுசன் எனக் கூறி அழுவான், புலம்புவான், என்ன செய்வான் எனத்தெரியாத காட்டுமிராண்டி எனப் பலவாக கூற, ஜெயபாலன் நித்தியை ரத்வத்தைக்கு ஒப்பிட்டு பொய்யான் என்றார்.

இவர்களின் தனிமனித மற்றும் அரசியல் பண்புகளை அவர்களே புட்டுவைத்த உண்மையின் தொடர்ச்சியில் நாம் ஜெயபாலனின் பிழைப்புப் தனத்ததைக் காணமுடியும். நாம் இதைக் கூறுவதை விட என்ன பேசி புலம்பினார் என்பதை கசெட்டுகளில் ஆழமாக பதியப்பட்டு உள்ளது. எம்மைப் பார்த்து அண்ணனுக்காக வக்காளத்து வாங்குவதை விடுத்து அரசியல் ரீதியில் பிரச்சனைகளை ஆராய்யவேண்டும்.

இந்த இடத்தில் நாம் ஜெயபாலனை அரசியல் ரீதியாக மட்டும்தான் விமர்சிக்கின்றோம். இலங்கையில் மிகச் சிறந்த கவிஞ்ஞர்க்குள் குறிப்பிடக் கூடியவர். பலர் தம்மைத் தாம் கவிஞ்ஞர், சிறு கதை எழுத்தாளர் எனப் போட்டுத் திரியும் புரட்சியின் வரிசையில் அல்லாது ஜெயபாலன் தரமிக்க பூர்ஷ்வா வர்க்க கவிஞராக உள்ளார். கவிதையில் அவரின் பூர்ஷ்சுவா தனத்தை விமர்சிக்கும் போது, ஒடுக்கப்பட்ட பாட்டாளி சார்பாக நின்று விமர்சிக்கின்றோம். இது கவிதையின் தரத்தை மறுத்துவிடவில்லை. சிலர் தனிப்பட்ட முரண்பாடக விமர்சனங்களை காட்டிவிடுகின்றனர். ஜெயபாலனுக்கும் எமக்கும் என்ன குடும்பச் சண்டையா உண்டு?. இல்லை. மாறாக மக்களைப் பற்றிய செயல் தளத்தில் எந்த வர்க்கம் சார்ந்து எப்படி போராடுவது என்பதே எமது பிரச்சனையாகும். இதில் தனிமனித செயல் பாடுகள் எப்படி அரசியல் உடன் இனைகின்றது என்பது ஆய்வுக்குள்ளாகின்றது. புலிகளில் மாற்றம் நிகழ்ந்ததாக ஜெயபாலன் கூறியதை நாம் விமர்சிக்கும் போது ஒருக்காலும் அவரை புலியாக அடையாளப்படுத்தியதில்லை. அதவாது துரோக இயக்கங்களை அரசின் கைக் கூலி என்கிற போது ஒருக்காலும் இரண்டையும் ஒன்றாக அடையாளப்படுத்துவதில்லை. அவர்களுக்கிடையில் முரண்பாடுகளும் நலன்களும் வேறுபாடு காணப்படுகின்றது. சில விடையங்களில் ஒத்துழைப்பு தனித்து செய்ய முடியாத போக்கில், ஒத்த வர்க்க நலன்களால் சமூக முரண்பாட்டின் எழுச்சியுடன் போராட்டத்துடன் நடக்கின்றது. ஜெயபாலனை புலியென கூறுவதோ, கவிஞ்ஞன் அல்ல எனக் கூறுவது அரசியல் அடிப்படை அற்ற விடையமாகும். இவைகள் மீதான எந்த காற்புமற்ற எமது நிலையில் ஊன்றிநின்றபடிதான் அவரின் அரசியலை விமர்சிக்கின்றோம். இப்படித் தான் நாம் புலிகளை பார்க்கின்றோம். இதற்கு வெளியில் அல்ல.

அடுத்து ஜெயபாலன் கிழக்குமாகாணத்தில் யதார்த்தம் தெரிய மண்ணில் கால்பதித்து நிற்க்கின்றார் அதுவும் மக்களுக்குள். அதுவும் புலிகளின் திருந்திய தளத்தில், இது ஒருபுறம். மறுபுறம் கிழக்கு மாகாணத்தில் மக்களுக்குள் புலிகளின் அனுமதியுடன் சென்று வர எப்படி பணம் வந்தது.

நோர்வையில் கைவலியுடன் விறைத்துப் போக  மீன் கீறி வியர்வை சிந்த உழைத்த பணத்திலோ, அல்லது ஐரோப்பாவில் வீதிகூட்டிய, கோப்பை கழுவிய பணத்திலோ மக்களுக்காக சேவை செய்ய நாடுதிரும்பி யதார்த்தம் கண்டு சேவை செய்ய ஜெயபாலன் ஒன்றும் முட்டாளல்ல. நோர்வைய (ஏகாதிபத்தியம்) அரசு பணம் கொடுக்க, நோர்வைய மற்றும் அரசுகளுக்கு தேவைப்படும் தகவலைத் திரட்டிக் கொடுக்க யதார்த்த களம் கண்டு கிழக்கில் நிற்பதை  கேள்வி கேட்க்க முடியாத  முட்டாள்கள் நம்பலாம் மக்கள் சேவையென்று நம்பக் கோருவார்கள்.

இந்நிலையில் புலிக்காக வக்காளத்து வாங்கியதை விமர்சித்த எம் நிலையால் "குசநந வழ ளூழழவ" நிலைமைக்கு ஆளாகியுள்ளதாக எம்மீது குற்றம்சாட்டி சரிநிகர் சமமாக மதித்து பிரசுரித்ததில் இதை மேலும் அதிகரிக்க வைத்துள்ளது என்கிறார்.

சரிநிகர் சமருக்கும் அதன் எழுத்தாளருக்கும் மார்க்சியத்தை உயர்த்துவதால் கருத்துச் சுதந்திரத்தை மறுத்து வருகின்றது. அப்படியிருக்க எமது கட்டுரை பிரசுரிக்காமலே எம்மீது குற்றம் சாட்டுவதுதான் வேடிக்கை. அடுத்து இப்படிக் கூறுவதன் மூலம் ஜெயபாலனின் கண்டுபிடிப்புகள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக மாற்றிவிட முனைகின்றனர்.

ஜெயபாலனை காட்டிக் கொடுத்து சுடும் நிலைக்குள் நகர்த்தி உள்ளதாக கூறுவதன் மூலம், தமது நாய்ப் பிழைப்பை பாதுகாக்க முனைவதாகும்.

நாம்தான் காட்டிக் கொடுத்தோமா? இப்படி கூறும் போலி ரொக்சிய கோட்பாட்டாளருக்கு எப்படி முடிகிறது.

இலக்கியச் சந்திப்பில் மதவாதிகள், புலிகள், சிங்கள இனவாதிகள், துரோகிகள் உள்ளிட ஏகாதிபத்திய ஒற்றர்கள் ஈறாக கலந்து கொள்ளும் கொள்ளக் கூடிய கோட்பாடற்ற கதம்ப புலம்பல் இடமாய்யுள்ளது. அண்மையில் பிராங்போட்டில் இந்த ஸ்பாட்டஸ்தாசன் நடத்திய திருவிழா இலக்கியச் சந்திப்பு ரொக்சிய கோட்பாடல்ல, ஏகாதிபத்திய எல்லை வரை திறந்து வைத்துதான் விபச்சாரம் செய்யும் போது விமர்சித்த எம்மால்தான்  ஏய்ட்ஸ் வந்தது என்று  நம்பக் கோருகின்றனர்.

இப்படியிருக்க நாம் காட்டிக் கொடுத்தோம் என்ற அவதூறான பொய்களில் முகிழ்ந்து, அதனூடாக புலிகள் மீதான மாயையை விதைத்து செந்தாமரை இயக்கம் ஒன்றை தொடங்க முன்னோடியாக இவை விமர்சிக்கும் உரிமை மீது காட்டிக் கொடுத்தல் என முத்திரை குத்தி தமது விபச்சாரத்தை மறைக்க முனைகின்றனர்.

விடுதலைப்புலிகள் தனிப்பட்ட ரீதியில் தனிநபர்கள் உடன் அண்மைக் காலமாக அணுகிக்கொள்ளும் அணுகு முறைகளைக் கொண்டு பலர் புலிகளில் மாற்றம் நிகழ்துள்ளதாக கருத்துரைக்கின்றனர். நாம் இதை விமர்சிக்கும் போது புலிகள் மீதான தனிமனித புலி எதிர்ப்பு கோசங்களில் இருந்து அல்ல மாறாக மக்களின் பொதுவான போராட்ட நிலைகளில் நின்றுதான் பார்க்கின்றோம். புலிகள் தம்மை மாற்றும் பட்சத்தில் எமக்கு இருக்க கூடிய மாற்று அரசியலுக்கு அப்பால் புலிக்காக உரத்து குரல்கொடுப்பவராக இருப்போம். புலிகள் தம்மை மாற்றிக் கொள்ளாத எல்லா போக்குகளும் நீடிக்கும் வரை மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை சிதைக்கும் எல்லா முயற்சிகளையும் எதிர்த்து குரல் கொடுத்தோம் குரல்கொடுக்கின்றோம். இந்நிலையிலும் புலிகளை மக்கள் அல்லாத எந்தப் பிரிவுகளும் அழிக்க, சேறுயடிக்க முனையும் போது எதிர்த்து குரல்கொடுத்தோம் குரல்கொடுப்போம். புலிகளில் மாற்றம் நடக்க வேண்டுமாயின் அது அரசியலில் நடக்க வேண்டும். இது கடந்தகால தவறுகளை சுயவிமர்சனமாக பார்க்கவேண்டும். அதற்கான நிவாரணங்களை தொடங்குவதில் நம்பிக்கையூட்டவேண்டும். இது ஒரு போக்காக வளரவேண்டும்.

இந்த நிலைகளில் எல்லோரையும் விட உறுதியாக ஆதரிப்பவர்களில் நாம் முதன்மையானவராக இருப்போம். ஏன்னெனின் மக்களின் பிரச்சினையை பிரமுகத்தனத்துக்கோ, வம்பளப்புக்கோ, பொழுதுபோக்குக்கோ, சுயயின்பத்துக்கோ பயன்படுத்துவதை நாம் வெறுத்து  மக்களின் துயரங்களின் விடிவுக்காக உண்மையாக இருக்கவிரும்புகின்றோம்.

அடுத்து முஸ்லீம் மக்கள் பற்றிய ஜெயபாலனின் அக்கறையும், அதையொட்டிய பார்வைகளும், ஜெயபாலனை உயர்த்திப் பிடிக்கும் ஆர்பாட்டங்களும் வரலாற்றில் மிகச்சரியாக விமர்சிக்கப்படும்.

முஸ்லீம்மக்கள் பற்றிய சரியான ஆய்வைசெய்யவும், முஸ்லீம் மக்களை குத்தகைகக்கு எடுத்து பிழைப்பவர்களை இனம்கானவும் உருப்படியாக முஸ்லீம் மக்களுக்கும், வெளியிலும் உருப்படியான தலைமுறை உருவாகாதவரை புலம்பித் திரியவும், ஏகாதிபத்திய பணத்தில் அவர்களைப் பற்றி அறிக்கைப் போரும் கவிதை கட்டுரைகளும்தான் சமுதாய நடைமுறையாக காட்டப்படும். குறிப்பாக முஸ்லீம் மக்களுக்குள் மதத்துக்கு வெளியில் வந்து சமூகத்தை பார்ப்பது என்பது இல்லாத இன்றைய நிலையில் முஸ்லீம் மக்கள் தம்மைப்பற்றிய குரல்களைக் கூட ஏமாற்றுப் பேர்வழிகளிடம் விற்றுவிடுவதற்கு மேல் எதுவும் நடக்காது. அன்று இயக்கங்களுக்குள் எப்படியோ அதுபோல் இன்று முஸ்லீம் மக்களுக்குள் புகுந்து அதேபோல் இருந்தபடி பலர் இயக்கத்தையும் மக்களையும் ஏமாற்றி பிழைத்து சீரழித்தனரே அதை இன்று விழிப்புறாத முஸ்லீம் சமூகபிற்போக்குகளை பயன்படுத்தி பிழைத்து நக்குகின்றனர். அந்தமக்களின் விழிப்புணர்ச்சிக்கும், அந்த மக்களின் மீது கட்டிப்போடப்பட்டுள்ள மதப்பிற்போக்குகளுக்கு எதிராக போராடுவதன் மூலம்,  அம்மக்கள் தமது விடுதலையை இனம்கண்டு போராடுவது நிகழ்ந்து விடும் எனக்கருதி அதன் மீதான சமரசத்துடன் வியாபாரம் ஆகாஓகோ எனக் களைகட்டியுள்ளது.

மறுபுறம்  இலங்கை - ஐரோப்பா என ஜெயபாலன் முதல் பலர் சுற்றிவர எப்படி பணம் வருகிறது என்பதை சமூக அக்கறைக்குள் மட்டும்தான் கேள்வி கேட்க்கும் விடையமாக எஞ்சிப் போய்யுள்ளது. இன்று ஐரோப்பாவில் வாழ்பவர்கள் கூட நினைத்த மாத்திரத்தில் எங்கும் செல்ல முடியாத புலம்பெயர் வாழ்வில் உள்ளவர்கள். ஆணால் சுற்றித் திரியும் இவர்களுக்கு எப்படி பணம் வருகிறது என்பது மர்மாக உள்ளது. பின் இவர்களின் செயலை புரட்சியின் பணியென வாதிட பின்நிக்காத அரசியல் விபச்சாரிகள் வேறு இன்று நக்கிப் பிழைக்கின்றனர்.

இதையே சரிநிகரில் "வெளிநாட்டில் ஓரளவு பாதுகாப்புடன் இருந்து கொண்டு கருத்து முதல்வாதத் தன்மையுடன் நாட்டு யதார்த்தத்துடன் தொடர்பற்று, வார்த்தை தீவிரவாதத்தை விதைத்துத் திரியும் POST புரட்சியாளர்கட்கு ஒரு வேண்டுகோள், தலையை மேலே வைத்துக் காலைக் கீழே பதியுங்கள்" என்று கூறி ஏகாதிபத்திய செயல் தளத்தை வரிந்து நியாயப்படுத்தி தாக்குதலை முடிக்கிறனர். இதைப் பார்ப்போம்.

இதை சொல்பவர் வெளிநாட்டில் புரட்சி பேசும் போலி ரொக்சியவாதியான ஜெயபாலனின் தம்பி ஜெயபாலனின் ஏகாதிபத்திய பணத்தில் மண்ணில் கால் பதித்ததை புகழ்ந்து சொல்வதுதான் இதில் வேடிக்கை. இவர் அண்மையில் ஏகாதிபத்திய கயவர்கள்வரை கலந்து கொள்ளும் வகையில் கோட்பாட்டற்ற இலக்கியச் சந்திப்பு வேறு நடத்தியவர். வெளிநாட்டில் இருந்து கதைத்தால் யதார்த்தம் தெரியாத கருத்துமுதல்வாதம் என்கிறார். அருமையிலும் அருமை. ரொக்ச்சி வெளிநாட்டில் திரிந்த போது யதார்த்தம் தெரியாத கருத்துமுதல்வாதியாகவா  திரிந்தவர். ஜெயபாலனின் அரசியல் விபச்சாரத்தை விமர்சித்தால் யதார்த்தம் தெரியாத கருத்துமுதல்வாதி. ஏகாதிபத்திய பணத்தில் மண்ணில் கால்பதித்ததால் யதார்த்தம் தெரிந்த பொருள்முதல்வாதி. இதுதான் ரொக்சியை வைத்து பிழைக்கும் ரொக்சிய பிழைப்பு.

வெளிநாட்டில் ஓரளவு பாதுகாப்புடன் என்று ஓரளவு போட்டபடி புரட்சி கதைக்கின்றீர்கள் என்று கூறிக்கதைக்க வேண்டாம் நாட்டில் கதையுங்கள் என்கின்றார்.

இது அடிக்கடி புலிகள் இடமிருந்து ஒலிக்கும் குரல் அல்லவா. எப்படி இந்த போலி ரொக்சியவாதியிடம் வந்தது. எப்படி கோட்பாடற்ற இலக்கிய கூத்தடிப்பு நடத்தும் இவர்கள் இடம் வந்தது. அண்ணணுக்காக தம்பி, தனது இருத்தலுக்காக கோட்பாடற்ற புலம்பல் நடத்தும் இவர்கள் புலிகளின் பணியில் விமர்சனத்தை தடுக்க, எடுத்து வைக்கும் விடையமாக உள்ளது அவ்வளவே.