Language Selection

சமர் - 25 : 08 - 1999
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இக் கட்டுரை சக்தி இதழ்க்கு பிரசுரிக்க என எழுதப்பட்ட போதும் அவர்கள் கருத்து உடன்பாடு இன்மை கருதி பல பகுதிகளை நீக்கி விட்டனர். அவைகளை உள்ளடக்கி இக் கட்டுரை மீள பிரசுரிக்கின்றோம். உடன்பாடின்மை எது என  தெரிவிக்காத நிலையில், அதை பிரசுரிக்காத நிலையில் என் அனுமதியின்றியும் வெட்டியிருந்தனர். அனேகமாக வெட்டிய பகுதிகள் அஞ்சலியின் பின்னால் ஆணாதிக்கம் மீள அரங்கேற்றிய ஆணாதிக்க ஓழுக்கத்தை அம்பலப்படுத்திய நிலையில் நட்புக்காக அரசியல் சமரசம் காண்பது ஆணாதிக்கத்தை ஓழிக்காது என்பதை சுட்டிக் காட்டவேண்டியுள்ளது.

இவை தொடர்பாக சக்கி ஆசிரியர் குழுவைச் சேர்ந்த நபர் ஒருவர் என்னிடமும், வேறு நண்பர்களிடமும் வெட்டி நீக்கியது தவறு என்பதை எற்றுக் கொண்டார். நான் கற்பழிப்பு என்ற சொற் பதத்தை மட்டும் மாற்ற கருத்து முரண்பாட்டுடன் அனுமதித்து இருந்தேன்.

இன்று கருத்துச் சுதந்திரத்தை வானளவுக்கு உயர்த்தும் பின்நவீனத்துவாதிகளும், அது சார்ந்த கோட்பாட்டளருகளுமே இப்படி வெட்டி கழிப்பதன் பின்னால் உலாவுவது யதார்த்தமாகிவிடுகின்றது.  கருத்துச் சுதந்திரம் என்பது மார்க்சியத்துக்கு எதிராக புரட்சிக்கு பிந்திய சமூதாயத்தில் பாட்டாளி வர்க்கத்துக்கு எதிரான சுரண்டும் ஒடுக்கும் கருத்தை தக்கவைக்கவும், பாதுகாக்கவும் கோருபவர்கள் புரட்சிக்கு முன்னால் பாட்டாளி வர்க்க கருத்தை மறுப்பதும் என அவர்களின்  ஐனநாயக பூச்சு எல்லைப்படுத்தப்படுகின்றது என்பதை சக்தி ஆசிரியார் குழுவுக்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

பாரிசையும், புலம் பெயர் சமூகத்தையும் அதிர்ச்சிக்கும், ஆத்திரத்தக்கும் உள்ளாக்கிய 11 வயது சிறுமி நிதர்ஷினி மீதான கற்பழிப்பு, படுகொலை, கப்பம், கொள்ளையின் பின்  தன்னெழுச்சியாக ஆயிரக்கணக்கில் தமிழ் (கணிசமான பிரஞ்சு மக்களும்) மக்கள் திரண்டு தமது அனுதாபத்தை, அபிராயங்களை வெளிப்படுத்தினர்.

மனிதகுலம் வெக்கி தலைகுனியும் வண்ணம் பாடசாலையால் வந்து பசி தீர்க்க ஆவலாக உண்ண புறப்பட்ட போது, காமப் பாசியால் அலைந்த இரண்டு நாய்களின் (பேட்சன், தியாகரூபன்) உணவாகியது மட்டுமின்றி, அக்குழந்தையை சுவைத்துண்டு வெறிதீர்த்த பின் மின்சார வயரால் கழுத்தை இறுக்கி தமது வழக்கம் போலவே கொலைக் கலாசாரத்தின் அனுபவத்துடன் தடயத்தை அழிக்கும் கைவந்த கலையாக முடித்து வைத்தனர்.

தமிழ் சமூக ஒழுக்க விழுமியங்கள் பெண் குழந்தைகள் மீது மிக கண்டிப்பான வகையில் கடைபிடிக்கும் ஆண்கள் சாhந்த ஆணதிக்கமும், அந்த ஆண் வர்க்கமும் தான் இப் படுகொலைக்கு முழுப் பொறுப்பாகும்.

குற்றவாளிகள்  மிக திட்டமிட்ட வகையில் இயக்க போராட்ட அனுபவத்துடன் இந்த கோராத்தை நடத்தி தப்பியபோது, தற்செயலாக பிடிபட்ட நிலையில், அதன் பாதுகாப்பில் எல்லோரும் குற்றவாளி மீது காறி உமிழ்ந்தார்கள். ஆனால் குற்றவாளி தானாக சமூகத்தில் உருவாவதில்லை. குற்றாவாளியை உருவாக்கு பவர்களே பின்னால் குற்றவாளி மீது கண்டணம் செய்வதன் மூலம் தம்மைப் பாதுகாத்து ஒழித்துக் கொள்கின்றனர்.

பாலியல் வன்முறை எப்படி அவன் முன் இரக்கமின்றி தோன்றுகின்றது? இந்த பாலியல் வக்கிரத்துடன் கொலை வெறி எப்படி அரங்கேறுகின்றது? உழைக்க மறுத்து கொள்ளையடித்து சொகுசாக எப்படி வாழமுடிகின்றது. என்பதை கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.

இந்த கொலை நடந்த அதே வாரம் வெளியாகிய பிரஞ்சு சஞ்சிகையான "ஞருநுளுவுஐழுNளு னுநு குநுஆஆநுளு" (பெண்கள் பற்றிய கேள்விகள்) பத்திரிகையில் பொருத்தமான தலைப்பில் "ஆயுசுஊர்நு னுரு ளுநுஓநு – டுநுளு குநுஆஆநுளு யுருளுளுஐ" (பாலியல் சந்தை - பெண்ணும் கூட) கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது.

பாலியல் என்பது மனிதர்களில் இயல்பானது. இந்த பாலியல் தேவையை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் சமூகம் இருக்காத எல்லா நிலையிலும் ஆண் -பெண்ணுக்கு இடையில் முரண்பாடுகள், வன்முறைகள் இயல்பாகின்றன. இந்த இடைவெளியில் கட்டியமைக்கப்பட்ட ஒழுக்கம் மனித வளர்ச்சிக்கு எதிரானதாக உள்ள போது தனிமனித ஒழுக்க மீறல்கள் சமூகம் மீதான வன்முறையாக வெளிப்படுகின்றது.

இந்த சமூகத்தின் மனித வளர்ச்சியின் இயல்பான பாலியல் தேவை மறுதலிக்கப்பட்டு, இது இடையூறாக மனித வளர்ச்சிக்கு மாறி நலம் அடித்த மனிதர்களை ஆண் - பெண் வேறுபாடின்றி உலகில் விதைக்கப்பட்டு வெம்பிப் போனவைகளை சமூகத்தின் சனநாயக எதிரியாக காட்டிய பின் அறுவடைகளை ஆணாதிக்க முதலாளித்துவ வர்க்கம் சூறையாடுகின்றது.

இந்த வகையில் நலம் அடித்த ஆண் - பெண் சமூகத்தின் முன் பெண் செக்ஸ் பதுமையாக எல்லாத்துறையிலும் மாற்றப்பட்டு விட்டாள். திரைச் சினிமாவில், குழந்தைகள் முன் கொட்டிக் குவிந்துள்ள கம்பியூட்டர் விளையாட்டுகள், கம்பியூட்டரில் ஆண் பெண் உறவை விளையாட்டுப் போல் செய்து ஈடுபட்டு இன்பம் கணுதல், காட்டூன்கள், விளம்பரங்கள், பயன் படுத்தக் கோரும் உடைகள், தொலைக்காட்சி, பொழுது போக்குகள் என திரும்பும் இடமெல்லாம் பெண் மீதான் செக்ஸ் கவர்ச்சியே பின்நவீனத்துவ கோட்பாட்டில் உலகமயமாக்கப்பட்டுள்ளது. இன்று மறுதலையாக பெண்களைக் கவர ஆண்கள் கூட பெண்கள் முன் கவர்ச்சிகரமாக மாற்றப்பட்டு விட்டனர். செக்ஸ் கிளப்புகள், கபரேக்கள், மசாஐ நிலையங்கள், துகில் உரியும் நிலையங்கள் ஆண் - பெண் கூட்டாகவும் தனித்தனியாக அவரவர் ரசனைக்கு ஏற்ப இந்த சனநாயகம் பாதுகாக்கின்றது.

ஆணாதிக்க ஆண் முன் இந்த கவர்ச்சிகரமான வியாபார ரசனை மோசமான பண்பியல் பாய்ச்சலை, தனிநபர் ஒழுக்க மீறல்களை அரங்கேற்றுகின்றது. அப்போதுதான் இது சட்டத்தின் முன் மாபெரும் குற்றமாக, ஆணாதிக்க ஒழுக்கத்தின் முன் அத்து மீறலாக வடிவம் பெறுகின்றது.

பால்மணம் மாற தமிழ் சிறுமியின் மீது   தமிழ் ஆணாதிக்க ஒழுங்கு மீறல் மூலம் வன்முறையைக் கையாண்ட தமிழ் காமுகன் எப்படி உருவாக்கப்படுகின்றான். இதுவல்லவா எதிர்காலத்தில் சிறுமிகள் மட்டுமல்ல, பெண்கள் மீதான பாலியல் வன்முறையை தடுக்க போராடமுடியும்.

தமழில, ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என சாதரண உலகம், கடந்தகால இலக்கியத்தின் உவமைகள் உடன் பெண்ணை ஆணின் பாதுமையாக காட்டவே செய்கின்றன. பெண் ஆண் போல் ஓர் உயிர் என்பதை ஏற்க்க மறுத்து ஆணின் நுகர்வுக்கும், போகத்துக்கும், ஆணின் கடமைக்கும் மட்டுமே ஆண்டவனான ஆண்டவன் படைத்தான் என்பதன் மூலம், பெண்கள் கணவன் என்ற ஆணின் முன் செக்ஸ் பண்டமாக மட்டும் இருக்க கோரும் ஒழுக்கவியல், மற்றைய ஆண்கள் முன்னும் நுகர்வுக்குரிய பொருள்தான். இந்த ஆணாதிக்க ஒழுங்கைக் கட்டிக் காக்கும் திருமணச் சடங்கு மந்திரமே எப்படி பெண் மீதான கற்பழிப்பை செய்கிறது எனப் பார்ப்போம். சமஸ்கிருத மந்திரத்தின் ஒரு பகுதியில் பெண்ணை நோக்கி  "நீ இதுவரை இந்திரனுக்கு ஒருநாள் மனைவியாக, பின் தேவர்கள் அனைவருக்கும் மனைவியாகி பின் எனக்கு மனைவியாகி இப் பொழுது நான் உன்னை இவனுக்கு மனைவியாக்குகிறேன்"4 என்கின்ற போது பெண் பண்டமாக, இறுதியில் ஓர் ஆணின் வக்கிர செக்ஸ் தேவையை ப+ர்த்தி செய்யும் உயிரற்ற ஐடம்தான்.  படத்தில் முகம் பார்த்த திருமணங்கள், பெண்ணைப் பார்த்த திருமணங்கள்  ஓர் ஆணை ப+ர்த்தி செய்வதையே நோக்கியுள்ளது. புலம் பெயர் சமூகத்தில்  கணிசமான கனடா இளைஞர்கள் தமது மணைவியை, குழந்தையை கனடாவில் விட்டுவிட்டு இந்தியா சென்று தமது உல்லாசத்தை எப்படி கழிக்கின்றனர் எனப் பார்ப்போம். தாம் திருமணம் செய்ய வந்தாக கூறி கன்னிகழியா இளம் பெண்களை சீதனத்துடன் பெற்று, அவர்கள் பணத்தில் ஒருமாதம் சம்மதத்துடன் கற்பழித்து நடுரோட்டில் பிள்ளையுடன் விட்டுச் செல்வது வாடிக்கையாக உள்ளது. கம்பூச்சியாவில் பயங்கர கொலைகாரன் என்று ஏகாதிபத்தியம் கூறிய பொல்போட்டை ஒடுக்கி சமாதானம் காணச் சென்ற அமெரிக்க தியாக வீரர்கள் கன்னிகழியாத இளம் பெண்ணை 50000 ரூபாவுக்கு பணம் கொடுத்தே வாங்கமுடிந்தது. யூத மூளை என்பதாலோ என்னவோ பணம் வாங்கி, கொழுத்த விருந்துடன் உல்லாச பயணம் செய்யும் தமிழன் மூளை அல்லாவோ மூளை! இங்கு ஒரு பெண் தனது திருமணத்தில் அவள் சம்மதத்துடன் எப்படி கற்பழிக்கப்படுகின்றாள் என்பதை காட்டுகின்றது. இங்கு ஏமாற்றுவது மட்டும்தான் நிகழ்ச்சியில் வேறுபடுகின்றது. அதைத் தாண்டி எந்த விளக்கத்தையும் தங்கை என்பதாலோ, அக்கா என்பதலோ மாறிவிடுவதில்லை. அக்கா, தங்கை என பல வகையில் விளித்தல் கூட தப்பு நடந்து விடும் என்ற ஒழுக்கத்தை பாதுகாக்கத்தான்.

இன்று உயர்ந்த கலை படைப்பாளி எனப் பலர் புகழ்ந்து பிழைக்க, தமிழ்  சினிமாவில் கதாநயாகி முதல் அனைத்துப் பெண்களின் தெரிவு, காட்சி, காட்சி படிமங்கள், வசனங்கள், பாடல்கள் .. என அனைத்தும் பெண் மீதான கவர்ச்சியை வைத்து சினிமா வாக்கி ஆணாதிக்க சமூகம் முன் காட்சிப் படுத்தப்படும் போது, அதனால் உணர்ச்சி வயப்பட்ட ஒரு நபர் சமூகமீறலை செய்து சமூக ஒழுக்கத்தை மறுத்து காமுகனாகி பெண்ணை குதறும் போது, எப்படி அவன் மட்டும் குற்றவாளியாக கணமுடியும். இந்த சினிமாவைத் தயாரித்த, அதைப் போற்றும், அதில் கலை அம்சத்தை மெச்சி பாதுகாக்கும்,.. என அனைவரும் தான் முதல் குற்றவாளிகள். அதன் பின் இதில் ஈடுபட்டவன் குற்றவாளியாகின்றான். ஆனால் வழக்கில் எதிர்மறையே எப்போதும் உள்ளதுடன் தூண்டியவன் இந்த அமைப்பின் காவலன் ஆகின்றான்.

இன்று வெகு விமர்சையாக நடத்தும் அரங்கேற்றங்கள் எப்படி பாலியல் தூண்டுவதையே அடிப்படையாக கொண்டுள்ளது எனப் பார்ப்போம். இசை, ஆடுவது எல்லாம் மனிதன் உழைத்துவிட்டு அதன் களைப்பை போக்க, தமது துயரங்களை மறக்க தன்னியல்பில் தமக்குள் உருவானவை என்பதை மறுத்து, நடனங்கள் ஆடிக் காட்டுவதற்க்காக, அதை இரசிப்பதற்காக பெண்கள் பல விதத்தில் அலங்கரித்து அரங்கேற்றப் படுகின்றனர். அதவாது மொடலிஸ்ற் எதை செய்கின்றாளோ, அதே போன்ற வாழ்க்கையில் எந்த விதத்திலும் நடனத்தை, இசையைப் பயன் படுத்தாத வகையில் அரங்கேறும் அரங்கேற்றங்கள், பெண்ணை  ஆணதிக்க சமூகம் முன் இரசிப்புக்காக, கவர்ச்சிக்காக அரங்கேற்றுவதன் மூலம், அப்பெண் பல ஆண்களின் கனவுக் கன்னியாக, அதே நேரம் நினைவில் கற்பழிக்கப்பட்டு, சந்தர்ப்பம் கிடைத்தால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக கூடிய வகையில் அரங்கேற்றம் செக்ஸ் பதுமைகளை சமூகம் மீது கவர்ச்சியாக்கிவிடுகின்றது. அரங்கேற்றம் பழைய நிலப்பிரபுத்துவ கால மன்னர்கள் முன், நிலப்பிரபுக்கள் முன் பெண்ணை ஆடவிட்டு பெண்ணை அவர்களின் வைப்பாட்டியாக மாற்றிய தொடர்ச்சியில் தான் உருவானது. ஆனால் இந்த போக்கு முடிவுக்கு வந்தாலும் ஏகாதித்தியம் நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் என பழையதை மறுத்து புதியதை கோரும் பின்நவீனத்துவ உலகமயமாதலில் ஆண்களுக்கு விளம்பரமாக, கவாச்சி நாயகியாக, அப் பெண், ஆணாதிக்க வாதிகளால் மனதிலும், படத்திலும் கற்பழிக்கப்பட  மட்டுமே அரங்கேற்றம் நீடிக்கின்றது.

இதுபோல்தான் சமத்தியசடங்குகளும் நடக்கின்றன. ஒரு பெண் ஆணிண் ரசணைக்கும், மனதில் கற்பழிக்கவும் பிள்ளைபெற தயாராக பெண் உறுப்புகள் வளர்ச்சி பெற்று விட்டது என்பதை பாறை சாற்றும் வகையில் மட்டும் சடங்குகள் என்ற பெயரால் நடத்தப்படும் கேவலங்கள், ஆணாதிக்க சமூகம் முன் அப்பெண் கூர்மையான பார்வைக்குள்ளாக்கப்படுகின்றாள். ஏன் கொல்லாப்பட்ட அக் குழந்தையின் சமத்திய சடங்கு மிக அண்மையில் தான் பெரிதாக கொண்டாடியதாக அறியும் போது, குற்றவாளிகளுடன் இருந்த சட்டத்துக்கு புறம்பான கொடுக்கல் வாங்கலுடன் பெற்றோரின் முன் தொடர்பு, சமர்த்திய சடங்கு மூலம் பிளளையை வித்து பணம் வறுகும் பெற்றோரின் அழைப்புக்கு உட்பட்டு இருக்கும் வாய்ப்கள் இருக்கும் என ஊகிக்க முடிகின்றது. இறந்த நிதர்ஷினியின் பெயரில் எழுதிய கவிதையில் ஆணாதிக்கம் கொப்பாளிக்கும் வரிகளைப் பாhப்போம். "..கரும்பே, கற்கண்டே, என்று - என்னை ஆரத் தழுவி - பாசம் சொறிந்து - வாழ்த்துக்கள் கூறி - மாதம் எட்டுகூட ஆகவில்லை"1 என்று மீளவும் இச் சமூகம் முன், மீள அக் குழந்தையை கற்பழித்தை இது (என்ன எட்டு மாதம்) காட்டவில்லையா?  அக்குழந்தை மீதான ஆர்வத்தை, துண்டுதலை பொறுப்பற்ற ஆணாதிக்க பெற்றோர்கள் தமது பொறுப்புணர்ச்சியற்ற போக்குகளால் ஊக்குவித்தனர் ஊக்குவிக்கின்றனர். ஒரு பெண் தனது இறந்த முட்டையை வெளியேற்றுவது என்பது இயல்பானது. ஆனால் அந்த இயற்க்கையின் வளர்ச்சி மாற்றத்தை விற்பதிலும் பாதுகாப்பதிலும் சமூக சடங்குகள் என்ற பெயரில் பணச் சடங்கு நடத்தும் சீராழிவுகள் பெண் குழந்தைகளை சுதந்திரமாக இந்த ஆணாதிக்க உலகில் நடமாடவிடாது  ஆண்கள் முன் வெட்கிப் போய் வன்முறைக்கு பலியிட தயாரான ஆடுகளாக நடமாவிடுகின்றனர் இந்த கேடுகெட்ட சமூகம்.

நாடகம், கதை, கவிதை, ஓவியம் ... என இலக்கியத்தில் பெண் வருணிப்பு என்பது ஆண்முன் கிளர்ச்சியை ஏற்படுத்தும் உளவியலாக உருப்பெறுகின்றது. இதன் வெளிப்பாட்டை நடைமுறைப்படுத்தும் ஒருவனை குற்றவாளியாக காட்டி துண்டுப்பிரசுரம், அனுதாப அஞ்சலிகள் குவிப்பதால் இந்த உணர்ச்சிசை தூண்டும் போதைகளை மறைமுகமாக பாதுகாக்கின்றனர். போதை மனிதனை மெய் மறக்கச் செய்கின்ற போது சமூகத்தை கட்டுடைத்து ஒழுக்கத்தை  மீறிய குற்றத்தை தூண்டியதே, போதையே ஒழிய தனிப்பட்ட அவன் அல்ல. யாரும் கற்பழிப்பதற்காக பிறப்பதில்லை. சமூகம் தான் குற்றவாளிகளை உருவாக்கின்றது. அது ஒருசிலர் மீது கட்டுப்படுத்த முடியாத வெறியாக வளர்ந்து விடும் போது திட்டமிட்ட வகையில் அதை அனுபவிக்க தொடங்கின்றது.

சமூகத்தை புரட்டிப் போடப் போவதாக கூச்சலில் ஈடுபடும் பின்நவீனத்துவ வாதிகள் கூட அண்மையில் எக்ஸில் 5 இல் பிரஞ்சில் கவிதை எழுதுவதாக கூறப்படுபவரும், புகலிட சிறந்த சிறு கதை எழுத்தளார் (என உப்புச் சாப்பு இன்றி புகழ்பவர்கள்) தனது பெயரை மறைத்து "ஜெயந்தீஸ்சன்" என்ற புணைபெயரில் தனது ஆசையை நண்பியிடம் கூறி நண்பிகள் உடன் கூட்டுக் கலவி செய்ய வேண்டும்  எனக் கூறி பலவித ஆசைகள் ஐடியாக்களும் (நிதர்ஷினி மீது அந்த வன்முறைகள் குதறிய போது இரண்டு மிருகத்தின் கூட்டு கலவியின் ஐடியாக்களை இந்த எழுத்துக்கள் போன்றவைதான் தான் துண்டியதோ?) மின்னிப் பொறித்தன என தனது வக்கிரத்தை கொட்டுகிறார். இது போல் இருண்ட |இருள் வெளி| மலரில் அரவிந் அப்பாதுரை ஒரு பெண் சினிமா பற்றிய புத்தகம் பார்த்து ரஐனி, கமல்,..என போட்டோ பார்த்து பக்கத்து அறையில் இருந்தவர்கள் உடன் உறவு கொள்ள ஆசைப்பாட்டாள் என்கின்றார். இது போல் பக்கத்து அறையில் இருந்த மூவருடன் உறவு கொள்ள எண்ணினால் அதையே கற்பழிப்பாக நடத்தினால், செய்ய ஆசைப்பாட்டால் இலக்கியமோ? கனடா நாட்டில் ஒரு பெண்ணிலைவாதியுடன் உறவு கொண்டது போல் பாவனை செய்து எழுதிய எழுத்தாளரை கற்பழித்த குற்றச் சாட்டில் கம்பிகளை எண்ண வைத்தது. இதே போல் எக்சில் -2 இல் பெண்கள் தன் மார்பை இந்தாபிடி இந்தாபிடி என திரிபவர்கள் என சுகன் எழுதியதும், அதை அம்மாவில் சேனன் போற்றியதையும் (இதற்க்கு சுகன் தண்ணிர் அடிக்க 100 பிராங் வழங்கினார்) பார்க்கின்றோம். ஏன் இதை பிரசுரித்தோர், இதைப் போற்றுவோர் தமது மணவியுடனோ, தமது தங்கையுடனோ, அல்லது அப் பெண் தனியாகவோ, வேறு பெண்களோ போகும் போது இதை வாசித்து இதை சரியென ஏற்ற அல்லது உணர்ச்சி வயப்பட்ட ஒருவன் பெண்கள் தங்கள் மாhபை இந்தாபிடி இந்தாபிடி என பிடிக்க திரிபவர்கள் என பின்நவீனத்துவ தத்துவப்படி  பிடித்தால, பிடித்தவனை ஆணாதிக்கவாதி என கூறி களுவில் ஏற்ற பின் நிற்க மாட்டார் எழுதி பிரசுரித்தவர்கள் ஈறாக. ஆனால் உண்மையான குற்றவாளி யார்? இதை எழுதி தூண்டிவர்களே என்பது மறைக்கப்பட்டு, இலக்கிய இரசணையால், ஊர் உலகத்தில் இல்லாதையா எழுதினோம் என்றும், கட்டுடைப்பு இப்படித்தான், கவிழ்த்துப் போடால் இதுதான், ஒழுங்கு மீறலின் உண்ணதமான படைப்பு என பலவாக கூறி குற்றத்தைத் தூண்டியவன் தப்பிவிடுகின்றன். இதைத் தான் நடைமுறையில் குற்றவாளி ஊர் உலகத்தில் இல்லாததையா என்று நடைமுறைப்படுத்தினான் என்பதை மறுக்க முடியாது. இலக்கியம் வேறு நடைமுறை வேறு அல்ல இந்த உலகத்தில் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

இதற்க்கு உண்மைச் சம்பவம் ஒன்றை சுட்டுவது அவசியம். யாழ் பல்கலைக்கழகத்தில் 1985 இல் நடந்த ரக்கிங்கை தொடர்ந்து அதில் பெண்கள் பற்றியும், ஒரு குறித்த பெண்ணை சுட்டியும், அப் பெண்ணின் மார்பு பற்றிய வருணையால் உந்தப்பட்ட இரண்டாம் வருட மாணவன் முதலாம் வருட பெண்ணின் மார்ர்பை சிலர் முன் பிடித்தான். இதனால் அவமானப்பட்ட பெண் அன்றில் இருந்து தனது படிப்பை தொடராத மன நோயயாளியாக சமூகத்தில் இருந்து அன்னியப்பட்டாள். இந்தச் சம்பவம் தெரிந்தவர்கள் மறைக்க, தெரிந்த நிர்வாகம் முடிமறைத்த நிலையில் என்முன் சில பெண்கள் இதை கூறினர். இதை அடுத்து உடனடியாகவே பகிஸ்ப்புக்கு அழைப்பு விடுத்து ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கவே பல்கலைக்கழக மானம் காப்பாற்ற விழுந்தடித்துவந்த நிர்வாகம் உடனடியாகவே அம் மணவனை மூன்று வருடம் பாடசாலையில் இருந்து நீக்கியது. இருந்த போதும் உண்மையான குற்றவாளி அவனை தூண்டிய வக்கிரங்களே என்பதுதான் யதாhத்த உண்மையாகும். தூண்டிய குற்றவாளிகள் இன்று பேரசியர்களாக, ஆசிரியர்களாக, சமூகத்தின் முன்னோடியாக சமூகத்தை வழிகாட்டுகின்றனர். இதைத்தான் சிலர் சமூக மாற்ற இலக்கியமாக இதையே செய்ய தமது ஆணாதிக்க வக்கிரத்துடன் எழுதியும், பராட்டியும், பிரசுரித்தும் அங்கலாய்க்கின்றனர்.

1995 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட பெண்கள் கூறி நான் தனியாக விநியோகித்த துண்டு பிரசுரத்தில் "ஒரு மணவியின் மேலாடைகளை அவள் எவ்வாறு  கண்ணாடி முன்நின்று களற்றுவாள் என்று அவள் முன்னாலே லேசாகவே பேசும் நீங்கள் உங்கள் தங்கையின் மேலாடை களற்றப்படுவதைப் பற்றி யராவது பேசினால் என்ன செய்வீர்கள்?"| எனக் கேட்டு "கிராமிய நிலப்பிரபுத்துவப் பண்பாடு பெண்களை அடிமைகளாகக் கருதுகின்றது. முதலாளித்துவ பண்பாடு அவர்களை சந்தைப் பொருட்களாகப் பார்க்கிறது. உங்கள் றாக்கிங் கேள்விகள் ச(ந்)தைப் பொருட்களாகவும், அடிமைகளாகவும்கருதும் கலப்பான பிற்போக்குத் தனத்தின் வெளிப்பாடேயன்றி வேறல்ல. உங்கள் கேள்விகள் பெண்கள் பற்றிய ஏகாதிபத்தியங்களின் காமவிகாரப் பண்பாட்டுப் பிரச்சாரங்களில் இருந்து பெற்ற வக்கிரமான மன உணர்வுடன் வெளிப்படுகிறதே அன்றி,.. ..கலாசார பண்பாட்டு அம்சங்கள் பல (தமழ், ஆங்கிலம்) திரைப்படங்கள், சஞ்சிகைகள் மூலமாக அறிமுகமாகும் ஏமாற்ற கலை வடிவங்கள் மக்களை வெறியர்களாக்கி சீராழிவுப் பாதையில் இட்டுச் செல்லும் நோக்குடன்.." என எழுதப்பட்ட துண்டுப் பிரசுரத்தை விநியோகித்த போது எனக்கு மனநோய் என துண்டு பிரசுரம் போட்டு பாத்திரிகையில் பிரசுரித்தனர். அதையே நன்னி நன்னி போராடியதாக கூறி மீளவும் அதே நோக்கத்துக்காக கல்வெட்டு அடித்தார் ஷோபாசக்தி. பெண்கள் மீதான ஊற்று மூலத்தை பாதுகாக்கும் ஏகாதிபத்திய பண்பாட்டை இன்று இலக்கியமாக தமது ஆணாதிக்க வக்கிரத்துடன் வெளிப்படுவது ஒன்றும் ஆச்சரியாமனது அல்ல. அதைப் போற்றுவோர், அதை வெளியிடுவோர் என அனைவரும் இச் சமூகத்தின் குற்றவாளிகளே.

ஏன் விடுதலைப் போராட்டத்தை குத்தகைக்கு எடுத்த புலிகள் ஆணாதிக்க ஓழுக்க மரபை பாதுகாக்கும் போராட்டத்தின் தொடர்ச்சியில், வீதிகளில் பெண்கள் மீது பகிடி விடுவோரை, தமது கட்டுப்பாட்டை மீறுவோரை கட்டுப்படுத்த தமது அடியாட்படையாக இந்த பாலியல் வன்முறைக் கொலைகாரரை வைத்து தாக்குதலை நடத்திய நிகழ்வால் தான் பாரிஸ் ஈழமுரசு 16.2.1999 இல் "புல்லுரிவிகள்" என ஆசிரியர் தலையங்கம் எழுதியதன் மூலம், மெதுவாக நாழுவ முயன்ற போதும், குற்றவாளிகளின் பெயரை வெளியிடாது (பிரஞ்சு தொலைக் காட்சி பெயரை வெளியிட்டு இருந்தது) கரைபகுதியைச் சேர்ந்தவர் என்று போட்டது.  மக்களிடம் இருந்தெழுந்த "ஏன் பெயர் போடவில்லை" என்ற கேள்வியால் அடுத்த இதழிலில் பெயரை குறிப்பிடுகின்றனர். இந்த கரை பகுதியைச் சேர்ந்தவர் (ஊரின் பெயர் பாவிக்காது) என்பது சாதி பெயராகி புதிய சச்சையாகி அடுத்த நாள் மன்னிப்பு கோருகின்றனர். தாம் எப்படி தமது அடவாடித்தனங்களுக்கு இயக்கத்தினுள் வைத்து குற்றவாளிகளை பயன்படுத்தி சேவை பெற்று வளர்ந்ததை சுயவிமர்சனம் செய்து போராட்டத்தை தூய்மைப்படுத்த வேண்டிய பொறுப்பான பணியை  கைவிட்டு, யார் அவன் என்பது முதல் பெயரை மறைத்து, ஊரை மறைத்தன் மூலம் குற்றவாளிகளின் ஊற்று மூலத்தை தொடர்ந்து திறந்தே வைத்துள்ளனர்.

குற்றவாளி ஊரில் இயக்கத்தில் இருந்து விட்டு ஏன் வந்தார், இந்த மாதிரி கொடூரமான கொலைகளை செய்ய இலங்கையில் சனநயகத்தை மறுத்த போராட்டமா காரணம், அங்கு தண்டனை பெற்றவரா, பின் எப்படி மீள இயக்கத்துடன் இயங்க முடிந்தது, புலிகளின் நிதி சேகரிப்பில் தனிப்பட்ட முறையிலும் பணம் சேர்த்தரா, பல பெண்களை மிரட்டி பாலியல் வன் முறைக்கு உள்ளாக்கி அதை படமாக்கி மீள மீள பயன் படுத்தியது, வேறு பெண்கள் மீதான கொலைகள் என மக்களால் கேட்கப்படும் பேசப் படும் இது போன்ற பல விடையங்கள் பற்றி எல்லாம் யுத்த ஆய்வு போல் புலிகள் செய்து குற்றவாளிகள் உருவாகும் ஊற்று மூலத்தை கண்டறிவதன் மூலம் தமிழ் மக்களின் நம்பிக்கையை அல்லவா ஊட்டியிருக்கவேண்டும். இல்லாது மக்களுக்குள் மக்கள் பேசிய இரகசியமான விடையமாக இது நீடிக்கும் சமூகம் உள்ள வரை குற்றவாளியின் ஊற்று மூலம் எல்லாவற்றிலும் தொடர்வது தவிர்க்கமுடியாது.

இதை வைத்து பிழைக்கும் சனநாயமாக சுதந்திரமாக செய்திவிடுவதாக கதையளந்து குரு ஈழமுரசை அடியொற்றி பாத்திரிகை நடத்துவோர், வானொலி தொலைக்காட்சி நடத்துவோர் எல்லாம் பிணத்தின் மீது உண்மைகளை ஆராயத் தவறி, குற்றவாளி மீது தமது திட்டுதல் ஊடாக, குழந்தையின் பால் முகம் மீது தம்மைத் தாம் மறைத்துக் கொண்டனர்.

பாரீஸ் புத்தக கடையில் விற்கும் வக்கிரமான நீலப் பட புத்தகங்கள் மீதும் அஞ்சலிக் கவிதை பாடி, பாரிஸ் வியபாரநிலையங்களில் விற்பனைக்காக பரப்பியுள்ள இந்திய மலின சஞ்சிகை மீதான கவர்ச்சி பெண்கள் மீது கறுப்புக் கொடி கட்டி துக்கம் பறக்க விட்டதன் மூலம் குற்றவாளிக்கு எதிராக காட்டி சபாஸ் பட்டம் பெற்றுக் கொண்டனர். ஆனால் அக் குற்றவாளி கிளுகிளுப்பூட்டும் எத்தனை நீலப்பட புத்தகத்தை படித்தும், எத்தனை கவர்ச்சி நாயகிகளை வாங்கி கண்டு களித்த வெறியூட்டுதல்கள் ஏற்படுத்திய வக்கிரங்கள் தூண்ட காரணகர்த்தாவாக இருந்த உங்கள் கைகள் சுத்தமானவையாக கறுப்புக் கொடி கட்டினால் மாறிவிடுமோ? இப்படி உருவேற்றப்பட்ட எத்தனை பேர் ஆணாதிக்க ஒழுங்குக்கு பயந்து உணர்ச்சியை அடக்கிய படி அமைதியாக நடமடுவர் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையாகும்.

சிறுவர் மீதான பாலியல் வன்முறைகள், சிறுவரையே உழைக்க வைத்து அதில் சுகம் காண்பது எல்லாம் இந்த ஐனநாயக அமைப்பில் பாதுகாக்கப்படுகின்றது. இது நகாரிகம் அடைந்த முதலாளித்துவ நவீனத்துவ வளர்ச்சியிலும், இன்று உலகமயமாகும் பின் நவீனத்துவ கால ஏகாதிபத்தியத்திய மேற்கு நாடுகளிலும் சிறுவர் மீதான 18 மணிநேர உழைப்பு, சிறுவர் மீதான பாலியல் வன்முறை ஒரு நூற்றாண்டுக்கு முன் மிக கோராமாக இருந்தன. அது சில பண்பியல் மாறுபாட்டுடன் உலகு எங்கும் எல்லா இடத்திலும் உள்ளது.

இந்த வன்முறைகளில் ஈடுபடும் கட்டற்ற ஓழுக்க மீறல் அவர்களின் தனித்த பண்புடன் பிறப்பதில்லை. மாறாக இந்த ஆணாதிக்க சமூகம் உற்பத்தி செய்கின்றது. இந்த குற்றத்தின் பொறுப்பாளிகள் நாம் எல்லோரும் என்பதை உணர்ந்து கொள்வதும் அதை மாற்ற நாம் போராடுவதும் அவசியம். குற்றவாளியை கைது செய்தல், தண்டனையை கொடுத்தல், கண்டன அறிக்கைகள், கறுப்புக் கொடிகள் சிலர் பிழைக்கவும், நாளை மறந்து போகவும் மட்டுமே நடக்கும். இதன் சமூக ஊற்று மூலத்தை கண்டறிவதும், அந்த நோய்யை தீர்க்க போராடுவதுமே இக்கொலைக்கு முன் உள்ள பிரச்சனை. நாளை இன்னுமொரு பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாகாத சமூகத்தை படைக்க போராடாத வரை இது போல் நடப்பதற்க்கு துணைபோகின்றோம் என்பதை மறந்தாலும், மறுத்தாலும் அவர்களும் குற்றவாளிதான்.

இந்த பாலியல் வன்முறைக் கொலை சமூக ரீதியில் பாரிய மற்றத்தை எதிர் நிலையில் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பெண் குழந்தைகள் மீதான கட்டுப்பாடு, அடக்குமுறை அதிகரித்துள்ளது. பெண்குழந்தைகளின் நியமான கேள்விகள் இதை காட்டி மறுக்க நியாயவாதியாக மாறிவிட்டது. இங்கு ஒரு பெண் குழந்தையை மட்டும் அந்த ஆணாதிக்க காமுகர்களும், இதற்கு துணைபோன கவர்ச்சி வியாபாரிகளும் கொத்திக் கிளரி குழந்தையை அலகோலம் செய்து படுகொலை செய்யவில்லை. மாறாக பாரிஸ், புலம் பெயர் சமூகத்தின் எல்லாப் பெண் குழந்தைகளையும் ஆணாதிக்க கொடூரத்துக்குள் சிறைவைக்க அறைகூவல் இட்டு நடைமுறைக்குள் நகர்த்தியுள்ளனர். இந்த பாலியல் வன்முறைக் கொலை அந்த பெண்ணையும் இச் சமூகத்தில் இருந்து மீட்க்கவில்லை, எல்லாப் பெண்களையும் கவனம் என்ற ஆணாதிக்க கொடூர புதிய சிறைக்குள்ளும் இட்டுச் சென்றுள்ளது.

பெண்குழந்தைகள் உள்ள குடும்பங்களில் பழகும் நல்ல நண்பர்களை, தொழில் ரீதியாக தொழில் புரியும் விசா அற்ற தொழில் அற்ற கட்டிடத் தொழிளார்கள் மீது சந்தேகங்கள், சங்கடங்களை விதைத்துச் சென்றுள்ளது. இருக்க கூடிய  குடும்ப பந்த உறவுகள் சிதைய, கூட்டு குடும்பங்கள் சிதைய, குடும்பம் சிதைய முன்னோடியாகியுள்ளது. மனிதர்களின் நல்ல நேச மனப்பான்மை என்பது மேலும் மேலும் சிதைந்து சிதற, பெண் குழந்தைகள் இறுக்கமான கட்டுபாட்டுக்குள் நசுங்க, குற்றவாளியின் மூல காரணத்தை ஆராய மறுத்த இச் சமூகம் புதிய குற்றவாளியை உருவாக்க ஈடுபட்ட குற்றவாளிகள் வழிகாட்டிச் சென்றுள்ளனர்.

குறிப்பு: இக் கட்டுரையின் கீழ் வெளியிட்ட பல அஞ்சலிகள் ஆணாதிக்கத்தை பாதுகாக்கின்ற, அதை புகட்டுகின்ற, அதை இறுக்கின்ற சில மாதிரிகளை மட்டும் இங்கு எடுத்து விமர்சித்துள்ளேன். இது போல் பத்திரிகைகள், வானொலிகள், துண்டுப்பிரசுரங்கள் பலப் பல ஆணாதிக்க வக்கிரத்தை கொட்டியிருந்தனர் தமது அஞ்சலி ஊடாக. அதே நேரம் கடந்தகால சனநாயக விரோத அடக்குமுறைகளை மறைமுகவும், நேரடியாகவும் நியாப்படுத்தியிருந்தனர்.

இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியில் பரிமாறிக்கொண்ட வார்த்தைகளில் "தமிழன் போயும் போய் தமிழிச்சிக்கு செய்யாலமோ" என்பதன் ஊடாக தமிழிச்சி அல்லாத வேறு பெண் (சிங்களப் பெண்) என்றால் எல்லாம் சரி என்ற மாதிரி துடித்து பதைத்து கதைத்தோரை என்ன என்பது.

ஜவ்னா புறிஸ் ஸ்தாபனமும், ரஜித்தாஸ் அழுத்தகமும் எழுதி அஞ்சலிக் கவிதையில் "ஜயோ! அன்னை மடி சுகமறியா அக்கிரமக்காரர்களே! பாலுக்கும் கள்ளுக்கும் பாகுபாடு புரியாதோ?" என்று கண்ணிர் வடிக்கின்றார்கள். அதாவது பால் என்பது குழந்தை, கள் என்பது பெண், கள்ளை நீ ருசித்திருக்கலாம் என்பது அஞ்சலியின் தமிழ் விளக்கம். அத்துடன் அன்னை மடி சுகம் தெரியாதுகள் மட்டமே இப்படி என்று மேலும். எந்த தாயும் ஆணாதிக்கம் போல் அல்லாது தன் குழந்தையை பால் ஊட்டித்தான் வளர்க்கின்றாள். குற்றத்தின் ஊற்று மூலம் ஆணாதிக்க சமூகத்தை பாதுகாக்கும் இச் சமூகம் தானே ஒழிய அதை பெண் மீது வழக்கம் போல் தள்ளி சேறு வீசுவது ஆணதிக்க அபத்தமாகும்.

தமிழ் மக்கள் சேவை செய்ய நடத்தும் வனொலியில் நேயர் உள்ளிட்ட கருத்துப் பரிமற்றத்தில் ஏன் அங்கு இவைக்கு (குற்றவாளிகளுக்கு) அந்தப் பெண்கள் நிற்கிற இடம் தெரியாதோ? எனக் கேட்டு தம்மை மெச்சிக் கொண்டதன் மூலம் விபாச்சாரிகளை கற்பழித்திருக்கலாம் என்று கூறுகின்றனர். இந்த ஆணாதிக்க திமிர்களை என்ன என்பது.

நடந்ததை ஆராயும் காற்சாட்டை போட்ட படித்த  சடங்கு சம்பிரதாயத்தில் தமிழ் பண்பாடு காப்போர் "அவன் ஊரில் எவடம்? அவன் சாதி என்ன? சாதி புத்தியை காட்டுதுகள்? .."என விளக்கம் கொடுத்து தம்மை மெச்சியதுகள் தமக்குள் இது இல்லை என்ற மாதிரி கதையை முடிச்சினம். ஆணாதிக்கம் எல்லா சாதிக்குள்ளும் இருக்கிறது, பாலியல் வன்முறை எல்லாச் சாதிக்குள்ளும் புளுத்துப் போய்யுள்ளது என்பதை மறைத்தபடி தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களை கும்பல் கும்பலாக கற்பழித்து சாதி ஆணாதிக்கத்தை நிறுவிய முத்தகுடிகள் அல்லவா.

எங்கடை மண்ணிலே சிங்களவன் செய்தது, இப்படி தமிழ்க்குள் முடியுமோ என்ற மாதிரி கதைகளும் உலவின. தமிழர் பண்பாடு ஆணதிக்கமற்ற, பாலியல் வன்முறையற்ற உன்னதமான சமுதாயம் என்ற கண்டு பிடிப்புடன். இது உலகின் எட்டாவது அதியசமானலும் ஆகலாம் எச்சரிக்கை!

ஈழநாடு ஆசிரியரில் ஒருவரும், செக்ஸ் வக்கிர நூல் ஈறாக கடைவிரித்து நடத்துபவரும் எழுதிய அஞ்சலிக் கவிதையில் "அக்கிரமக் காரர்களை -இன்னும் மரணக் கயிற்றினால் கட்டாமல் விடுவதா?"1 என எழுதுவதன் மூலம் கொன்று விட்டால் எல்லாம் சரி என்கின்றார். இனி இப்படி நடக்காது என எமக்கு கதையளக்கின்றார். இதன் மூலம் எப்படி அவன் உருவனான் என்பதும், அதை செக்ஸ் வக்கிர நூல்கள், பாத்திரிகை மூலம், வானொலியில் எப்படி எல்லாம் பாடல்கள் மூலம் உருவேற்றி நிறைவேற்ற தூண்டிய உங்களுக்கு என்ன தண்டணை என அஞ்சலி கவிதையில் பாடியிருப்பின் நியாமாக இருந்து இருக்கும். அல்லது குற்றத்துக்கு எப்படி எல்லாம் நீங்கள் பணத்தசையால் பெண்களை செக்ஸ் வியாபராம் பண்ணியதை சுயவிமர்சனம் செய்து இனி இப்படி செய்ய மட்டோம் என உறுதியளித்து இருந்தால் வருங்காலத்தில்  இதுபோன்ற சிலவற்றை தடுக்க முதல் காலடி வைத்த வெற்றியாவது கிடைத்திருக்கும். இல்லை என்றால் அடுத்த கற்பழிப்புக்கு நபரை தயார் செய்யும் நோக்கில், பெண் செக்ஸாக தொடர்ந்தும் உங்கள் பணம் வறுகும் விற்பனையால் உருவேற்றப்படுகின்றான் அடுத்த குற்றவாளி!

 

nஐர்மனி ஸ்ரீபதி சிவனடியான எழுதுகிறார் "சமூக விரோதிகளை நாம் எந்தவித காரணத்திற்காகவும் அடையாளம் காட்டாமல் விட்டுவிடவும் கூடாது. (என்பவர் இனம் காட்டவில்லை) .........தஞ்சம் புகுந்த நாட்டிலும் எம்மவர் உயிருக்கு சில சமூக விரோதிகளால் அச்சுறுத்தல்.. "1 அந்த சிவ நாமத்தால் கூறுகின்றார். சமூக விரோதி எப்படி சமூகத்தில் உதித்தான் என்றால் சிவனிடமே இருந்த ஆணாதிக்கமேயாகும். ஏன் மூன்று வயதில் ஞானம் பெற்றதாக கூறும் இந்து சமயத்தின் வணக்கத்துக்குரிய திருஞானசம்பந்தனின் வக்கிரமன பாலியல் பார்வை கண்டுதான் உமாதேவியார் மார்பில் அல்ல கிண்ணத்தில் பால் கொடுத்தாரோ! அந்த சம்பந்தன் இறைவனாக கருதும் உமாதேவியின் உடல் உறுப்புக்களை வகைவகையாக வருணித்தை பெரிய பட்டியலில் போட்டு டிப்ளோமா பட்டம் எடுக்கமுடியும். அந்தளவுக்கு கடவுளாக கருதி குருவாக கொண்ட எம் ஆணாதிக்க சமூகமே சமூக விரோதியின் தோற்றுவாயே ஓழிய தனிநபர்கள் அல்ல. ஏன் சம்பந்தப் பெருமாள் இந்து - சமண போராட்டத்தின் போது  "பெண்ணகத்தே எழில்சாக்கியப் பேய் அமன் தென்ணற் கற்பழிக்கத் திருவுள்ளமே"2 எனக் கோரி சமணப் பெண்களை கற்பழிக்க அருள் கோருகின்றார். பிள்ளையார் கதையைப் பார்ப்போம். சிவபெருமானின் மணைவி உமாதேவியார் குளக்கட்டில் குளிக்கும் போது தன்னை ஆணாதிக்க வக்கிரங்கள் இரகசியமாக பார்த்து விடுவர் எனப் பயந்து, தன் உடல் மேல் இருந்த ஊத்தையை விறண்டி பிள்ளையாரை உருவாக்கி காவலுக்கு (இங்கு மனிதனை உருவாக்கவில்லை. மிருகம் கலந்த  குழந்தையே உருவாக்கினார். மனிதக் குழந்தை கூட ஆணதிக்கத்தை கொண்டது என்பதலோ! ) வைத்தே பிள்ளையார் உருவான கதை. எப்படி இறைவியாலேயே ஆண் இறைவனின் ஆணாதிக்க தொல்லையில் இருந்து தன்னையே பாதுகாக்கமுடியவில்லை. ஏன் பெண்களை எல்லாம் குறும்பு செய்து, பெண்களை எல்லாம் வைப்பாட்டியாக வைத்திருந்த கண்ணன் கதை வேறு. வேலுடன் திரிந்த இரண்டு பெண்டாட்டிகாரன் முருகன் இப்படி இந்து கடவுள்களே ஆணாதிக்கத்தின் பாதிப்புக்கள் அல்லது அதைச் செய்பவர்களாக இருந்தனர். கும்பிடும் தெய்வங்களே கற்பழிக்கும் போது தனி மனிதன் மட்டும் குற்றவாளியா? எப்படி?

வண்ணத் தெய்வம் தனது அஞ்சலியில் "...பாதகம் ஒன்றினை நடத்திய இவ்வன்செயலை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய மக்கள் தொடர்பு சாதனங்கள் பாராட்டுக் குரியாவை."1 என்கிறார். யாரை எந்த ஐனநாயக விரோதிகளை பாதுகாக்க விரும்புகின்றீர்கள். மண்ணில், புலம் பெயர் சூழலில் நடத்திய படுகொலைகள், தாக்குதல்கள், இக் குற்றவாளி முன் நடத்திய தாக்குதல்கள் எல்லாம் எப்படி உறங்கிப் போனது. பாத்திரிகைகள் ஏன் அனைத்தையும் மறைத்து விளையாடுகின்றனர். அதன் அரசியல் என்ன? இப்படி இருக்க ஏதோ ஐனநாயகம் வாழ்வதாக கதையாளக்கின்றார்.

|தமிழன்|  முன்னாள் ஆசிரியர் எஸ்.கே.காசிலிங்கம் "நமது மண்ணில், சிங்கள ஏகாதிபத்தியவாதிகளால் அனுப்பி வைக்கப்பட் டுள்ள சீருடை அணிந்த சிங்கள காடையர்கள் தமிழ் யுவதிகளை - ஏன் வயது முதிர்ந்த பாட்டிமார்கள் மீது கூட பலாத்காரம் புரிந்து அடையாளம் தெரியாமலேயே அழித்து புதைத்துக் கொண்டுவரும் கொடுமைகளை தினமும் கேள்விப் படுகின்றோம். இதுபோல் ஆஃப்ரிக்க நாடுகளிலும் ஆட்சியில் உள்ளவர்கள் பெண்கள் மீது காட்டுமிராண்டித்தனம் புரிகிறார்கள்." 1 என்கின்ற போது புல்லரிக்கின்றது. விட்டால் சிங்களவன் இல்லை என்றால் அந்த கறுவல் ஆபிரிக்கன் மட்டுமே இவர்களின் விளக்கம். அதற்க்குள் இவர் பத்திரிகை ஆசிரியார் வேறு என்றால், இப்படி கற்பழிப்புகளின் ஊற்று மூலம் இங்குதான் ஊற்று எடுக்கின்றது. புலம் பெயர் நாட்டை நோக்கி வருகின்ற போது  பெண்களை பயண முகவர்கள் மிரட்டி உருட்டி கற்பழித்து கொன்றும், கொல்லாமாலும் நடந்த சம்பவங்கள் நிறையவே உண்டு. ஏன் வசதி கருதி மறந்து போனீர்கள்? இன்று பயணமுகவர் மூலம் பெண் வந்து இருந்தால் ஆணாதிக்க சமூகம் விபாச்சாரியாக பார்க்கும் அளவுக்கு பாலியல் வன்முறை காணப்படுகின்றது. இதில் பாதிக்கப்பட்ட பெண், பாதிக்கப் படாத பெண் என இருவருமே பின்னால் புதிய ஒடுக்குமுறையை, அவமானத்தை இந்த பத்திரிகைகள் கண்டு கொள்ளாது "இப்படியும் நடக்கிறது" என திணிக்கவே உதவுகின்றது. தற்போது தமிழ் ஆணாதிக்கம் பயண முகவர் வழிவந்த பெண் வேண்டாம், நேரடி இறக்குமதி  பெண் வேண்டும் என கன்னிப் பரிசோதனை செய்யாத குறையாக நாக்கை தொங்க விட்டு அலைகின்றது. இந்தியா உள்துறை அமைச்சு செயளார் தன் ஆறு வயது மகளை பலர் முன் கற்பழித்ததை அறிந்த தாய் , நீதி கேட்டு சென்ற போது நீதி மறுக்கப்பட்டது. அதற்காக அந்த வசதிபடைத்த தாய் (வசதியிருந்தால்தான் சட்டத்தின் முன் நீதிகேட்டு போராட முடிகின்றது) நீண்ட போராட்டத்தை நடத்தியும் சட்டத்தக்கு பொறுப்பான உள்துறை அமைச்சு இழுத்து அடிக்கின்றது. ஏன் இந்தியாவைச் சேர்ந்த ஒரிசாவில் அஞ்சான என்ற பெண் தனது கணவனின் கொடூரத்தால் பாதுகாப்பு தேடி நீதி கோரி அரச தலைமை வழக்கறியார் இடம் முறையிட சென்ற போது அவன் அப்பெண்ணை கற்பழிக்க முயன்றான். அதை எதிர்த்து அப்பெண் போராடிய போதும், முதல் அமைச்சாரிடம் முறையிட்ட போதும் (இருவரும் கூட்டாக பல கற்பழிப்பில் ஈடுபட்டவர்கள்) அப் பெண்ணை கும்பாலாக அடியாட்படை கொண்டு கற்பழித்தனர். இதன் பின் தன்னெழுச்சியாக மக்கள் திரண்டு போராடிய பின் விசாரணை நாடகம் தொடங்கியுள்ளது. ஏன் ஐரோப்பாவில் சிறுமிகளை கடத்திச் செல்வதையும், அது பொலிஸ்-அரசு கூட்டுடன் நடந்த செயலால் தொடர்ந்த நிலையில் அண்மையில் ஸ்பெயின் லட்சக் கணக்கில் மக்கள் வீதி ஆர்ப்பட்டத்தை நடத்தினர். ஏன் அமெரிக்கா இராணுவத்தில் உள்ள 50 சதவீதமான பெண்கள் உயர் அதிகாரிகளால் கற்பழிக்கப்பட்டுள்ளனர். ஏன் கிளிங்டன் அதிகார பாலியல் வன்முறை உலகையையே நாறடிக்கவில்லையா? சத்திய சாயிபாபா என்ற ஆணாதிக்க வெறியன் பெண் போட்டியில் அரசியல் செல்வாக்குடன் பொலிசைக் கொண்ட தனது சீடர்களை அழித்ததை முடிமறைக்க முடியாது நாறியது. மூத்த தமிழ் குடியில் இருந்து இன்றுவரை எத்தனை தாழ்த்தப்பட்ட பெண்களை கற்பழித்து சுகம் பெற்றீர்கள். ஏன் இரண்டாம் உலக யுத்ததில் எத்தனை ஆயிரம் பெண்களை யாப்பானும், nஐர்மனியும் சூறையாடியாது. இப்படி எத்தனை வரலாறுகள் பிறகு சுத்தி சுத்தி சுப்பற்றை கொல்லை சிங்களவன்-ஆபிரிக்கன் மட்டும்தான் என்ற மூத்த தமிழ்க் குடிகளின் ஒப்பாரி.

"எம்மினத்தின் முகங்களிலே கரும்புள்ளி இரத்த வெறி பிடித்த கரடிகளின் செயலால் தமிழ்மொழி பேசா மற்ற இனத்தவர்கள் கொலைக்காரர்கள் - இலங்கைத் தமிழர்களிடமும் இருக்கிறார்கள் என்று பேசும் படி செய்து விட்டார்கள். இந்த நய வஞ்சகச் சொறிநாய்கள்."1 என நந்தினி கலைத் தென்றல் அஞ்சலி ஒப்பாரிவைக்கின்றது. சபாலிங்கம், நாதன், கஜன்..... என நடந்த ஈவிரக்கமற்ற கொலைகள், பல பெண் படுகொலைகள் எல்லாம் இதைச் செய்யவில்லையோ?. மண்ணில் ஆயிரக்கணக்கில் இயக்க உட்படுக்கொலைகள், மற்றைய இயக்கப் படுகொலைகள், எல்லையோர அப்பாவி சிங்கள முஸ்லிம் படு கொலைகள் எல்லாம் எம் இனத்தின் கொலைகள் இல்லையோ? ஏன் 1993 இல் nஐர்மனியில் சுஐpதா என்ற சிறுமி கொல்லப்பட்ட போது, நாசிகள் மீது வாய் கூசாது குற்றம் சாட்டி விட்ட கதைக்கு பின்னால் சாதித்திமிரும், ஆணாதிக்க வெறியாட்டமும் கொலையின் பின்னணி என்ற கதைகளும் பரவிய போது அஞ்சலிகள் மெனளத்தின் உறைவிடமானது ஏனோ? இவர்கள் சொறிநாய்கள் அற்ற புனிதர்களோ? என்ன நித்திரையா? கொள்கின்றீர்கள். இது சொறிநாய் என்றால் இதன் ஊற்று மூலம் தொடங்கி வைத்த இடமும் சொறிநாய்கள்தான்.

தி.உமாகாந்தன் தனது அஞ்சலியில் "..எங்கள் சொந்த இடம் தெரியாமல் குழம்பி நிற்கும் வேளையிலே தேகம் திமிரெடுத்தா இந்த மிருகத்தனம் நிகழ்ந்தது. நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் வந்த கதையாகிவிட்டதா நம் கதை"3 என்கின்றர். தேகம் திமிர் இல்லாமல் (இயல்பான பாலியல் தேவை) மனிதன்  இருக்கமுடியுமோ? பாலியல் மனித வாழ்வில் இயல்பானது என்பதையே மறுக்கும் ஆணாதிக்கம், இந்த இயல்பான பாலியல் மீது எண்ணை ஊற்றி எரியவைக்கும் போது ஏற்படும் விளைவை ­­"தேகம் திமிரெடுத்தது" என்று கூறி பிரச்சனையின் மூலவேரை அடியோடு கவனமாக பாதுகாக்க உதவுகின்றது பழமொழி.

"உன் பிள்ளையை உன் கட்டுப் பாட்டில் வைத்துக் கொள்!"3 என்று ஞானி ஆலோசனை வழங்குகின்றர். பெண்பிள்ளை என்றால் பூட்டி ஆணாதிக்க சிந்தனைக்குன் அமுக்கு. ஆண் குழந்தை என்றால் "கறுப்பு" மற்றும் "அடைகள்" உடன் சேர அனுமாதியாதே. அதவாது தாய் தந்தையைக் கொண்ட இந்த ஆணாதிக்க சமூக ஒழுக்கத்தை மீறாத வகையில் உன் பிள்ளையை கட்டுப்பாட்டில் வைத்திரு அது போதும் என்கின்றார். அதன் வெளிப்படையாக "...உன் மனதிலே பதித்துக் கொள், என் இனமே! வட்டிக்குப் பணம் வாங்கி வடக்கே வாசல் வைத்து - வளவோடு வீடு கண்டோம்! சீட்டுக் கட்டி சிங்கார வாகனத்தில் ஒய்யாரமாய் பவனிவந்தோம்!" என்பதன் உடாக ஞானி உயர் சாதி சிலர் வாழ்க்கையை, வசதியற்ற வக்கற்றவர்களின் பணத்தை சீட்டில் ஏமாற்றி வடக்கு வாசல் வைத்து, தமக்கு சேவகம் செய்ய கலட்டிக் காணிவழங்கி கொட்டில் போட்டு தமது சீருறும் செருக்கை வெளிப்படுத்தியதை பிள்ளைக்கு புகட்டு. அப்போதுதான் உனது காட்டுப்பாட்டில் சாதி கடவாத, காதல் செய்யாத, சீதனத்தை மறுக்காத, வேறு இனத்தை திருமணம் செய்யாத அடக்கம் ஒடுக்கமான ஊமைப் பிள்ளைகளை வளர்த்த பெருமையை கல்தோன்றா மண் தோண்றா முன் தோன்றிய தமிழ் மரபைப் பேணுவதை உலகம் புகழும் என்பதே அவரின் கவிதை விளக்கம்.

திருமதி நளாயினி தாமரைச்செல்வன் தனது அஞ்சலியில் "காமுகரை அடக்கி ஆழுங்கள். யூடோ கராத்தே உண்டு. யுத்திகள் நிறைய உண்டு."3 என்கின்றர். தூப்பாக்கிகள் உண்டு பெண்களே இடுப்பில் செருகி நடமாடுங்கள் என கூறாதது மட்டுமே இங்கு விடுபட்டுவிட்டது. சமூகத்தின் ஆணாதிக்க நோய்க்கு கராட்டி, யூடோவோ, தூப்பாக்கியோ, மரண தண்டனைகளோ தீர்வாகுமோ! இல்லையே ஆணாதிக்க வெறி என்பது எல்லா நவீன ஆயுதத்தை மீறி பின்நவீனத்துவமாக நடைமுறையில் உள்ளது. அதவாது நவீன ஆயுத உற்பத்தியில் உலகை ஆளும் போட்டி போல் இதுவும் நிடிக்கும்.

சி.புஸ்பரஐh தனது அஞ்சலியில் "சமூக சீர்திருத்தத்தில் அக்கறை கொண்டவர்களுடனும், சட்டத்துடனும் ஒத்துளைத்து நம்மிடையே இருக்கும் சமூகவிரோதிகளை இனம் கண்டு நீதியின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற செய்யவேண்டும்."3 இது எப்படி? சட்டம் ஒழுங்கு ஆணாதிக்கமாக உள்ள போது, அத்துமீறிய ஆணாதிக்க மிறல்கள் சட்டம் சிலவேளை கண்டு கொள்ளலாம். அமெரிக்கா இராணுவத்தில் இணைந்த பெண்கள் மீதான கற்பழிப்புகளை எந்தச் சட்டமும் கண்டுகொள்ளவில்லை. ஏன் கிளிங்டன், ஸ்பெயின்.. என பட்டியல் நீண்டு உள்ளது. ஆணாதிக்கத்தை இச் சட்டம் பாதுகாக்கின்றது. இதை சீர்திருத்தவாதிகள் தங்கள் வர்க்க விசுவாசத்துடன் முண்டுகொடுக்கின்றனர். ஏன் அண்மையில் உங்கள் உடன் கூடித் திரிவோர் எழுதிய படைப்புகளில் பெண்கள் மார்பை இந்தாபிடி இந்தாபிடி எனத் திரிவதாக எழுதியும், விமானப் பெண் என்ன குடிக்கிறாய் எனக் கேட்க்க உன் மார்பு பால் எனக் கூறியதை (ஏன் நிதர்ஷினியை குதறியவர்கள் அப் பெண்ணை இலக்கியவாதி கோருவதையே செய்தனர் என்பதை அஞ்சலிகள் உடாக மறைக்காதீர்கள்) எந்தச் சட்டத்திடம் முறையிடுவது. அதையும் கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

"ஆண்களைச் சரியாக வளர்க்காத தாய்களா காரணம்?3 என்று ராNஐஸ்வரி லண்டனில் இருந்து அஞ்சலி செய்கின்றர். ஆணாதிக்கம் எப்படி தாய் வளர்ப்பால் ஏற்படும். ஆணாதிக்கம் பெண்கள் மீது ஆணாதிக்க உற்பத்தி முறையால், முதலாளித்துவ சனநாயகத்தால் பாதுகாக்கப் படுகின்றது. பின்னால் ஆணாதிக்க ஆண் ஆணாதிக்க ஒழுங்கை அத்து மீறினால் தாய் வளர்ப்பில் குற்றமோ! ஐயகோ என்வென்று சொல்வது.

திருமதி றூபி nஐயசீலன் தனது அஞ்சலியில்" தலைகுனிந்த தமிழரினம் தலைமீண்டும் நிமிர்கையிலே -  தலைகுனிய வைக்கிறதே தரம் கெட்ட தமிழன் செயல்"3  என்கிறார். எம்மண்ணிலும் புலம் பெயர் நாட்டிலும் சொந்த சகோதரர்களை வீதிவீதியாக படுகொலை செய்தும், உயிருடன் எரித்த போது தமிழன் தலை எங்கிருந்தது. அப்பாவிச் சிங்கள, முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்ட போது வீரத்தின் உச்சத்தில் உச்சி குளிர்ந்ததோ! சொந்த இடத்தில் இருந்து தமிழன் முஸ்லிம் மக்களை விரட்டியது வீரமோ! இப்பதான் தமிழன் தலை குனிவு ஏற்பட்டதாக காதுக்கு பூ வைக்கின்றார். தலைகுனிவு எப்போது தமிழன் சனநயகத்தை மறுத்தானோ அப்போது தமிழனால் ஏற்பட்ட நிலையில் எந்த மற்றத்தையும் வராலாறு மிட்க்கவில்லை.

சுவிஸ் வல்வை - சுNஐன் தமது அஞ்சலியில் "பிஞ்சுமுகம் அறியா வஞ்சகர்."3 என்பதன் உடாக பிஞ்சு அற்ற முகம் என்றால் எப்படிச் சரியாகிவிடும்?.

|முகத்தான்| யேசு தனது அஞ்சலியில் "மதத்தின் பெயராலே மர்மக்கொலைகள், மறைமுகக் கொலைகள், தற்கொலைகள், வஞ்சம் தீர்க்கும் வர்க்கக் கொலைகள், பணப்பித்தர்களின் பாதக் கொலைகள், காம வெறியர்களின் வெறியாட்டக் கொலைகள், எத்தனை?!" என்றவர் வசதியாக வசதி கருதி இனக் கொலைகளை மறந்து போனார். சகோதரப் படுகொலைகளை மறந்து போனார். இப்படி மறந்து மறைக்கப்பட்ட தொடர்ச்சியில் "மொட்டாகி, விரிந்து மணம் பரப்பும் மலராகும்முன், முளையிலே நுள்ளி.." என்கிறார். அதாவது மலரானால் கிள்ளி எறியலாமோ? ஆணாதிக்க பாலியல் தேலையை பூர்த்தி செய்யாமல் பிள்ளை பெறாமல் போய்விட்டாய்? (மலராகி) என்றே புலம்புகின்றார்.

இங்கு வெளியாகி அஞ்சலி ஒன்றில் குற்றவாளியை அங்கம் வகுத்து அணுஅணுவாய் கூறாக்கி - அவர் உயிரை எடுத்தாலும் ஆறாது எம் நெஞ்சு- அன்பான பிரெஞ்சு நாட்டுப் பண்புடையீர் - விண்ணப்பம் - அனுப்புங்கள் அந்த அநியாயப்படுவோரை வன்னிக்கு"3 என இலங்கையில் இருந்து எழுதும் அஞ்சலி. ஏதோ வன்னியில் இதுபோல்  இல்லை என்ற மாதிரி. வன்னி என்ன ஆணாதிக்கம் கடந்த பூமியோ! அனுப்பினால் புண்ணிய பூமியாகி விடுமோ. ஏன் பல சமர் கண்டு புலம் பெயர்ந்த இந்த முன்னைய வீரப் புதல்வன் எப்படி உருவானான். இவ்வளவு மோசமான கொலை வெறியுடன். என்பதற்க்கு அல்லவா வன்னி பதில் கூறவேண்டும்.

1.மண்ணில் மறைந்ததோ...? மனிதம்!

2.மண்ணும் மனித உறவுகளும் -கோ.கேசவன்

3.மெல்லச் சாகுது மனிசம்

4.பெண் உரிமை 2.6