தமிழ் மக்களின் போராட்டம் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு எதிராக வளர்ச்சி பெற்ற போது, அது அம்மக்களின் போராட்டத்தை துப்பாக்கி முனையில் அடக்கி ஒடுக்கியது. இந்த அடக்கமுறைக்கு எதிரான சக்திகளின் அரசியல் தவறுகள் அவர்களையே அவர்களின் மண்ணில் இருந்து ஓட வைத்தது. ஓடிவந்தவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் மீதான அக்கறையை தமது புதிய பூர்சுவா வாழ்க்கையுடன் தொலைக்கத் தொடங்கி சீரழிந்தவர்கள், அந்த மக்களின் நியாயமான குரல்களையே பின்னால் மறுப்பவர்களாக தம்மை மாற்றிக் கொண்டனர்.

 

 

பட்டாளிவர்க்கம் தனது சுரண்டலுக்கு எதிராக போராடும் வரலாற்றின் மீது தமது சேறடிப்புகளை தொடங்கியவர்கள் பின்னால் பாட்டாளி  வர்க்கத்தையே தமது எதிரியாக பிரகடனம் செய்ய ஒருபோதும் தயங்கியதில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அனைத்து பூர்சுவா மற்றும் ஏகாதிபத்திய கோட்பாட்டு மற்றும் நடைமுறைகளை முன்நிறுத்தியவர்கள் தொடர்ந்து ஏகாதிபத்திய கோட்பாட்டை மாற்றாக வைக்க தொடங்கினர்.

ஒருபுறம் இந்த அரசியல் பித்தலாட்டத்தில் களைத்துப் போனவர்கள் தாம் சார்ந்த சிறு சஞ்சிகைகளை கைவிட்டுவிட சிலர் புதிய ஏகாதிபத்திய கோட்பாட்டுகளுடன் களம் இறங்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக தம்மை முன்நிறுத்துகின்றனர். இதற்கு இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்குள் நடைமுறையில் செயல்பட தயாரற்ற ஏகாதிபத்திய புத்தியீவிகளின் தயவை இவர்கள் நாடினர், நாடுகின்றனர். அவர்களுக்கு இதன் மூலம் கிடைத்த பணமும் இவர்களுக்கு தமது பாட்டாளி வர்க்க எதிர்ப்பை பிரகடனம் செய்ய கோட்பாட்டு ஆதரவும் கிடைக்க உதவியது.

கம்யூனிச எதிர்ப்பு பிரச்சரத்துக்கு கம்யூனிச எதிர்ப்பு கும்பலால் நிதி வழங்கி பாரிஸ் வந்துள்ள அ.மார்க்ஸ் கம்யூனிச எதிர்ப்பில் ஒரு ஏகாதிபத்தியக் கோட்பாட்டாளன். இந்த கம்யூனிச எதிர்;ப்பு பிரச்சாரத்துக்கு அழைப்பவர்கள் யாரும் மக்களின் நலனில் அக்கறையற்ற லும்பன்கள். மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொள்ளவோ, அவர்களின் சமூக வாழ்வின் மாறுதல் பற்றி அக்கறையற்ற இவர்கள் அரசியலில் வக்கிரத்தை வெளிப்படுத்துபவர்கள். அண்மையில் புலம்பெயர் இலக்கிய வன்முறையில் ஈடுபட்டதுடன் அதை சுயவிமர்சனம் செய்ய மறுப்பபவர்கள். அதைப் பாதுகாக்க ஒருதலை பட்சமாக திரித்து அதை நியாயப்படுத்தி அதில் பின்நவீனத்துவ வழியில் ஜனநாயகமாக நியாப்படுத்தியவர்கள்.

இவர்களின் சார்பில் வன்முறைக்கு எதிராக கூட்ட அழைப்பை முன்வைக்கும் புஸ்பராஐh ஆறு லட்சம் தோட்ட தொழிலாளார்களின் சந்தாப் பணத்தை கொள்ளையடித்தும், அம் மக்களுக்கு பொய் வாக்குறுதி கொடுத்து கோடீஸ்வரராகி, மலையக மக்களின் முதுகில் குத்தி, மாறி மாறி பெரும்தேசிய சிங்கள பாசிச அரசை முண்டு கொடுத்து பாதுகாத்து, ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு உற்ற நண்பனாக இருந்த தொண்டமானுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியவர், அ.மார்க்ஸ் சார்பாக கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.  தொண்டமானின் பரம்பரை அதிகாரத்துவத்துக்கும், மாறி மாறி நிறம் மாற்றி வன்முறைக்கு துணைபோனவருக்கு அண்மையில் கண்ணீர் அஞ்சலி செலுத்திய புஸ்பராஜா  கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரத்தில் வன்முறை பற்றியும் அதிகாரம் பற்றியும் பேச அழைப்பது தான் வேடிக்கையாக உள்ளது. இவர் சபாலிங்கம் மலரை ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதியாக கொண்டுவர விடுத்த வேண்டுகோளை நிராகரித்து அமர்தலிங்கம், உமாமகேஸ்வன் (இந்த உமாமகேஸ்வரன் உட்படுகொலைகள் மூலம் கொன்று போட்ட ஒடுக்கப்பட்ட பிரிவின் சார்பாக மலர் விடக் கோரினேன். ஆனால் மறுத்து ஒடுக்கும் உமாமகேஸ்வரன் சார்பாக மலரை விட்டவர்) போன்ற அதிகாரத்துவ பிற்போக்குகளை நினைவு கூர்ந்து வெளியிட்ட இவர் கம்யூனிச எதிhப்பு பிரச்சாரத்துக்கு பாரிசில் அழைப்பு விடுகின்றார்.

இப்படி இவர்களின் புண்ணியத்தில் பாரிசில் கம்யூனிச எதிர்ப்பிரச்சாரத்துக்கு வந்துள்ள அ.மார்க்சின் அரசியல் என்ன? இந்த கூட்டத்தை அழைத்து நடத்துபவர்களின் அரசியல் என்ன? இந்திய சமூகத்தில் பல்வேறுபட்ட வர்க்க முரண்பாடுகளில் எந்த வர்க்கத்துடன் நிற்கின்றார்? அ.மார்க்ஸ் எழுதியுள்ள எந்த நூலிலும் அப்பட்டமாக பிடிகொடாத பார்ப்பணிய சூது அரசியல்நிலை.

புஸ்பராஜா பெயரில் முதலில் வெளியாகிய துண்டுப்பிரசுரத்தில் ஒரு பெண்ணை நிர்வாணமாக்கும் ஏகாதிபத்திய உள்ளடக்கத்தை கொண்டிருந்தது. இதற்கு நண்பரின் கவிதை ஒன்றை மாற்றம்செய்து முன்வைப்பதன் மூலம் அதை இனம் காணமுடியும்.

"சுரண்டுவோரை சுரண்டுகின்றதா சுரண்டல் ஆணாதிக்கம் (டிக்கற்) உன்னை சுரண்டிப் பார்க்க வந்திருக்கும் ஆணாதிக்க அ.மார்க்ஸ்சே (எனது நண்பனுக்கு) நீயோர் சுயவிமர்சனம் செய் பார்க்கலாம்" பெண்ணின் உடுப்பை சுரண்டி நிர்வாணப்படுத்தும் இவர்களுக்கு எவ்வளவு வக்கிரம்.

பணக்கார சீமாட்டியும் பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்து பட்டத்து ராணியான இளவரசி டயானாவின் வர்க்கநிலை என்ன? இதேபோல் அ.மார்க்ஸ்சின் வர்க்கநிலை என்ன? சி.என்.என் (CNN) அதிபர் உலக ஏழை மக்களின் நலனுக்கும், உலக முதல் பணக்காரனான கம்யூட்டர் பன்நாட்டு கம்பனியின் உரிமையாளரான வில்லியம்கேட்ஸ் மக்களின் நலனுக்கு பணம் கொடுத்த போதெல்லாம் இந்த பணக்காரக் கும்பலின் வர்க்க நிலை என்ன? இதே போல் அ.மார்க்ஸ்சின் வர்க்கநிலை என்ன?

சிறுவர் உழைப்புக்கு எதிராக ஐக்கியநாட்டுசபையும், யூனெஸ்கோவும், ஏகாதிபத்திய தலைவர்களும் குரல் கொடுத்த போது இதன் வர்க்க நிலை என்ன? ஐக்கிய நாட்டுசபை பெண்கள் ஆண்டை தீர்மானிக்க ஏகாதிபத்தியம் ஆதரவு கொடுத்தபோது இதன் வர்க்க நிலை என்ன? இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையையிட்டு ஏகாதிபத்திய தொலைக்காட்சியும், அடிமை வடிவத்துக்கு எதிரான அமைப்புகளும், மத அமைப்புகளும், யுனெஸ்கோவும், தன்னார்வக் குழுக்களும் குரல் கொடுத்த போது அதன் வர்க்கநிலை என்ன? பாபர் மசூதி தகர்க்கப்பட்ட போது ஏகாதிபத்தியமும் அதன் அச்சு அமைப்புகளும் கண்டித்த போது இதன் வர்க்க நிலை என்ன? செஞ்சிலுவைச் சங்கம், மனித உரிமை அமைப்புகள் என்று உள்ள பல அமைப்புகளின் வர்க்க நிலை என்ன? அன்னை திரேசாவின் வர்க்கநிலை என்ன? தன்னார்வக் குழுக்களின் வர்க்க நிலை என்ன? தொண்டமானின் வர்க்கநிலை என்ன? இதன் வர்க்கநிலையை கூறமுடியாத யாரும் அ.மர்க்சின் வர்க்கநிலையை கூறமுடியாத இந்த ஏகாதிபத்திய கூத்தடிப்பில் பங்கு கொள்வது அவர்களின் அறிவியல் எல்லையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான துரோகமாகும். அ.மாhக்ஸ்சின் வர்க்கநிலை என்ன?

ஆம் இன்று ஏகாதிபத்தியத்தின் கட்டுப்பாட்டில் உலகமயமாகின்ற போக்கில் அதற்கு தடையான அனைத்து தேசிய வடிவங்களையும் ஏகாதிபத்தியம் மறுக்கின்றது. இந்த மறுப்பில் உருவாகும் கோட்பாடுகள் புற்றீசலாக கிளம்புவதும் நியாயப்படுத்துவதும் புரட்சியாக அலங்கரித்து காட்டுவதும் புதியவடிவமாக மார்க்சியத்துக்கு எதிராக முன்நிறுத்தப்படுகின்றது. டயானா ஏன் கண்ணிவெடிக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றார்?

இந்தவகையில் அ.மார்க்ஸின் எழுத்து எந்தவகையைச் சார்ந்தது. இந்தியாவில் உள்ள நிலப்பிரபுத்துவ இந்து பாசிசத்துக்கு எதிராக ஏகாதிபத்திய கட்டற்ற சுதந்திர கோட்பாட்டு எல்லைக்குள் தான் அ.மார்க்ஸ்சின் எழுத்துகள் புளுத்துப் போயுள்ளது. நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான பாட்டாளிவர்க்கத்தையோ, தேசிய முதலாளி வர்க்கத்தையோ ஆதரிக்காது எதிர்த்து நிற்கும் அ.மார்க்சின் கோட்பாடு நேரடியாக ஏகாதிபத்தியத்தை சார்ந்தது. இது எப்படி என்கின்றீர்களா?

நவீனத்துவமான முதலாளித்துவ அமைப்பு தனது நவீன முதலாளித்துவ கண்ணோட்டத்தை ஏகாதிபத்திய வடிவமாக தன்னை விரிவாக்கிய போது நவீனத்துவத்தையே அதாவது தனது சொந்த கோட்பாட்டையே முதலாளித்துவம் தூக்கியெறிந்தது. இனியும் சமுதாயம் நவீனத்துவமான முதலாளித்துவம் என்பது அர்த்தமற்றதாகியது. இந்த புதிய நிலையை செயலூக்கமுள்ள மார்க்சியம் சரியாக ஏகாதிபத்தியம் என்று அடையாளப்படுத்தியதன் மூலம் அச்சொல்லுக்கே போர்க்குணம் மிக்க அரசியல் வடிவத்தைக் கொடுத்தது. இதை எகாதிபத்தியத்தால் சகித்துக்கொள்ள முடியவில்லை. நவீனத்துவமான முதலாளித்துவத்தை தானே மறுத்த போது எப்படி புதிய நிலைமையை மதிப்பிட்டு பெயரிடுவது என்பது ஏகாதிபத்திய புத்திஐPவிகளின் மூளைக்கே சவால் விட்டது ஏகாதிபத்தியம் என்ற மார்க்சிய அடையாளப்படுத்தல்.

ஏகாதிபத்திய புத்திஐPவிகள் தனது சொந்த கட்டற்ற சுதந்திர சமுதாயத்தை பெயரிட பெயருக்காக அலைந்தனர். இதன் கண்டுபிடிப்பாகவே நவீனத்துவத்துக்கு பிந்தியதை பின்நவீனத்துவம் என்று அழைத்துக் கொள்வது மரபாகியது. இது நவீனத்துவத்துக்கு பிந்திய ஏகாதிபத்தியத்தை குறிக்கும் இன்னொரு சொல்லாக பின்நவீனத்துவம் ஆகியது. ஏகாதிபத்தியம் என்பது பாட்hளிவர்க்கம் மற்றும் தேசிய முதலாளித்துவ சொல்லாக இருக்க ஏகாதிபத்திய பிரநிதிகளின் சொல்லாக பின்நவீனத்துவம் சொல் அரசியல் அர்த்தத்தை உள்வாங்கியது. இந்த பின்நவீனத்துவம் என்ற ஏகாதிபத்தியம் தேசத்தின் எல்லைகளை ஊடுருவி அனைத்தையும் மறுத்து ஏகாதிபத்திய பண்பாட்டை ஏற்படுத்த முனைவதால் நிலப்பிபரபுத்துவத்துக்கு எதிரான பாட்டாளி வர்க்கத்துக்கு மாற்றான பின்நவீனத்துவ ஏகாதிபத்திய புதிய ஆதிக்க செயல்களை புரட்சியாக நடித்து காட்டி ஏகாதிபத்திய நலனை நிறைவு செய்யும் கோட்பாடாக நடைமுறையாக உள்ளது.

இந்த ஏகாதிபத்திய உலகமயமாதலுக்கு வன்முறை என்பது அவசியமற்றது. இருக்கும் ஜனநாயக வடிவத்தை பாதுகாத்து அதை கட்டற்றதாக மாற்றுவதன் மூலம் ஏகாதிபத்தியமயமாதலை நிறுவமுடியும். பின்தங்கிய நிலப்பிரபுத்துவம் மற்றும் மதப்பண்பாடுளையும், தேசிய முதலாளித்துவத்தின் பிற்போக்கு கூறுகளை எதிர்த்து போராடுவதாக காட்டி இதை மக்களின் ஜனநாயகமாக காட்டுவதன் மூலம் ஏகாதிபத்திய பண்பாட்டை  வன்முறையின்றி (இங்கு வன்முறை நிலவும் ஜனநாயக எல்லைக்குள் உள்ளது.) உலகமயமாகும் போராட்டத்தில் அ.மார்க்ஸ் போன்றோர் ஏகாதிபத்திய புரட்சியின் கதாநாயகர்கள் ஆகின்றனர். இதில் இருந்தே எந்த வெட்கமும் மானமும் இன்றி தம்மை பின்நவீனத்துவவாதிகள் என்கின்றனர்.

இதுபோல் காலனிக்கு பிந்திய ஏகாதிபத்திய ஆதிக்கத்தை மார்க்சியம் நவகாலனித்துவம், அரைக்காலனித்துவம், மறுகாலனி போன்றவற்றால் அடையாளப்படுத்தி போராட இதை அரசியல் அற்றவடிவமாக்க ஏகாதிபத்தியம் பின்காலனித்துவம் என்று அடையாளப்படுத்தி பாட்டாளிவர்க்க போராட்டத்தை சிதைக்க புதிய சொற்றொடர்களின் ஊடாக தன்னை அலங்கரித்துக் கொள்கின்றது.

பாட்டாளிவர்க்கம் சமூகத்தின் அனைத்தையும் விமர்சித்து புதிய சமுதாயத்தை கோரியபோது இதை மழுங்கடித்து பழையதை மீளநிலைநாட்ட மறுவாசிப்பு என்ற புதிய வடிவத்தை ஏகாதிபத்தியம் முன்வைத்தது. அதாவது இருந்த தேசிய, நிலப்பிரபுத்துவ, மதவாத தன்மைகளை மறுத்து பழையதை மீள நிலைநிறுத்துவதும், ஏகாதிபத்திய நிலைக்கு இசைவாக வாசிப்பது என்ற மறுவாசிப்பு அவசியமாகின்றது. மார்க்சியம் விமர்;சித்து புதியதை  உருவாக்க முனைவதை மறுத்து, இருப்பதை மறுவாசிப்பு செய்து நிலைநிறுத்துவதே மறுவாசிப்பு தத்துவமாகும்;. இதுபோல் விளிம்புக் கோட்பாடு மார்க்சியம் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவுகளையும் உள்ளடக்கிய வௌ;வேறு நலன்களை பிரதிநிதித்துவம் செய்து முன்வைத்த ஐக்கியமுன்னணி தத்துவத்தை சிதைத்து புரட்சியை தடுக்க விளிம்பு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அத்துடன் விளிம்பு என்பது புரட்சிக்கு பிந்திய பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தில் முதலாளித்துவபிரிவாகவும், பார்ப்பணியமாகவும், ஆணாதிக்கமாகவும் என அனைத்து மக்கள் விரோதமும் விளிம்பு என்பதை உள்ளடக்கியதே. இதற்காகவே மார்க்;சியத்துக்கு எதிராக பின்நவீனத்துவ விவாத்தை முன்தள்ளுகின்றனர். தன்னார்வக் குழுக்களின் செயற்தளம் இந்த விளிம்பு பிரிவின் அடிப்படையில் திட்டமிடப்படுவதையும், பாட்டாளிவர்க்க புரட்சிக்கு எதிராக விளிம்பூடாக ஒழுங்கு படுத்தும் செயல் வடிவங்களின் விளக்கமாகும். இதுபோல் "தலித்" என்பது முன்பு காந்தி "அரிஜன்" என்றழைத்து பார்ப்பணிய இந்து இந்தியா அமைப்பை ஏற்படுத்தியது போல், "தலித்" இந்து இந்தியாவில் சாதி அரசியலை உக்கிரமாக்கி சாதிக்கு எதிராக அணிதிரள்வதை சிதைத்து இதன் மூலம் உலகமயமாதலை வேகப்படுத்தியுள்ளனர்.  இந்த "பின்", "மறு", "விளிம்பு" "தலித்" வாதிகள் இருப்பதை மறுத்து ஏகாதிபத்திய புரட்சியாக முன்வைத்து பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிக்கு எதிராக ஏகாதிபத்திய கேள்விகளையும், கலகக்கொடி எழுப்பினர், எழுப்புகின்றனர்.

இவர்கள் இந்த ஏகாதிபத்திய தேசிய மறுப்பு (இதனால் தான் தேசியத்தை கற்பிதம் என்கின்றனர்) புரட்சிக்கு தடையாக உள்ள பாட்டாளிவர்க்கத்தை சேறடிக்க எப்போதும் பின்நின்றதில்லை. கம்யூனிசபுரட்சியின் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் அதை அடிப்படையாக கொண்ட வர்க்க போராட்ட வன்முறையை ஜனநாயகத்துக்கு எதிரான வடிவமாக காட்டியே சேறடிக்கின்றனர். ஜனநாயகம் என்ற முதலாளித்துவ ஜனநாயகம் எப்படி முரண்பட்ட வர்க்க சமுதாயத்தில் எல்லோருக்கும் இருக்கமுடியும் என்பதையொட்டி பதிலளிப்பதில்லை.

சுரண்டுபவனுக்கும் சுரண்டப்படுபவனுக்கும், சாதி ஆதிக்கத்திற்கும் அதற்கு எதிரான நிலையிலும், ஆணாதிக்கத்திற்கும் அதற்கெதிரான நிலையிலும், வெள்ளை நிறவெறிக்கும் அதற்கெதிரான நிலையிலும் நீடிக்கும் இருதரப்பு வன்முறையில் நீ எந்தப் பக்கம் என்றால் மௌனம். ஆனால் இந்த மௌனம் இருக்கும் ஆதிக்க வன்முறையை சார்ந்தும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் வன்முறையை எதிர்க்கும் போது மௌனம் ஒடுக்கப்பட்ட வர்க்கத்துக்கு எதிரானதாக உள்ளதை காட்டுகிறது. ஏகாதிபத்திய அமைதியான வன்முறைக்கு ஆதரவு என்பதன் மூலம் அதாவது சர்வதேச மன்னிப்புச்சபையின் நிலைபோல் அமைதியான சுரண்டல் நிலவ வாழ்த்துவதை இந்த மௌனங்கள் பறைசாற்றுகின்றது.

இவர்கள் அங்கு (முன்னாள் கம்யூனிச நாடுகளில்) அப்படி நடந்தது, இப்படி நடந்தது என்று பல கதைகள் கூறி கதையளப்பார்கள். அதாவது அ.மார்க்சின் முன்னைய கம்யூனிச எதிர்பிரச்சார சுற்றுப் பயணத்தின் தொகுப்பாக வந்த வெள்ளைத் திமிரில் ஐரோப்பியர் எல்லோருடைய கண்ணிலும் மின்னுவது நாசித்திமிர் என்று அப் புத்தகத்தில் பல புரட்டு கதைகள் எழுதியது போல், பலகூறு அதை கவ்விப்பிடிக்க ஆவென்று தமது கம்யூனிச எதிர்ப்பில் குளிர்காய இக்கூட்டத்தை நோக்கி ஒரு கூட்டம் ஆலாய் பறக்கின்றது.

நாங்கள் திறந்த விவாதம் நடத்துகின்றோம், முடிந்தமுடிவுகள் என எதுவுமில்லை, கேள்விகளே எமது ஐனநாயகம், கருத்தை யாரும் சொல்லமுடியும், நாங்கள் உடன்பட்டதில் கையெழுத்திடுவோம், முரண்பட்ட்தை விவாதிக்கவுள்ளது எனப் பதிவோம் என்று பல வண்ண கூத்துகளை தமது கம்யூனிச எதிர்ப்பில் கூடிக்கலந்து கூத்தடிப்பர். கூத்துகள் பல செய்து காட்டுவர். அதை கேட்க ஒரு கூட்டம் வாயைப் பிளக்கும்.

கம்யூனிச எதிர்ப்பை பலப்படுத்த ஏகாதிபத்தியம் நிதி ஒதுக்கி முன்னைய கம்யூனிச ஆவணங்களை எல்லாம் புரட்டி பிரட்டி திரித்து முன்வைப்பதை விசுவாசமாக கவ்விக் கொண்டு குரைப்போர் மறுபக்கத்தில் நேர்மை எதுவுமற்றது.

தமிழீழ தேசவிடுதலைப் போராட்டம் தமிழ்நாட்டை பாதித்தளவுக்கு பின்னால் அ.மார்க்சின் மௌனங்கள் அர்த்தம் என்ன? தேசத்தை கற்பிதம் என்றவரும் அவரின் இங்குள்ள சீடர்களும் தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தை ஏற்றதுகிடையாது. புலியெதிர்ப்பு கோசத்தில் இங்குள்ளவர் குளிர் காய அ.மார்க்ஸ் இந்தியாவில் வேடங்கள் பல போட்டு தொப்பி பிரட்டுகின்றார். தமிழ் மக்களை பாசிச சிறிலங்கா அரசு படுகொலை செய்து தேசிய இன அடையாளத்தை அழிக்க அதை "கற்பிதம்" என்று கதைகூறி ஏகாதிபத்தியமயமாதலை நியாயப்படுத்தியவர். இதற்கு எதிராக போராடிய இயக்கங்கள் கம்யூனிஸ்டுகளையும், ஜனநாயகவாதிகளையும் கொன்றொழித்து வரும் வரலாற்றினை ஏன் கண்டித்து போராட முன்வரமுடியவில்லை. கம்யூனிச நாடுகளில் தேடித் திரிந்து கம்யூனிச எதிர்பிரச்சாரம் செய்ய பின்நிற்காத இவர், இலங்கை அதுவும் பக்கத்து நாட்டில் அதுவும் தமிழ் நாட்டை பாதித்த விடயம், அதுவும் சீடர்களின் தயவில் பணம் பல பெற்று தகவல் பல கம்யூனிச எதிர்ப்புக்கு பெறுபவர் இலங்கையின் வன்முறையை ஜனநாயகவிரோதத்துடன் முன்வைக்காத அந்தக் காதல் என்ன காதலோ நாம் அறியோம்.

இந்த காதலில் எப்படியெனின் முதல் கம்யூனிச எதிர்பிரச்சாரத்தை செய்ய ஐரோப்பா வந்தபோது படுகொலை செய்யப்பட்ட சபாலிங்கத்துக்கு வஞ்சகம் செய்த போதே அது புரிந்தது. பாரிசில் படுகொலை செய்யப்பட்ட நாதன், கஜன் கொலைக்கான குற்றவாளியை கண்டுபிடிக்ககோரி சரியாகவும் நியாயமாகவும் பிரஞ்சு தூதரகம் முன் சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்த அ.மார்க்ஸ் அதில் சபாலிங்கம் பற்றிய விசாரனையை செய்ய கோராத மர்மம் தான் அ.மார்க்சின் வன்முறைகள் மீதான விளிம் நிலைப் பார்வையாகும். இதே போல் புலிகளால் கடத்தப்பட்டு பின்னால் செல்வியை கொன்றுபோட்ட புலிகளை நோக்கி இந்தியாவில் சிலர் கையெழுத்திட்ட அறிக்கையில் இருந்த அ.மார்க்ஸ்சின் பெயரை அவரின் அனுமதியின்றி இருந்ததாக கூறி ஜனநாயகத்தை வன்முறையில் நியாயப்படுத்தியவர். இப்படி பல.

இந்தியாவில் தலித் மற்றும் தமிழ் இனக் குழுக்கள் புலியை ஆதரிக்கும் போது,  புலியின் மக்கள் விரோத  வன்முறையை ஆதரிக்கும் போது அ.மார்க்ஸ்சின் ஆதரவுகள் இதை பலப்படுத்தி வரும் கூத்தடிப்பே இதன் அரசியலாகும்.

ஆட்களுக்கும், நேரத்துக்கும், இடத்துக்கும் இசைவாக கதைப்பதும் பிழைப்பதும் அ.மார்க்ஸ்சின் அரசியல் அகராதி. இதுதான் புலம்பெயர் இலக்கிய செம்மல்;களின் நாய்ப்பிழைப்பாகும். அ.மார்க்ஸ் நடைமுறைவாதிகளை மதிப்பதாக பகிரங்கமாக அறிவித்து நெருக்கடிகளில் இருந்து தப்பும் பிழைப்புவாதமும், கோட்பாட்டில் ஏகாதிபத்திய மாற்றை முன்வைப்பதும் என்ற இரட்டைவேடம் அவரின் நடிப்பு அரசியலாகும்.

புலம்பெயர் இலக்கியம் (இங்கு இவர்களிடம் புலம் பெயர் அரசியல் இல்லை) என்ற பெயரில் கம்யூனிச எதிர்ப்பு அரசியலில் நெருக்கடிகள் என்றுமில்லாத வகையில் படுகுழிக்குள் சிதைந்துவருகின்றது. அது வன்முறை மற்றும் சதிகளை விதைத்துவருகின்றது. இது வன்முறை, சதிகள், அவதூறுகள், கல்வெட்டுகள், ஏகாதிபத்திய அரசுக்கு தகவல் கொடுப்பதிலும் புலம்பெயர் இலக்கியம் எஞ்சிப்போயுள்ளது. இதை தத்துவார்த்தரீதியில் ஏகாதிபத்தியத்துக்கு சேவைசெய்ய கோட்பாட்டுதுறையில் அ.மார்க்சை சார்ந்துள்ளனர். இதன் ஊடாக கம்யூனிச எதிர்ப்பிரச்சாரத்தை ஒழுங்குபடுத்த  செய்யம் முயற்சிகள் ஏகாதிபத்திய முயற்சிபோல் என்னதான் முயன்றாலும் அது பாட்டாளி வர்க்கத்தின் போர்க்குரல் முன் தோற்கடிக்கப்படும். கம்யூனிச எதிர்ப்பு பிரிவுகள் கூடிக்குலவி நடத்தும் விவாதம் எப்படி ஒடுக்கப்பட்ட  மக்களின் நலன்களை, போராட்டத்தை ஒடுக்குவது என்பதை அடிப்படையாக கொண்டது. சமூகபற்றுள்ளவர்கள், சமூகத்தின் துயரத்தை உண்ர்பவர்கள் அதை மாற்ற விரும்புபவர்கள் இந்த கம்யூனிச எதிர்ப்பு கூத்தடிப்பை புறக்கணித்து அம்பலப்படுத்த வேண்டியது சமூக நோக்குள்ளவர்களின் முன்னுள்ள ஒரேயொரு பணியாகும்.

பி.இரயாகரன்

15.12.1999

இந்த துண்டு பிரசுரம் வெளியாகிய பின்னால் கூட்டம் அரசியற்ற, நேர்மையற்ற நடத்தைகள் மூலம் சோரம் போனது. கம்யூனிச எதிர்பாளர்களும், தமிழ் மக்களின் தேசிய சுயநிர்ணய எதிர்பாளர்களும் கூடிக் குடித்து கும்மளம் அடித்தனர். மக்கள் சுரண்டப்படுவதையும் அதனால் ஏற்பட்ட மனித அவலங்களை எதிர்த்து போராடும் கம்யூனிசத்தை எதிர்த்து, கோட்பாட்டில் (முதலாளித்துவத்துக்கு பிந்திய காலம்  எகாதிபத்தியம் சகாப்தம் என்பதற்கு பதில், அதை பின்நவீனத்துவமாக்கி) எகாதிபத்திய விசுவாசிகளும், தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை மறுத்து சிங்கள இனவாதத்துக்கு அன்னக் காவடியை கோட்பாட்டில் எடுப்பவர்களும்,  இந்திய இலங்கை அரசுடன் கூடிக் குலாவி திரியும் இழிந்த அடியாட் படைகளான இ.பி.ஆர்.எல்.எப் (வரதர், பிரமச்சந்திரன் குழுக்ககள் முரண்பாடு இன்றி) மற்றும் ஈரோஸ் கும்பலுகளும், கேள்விக்கு பதிவைக்காத நழுவல் விலாங்குகலும், நிறமாற்றியே இலக்கியம் செய்யும் ஓணான்களும் இனைந்து கம்யூனிசத்துக்கு எதிராக பிதற்றினர். கம்யூனிசம் இறந்து போய்விட்டது என்று பிதற்றியதன் மூலம், சுரண்டல் நிரந்தரமனதாகவும், அதுவே ஜனநாயகமானது என்று பின்நவீனத்துவ பன்றித் தொழுவ சந்திப்பில் நின்று தமது ஏகாதிபத்திய விசுவசத்தை உறுதிசெய்தனர். இதன் மூலம் ஆணாதிக்கம், சாதியம் போன்ற அனைத்து மனித அவலத்தையும் மறைமுகமாக பாதுகாக்க பின்நிற்க்கவில்லை.

புலிகளின் மக்கள் விரோத்தை அதன் சொந்த அணிகள், ஆதாரவளர்கள் எப்படி நியாயப்படுத்துகின்றனரோ, அதையோத்த வகையில் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதில் இன்றி, கடந்த இயக்க அரசியல் பாதையில் சோரம் போக இதில் கலந்து கொண்ட எந்த நபரும் தயங்கியத்தில்லை. சமூகப் பிரச்சனைக்கு எப்படி, என்ன வழியில் சமூக ரீதியாக தீர்க்க முடியும், நாம் என்ன செய்ய முடியும் என்ற எந்த கேள்விக்கு பதிலின்றி, அரட்டை அரங்குகள் நடத்தியே சமூகத்தையே கொச்சைப்படுத்துகின்றனர், கேவலப்படுத்தினர்.

மழைக்கு முளைக்கும் நஞ்சுக் களான் போல, பாரிசில் தீடிரென புலம் பெயர் சஞ்சிகைகள், சமூக இருட்டுக்குள் வெளிறிப் போய் வெளிவருகின்றன. கடந்தகால சமூகத் தொடர்ச்சியற்ற, எந்த விதமான சமூக நோக்கமும் இன்றி வெளிவரும் இச் சஞ்சிகள் உள்ளடகத்திலும், சொந்த நடத்தைகளிலும், ஒடுக்கப்பட்ட எந்த மக்கள் பிரிவையும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. அதை  வெளிப்படுத்தும் வகையில் அதன் சமூக அரசியல் வழியை வைத்ததில்லை. ஏகாதிபத்திய கழிசடை பண்பாடுகளை அப்படியே மீள வந்தியெடுத்து, முற்போக்காக காட்டுதில் மட்டும் வேட்டியை உரிந்து காட்டுகின்றனர். இந்தக் கும்பல் ஏகாதிபத்திய நடத்தைகளில் இருந்து எந்த வகையில் வேறுபட்டு, தமது கருத்தை முன்வைக்கின்றோம் என்பதை விளக்க முடியாத ஓரே உள்ளடகத்தையே பிரதிபலிக்கின்றனர்.

தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை மறுக்கும் இந்தக் கும்பல், புலி எதிர்ப்பில் முற்போக்கு வேடம் போடுகின்றனர். புலியை எந்த வகையில் எதிர்க்கின்றீர்கள்?, நீங்கள் எதிhப்பதற்கு மற்றாக எதை முன்வைக்கின்றீர்கள்? என்று கேட்டால், எதுவுமில்லை. மாறாக இலங்கை அரசின் பாசிச இனவாததத்தையே அப்படியே புலி எதிர்ப்பில் கொள்கின்றனர். இலங்கை இனவாத அரசின் இன அழிப்பில் புலி பயங்கரவாத்தை ஒழிப்பதாக பிரகடனம் செய்யும் போக்கில், இலங்கை அரசுடன் முரண்பாடற்ற ஒற்றைக் கோட்பாட்டாளார்களாக இருக்கின்றனர். தமிழ் மக்கள் இனவாத ரீதியாக அடக்கப்படுவதை மறுக்கும் இந்தக் கும்பல், தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை மறுப்பதுடன் கேலி செய்பவர்களாக இருக்கின்றனர். அரசியலற்ற சிங்கள இனவாத அரசு சார்பு புலியெதிர்ப்பு கும்பல்கள் எல்லாம் இனைந்து, பிழைப்புவாதியான அ.மார்க்ஸ்சுடன் எப்படி மக்கள் விரோதமாக செயல்பட முடியும் என்று, சாதி அரசியலையும், பிரதேசவாதத்தையும் முன் வைத்து அரட்டை அடித்தனர்.

இக் கூட்டத்தில் அரசியல் காரணத்தால் கலந்து கொள்ளாதவர்கள் சார்பாக வெளியிட்ட துண்டுப்பிரசுரத்துக்கு (மேல் உள்ளது), ஒரு வரி பதில் கூட தரமுடியாதவர்கள், எக்சில் இதழில் சாதி சொல்லியே திட்டமுடிந்தது. ஏகாதிபத்திய மற்றும் பெரும் சிங்கள இனவாத விபச்சாரத்தை முற்போக்காக, சாதி அடையாளம் கொடுத்து முத்திரை குத்தும் இவர்கள், பிரதேசவாத்தையும் முன்வைத்து புலம்பமுடிகின்றது. பகிஸ்கரித்தவர்களின் பிறப்பால் மிகவும் பிற்பட்ட சாதி பிரிவுகளும் இருந்தும், ஒட்டு மொத்தமாக உயர் சாதி அடையாளம் கொடுக்க, பிறப்பால் உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் மழைக்கு முளைக்கும் நஞ்சுக் களானாக "தலித்துகள்"யாகி முத்திரை குத்த தயங்கவில்லை.

அ.மார்க்ஸ் பகிஸ்கரித்த பிற்பட்ட சாதி நபரை (எக்சில் மதிப்பீட்டின் படி இவர் பகிஸ்கரித்தால், இவர் வெள்ளார்) பாரிஸ் தேனீர் கடையில் அவருடன் இருந்த நபர்களால் அடையாளப்படுத்திய போது, தலைகால் தெரியாத உச்ச "தலித்" வெறியில் கட்டிப்பிடித்து, அரசிலில் சோரம் போக அழைத்த போது, நாங்கள் "தலித்" என்று புலம்ப பின்நிற்க்கவில்லை. அ.மார்க்ஸ் பாரிஸ்சில் பின்நவீனத்துவ தலித் சுற்றுப்பயணம் செய்த காலத்தில் "தலித்" தண்ணியில் மிதந்தார். "தலித்"துகள் குடிப்பது புரட்சி என்ற தலித் கோட்பாட்டுக்கு இனங்க, பாரிஸ் தமிழ் தேனீர் கடைகளில் இவர்களின் (அ.மார்க்சின்) மிதமிஞ்சிய வாந்திகளை, அங்குள்ள தொழிலாளர்கள் துடைத்தெடுக்கும் அளவுக்கு, அரசியல் இழிவுகளை அரங்கேற்ற பின்நிற்கவில்லை. இந்த கும்பலைச் சேர்ந்தவர், தன் பெயருக்கு முன் "கவிஞர்" பெயர் தானே போட்டவர், "தலித் என்ன சமாத்திய சடங்கு செய்யக் கூடாதா?" என்று கூறியபடி, 21 காரட் தங்க செயினை இதற்காக அணிந்தபடி, அண்மையில் ஆணாதிக்க சமாத்திய சடங்கை நியாயப்படுத்தி முன்னின்று செய்த போது, சாதி அரசியல் மூலம் தமது பிற்போக்கு ஆணாதிக்க நடத்தைகளுக்கும், முற்போக்கு கழிசடை வேடம் போட பின்நிற்க்கவில்லை. இவர்கள்தான் பின்நவீனத்துவ வழியில் தலித் பெண்ணியம் பேசுபவர்கள். அ.மார்க்சின் நம்பிக்கைக்குரிய எடுபிடிகளான இவர்களின் இந்த இழிந்த நடத்தைகளை எல்லாம், கூடி கூத்தடிக்கும் இந்த கும்பல் விமர்சிப்பதில்லை. ஆனால் பெண்ணியம் பேசும் இவர்கள், ஆணாதிக்கவழியில் கூடி திண்டு புரண்டு எழுவதில், சாக்கடையாக தம்மை அடையாளம் காட்ட என்றும் பின்நிற்கவில்லை. இவர்கள் எல்லாம் கூடி நடத்திய சந்திப்பில், நான் துண்டுப்பிரசுரம் மூலம் எழுப்பிய கேள்விக்கு ஒரு வரிதன்னும் பதிலாளித்ததில்;லை. ஆனால் பதிலாளித்தாக எக்ஸில் எழுதும் போது, அது அப்பட்டமான முழுப் பொய்யாக இருப்பதுடன், பதிலிருந்து ஒரு வரிதன்னும் பதிலாக முன்வைக்கமுடியவில்லை. மறாக எக்ஸ்சில் சஞ்சிகையில் சாதி சொல்லி திட்டமுடிந்தது அவ்வளவே. இவர்கள் மேலும் தமது ஏகாதிபத்திய ஆதாரவுடன் கூடிய சிங்கள இனவாத சார்பை நியாப்படுத்த பிரதேசவாதமாக்கி, முற்போக்கை இழிவாக்க, தம்மால் இயன்ற அனைத்தையும் தொடர்ச்சியாக செய்கின்றனர். இந்த சமூகச் சீராழிவு கும்பல்கள், சமூகத் தொடர்ச்சியற்ற இலக்கிய சஞ்சிகைகளின் உருவக்கத்திலேயே, அதன் நடைமுறையிலேயே தம்மை இனம் காட்டிவருகின்றனர். விலாங்கு மீனாக வாலையும் தலையையும் காட்டி  நழுவி வாழும் இலக்கிய உலகம், தனது சொந்த விபச்சாரத்தில் நியாயப்படுத்தியே, தன்னை முற்போக்கு சமூக ஒழுக்கத்தின் காதநயகனாக காட்ட எல்லா முயற்சியிலும் ஈடுபடுகின்றது. இதை இனம் கண்பதும், புறக்கணிப்பதும், அம்பலம் செய்வது இன்றைய சமூக நோக்கமுள்ளவர்களின் கட்டாய சமூகக் கடமையாகும்.