நீட்சே எதை சமுதாயத்தின் மிக உயர்ந்த பண்பாக வருணிக்கின்றாரோ, அதுவே  சுரண்டலில் தொடங்கி ஆணாதிக்கம் ஈறாக யதார்த்த மனிதப் பண்பாகவுள்ளது. "காமவேகம், வலிமை சக்திக்கு ஆசை, சுயநலம் இம் மூன்றும் தான் முப்பெருந் தீமைகளாகப் பன்னெடுங் காலமாகச் சபிக்கப்பட்டு வருதிருக்கின்றன. ஆனால் அம்மூன்றும் தான் மனிதத் தன்மையில் நல்லனவாக நான் எடை போடுகிறேன்"1 என்று சமுதாயத்தை பிளந்து, அதில் இதைச் சாதிக்கும் சிறுகூட்டத்தின் திமிர்த்தனத்தையே நீட்சே, உயர்வான மனிதப் பண்பாக காட்டமுயல்கின்றார். காமம், ஆசை, சுயநலம் என்பன மனித சமுதாயத்தை பிளந்து அதில் சிலர் மட்டும் பெரும்பான்மைக்கு எதிராக அனுபவிக்க கூடியவை. சமுதாயப் பிளவு இந்த சமுதாயத்தில் இல்லாத வரை, இதை ஒருக்காலும் யாராலும் சாதிக்க முடியாது. சமுதாயப் பிளவற்றதாக இருக்கின்ற போது, இந்த உணர்ச்சிகள் சார்ந்த மனித இழிவுகள் கற்பிதமாக மாறிவிடுகின்றது. உலகமயமாதல் சரி நாசிகளின் பாசிசம் சரி மூலதனத்தை பெருக்கவும் பாதுகாக்கவும் இதையே ஆதிமூல மந்திரமாக, தனிமனித நடத்தையாக கொண்டே, கோடான கோடி மக்களின் உதிரத்தையே உறுஞ்சிச் சுவைத்து ரசிக்கின்றது. இதை நீட்சே இயற்கையின் விதி என்கிறார். "உயிர் வாழ்பிறவிகள் அனைத்திடமும் கொள்ளையடிப்பதும், கொலை புரிவதும் லட்சணங்களாக அமைந்திருக்கின்றனவே! இயற்கை நியதி அது தான் அல்லவா?" என்று கூறி உயிரியல் விதியையே திரித்து கொள்ளையடிக்கவும், கொலை புரியவும் உரிமை உண்டு என்று, உரக்க பாசிட் கோட்பாட்டாளனாக மூலதனத்தின் பாதுகாவலனாக பிரகடனம் செய்கின்றார். உயிர்த் தொகுதிகளில் இரண்டு வேறுபட்ட உயிர்களுக்கிடையில் உணவுக்கான போராட்டம் கொலையோ, கொள்ளையோ அல்ல. இயற்கை அதற்கு அப்படி பெயரிட்டதில்லை. இயற்கை மறுத்த வர்க்க சமுதாயத்தின் சுரண்டல் பண்பாக உழைப்பை திருடிய போதே, இது கொள்ளையாகவும் கொலையாகவும் அடையாளம் காணப்பட்டது. கொலையும் கொள்ளையடிப்பதும் மனித இயல்புகளாக வர்க்க சமுதாயத்தில் மனித உழைப்பை சுரண்டியதால் உருவானவை தான். உயிர்த் தொகுதியில் உயிர் வாழ்தல் என்ற அடிப்படையில் மட்டும் ஒன்றை ஒன்று உண்டு வாழ்வது நிகழ்கின்றது. இது சங்கிலித் தொடராக சுழற்சியாக நிகழ்கின்றது. ஆனால் மனிதன் அதை அப்பட்டமாக நிர்வாணமாக மீறுகின்றான்; மற்றவன் உழைப்பைச் சுரண்டி உபரியை திரட்டவும், அதைக் மூலதனமாக்கி அதை கொண்டு அடிமைப்படுத்தவும், மற்றைய உயிரினங்களை கொன்று கொள்ளையிடுவது என்ற பண்பு இயற்கையானது அல்ல. அடுத்து சொந்த மனித இனத்துக்குள் மற்றவன் உழைப்பை சுரண்டி கொள்ளையிட்டு கொன்று போடும் தன்மை, உயிரியல் தொகுதியின் இயற்கையானவையல்ல. மனித இனம் இன்று உயிர்வாழ்வதற்குரிய மனிதப் பண்புக்கு இது நேர் எதிரானது. மனிதனை மனிதன் கொன்று அழித்து கொள்ளையிட்டிருப்பின், மனிதன் காட்டுமிரான்டி சமூகத்தை தாண்டி ஒரு நாள் கூட உயிர் வாழ்ந்திருக்க முடியாது. நீட்சேயின் கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு சுயநலத்தில் ஆசைப்பட்டு காமத்துடன் அலைந்து, கொள்ளையிலும் கொலையிலும் கொழுத்து எழும் பூதமாகவே உலகமயமாதல் காணப்படுகின்றது. இதன் பண்பாடு, பொருளாதார கலாச்சார அலகுகள் அனைத்துமே, விதிவிலக்கின்றி இதுவே தாரக மந்திரமாக உயிருடன் உலாவருகின்றது. இதை தீவிரமாக்க வர்க்கப் போராட்டத்தை அடக்கியொடுக்க, பாசிசத்தையே அதன் மூல மந்திரமாக கொண்டு கூத்தடிக்கின்றது. சமுதாயத்தைப் பற்றி சிந்திப்பதை வெறுக்கும் நீட்சே " ~மானுஷிகத்தின் எதிர்காலத்திற்கு மிகக்கொடிய விபத்தை விளைவிப்பவர்கள் நன்மை நியாயம்" என்கிற வாதங்களைப் பேசித்திரிகிறவர்கள் தான்! தீங்கானவர்களின் செயலைக் காட்டிலும்  இந்த நன்மை வாதிகளின் செயல் தான் மிகக் கெடுதலானவை."1 என்று கூறுவதன் மூலம் சமுதாய நலன் சார்ந்த நடத்தைகள் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகின்றான். நன்மை, நியாயம் என்பன இந்த வர்க்க சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக இருப்பது, நீட்சேக்கு அருவருப்பூட்டி வெறுப்பூட்டுவதாக இருக்கின்றது. இதனால் சமுதாய நலன்களை தூற்றுவது, இது இருக்கின்ற சுரண்டல் அமைப்புக்கு தீங்கானவை என்றும், ஆபாத்தானவை என்று கூறி வெறுப்பதில் வக்கரிக்கின்றான்.

நீட்சேயின் கோட்பாடுகள் சுற்றிச் சுழன்று  எதை நிறுவ முனைகின்றது. ஐரோப்பாவில் உருவான மையப்படுத்தப்பட்ட தேசிய முதலாளித்துவ அரசுகளை அடிப்படையாக கொண்டு, ஜேர்மனிய தேசத்தில் சிதறுண்டு கிடந்த ஐக்கியமற்ற பழைய நிலப்பிரபுத்துவ எச்சசொச்சத்தினை எதிர்த்தே நீட்சே தன்னை அடையாளம் காட்டியுள்ளார். அதை இவர் "... உங்களுடைய குழந்தைகளின் நாடு என்பது இன்னும் கண்டு பிடிக்கப்படாமல்"1 இருக்கிறது என்று கூறியபடி ஜேர்மனிய ஐக்கியத்துக்கு மறைமுகமான தடையாக கிறிஸ்தவ மதம் இருப்பதை கண்டார். இதில் இருந்து கிறிஸ்தவத்தை மட்டும் எதிர்த்ததுடன், ஐக்கியத்தை சாதிக்கவல்ல மாமனிதர்களை தேடினார். மற்றைய மதங்கள் மீது தனது ஆதரவை தெரிவித்தார். அதை அவர் "..தற்காலத்திய தத்துவ ஞானம் மதத்திற்கு  எதிர்ப்பல்ல. ஆனால் கிறிஸ்தவ மதத்திற்கு விரோதமானதென்றே கூறியாக வேண்டும்"2 என்று கூறி, ஜேர்மனிய ஐக்கியத்தை அடைய வன்முறையையும், ஈவிரக்கமற்ற சர்வாதிகாரத்தையும் கோரி, அதைப் புகழ்ந்தே தத்துவத்தை உருவாக்கினார். கிறிஸ்தவ எதிர்ப்பை ஜெர்மனிய ஐக்கியத்தின் பின்பும், நாசி பாசிச தேசியவாதத்தில் நீட்சே வெளிப்படுத்த தயங்கவில்லை. "கடவுளை மறுக்கும் நாஸ்திகவாதம் முன்பு கொடிய குற்றமாயிருந்தது; கடவுள் செத்துப் போனதால் நாஸ்திகர்களும் செத்துப் போனார்கள்; இப்போதைய நாஸ்திகவாதம் இந்த மண்ணை மறுப்பதும் தூற்றுவதுமேயாகும்;"1 என்றதன் ஊடாக சர்வதேசிய நாஸ்திகத்தை மறுத்து, பாசிச தேசிய நாசிசத்தை இலட்சியமாக கொண்டதுடன், அடிமட்ட உழைக்கும் மக்களை இழிந்த அற்பமனிதராக சித்தரிக்க தயங்கவில்லை.. இதை சாதிக்க  உழைக்கும் மக்களின் போராட்டத்தை வெறுப்பதில் தனது கோட்பாட்டை அடிப்படையாக கொண்டார். ஜேர்மனி ஐக்கியத்தை வந்தடைய கொடூரமான வன்முறை கொண்ட யுத்தம் அவசியம் என்று கருதியதுடன், அதை சாதிக்க அன்னிய படையெடுப்புகளைக் கூட ஆதரித்தார். ஜெர்மனி அக்காலகட்டத்தில் ஈடுபட்ட அனைத்து யுத்தத்திலும், அவராக முன்வந்து இயன்ற பங்களிப்பை வழங்குவதில் முன்னோடியாகவும், அதை பாதுகாப்பதில் ஒரு கோட்பாட்டாளனாகவும் இருந்தான். மாமனித கோட்பாடு கிறிஸ்தவத்துக்கு பதிலாக,  பார்ப்பணிய கருத்துமுதல்வாதத்தை அடிப்படையாக கொண்டு, பெண்கள் மேலான ஆணாதிக்கத்தை ஆணின் வலிமையாக பிரகடனம் செய்தபடி, ஒரு நிற இனவாதியாக உழைக்கும் மக்களை வெறுக்கும் ஒரு பாசிட்டாகவே நீட்சே இருந்தான். இதை அவரின் கோட்பாடுகள் தெளிவுபடவே தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது. இதை அவன் "வலிமையும் பேராசையுங் கொண்ட ஒருவனது தலைமை ஒரு காலத்தில் சமுதாயத்தின் பாதுகாப்புக்கும் முன்னேற்றத்திற்கும் இன்றியமையாததாகக் கருதப்பட்டது. அதுவே ஒழுக்கமுறையென்றும் எண்ணப்பட்டது. நாள்ளடவில் இந்நிலைமாறி, அத்தகைய ஒருவனின் தலைமை சர்வாதிகாரமாகத் தோன்ற ஆரம்பித்த போது அந்த ஒழுக்கமுறை ஒழுங்கீனமாகச் சி;த்தரிக்கப்பட்டது. ஒரு சமுதாயத்தின் பாதுகாப்பிற்கும் முன்னேற்றத்திற்கும் உபயோகமாயிருப்பது எதுவோ அது அபாயகரமானது..."1 என்று  கூறும் பாசிட்டான நீட்சே, மூலதன அமைப்பின் பாதுகாப்புக்கும் முன்னேற்றத்திற்கும் சர்வாதிகார பாசிசம் அவசியமானது என்பதையே இதன் ஊடாக பிரகடனம் செய்கின்றார்.

"விலங்கிலிருந்து நீ மனிதவிலங்கானது காணும், இனி நீ மனிதவிலங்கிலிருந்து மனிதனாகும் தருணம் வந்துவிட்டது"3 என்று நீட்சே கூறியதை தூக்கி நிறுத்தும் போது, இங்கு இதன் உள்ளடக்கத்தை நீட்சேயின் பாசிச வாதங்களில் இருந்து திரித்தே மறைக்கின்றனர். மனித விலங்கில் இருந்து மனிதனாவது என்பது, மாமனிதன் என்பதை குறித்தே நீட்சே சொல்லுகின்றார். இதை அடையும் பாதை கொள்ளையும் கொலையையும் அடிப்படையாக கொண்டு சர்வாதிகாரத்தை அடிப்படையாக கொண்டு வஞ்சகம், சூது என அனைத்து மக்களையும் மிதித்து தான் அடைய முடியும் என்கிறார். இதை கட்டுரையில் ஆழமாக விரிவாக பின்னால் பார்ப்போம்;. மாமனிதன் என்பது மனிதனில் இருந்து விலகிச் செல்லும் ஒரு கருத்து முதல்வாதமாகும்;. அத்துடன் இந்த மனிதனாகும் மாமனித தன்மையை, சுரண்டலை அடிப்படையாக கொண்ட அனைத்து மனித பிளவின் ஏற்றத்தாழ்வின் வலிமையில் சாதிக்க முடியும் என்கிறான்;. இந்த கோட்பாட்டைத் தான் ஆரிய இனம் சார்ந்து, யூத இனத்தை அடக்கியொடுக்கி உலகை ஆக்கிரமித்து, கிட்லர் நிறுவமுனைந்தான். நீட்சே சாதாரண மக்களை மனிதனாக்கும் முயற்சியில், அதாவது மாமனிதனாக்கும் முயற்சியில் ஈடுபடுவதை கேவலமாக கருதியவன். அவன் அதை " ~உயர் மனிதர்களே, என்னிடமிருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது சந்தைச் சதுக்கத்தில் உயர் மனிதர்களைப் பற்றிய நம்பிக்கை எவருக்கும் இல்லை என்பதாகும்: சந்தைச் சதுக்கத்தில் கூடி நிற்கிற பாமரர்களிடையே நீங்கள் பேசினால் ~உயர் மனிதர்களே!| நாமெல்லாம் சமம் நம்மிடையே ~உயர் மனிதர்-தாழ்ந்த மனிதர்| இல்லை என்ற பாமரத்தனமாக அவர்கள் பதிலளிப்பார்கள்!... எனவே, உயர் மனிதர்களே, சந்தைச் சதுக்கத்தை விட்டுத் தூரவிலகுங்கள்!... மனிதன் இன்னும் தீமையானவனாக வேண்டும் என்பது தான் எனது போதனை! ஏனெனின் மகாமனிதத் தன்மைக்கு தீமை இன்றியமையாததாகும். பாமரர்களின் போதகாசிரியர்களுக்கு வேண்டுமானால் பாவம் ஒரு சுமையாகத் தோன்றலாம். ஆனால் எனக்கோ மகா பாவம் மகிழ்ச்சிக்குரியதாகவும் மன ஆறுதலளிப்பதாகவும் இருக்கிறது!"1 என்று மக்களைப் பற்றிய தனது வர்க்க வெறுப்பை நீட்சே வெளிப்படுத்துகின்றான். சிலர் தான் உலகத்தை உருவாக்குபவர்கள், அவர்களின் உயர்ந்த வாழ்வே உன்னதமானது என்று சுரண்டும் வர்க்கம் சார்ந்து பிதற்றுகின்றான். கிட்லர் முதல் மூலதனத்தின் தந்தைகள் அனைவரும், இங்கிருந்தே தமது கொடூரங்களுக்கு தத்துவ விளக்கம் பெறுகின்றனர். சமுதாயத்தின் பிளவு நீடிக்கும் வரை மனித அடிமையாக, மூலதனத்தின் இயந்திர உறுப்பாக, அடிமை நாயாக இருப்பவன் மனிதனாக முடியாது. விலங்கு மனிதனாக பாமர அடிமை மக்களை திரித்து சித்தரிக்கும் நீட்சே, உயர் மனிதனாக சுரண்டலில் சொகுசாக வாழ்ந்து தித்திக்கும் அனைத்து மனித விலங்குகளையுமே மனிதனாக அதாவது மாமனிதனாக சித்தரிக்கின்றார். பாமர மக்களின் மனிதப் பண்பையே விலங்கு மனிதத் தன்மையாக காட்டும் நீட்சே, மனித சமுதாயத்தின் மக்கள் விரோதியாக திகழ்வதை அவரின் தத்துவ விளக்கமே நிர்வாணப்படுத்துகின்றது.

இதை அவர் மேலும் "சம உரிமைகள், துன்புறுவோரிடம் அனுதாபம் ஆகிய கொள்கைகளை ஏந்திக் கொண்டு சிலர் துன்பத்தை அறவே ஒழித்துவிட வேண்டுமென்று படாதபாடுபடுகின்றனர். மனிதன் பலவாறான துன்பத்திற்கும் அடிமைத்தனத்திற்குமிடையே தான் வளர்ந்து வந்திருக்கிறான் என்பதாகும். ஆகவே துன்பங்களுக்கு அழிவு தேடுவதும், உயர்வு தாழ்வுகளை நீக்க முனைவதும் மனித வளர்ச்சிக்குத் தடைபோடுவதாகும். பலவிதத் துன்பங்களும், கொடுங்கோன்மையுங் கூட மனித வர்க்கத்தை உயர்த்தவே பயன்பட்டன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்;. பல்வேறு கட்டங்களிலும்,  பலவித நிலைமைகளிலும் அல்லலுற்று இரவு பகலாக உழைத்துப் புதிய  இனங்களாகப் பரிணாமமாகிக் கொண்டு வருகிறவர்கள் நாங்கள்! என்று கூறிக் கொள்வதில் தான் சுதந்திர ஆத்மாக்கள் பெருமிதமடையக்கூடும்!"1 என்று அப்பட்டமான ஒரு சுரண்டும் வர்க்க பாசிட்டாக நாசிசத்தை கோட்பாடாக கூறுவதையே, பின்நவீனத்துவ தலித்தியல்வாதிகள் தலையில் தூக்கி முன்நிறுத்துகின்றனர். மனிதனின் சமத்துவத்தை மறுத்து ஒதுக்கும் பார்ப்பானியம் முதல் சுரண்டல் ஆணாதிக்கம் ஈறாக, நீட்சேயின் கோட்பாட்டால் தாலாட்டுப் பெறுகின்றது. அதே நேரம் பார்ப்பானியத்திடம் இருந்தே இதை மீள எடுத்து முன்வைக்க நீட்சே தவறவில்லை.

உயர் மனிதனை உருவாக்கவும், சிலரை பாதுகாக்கவும் மக்களின் கல்வியறிவை மறுத்து  நீட்சே " படிக்கக் கற்றுக் கொள்வதற்கு ஒவ்வொருவரும் அனுமதிக்கப்படுகிறார்கள். இது நாளடைவில் எழுதுவதை மட்டுமல்ல, சிந்திப்பதையும் அழித்து விடுகிறது."1 என்று தனது பாசிச சுரண்டல் வர்க்கப் பண்பை வெளிப்படுத்தி நிற்கின்றான். எல்லோரும் படிப்பதும் எல்லோரும் சமூக அறிவு பெற்று எழுத, சிந்திக்க வெளிக்கிட்டால், தன்னைப் போன்ற உயர் மனிதர்களின் கதி என்னாவது என்ற கவலையுடன் கூடிய, தனிச் சொத்துரிமை நலன்களை எண்ணியே இதை பீதியுடன் வெளிப்படுத்துகின்றான்;. இலக்கியம் பேசும் பலர் அது சிறந்த தனித்தன்மை உள்ளவர்களிடம் மட்டும் இருப்பதாக பீற்றுவதற்கு இது கோட்பாட்டு ரீதியாக முண்டு கொடுக்கின்றது. கலை, இலக்கிய,..... ஆற்றல் எல்லா மக்களிடமும் விதிவிலக்கின்றி இருப்பதுடன், அதை வெளிப்படுத்தும் ஆற்றல் சமூக பொருளாதார வர்க்க வேறுபாட்டால் ஏற்ற இறக்கம் கொண்டமையால், இவை சிலருக்கு சாதகமாகவும் பலருக்கு பாதகமாகவும் இருப்பதால், இவை சிலரிடம் தங்கிவிடுவதால், சிலர் தம்மை மாமனிதர்களாக மக்களை இழிவாக கீழே எட்டி உதைக்கின்றனர். இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டு அதை இல்லாமல் பண்ணுவதன் மூலம், மாமனிதர்களை பாதுகாக்கவும் உருவாக்கவும் முடியும் என்பதே நீட்சேயின் தலையாய கோட்பாட்டு உள்ளடக்கமாகும். இதனால் தான் மாமனிதக் கனவு இலக்கியவாதிகள், நீட்சேக்கு காவடி எடுத்து பக்கத்தை ஒதுக்கி முன்னுரிமை கொடுத்து எழுதுகின்றனர். இன்று தமிழில் நீட்சே முன்னிறுத்த முனையும் தலித்தியல்வாதிகள், பின்நவீனத்துவவாதிகள், ஒரு பக்கத்தை மட்டும் திரித்துக் காட்டியே பார்ப்பணியத்துக்கு மறைமுகமாக கோட்பாட்டு உதவி செய்து பாதுகாப்பு கொடுக்கின்றனர். இங்கு நீட்சே பார்ப்பணிய தத்துவங்களை ஏற்றுக் கொண்டதுடன், மனுவின் திட்டத்தையே தான் கொண்டிருப்பதாகவே |கிறிஸ்துவுக்கு எதிர்ப்பு| என்ற நூலில் நீட்சே கூறத் தவறவில்லை. இங்கு கிறிஸ்துக்கு பதில் அவர் பார்ப்பணிய மனுவின் கோட்பாடுகளையே ஜேர்மனியில் மீள முன்வைத்தான்;. அதை அவன் "பொய்மைகள் எந்த அளவுக்கு கேடுவிளைவித்துள்ளன என்பது கேள்வி? உண்மையில் கிறிஸ்துவத்தில் புனித முடிவுகள் முழுமையாக இல்லாதபோதிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவது பற்றியே என்னுடைய மறுப்பு அமைந்துள்ளது. அதன் முடிவுகள் தவறான முடிவுகளாகவே உள்ளன. நஞ்சூட்டுதல், பழித்துக்கூறல், வாழ்க்கை மறுப்பு, உடலை வெறுத்தல், பாவத்தை அற்பமாகக் கருதல் ஆகியவற்றின் காரணமாக மனிதன் தரங்கெட்டுத் தாழ்வுறுதல் - இவற்றின் விளைவாக அதன் வழமைகள் தவறானவையாகின்றன. இணையற்றதும் உயர்ந்ததுமான மனுவின் நூலை நான் படித்தறிந்த போது என் உணர்வுகள் மாறின. இதே போன்ற உணர்வுடன் விவிலிய நூலைப் பாராட்டியுரைப்பது ஒரு பாவமென்பேன். இவ்வாறு உரைப்பதற்கு நேரிய தத்துவார்த்த பின்னணி உள்ளதேன் என்பதை நீங்கள் உடனடியாக யூகித்துணர இயலும். யூதர்களின் யூதமத குருமார்களுக்குரிய கோட்பாடுகள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றின் பிழிவாக உள்ள துர்நாற்றம் மட்டுமல்ல இதிலுள்ளவை."2 என்று பிடகடனம் செய்வதன் மூலம் கிறிஸ்தவ எதிர்ப்பின் பின்னுள்ள நோக்கத்தை நிர்வாணப்படுத்தி, பார்ப்பணிய சித்தாந்த பாசிச வாதியாக நீட்சே அடையாளப்படுத்துகின்றார். கிறிஸ்தவ எதிர்ப்பு என்பதை அவர் இன அடையாளம் ஊடாக காண்கின்றார். ஜேர்மனிய இனம் மற்றவற்றைவிட மேலாக இருக்க வேண்டும் என்பதில் இருந்தே, கிறிஸ்தவ எதிர்ப்பை அடிப்படையாக கொள்கின்றார். கிறிஸ்தவம் யூத மதத்தின் சிலகூறுகளை கொண்டிருப்பதால் தான், அது கறைபட்டு இழிந்து போனதாக விளக்கி கிறிஸ்தவத்தை தூற்றுகின்றார். இதன் ஊடாக யூத இனம் மற்றும் மதத்துக்கு எதிர்ப்பாளனாக மாறியதுடன், அதை உட்கொண்ட கிறிஸ்தவத்தை மறுக்கின்றார். அதற்கு மாறாக பார்ப்பணியத்தை அதுவும் மனுவின் சாதிய படி முறையை ஏற்றுக் கொள்கின்றார். சாதியப் படி முறை உயர் மனிதர்களின் பாவச் செயல்களுக்கு வருந்துவதில்லை. அதை சாதியப்படி முறையில் போற்றுகின்றது. மனிதர்களின் ஈனத்தனத்தை பார்ப்பணியம் ஒருதலை சார்பாக பார்ப்பணியத்துக்கு சலுகை வழங்கி ஆதரிப்பதால், மனித விரோத குற்றங்கள் சாதிப்படி நிலையில் நியாயப்படுத்தப்படுகின்றது. பார்ப்பணியத்தின் உயர் பொருளாதார நலன்களுக்கு இசைவாக பண்பாடு கலாச்சார கூறுகளை பாதுகாத்து கூறப்படும் விதிகள் மற்றும் ஒழுக்கங்கள், சுரண்டும் பார்ப்பணிய வர்க்கம் சார்ந்து அவனை உயர் மனிதனாக மெச்சி பாதுகாக்கின்றது. இதில் இருந்தே நீட்சே கிறிஸ்தவ எதிர்ப்பை அடிப்படையாக கொண்டு யூத மதத்தை தூற்றி, பார்ப்பணியத்தை மெச்சுகின்றான். அத்துடன் மறுபிறப்பு பற்றிய நம்பிக்கையையும் நீட்சே வெளிப்படுத்தும் போது "லட்சிய சித்தி பெறுவதற்கு முன் அரைகுறையாய் பிரிந்து செல்ல நேருமாயின் ஆவிகள் மீண்டும் பிறந்து முழுவேகத்துடன் தங்கள் இலக்கை நோக்கிச் செல்லக் கூடும்"1 என்று கருத்துமுதல் வாதத்தை கிறிஸ்தவத்தை எதிர்த்தபடி மனுவிடம் தாலாட்டு பெற்று முன்வைக்கின்றார். பார்ப்பணியம் உயர் சாதி, தாழ் சாதி என்ற படிமுறையில் மாமனிதர்களையும், உயர் மனிதர்களையும் உருவாக்கிய சமுதாயப் பிளவை அடிப்படையாக கொண்டே, நீட்சே தனது கிறிஸ்தவ எதிர்ப்பை காக்குகின்றார். இதை பார்ப்பணியத்தின் ஆரிய கண்ணோட்டத்தில் சிறப்பாக பிரதி செய்தவர்கள் தான் நாசிக் கட்சி. யூத எதிர்ப்பை இன மத அடிப்படையில் கக்கிய நீட்சே, ஒருதலைப்பட்சமாக மற்றவன் மனைவியை காதலித்த பின்பு, தானாகவே வலிந்து காதலிக்க வைத்த இரண்டாவது பெண், யூத இனத்தைச் சேர்ந்தவள் என்ற ஒரே காரணத்தால், திருமணம் செய்யாது தீடீரென கைவிட்ட ஒரு நாசி இன மத வெறியானான். இவன் நாசிசத்தின் கோட்பாட்டாளனாக, உழைக்கும் மக்களின் எதிர்ப்பாளனாக ஒரு பாசிட்டாக இருந்தான். அதை அவன் கூறுவதில் இருந்தே நாம் பார்ப்போம்;

"ஜனநாயகம் எனக்கு உடன்பாடல்ல. அது மிகக் கேவலமானதென்றே நான் கருதுகிறேன். மனிதனின் குணங்கள் அழுகிப் போன போது தான் அது உதயமானதாக எனக்குத் தோன்றுகிறது. ஆகவே இப்போது நடைமுறையில்... ...மனித இனத்தை மகத்தான சாகசச்செயலுக்கு ஆயத்தம் பண்ணுவார்கள்; நிஜமான முன்னேற்றத்திற்கு உதவும் கல்வித் திட்டங்களைப் போடுவதற்கான பொறுப்பையும் அவர்களே ஏற்பார்கள்;. அவர்களது தோற்றத்தால் மூடத்தனமான ஆட்சிக் கொள்கை (ஜனநாயகம்) இறந்துபடும். சாதாரண ஜனநாயகமே மூடத்தனம் எனில் சமதர்மத்தை என்னவென்பது!  அது முட்டாள்களின் கொள்கையேயாகும்;. இயற்கையின் நியாயப்பிரகாரம் ஒரு மனிதன்-அவன் சிறம்பம்சங்களில் ஏனையோரைக் காட்டிலும் மேம்பட்டவனாயிருப்பினும் உயர்வடையத் தடைபோடுவது முட்டாள்தனமன்றி வேறேன்னவாக இருக்கக்கூடும்? ஒரு மனிதனுக்குத் தனித்துவம் கிடையாது. அவன் கூட்டத்தின்  ஒரு அங்கமாகவே மதிக்கப்படுவான் என்றால் அவனுக்கு அதைவிடக் கேவலம் வேறில்லை! சமதர்ம அமைப்பில் சிக்கிக்கொள்ளும் அவன் தன் உருவத்தில் சிறுகச்சிறுக குறைந்து குறுகிய மனிதனாகவோ, விலங்காகவோ கூட ஆகிவிடுவான்!."1 இதனால் தான் பார்ப்பணியம், பின்நவீனத்துவம், தலித்தியம், நாசிசம், ஏகாதிபத்திய உலகமயமாதல் நீட்சேயை போற்றி, மனித விடுதலையின் அதி உயர் மாமனிதனாக்குகின்றனர். பொருள்முதல்வாதத்தை மறுத்து, கருத்துமுதல் வாதத்தை அடிப்படையாக கொண்டு சமுதாயத்தில் இருந்து விலகிச் செல்லும் இலக்கிய வாதிகள், நீட்சே முன்னிறுத்தும் இன்றைய நோக்கம் தெளிவுபடவே நிர்வாணமாகின்றது.

நீட்சே முதலாளித்துவ ஜனநாயகத்தையும், பாட்டாளி வர்க்க சமதர்மத்தையும் மறுக்கின்ற போதே, அது அடிப்படையில் உலகமயமாதலின் எல்லா கழிசடைகளையும் மாமனிதராக்கின்றது. மக்கள் இயற்கையில் சமதர்ம்மாக வாழ்ந்தவற்றை மறுக்கின்ற நீட்சே, சிலர் உயர்மனிதர்களாக வாழும் ஏற்றத் தாழ்வைக் கொண்டே சமுதாயத்தை முன்நிறுத்துகின்றார். தனிமனிதனின் தனித்துவத்தை சமதர்மம் மறுக்கின்றது என்பது, நீட்சேயின் திரிபாகும்;. தனிமனிதனை சமுதாயத்தின் முன் எதிரியாக, முரண்பாடக காட்டுவதன் மூலம், சமுதாயத்தை மறுத்த தனிமனித உரிமை பற்றி, நீட்சே தனது கருத்து முதல்வாத பாசிசத்தையே முன்னிறுத்துகின்றார். சமுதாயத்தில் தனிமனிதனின் பங்களிப்பு என்பது முரண்பாட்டுக்குரியவையல்ல. சமுதாயம் என்பது தனிமனிதர்களின் தொகுப்பேயாகும்;. ஆகவே சமுதாய நலன் என்பது, தனிமனிதனின் நலன்களுடன் பின்னிப்பிணைந்தது. சமுதாயத்தை மறுக்கின்ற மாமனித நலன்கள், அடிப்படையில் மக்களுக்கு எதிரானது. இது சமுதாயத்தில் இருந்து விலகிச் செல்லும் மாமனித நடத்தைகள், சமுதாயத்தை ஒட்டச் சுரண்டி அதில் சொகுசுத்தனத்தை அனுபவிக்கின்றது. மனிதர்கள் பரஸ்பரம் ஏற்றத்தாழ்வுகளை கடந்து அங்கீகரித்து தேவைக்கு ஏற்ப நுகர்ந்து வாழும் சமதர்ம சமுதாயத்தை வெறுக்கும் நீட்சே, ஏற்றத் தாழ்வு கொண்ட பாசிச பார்ப்பணிய சமுதாயத்தின் உயர் மனிதர்களின் நலன்களை அடிப்படையில் கோருவதிலேயே, அவர் கோட்பாடுகள் உயர்தன்மை பெறுகின்றது.

இதிலிருந்தே உயர் பிரிவுகளின் மாமனிதர் தத்துவத்தை உருவாக்கியதுடன், கிட்லர் போன்ற பாசிச நாசிகளின் உருவாக்கத்தின் கோட்பாட்டாளராக தனித்தன்மை பெற்றார். இதனால் கிட்லர் நீட்சேயின் மார்பளவு படத்தின் அருகில் நின்று போட்டோ எடுத்தது மட்டுமின்றி, அவரின் கையெழுத்துர் பிரதியை வைத்திருந்ததுடன், பாசிசத்தின் தந்தையாகவே நீட்சே மதிக்கப்பட்டார். இதை நீட்சேயே, தனது கோட்பாட்டை ஏற்க்கும் மாமனிதர்கள் உருவாகுவார்கள் என்பதையும் கூறத் தவறவில்லை. கிட்லர் தனது நாசிச பாசிச பிரச்சார மேடைகளில், நீட்சேயின் சில பகுதிகளை கொள்கைப் பிரகடனமாக உரத்த குரலில் அடிக்கடி முன்வைத்து முழங்கவும் தயங்கவில்லை. அந்தளவுக்கு நாசிசத்தின் பாசிசத்தை இது கோட்பாட்டு உள்ளடக்கத்தில் கொண்டிருந்தது. இவன் வாழ்ந்த காலத்தில் தான் மார்க்சியம் அச்சமூகத்தில் நிறுவப்பட்டது மட்டுமின்றி, பல வர்க்கப் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடந்த கால கட்டமுமாகும். உழைக்கும் மக்களின் அடிப்படை போராட்டத்தில் பங்கு கொள்வதை நீட்சே எப்போதும் வெறுத்தான். ஏற்ற இறக்கம் கொண்ட சமூகமே அவசியம் என்றான். அதற்கு இனவாதத்தை நீட்சே காக்க வெட்கப்படவோ தயங்கவோ இpல்லை. அதை அவன் "... போராட்டத்தில் வலிமைமிக்க இனமே வெற்றி பெற்று காரிய சித்தி"1 அடைய சபதம் கொள்கின்றான். கிட்லர் போன்றவர்களின் இனவாத அடிப்படைக்கு நீட்சே கோட்பாட்டு ரீதியாக ஆசானாக இருப்பதில் வியர்பேதுமில்லை அல்லவா! இந்த இனவாதத்தை இனம் சார்ந்து மேலும் விளக்கும் போது "... ஒவ்வொரு இனமும் தன்னிலும் மேம்பட்டவொரு இனமாக மாறுதலடைந்திருக்கிறது" என்ற இனவாத பாசிச நாசிய ஆய்வு முறைகள் மனித இனம் என்பதை மறுத்து ஆரிய பாசிச நாசிசமாக பரிணமிக்கின்றது. இதை சாதிக்க அவன் "என் சகோதர போரும், யுத்த களமும் தீங்கானவைகளா? இவை தீங்கெனில் இந்த தீங்குகளும் நமக்குத் தேவையானவையே, அழுக்காறும், ஐயப்பாடும், இகழ்ச்சியும் குணங்களுக்கு நடுவே இருப்பது அவசியந் தான். மனிதப் பிறவி என்ற நிலையைக் கடந்த உன்னத இலக்கை அடைய எல்லா இயல்புகளையும் பயன்படுத்திக் கொண்டேயாக வேண்டும்!"1 என்று நாசிசத்தின் பாசிசத்தை முன்மொழிகின்றார். ஒரு யுத்த வெறியனாக, மனித இனத்தை அடக்கி ஒரு மேம்பட்ட இனமாக வளர்வதற்கு, எல்லா மனித அடக்குமுறைகளையும் அடிப்படையாக கொண்டு, இழிவான எல்லாப் பண்பாடுகளையும் அடிப்படையாக கையாண்டு மாமனிதனாக வேண்டும் என்பதே நீட்சேயின் தலையாய தத்துவமாகும்;. இதை அவன் மேலும் "போரில் ஈடுபட்டுள்ள என் சகோதரர்களே, உங்களை நான் மனமார நேசிக்கிறேன். நான் எப்போதுமே உங்களோடு இணைந்து வந்திருக்கிறேன்" என்கிறார். அதாவது தந்தைவழி சுரண்டலுக்கான வர்க்க யுத்தத்தில் நீட்சே ஆண்மையாக, மாமனிதத் தன்மையாக, ஆண்களின் வீரத்தை போற்றுகின்றார். இங்கு பெண்களை இதற்கு எதிரிடையாக நிறுத்துவதை நாம் தொடர்ந்து கீழ் ஆராய்கிறேன். இந்த யுத்தத்தை அமைதிக்காக அல்ல தொடர்ந்தும் யுத்த தயாரிப்புக்காக செய்ய வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் நீட்சே அறிவுரை செய்கின்றார். இதையே நாசிகளின் பாசிசத்தை விரிவாக்குவதற்காக கிட்லர் அச்சொட்டாக நீட்செயின் வழியில் நடைமுறைப்படுத்தினான். கிட்லரின் நடைமுறையையே நீட்சே கோட்பாட்டு ரீதியாக வகுத்தளிப்பதைப் பார்ப்போம். "உங்கள் நெஞ்சில் நிரம்பியிருக்கிற  கசப்புணர்ச்சியையும் அதிருப்தியையும் நான் அறிவேன். விரோதிகளையே உங்கள் விழிகள் தேடிக் கொண்டிருக்கின்றன. அமைதியை நீங்கள் விரும்புகிறீர்கள். ஏனெனின் அவை புதிய போர்களுக்கான அறிவிப்பல்லவா? நீண்ட கால அமைதியை விட குறுகிய அமைதியைத் தான் நீங்கள் விரும்புவீர்கள். உங்களுக்கு நான் கூறும் அறிவுரை, பணி புரியாதீர்கள் போரிடுங்கள். அமைதியை அல்ல் வெற்றியை வேண்டுங்கள். உங்கள் பணி போராகவும் அமைதி வெற்றியாகவும் இருக்கட்டும்!."1 என்ற யுத்த பிரகடணத்தை மனித சமூகம் மீது வக்கிரத்துடன் நீட்சே வெளிப்படுத்துகின்றான்; மனித அடிமைத்தனத்தை நிறுவுவதும், அதை அடக்கி ஆள்வதுமே என்றென்றும் அமைதியான வெற்றியாக இருக்கட்டும் என்கின்றார். இன்று மூலதனம் போடும் கூத்தை அப்பட்டமாக, இது நாசிய பாசிச சர்வாதிகார வழிகளில் நிறுவக் கோருகின்றது கிட்லருக்கு கோட்பாட்டு அடிப்படையில், இது மாபெரும் தத்துவவியலாகின்றது. இதனால் தான் கிட்லர் நீட்சேயை புகழ்ந்ததுடன், அவன் நாசி பாசிச கோட்பாட்டாளனாக முன்னிறுத்தவும் தவறவில்லை. யுத்தத்தையும், போர் வெறியையும், சமாதானத்தையும் எதிர்ப்பதை பெண்மையின் காரணமாக வருணிக்கக் கூட நீட்சே தயங்கவில்லை. அதை அவன் " ~எது சிறப்பானது - நல்லது?| நீங்கள் கேட்கிறீர்கள் உங்களுக்கு நான் கூறும் விடை ~தீரமுடன்  இருப்பது தான்| என்பதேயாகும், மென்மையும் அழகுமே சிறப்பானதும் நல்லதுமாகுமென்று சிறிய பெண்கள் சொல்லிக் கொள்ளட்டும். அவர்கள் உங்களை இதயமற்றவர்களாகக் கருதிக் கொள்ளட்டும்; பாதகமில்லை. நீங்கள் அவலட்சணமாகக் காட்சியளிக்கிறீர்களா? நல்லது; அந்த அவலட்சணத்தையே உங்கள் சிறப்பான தனியம்சமாகக் கருதிக் கொள்ளுங்கள். உங்கள் ஆத்மா உயர்வடையும் போது மற்றவர்களை இழிநோக்குடன் அது பார்க்கிறது. அப்போது கொடூரம் உங்கள் சிறப்பான தனி அம்சமாகிறது."1 இந்த நீட்சேயின் கொடூரமான குரோதத்தை ஏற்றே, பின்நவீனத்துவ தலித்தியல்வாதிகள் தமிழ் வாசகர்களுக்கு முன்மொழிகின்றனர். மற்றவன் உழைப்பை உறுஞ்சி சமுதாயத்தின் பெரும் பகுதியை கொடூரமாக சுரண்டி, வறுமைக்குள் தள்ளிய கொடூரத்தை ரசிக்க கற்றுக் கொடுக்கவும், சமுதாய அவலத்தை இட்டு அலட்டிக் கொள்ளாது வாழ்வதே சிறப்பான தனியம்சமாக கருதிக் கொள்ள வேண்டும் என்ற தத்துவார்த்த அடிப்படை தான், நீட்சேயை பின்நவீனத்துவ தலித்தியல் வழியில் அறிமுகப்படுத்தப்படுகின்றார். இதை எதிர்ப்பது பெண்ணின் குணமாக கருதும் நீட்சே, எவ்வளவுக்கு கொடூரமாக மற்றவனை அடக்கி அதில் பெருமைப்படுகின்றோமோ, அந்தளவுக்கு நீ மனிதனாக மாறுகின்றாய் என்று பிரகடனம் செய்கின்றான். கொடூரத்தை எவ்வளவுக்கு மக்கள் மறுக்கின்றனரோ, அதை எதிhத்துச் செய்பவன் சிறப்புப் பெற்று தனித்தன்மை பெற்று மாமனிதன் ஆகின்றான். இப்படி கோட்பாடாக முன்வைத்து உபதேசிக்கும் மனித விரோதிகளை, ஏன் பின்நவீனத்துவ தலித்தியல் மற்றும் இலக்கியவாதிகள் தூக்கி முன்னிறுத்துகின்றனர் என்பதை, சுயமாக உங்களால் சிந்தித்துப் பார்க்கும் அளவுக்கு, உங்கள் சமூகக் கண்ணோட்டம் இழிவானதாக சமூகப்பற்று அற்ற கொடூரமானதாக இருப்பதாக கருதியே, இதை மீளமீள முன்கொண்டு வருவதுடன், விவாதிக்கவும், விவாதத்தை கேட்கவும் அழைக்கின்றனர். இந்த நீட்சே தனிச் சொத்துரிமையின் சலுகைகளை பெறுவதே மேன்மை என்பதை நடைமுறை அனுபவத்தில் இருந்து முன்வைக்கின்றார். இதை அவன் "கடைத் தெருவில் பழக்கடைக்காரிகளுங் கூட எனக்கென்று சிறந்த திராட்சைப் பழங்களைத் தேர்ந்தெடுத்துத் தருகிறார்கள். இந்த உவகையை அனுபவிப்பதற்கென்றே ஒருவன் அறிவாளியாகலாமே!"1 ஆளும் வர்க்கத்தின் பரிசு பெற்று எழுதும் நாய்களின் கோட்பாட்டின் தந்தையாக, இங்கு நீட்சே புளுத்துப் போய் வெளிவருகின்றார். அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கமும், கலை இலக்கிய தத்துவ கோட்பாட்டாளர்களும், மக்களிடம் இருந்து நேரடியாகவே பரிசுகள், சலுகைகள், லஞ்சங்களைப் பெற்றும், அதே நேரம் உயர் தகுதியை பெற்ற மாமனிதராக மக்களின் உழைப்பை உறுஞ்சி அதில் சொகுசுத்தனத்தை தனக்குத் தானே ஏற்படுத்தியும், ஊழல் மூலமும் வாழும் தனித் தகுதிகளை அனுபவிப்பதில் உள்ள இன்பத்தை, நீட்சேயின் கோட்பாட்டு வழியில் தத்துவ விளக்கம் கொடுத்து பாதுகாக்கின்றது.

இதிலிருந்தே சமுதாயத்தை நேசிப்பதை கோழைத்தனமாக கருதிய நீட்சே யாரை எப்படி நேசித்து, எதையும் எப்படியும் சாதிக்க முனைவதே உயர்ந்த மனிதப் பண்பு என விளக்குகின்றான். அவன் அதை "மற்றவர்களிடம் எச்சரிக்கையாயிரு; நண்பனைத் தவிர யாரையும் நேசிக்காதே; உண்மையாயிரு; வில்லம்புப் பயிற்சியில் தேர்ச்சி பெறு; உன் சங்கற்பத்தை ஈடேற்று; விசுவாசம் ஒரு முனைப்பு ஆகியவற்றுக்காக உன் உதிரத்தையும் பணயம் வை-அபாயகரமான-தீங்கான முறைகளையும் அதற்காக  மேற்கொள்"1 என்கின்றான். நீட்சேயின் தத்துவம் தான், கிட்லரின் நாசிச பாசிச வடிவமாக முகிழ்ந்தெழுந்தது. சமுதாயத்தின் நலன்களை விட தனிமனித நலன்களை உயர்த்தி அதை பாதுகாக்க, எவ்வளவு கீழானதும் தீங்கானதுமான நடத்தையில் ஈடுபட்டும் சாதிப்பதில் தான் உயர்ந்த மனிதத் தன்மை வலிமையில் பிறக்கிறது என்பதே, நீட்சேயின் தத்துவ விரச உரையாகும்.

மேலும் அவன் "வாழ்க்கை ஒரு பேரின்ப ஊற்றுக் கேணி. ஆனால் கீழ்த்தர வர்க்கமும் அந்தக் கிணற்று நீரைப் பருகும் போது அது ஒரு நச்சு நீரூற்றாகிவிடுகிறது! (இதை பார்ப்பணியம் சொல்;லவில்லையா?) தாக வெறி பிடித்த தங்கள் பார்வையினாலும் அழுக்கடைந்த கரங்களாலும் அவர்கள் அந்தக் கிணற்று நீரை விஷமாக்கி விடுகிறார்கள். (பார்ப்பணியம் இதை மாசடைந்துவிடுவதாகவும் தீட்டுப்பட்டு விடுவதாகவும் கூறுகின்றது) கணப்புச் சட்டியிலிருந்து எழும் ஜ்வாலையில் குளிர் காய வரும் அந்தக் கீழ்த்தர வர்க்கத்தவர்கள் தங்கள் இருதயங்களைப் போடுவதால் அந்த ஜ்வாலையைக் குரூரமாக்கி விடுகிறார்கள். கீழ்த்தர வர்க்கம் நெருப்பை அணுகுவதால் நமது ஆவியிலும் புகைச்சலும், எரிச்சலும் படர்ந்துவிடுகிறது. வாழ்க்கையின் கனிகளை அவர்கள் பறிக்கையில்  அவை சத்துக் குறைந்தும், அழுகல் வாடை அடிப்பதாகவும் மாறிப் போகின்றன! அவர்களது நீசப் பார்வை அந்தப் பழமரத்தையே பூச்சயரித்தும், வாடி வதங்கியும் போகச் செய்துவிடுகிறது! இப்படிப் பாழாய்ப் போன வாழ்க்கையிலிருந்து திருப்பமடைய விரும்புகிறவன், அதை கீழ்த்தர வர்க்கத்தவர்களிடமிருந்து விலகிக் கொள்ள விழைகிறவனாவான். அவர்களுடன் ஊற்று நீரையும், கணப்புத் தீயையும், கனிகளையும் பகிர்ந்து கொள்வதை அவன் வெறுக்கின்றான். மனித சஞ்சார மற்ற வனாந்திரங்களை நோக்கி விரைந்தோடுகிறான். அப்படி விலகியோடியவன் தான் நான். ~இந்த கீழ்த்தர வர்க்கம் உயிர் வாழ வேண்டியது அவசியந்தானா?.... ஆளுகை புரிகிறவர்கள் பால் என் கவனம் திரும்புகையில் அவாகள் எதை ஆட்சி என்று  குறிப்பிடுகிறார்களோ அது இந்தக் கீழ்த்தரமானவர்களிடம் அலைந்து ஆற்றலைக் குறித்து அவர்கள் பேசும் பேரமாகவே எனக்குத் தோன்றுகின்றது! ஒரு வினோதமான மொழி பேசும் மக்களிடையே வாழ்வதாகவே நான் பிரமையுற்று என் செவிகளைப் பொத்திக் கொள்கின்றேன். அவர்களது அலைந்து திரிதலும் ஆற்றலுக்கான பேரம் பேசுதலும் எனக்கு விசித்திரமாகத் தோன்றுகின்றது. கடந்த காலத்திலும், இப்போதும் மூக்கைப் பிடித்துக் கொண்டு நடமாடுகிறேன். ஏனெனின் இந்தக் கீழ்த்தரமானவர்களிடம் இருந்து வீசும் முடை நாற்றத்தை என்னால் சகித்துக் கொள்ள இயலவில்லை!  கீழ்த்தர ஆற்றல், கீழ்த்தர ஆவேச அவசரம், கீழ்த்தர இன்பம் ஆகியவற்றின் மத்தியிலிருந்து விடுபட்டு வெளியே வர என் ஆன்மா துடிதுடிக்கிறது.... கீழே அதல பாதாளத்தில் கிடக்கின்ற கீழ்த்தர வர்க்கத்தை நாம் வலிவுடன் தாக்கி, தூசுப் படலமென அதைத் துரத்தியடிப்போம்;"1 என்கிறான் நீட்சே. அடைப்புக் குறியில் எழுதியவை எனது கருத்துகள்.

கீழ்த்தர மக்களாக குறிப்பிட்டு தனது வெறுப்பை வெளிக்காட்டும் மக்கள், சுரண்டலுக்கு அடிமைப்பட்டு உழைத்து வாழும் அடிமட்ட மக்களாவர். அவர்களின் நாற்றத்தை பற்றி குறிப்பிடும் நீட்சே;  தாலியத்தினதும், பின் நவீனத்துவத்தினதும் கோட்பாட்டாளராக இருப்பது சாலச் சிறந்ததே. தாழ்த்தப்பட்ட மக்களின் நாற்றம் பற்றி பார்ப்பணியம் எதை வருணிக்கின்றதோ, அதையே அப்படியே, உழைக்கும் பாட்டாளிகளையிட்டு நீட்சே குறிப்பிடுகின்றான். தாழ்த்தப்பட்ட மக்கள் குடிக்கும் நீர், உண்ணும் உணவு, குளிருக்கு காயும் நெருப்பு என அனைத்தையும் வெறுத்து ஒதுக்கும் பார்ப்பணியம், தமிழை "நீசை மொழி" என்ற அதை ஒழித்துக் கட்ட முனைகின்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் மொழிகளை இழிவாக்க, எல்லா முயற்சியிலும் ஈடுபடுகின்றது. இதையே நீட்சே உழைக்கும் மக்களின் மொழியை "விநோத"மானது என்று கொச்சைப்படுத்தி கூறத் தயங்கவில்லை. அத்துடன் உழைக்கும் மக்களின் போராட்டங்கள் தவிர்க்க முடியாமல் ஆட்சியாளர்களின் சலுகைகளை வழங்க நிர்ப்பந்திக்கின்றது. இதைக் கண்டு சினந்து கோபம் கொள்ளும் நீட்சே, இதை வழங்குவதை மறுப்பதே மாமனிதருக்கே உரிய பண்பு என்கின்றார். அதாவது இதற்கு எதிராக சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தி கொடூரத்தை பரிசளித்து இன்பத்தை அனுபவித்து மாமனிதராக திகழ வேண்டும் என்கின்றார். உழைக்கும் மக்களிடம் இருந்து தூர விலகி தனிக்குடியிருப்புகளை அமைத்து வாழ்வதன் மூலம், அவர்களின் நாற்றத்தில் இருந்தும், நீசப் பார்வையில் இருந்தும், அவர்களின் சுவாசத்தில் இருந்தும் விலகி வாழ்வது, மாமனிதனுக்குரிய உயர் பண்பு என்கின்றான். பார்ப்பணியம் முதல் உலகமயமாதலின் தந்தைகள் அனைவரும் இப்படி வாழ்வதுடன், மக்களிடம் தமது மிதமிஞ்சிய நுகர்வின் கழிவுகளை பகிர்ந்து கொள்வதைக் கூட இழிவாக கருதி, அவற்றை அழிப்பதில் ரசித்து தமது கொடூரத்தையிட்டு இன்புறுகின்றனர். "இந்த கீழ்த்தர வர்க்கம் உயிர் வாழ வேண்டியது அவசியந்தானா?" என்று நீட்சே கேட்கும் போது, இதன் பின் வெளிப்படும் மனித விரோத கண்ணோட்டம், எவ்வளவு இழிவானது மாமனித வக்கிரத்தை தவிர வேறு எதுவுமில்லை. நாசிய பாசிசத்துக்கு தலைமை தாங்கிய கிட்லர், இதையே எந்தவிதமான மறுப்புமின்றி செய்யும் அளவுக்கு, நீட்சே கோட்பாட்டு தந்தையாக இருந்தான்.

சமுதாயத்தின் விடுதலையை அடிப்படையாக கொண்டு போராடும் போது, அது கோழைக்குரிய செயல் என்கின்றான் நீட்சே. சமுதாய நலனையொட்டி பேசும் மனிதர்களையிட்டு வெறுப்புற்ற நீட்சே "சமத்துவம் பற்றிப் போதிக்கிறவர்களெல்லாரும் இத்தகைய விஷச் சிலந்திகளே! இரகசியமாய் வஞ்சந் தீர்த்துக் கொள்கின்ற சிலந்திகள் தான் அவர்கள்! அவர்களது மறைவிடங்களை உங்களுக்குக் காட்டுவேன்.

விஷச் சிலந்திகளே! உங்கள் மறைவிடங்களை வெளிக் கொணர்ந்து உங்களை நோக்கி நான் இடிஇடியெனச் சிரிப்பேன். உங்களைக் கிழித்தெறிந்து உங்கள் பொய்களை அம்பலமாக்குவேன்;. |நீதி, நேர்மை| என்ற உங்கள் வாசகங்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிற வஞ்சகத்தைப் பிதுக்கியெடுப்பேன். ஏனெனின் மனிதன் வஞ்சகப் பழித்தீர்ப்பிலிருந்து (அதாவது ஒடுக்கும் வர்க்கத்தை அனைத்து தளத்திலும் ஒடுக்கப்பட்ட வர்க்கம் வஞ்சகம் தீர்ப்பதை குறித்தே, நீட்சே இதைக் குறிப்பிடுகின்றார்.) தன்னை விடுவித்துக் கொண்டாக வேண்டும்;. உயர்ந்த இலக்கை அடைவதன் பொருட்டுக் கடக்க வேண்டிய பாவந் தான் அந்த விடுவிப்பு!

இந்த விஷச் சிலந்திகளை நாம் அழிக்கவில்லையேல் அவை நம்மை அழித்துவிடும்! நமது வஞ்சகச் சூறாவளி இந்த உலகைச் சூழ்ந்து கொள்ளட்டும். நம்மைப் போன்றிராதவர்களுக்கெதிராக வஞ்சகத்தை நாம் அவிழ்த்து விடுவோம்;. இனி, சமத்துவத்திற்கான சங்கற்பமே சாலச் சிறந்த குண நலனாகக் கருதப்படட்டும்;. என்று அந்த விஷச் சிலந்திகள் கூறிக் கொள்ளும்!

சமத்துவத்தைப் போதிக்கும் விஷச் சிலந்திகளே! நீங்கள் கோஷிக்கும் |சமத்துவம்| என்ற வாசகத்தின் பின்னால் அனைத்தையும் நசுக்கிக் காலடியில் போட்டுக் கொள்ள வேண்டுமென்ற உங்கள் அந்தரங்கமான ஆசை ஒளிந்திருப்பதை நானறிவேன்;. அதிருப்தியும் கசப்புணர்ச்சியும் தோற்றுவித்த வஞ்சகமே உங்கள் சித்தாந்தம்.

அந்த விஷச் சிலந்திகளின் நீதி சமத்துவமாகும்;. ஆனால் என் நீதியோ, |மனிதர்கள் சமமானவர்களல்ல| என்பதாகும். இதற்கு மாறுபாடாக நான் கருதுவேனாகில் அப்புறம் மகா மனிதனின் தோற்றத்தில் எனக்குள்ள ஆர்வமும், ஆசையும் என்னாவது?

போரும் சமத்துவமின்மையுமாகவும் எப்போதும் மனித இனம் திகழவேண்டும். நன்மை, தீமை, வளமை, வறுமை, உயர்வு, தாழ்வு ஆகிய ஆயுதங்களுடன் ஒருவருக்கொருவர் பெரும் போராட்டம் நிகழ்த்திக் கொண்டிருக்க வேண்டும்! அப்போது தான் வல்லமை பொருந்திய பகுதி மேலேமேலே உயர்ந்து தன்னைத் தானே கடந்த பரிணாம வளர்ச்சியில் ஒரு புதிய இனத் தோற்றத்தை அடையும்! இந்தப் பரிணாம வளர்ச்சியும் இன மாற்றமும் உயிர் வாழ்க்கைக்கு மிகமிக அவசியம்!"1 என்கிறான் சமுதாய பிளவை வேர்ரூன்றி வளர்க்க விரும்பும் நீட்சே. மனிதப் பிளவே மாமனிதருக்கான மூலம் என்கின்றார். சமுதாய பிளவில் ஒருவனை மிதித்து எழுவதே மாமனித தர்மம் என்கின்றான். மனித நிற, இனம், சாதி, வர்க்கம், பால் என அனைத்துப் பிளவும், மனித இனத்துக்கு அவசியமானது, நிபந்தனையானது, இயற்கையானது என்று நீட்சே பிரகடனம் செய்யும் போதே, மனித விரோதமும், குரோதமும் பீறிடுகின்றது. இதை மாற்றக் கோருவதை எதிர்த்து, ஈவிரக்கமின்றி அழிக்க வேண்டும் என்கிறான். நாசிசத்தின் பாசிசம் இங்கு தான் ஊற்றெடுக்கின்றது. தமிழில் நீட்சேயை அரங்கேற்றம் செய்பவர்களும், இதன் வேர்களை தமது அரசியல் உள்ளடக்கத்தில் கொண்டிருப்பதால், இவர்களின் தத்துவார்த்த குருவாகவும், தந்தையாகவும் இருப்பது இயற்கையாகிவிடுகின்றது. சமுதாய ஏற்றத் தாழ்வுகளை சமதர்மம் ஒழிக்க போராடும் போராட்டத்தை கண்டு, அதை அழிக்க வேண்டும் என நீட்சே பிரகடனம் செய்கின்றார். இதில் தவறின் அவர்கள் எம்மை அதாவது அனைத்து மாமனித சுகபோகங்களையும் அழித்துவிடுவார்கள் என்று நீட்சே அச்சத்துடன் புலம்புகின்றான். மாமனிதர்கள் சமுதாயப் பிளவில், அதன் மேலான அடக்கு முறைகளில் உருவாக்கப்படுகின்றார்கள் என்பதை பிரகடனம் செய்யும் நீட்சே, இதை தடுக்க முனையும் சமதர்மக் கோட்பாடுகளை வெறுப்பது இயல்பாகின்றது. உலகமயமாதலின் கோட்பாட்டளானை தூக்கி நிறுத்தும் பின்நவீனத்துவ தலித்தியல் வாதிகள், சமுதாய அடிமைத்தனத்தை நிலை நிறுத்தப்பட வேண்டும் என்பதைத் தான், நீட்சே ஊடாக பிரகடனம் செய்கின்றனர். நீட்சே மனித அடிமைத்தனத்தை நிலை நிறுத்த, அதை இயற்கையின் சின்னமாக, வலிமையின் அடிப்படையாக கூறுவதைப் பார்ப்போம்;.

"... பலஹீன இனம் தன்னைவிட வலிமை பொருந்திய இனத்திற்குப்  பணிந்து பணிபுரிய வேண்டும்; என்பதே இயற்கையின் விதியாக இருக்கிறது. பலஹீனமான இனம் தன்னைக் காட்டிலும் பலஹீனமான இனத்தைத் தனக்குக் கீழ்ப்படுத்திக் கொள்ளுகின்றது. வலிமைக் குறைவுள்ள இனம் தன்னிலும் வலிமை மிக்க இனத்திற்கு அடிபணிகையில், தன்னிலும் வலிமை குன்றிய இனத்தை அடக்குவதில் இன்பம் காண்கின்றது! வல்லமை மிக்க இனம் தன்னைத் தானே பணிந்து கொள்கிறது. அதன் நோக்கம் ஆற்றலை மேலும் பெறுவதாகும்;. அதைத் தான் தன்னைத் தானே கடத்தல் அதாவது சுய மீறல் என்று குறிப்பிடுகிறேன். இந்தச் சுயமீறலின் விளைவாகத் தான் வலிமை மிக்க இனம் தன்னிலும் வலிமை மிக்கதோர் இனத்தைப் படைக்கிறது. இது ஓர் ஆபத்தான விளையாட்டு! இந்த ஆபத்தான விளையாட்டை வலிமை மிக்க இனம் மேற்கொள்வது தன்னைத் தானே நிலை நிறுத்திக் கொள்ள அல்ல: தன்னிலிருந்து தன்னைக் காட்டிலும் வல்லமை பொருந்திய இனத்தைத் தோற்றுவிக்கத் தான்! வலிமை மிக்க இனம் தன்னைத் தானே சர்வ பரித்தியாகம் புரிவது நிலைபெறுவதற்கான சங்கற்பத்திற்காக அல்ல் ஆகவே அதன் சுயமீறல் வல்லமைக்கான சங்கற்பமேயாகும்."1 இனம் முதல் அனைத்து அடிமைத்தனத்தை நியாயப்படுத்தும் நாசிய பாசிசத்தை பார்ப்பணிய கோட்பாடாக்கின்றது. எல்லாவிதமான மனித அடிமைத்தனத்தையும் நியாயப்படுத்தும் இந்த விளக்கவுரை, எல்லாவிதமான அடக்குமுறைக்கும் மகுடம் சூட்டுகின்றது. வலிமை என்ற பெயரில் அடக்குமுறையை நியாயப்படுத்தும் இக் கோட்பாடுகள், மாமனிதர்களின் உருவாக்கத்தை உள்ளடக்குவதாக நீட்சே போற்றுகின்றார். ஒரு இனம் மற்றைய இனத்தை அடக்குவது வலிமையின் ஊடாக மாமனித இனத்தை தோற்றுவிக்கத் தான் என்கிறான். ஒரு இனத்தை இன்னொரு இனம் அடக்குவது சுரண்டலையும், சூறையாடலையும் விரிவாக நடத்துவதன் மூலம், தனது சுரண்டும் வர்க்க நலன்களை பாதுகாக்கத் தான். இதை நீட்சே திட்டமிட்டு மூடி மறைத்து அதை பாதுகாக்க, வலிமையின் பின் உயர் மனிதர்களை, அதாவது விலங்கு மனிதனில் இருந்து மனிதனை உருவாக்க என்று கூறி அடக்குமுறைக்கு கம்பளம் விரிக்கின்றார். இங்கு மனிதத்தின் மனிதப் பண்புகளை மறுத்து குறுகிய நலன்களை உள்ளடக்கிய வகையில் சூறையாடும் இழிந்த மனித விரோதிகளே, இங்கு மாமனிதராக இருக்கின்றனர். இதை டார்வினை திரித்தே நீட்சே நியாயப்படுத்த தவறவில்லை.

அதை அவர் "டார்வினின்  கூற்றுப் படி வாழ்க்கைப் போராட்டத்தின் அடிப்படையில் தான் உயிரினங்களின் வளர்ச்சி நிகழ்கிறதென்றால், அந்தப் போராட்டத்தில் அடையும் வெற்றிக்கு அடிப்படை, வலிமையாகும். எனவே வலிமை தான் முடிவான அறம். அதுவே நல்லது, நியாயமானதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதுமாகும்."1 என்றார் நீட்சே. வலிமையே உண்மை, நீதி என்று போற்றி அதைக் கொண்டே மனிதனின் அடிமைத்தனத்தை நியாயப்படுத்துகின்றார். வாழ்க்கைப் போராட்டத்தில் அதாவது உயிர் வாழும் போராட்டத்தில் உயிரினங்கள் தற்காப்பிலும், உணவுத் தேடலிலுமே எப்போதும் வன்முறையை கையாளுகின்றது. இந்த போராட்டத்தில் என்றுமே மற்றவன் உழைப்பை, தான் உழையாது (போராட்டமின்றி) உறுஞ்சுவதில்லை. அத்துடன் தேவைக்கு உட்பட்டே இதை நுகர்கின்றது. ஆனால் மனிதன் அப்படியல்ல. மனித அடிமைத்தனம் மற்றவன் உழைப்பை உறிஞ்சியதில் இருந்தே, உபரியை உற்பத்தி செய்தலில் இருந்தே உருவானது. வலிமை என்பது எந்த மனிதனுக்கும் ஒரு சீராக இருப்பதில்லை. குழந்தை முதல் வயோதிபர் வரையான வாழ்வில் வலிமை தான் அதன் போக்காகவும், தனிமனித உணர்வாகவும் உயிரியல் அடிப்படை விதியாகவும் இருந்தால், பிறந்தவுடனேயே இறந்து போக வேண்டும். சமூக உணர்வு தான் குழந்தையை பராமரிப்பது முதல் வயோதிபர் நலன்களைக் கூட பேணுகின்றது. சமூகம் என்பது தொடர்ச்சியான இயங்கியல் மாற்றத்துக்குள்ளாகியபடி தொடருகின்றது. இங்கு ஒவ்வொரு தனிமனிதனும் ஆக்கத்தையும் அழிவையும், தனது வலிமை முதல் அனைத்திலும் கொண்டே உயிர்த்தொகுதி அமைந்திருக்கின்றது. இயற்கை மற்றும் செயற்க்கையான மனித செயற்பாடுகளில் ஏற்படும் ஒவ்வொரு நடத்தைகளும் வலிமை மட்டுமின்றி அனைத்தையும் மாற்றுகின்றது. எதுவும் நிலையானவையல்ல. நிலையாக காணப்படுவது புலனறிவுக்குட்பட முடியாத வகையில் பண்பியல் மாற்றத்தை பிரதிபலிக்கத் தவறுபவை, எப்போதும்  குறித்த நிபந்தனைக்குட்பட்ட கால இடைவெளிக்குள் மட்டும் நீடிக்கின்றன. வலிமை என்பது நிபந்தனைக்குட்பட்டது. அது சூழல், பண்பாடு, காலம், பயிற்சி, உபரியின் அளவு, உழைப்பின் தன்மை என்று நீண்ட பல விடயத்துடன் தொடர்புடையது. இது நீண்ட பல ஆயிரம் வருடங்கள் சந்தித்த பல மாற்றங்களுடன் தொடர்புடையதாக  இருக்கின்றது. மனிதத்தின் மூலம் வலிமை என்பதும், உயிர் வாழ்தலின் நிபந்தனை வலிமை சார்ந்தது என்றால், வலிமையற்ற எத்தனை உயிர்த்தொகுதிகள் உயிர்வாழ்தலை நிறுத்திவிடவில்லை. வலிமையான மாமிச உண்ணிகளைவிட, வலிமை குறைந்த தாவர உண்ணிகள் உலகில் அதிகமாக கூட்டம் கூட்டமாக வாழ்வது வலிமையின் கோட்பாட்டையே தகர்க்கின்றது. வலிமையான தாவர உண்ணிகளை விட, வலிமை குறைந்த தாவர உண்ணிகள் அதிகமாகவும் அதிக அடர்த்தியாகவும் உயிர் வாழ்வது யதார்த்த இயற்கையாகும்; இது வலிமைத் தத்துவத்தையே உயிரியல் விதியில் தகர்க்கின்றது. அமெரிக்க ஏகாதிபத்திய வலிமையையிட்டோ, கிட்லரின் வலிமையான பாசிச நாசிச ஆக்கிரமிப்புகளையிட்டோ, உலக மக்கள் அடங்கிப் போய்விடுவதில்லை. மாறாக எதிர்த்து போராhடுவதே இயங்கியலாக இயற்கையாகின்றது. அதில் வெற்றி பெறுவதே எப்போதும் மனித சமூகப் பண்பாடாக உள்ளது. வலிமை என்பது மனிதத்தை முன்னேற்றியது, முன்னேற்றுகின்றது என்பது ஆதாரமற்ற வெற்றுச் சொற்தொடர் ஊடாக, உலக அடக்குமுறைகளை கோட்பாட்டு ரீதியாக நியாயப்படுத்தி விளக்குவதற்கு அப்பால், எதையும் சமுதாய விடுதலைக்கு தந்துவிடுவதில்லை. மனிதனின் கூட்டு வாழ்வே, மனித இனத்தை பூமியில் பாதுகாத்தது. காட்டுமிராண்டி சமூகங்கள் அதாவது மனிதக் குரங்கில் இருந்து மனிதன் உருவான வரலாற்றில் மனித சமூகக் கூட்டு இல்லை என்றால் அதாவது வலிமையால் மற்றவை அடக்கி மாமனிதனாகியிருந்தால், இன்றைய மனிதனும் இல்லை. கூட்டான மனித நடத்தைகள் சொந்த மக்கள் கூட்டத்தை பாதுகாக்கும் போராட்டத்தை நிறைவு செய்தன. மற்றறைய விலங்குத் தொகுதிகளுடன் நடத்திய போராட்டத்தில், தன்னை தற்பாதுகாத்து கொள்ளவும் தனது தேவையை பூர்த்தி செய்யவும் மனித கண்டுபிடிப்புகள் வலிமையில் கிடைக்கவில்லை. பொருட்களை ஆராய்ந்து அதை பயன்படுத்தி தனது உணவுத் தேவையை பூர்த்தி செய்யவும், தற்காப்பை பலப்படுத்தவும் பொருட்கள் மீதான அறிவும், அதை மாற்றி அமைத்து பயன்படுத்திய போதே, மனிதன் முன்னேற்றம் சாதிக்கப்பட்டது. இது வலிமையில் அல்ல. வலிமை என்பது பல ஆயிரம் செயல்களில் ஒரு அங்கம் மட்டுமே என்பதும், குறித்த சில கணங்களில் மட்டும் மாறிமாறி முதன்மையாக இருப்பது வெள்ளிடை மலையாகும்.

இதை மறுக்கின்ற நீட்சே "வாழ்க்கைப் போரில் வெற்றியுடன் மீண்டெழுந்து நிலைப்பதற்கு உதவி புரிவது, மென்மையல்ல மூர்க்கத்தனமான வலிமை தான். அமெரிக்கையோ, அடக்கமோ அல்ல் செருக்கு தலைநிமிர்ந்தம். பரிவோ, பெருந்தன்மையோ, பொதுநலப் போக்கோ அதற்குப் பயன்படாது. சமத்துவமும், பெரும்பான்மை அபிப்பிராயமும் (ஜனநாயகம்) சரிப்படாது. திண்மையான அறிவும், தீவிரப் போக்கும், திரண்ட வலிமையும், ஈவு, இரக்கம், தயை தாட்சண்யம் பாராது செயலாற்றும் தன்மையும் தான் அதற்குத் துணைபுரியக் கூடும்; ஆகவே, வாழ்க்கைப் போராட்டத்தில் தோல்வியைக் கொடுத்து அழிவைத் தேடித் தருகிற மென்மையான நடத்தையும், மிதமான போக்கும், அடக்கமும் அமெரிக்கையும் பரிவும், பண்பும், பெருந்தன்மையும் பொது நலநோக்கும், சமத்துவமும் ஜனநாயக ஏற்பாடும் வெறுக்கத் தக்கவை விலக்கத் தக்கவை, அவை தீங்கானவை தேவையற்றவை; பலஹீனத்திற்கு அடிகோலுபவை"1 என்கிறார் நீட்சே. சமூக நடத்தைகளை வெறுத்தொதுக்கும் நீட்சேயை, தனிமனித நடத்தைகளை சமூகத்தின் மேல் நிறுத்தி மாமனிதராக்கிய சமூக விரோதியை, பின்நவீனத்துவ தலித்தியல்வாதிகள் சமூக விடுதலையை பெற்றுத் தரும் தத்துவம் படைத்தார் என்கின்றனர். மனிதத் தன்மை கொண்ட இலக்கியம் படைத்தார் என்று கதை கூறுகின்றனர். மனிதர்களின் ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்ட பெரும்பான்மை முடிவுகளை வெறுக்கும் நீட்சே போன்றவர்கள், பாசிசத்தின் கோட்பாட்டாளராக இதன் ஊடாகவே இருக்கின்றனர். சாதி வன்முறைகளால் சிதைந்து பரிதாபமாக இறந்து போகும் தாழ்த்தப்பட்ட மக்களையிட்டோ, நாசிய வன்முறையால் இறந்துபட்ட யூத மக்களையிட்டோ, புலிகளால் வெளியேற்றப்பட்டு அனாதைகளான முஸ்லிம் மக்களையிட்டோ, தமிழன் என்ற எதோ ஒரு அடையாளம் கொண்டு தாக்கப்படும் ஒருவனையிட்டோ, கறுப்பன் என்பதால் ஒதுக்கும் மேற்கு இனவாதத்தையிட்டோ,  ஆணாதிக்கத்தால் துன்பத்தை சந்திக்கும் பெண்ணையிட்டோ குறைந்தபட்சம் அனுதாபப்படவோ, பரிவு காட்டவோ, இரக்கம் கட்டவோ கூடாது என்பது நீட்சேயின் அடிப்படைக் கோட்பாடாகும். இதைக் கண்டு சிரிப்பவன், அந்த மக்களை அடக்கி கொடூரம் புரிபவன், மக்களை இழிவு செய்பவனே மாமனிதன் என்கின்றனர். அதாவது சர்வாதிகார ஆட்சியை அமைத்து கொடூரமாக சுரண்டுபவன், தனது திமிர் பிடித்த ஆணாதிக்க அதிகாரத்தை நிலை நாட்டி, சாதி ரீதியாகவும், இன மத நிற ரீதியாகவும் யாரெல்லாம் மற்றவனை அடக்கியாளும் வலிமை உள்ளவனாக இருக்கின்றனோ, அவனேயே நீட்சேயின் கோட்பாடு மாமனிதர்கள் என்று பிரகடனம் செய்கின்றது. ஈவு இரக்கமற்ற கொடூரமான பண்பு புகழ்ச்சிக்குரிய மனிதப் பண்பு என்கிறார். இதுவே இயற்கையென்றும், பரிணாமம் என்றும் நீட்சே கூறத் தவறவில்லை. "பொருதுவது வெற்றி பெறுவதும், நிலைத்து நின்று அனைத்தையும் ஆட்கொள்வதும் தான் தர்மம்"1 என்றான் நீட்சே. சமுதாயத்தினை அடக்கி அடிமைப்படுத்தி அதை நிலைநிறுத்தும் கோட்பாடே தர்மம் என்கின்றார். பார்ப்பானியம் மற்றறைய சாதிகள் மேல் நிலைத்து நின்று ஆட்கொண்டுள்ள அடக்குமுறையைத் தான் தர்மம் என்கின்றார். தமிழில் நீட்சேக்கு காவடி எடுத்து அறிமுகம் செய்பவன் பின்னுள்ள அற்பத்தனங்கள், ஆள்பவனையும் பார்ப்பனச் சித்தாந்தத்தையும் கோட்பாட்டு ரீதியாக பாதுகாப்பதே, அவர்களின் உள்ளர்ந்த நோக்கமாகும்;. இதை விடுதலையின் பெயரால், அறிவுத் தேடலின் பெயரால் எல்லாவிதமான கேள்விகள் மற்றும் சொல்லடுக்குக்கு பின்னால் சாதிக்க நினைப்பது ஆளும் வர்க்கங்களின் வலிமையான அடக்குமுறை சர்வாதிகார ஆட்சியைத் தான்;. இதையே அ. மார்க்ஸ் "ஏன் நமக்கு நீட்சே"4 என்ற கட்டுரையில் "...தத்துவத்தின் பணி என்பது இருக்கும் அறிவு நிலையைக் கேள்வி கேட்பது, பிரச்சனைப்படுத்துவது என்பது தான். பதில்கள் முக்கியமில்லை"4 என்று தனது நோக்கத்தை வெளிப்படுத்துகின்றார். கேள்வி கேட்டுவிடுவதால் என்ன நடந்து விடும்;. மாற்றத்தை யார் செய்வது? அதற்கு பாமர மக்கள் தான் லாயக்கோ? இருக்கும் அறிவு செயல் இன்றி மாற்றம் நிகழ்வதில்லை. பதில் இன்றி மாறிவிடுவதில்லை. இது எல்லா விடயத்திலும் யதார்த்தமான பொது உண்மையாகும்; ஆனால் இதை மறப்பவர்கள் உண்மையில் இருக்கும் அறிவையும், செயலையும் பாதுகாக்க செயலை நிராகரித்து பதிலை மறுக்கின்றனர். ஆனால் இவர்கள் நடைமுறையில் சொந்தத் தேவை மற்றும் வர்க்க நலன் வாழ்வில் கேள்விக்கு பதில் செயலையும், பதிலையும் கொண்டு வாழ்வதே இங்கு முரண் நிலையாகும்;. இவை இரண்டையும் வாழ்வில் செய்யாதவன் பைத்தியக்காரன் மட்டும் தான்.

 

நீட்சே தனது சொந்த வாழ்வில் தனது மாமனிதக் கொள்கை வழியில், Nஐர்மனியில் காட்டுமிராண்டி ஆட்சியை நடத்திய பிஸ்மார்கின் விஸ்தரிப்புவாதத்தை அடிப்படையாக கொண்டு நடத்திய பல பலாத்கார யுத்தத்தில், தானகவே முன்வந்து பங்களித்தான். அதை அவன் "தான் பார்த்துக் கொண்டிருக்கிற போதே- தன் கண்களுக்கு எதிரிலேயே எத்தகைய அற்புதமானதொரு சாதனையைத் தன் வலிமையால் அனாயாசமாகச் செய்து காட்டிவி;ட்டான், இந்த பிஸ்மார்க்!"1 என்றதுடன் "குழப்பத்தையும் கோளாற்றையும் நிவர்த்திக்க இதனைக் காட்டிலும் எளிதான மார்க்கம் எதுவும் இருக்க முடியாது"1 என்றான். வர்க்கப் போராட்டத்தில் தனது அதிகார திமிர் கொண்ட சுரண்டும் வக்கிரத்தை இப்படித் தான் நீட்சேயால் ஏற்றுக் கொண்டு வருணிக்க முடிந்தது. எந்தவிதமான கூச்சமும் இன்றி ஆளும் வர்க்கத்தின் முண்டு கோல்களாக பாட்டாளி வர்க்கத்தை எதிர்த்து நின்ற நீட்சேயை, தமிழில் அறிமுகம் செய்யும் சொறி நாய்களின் நோக்கமும் கனவும், பாட்டாளி வர்க்கத்தை கோட்பாட்டிலும் நடைமுறையிலும் இல்லாது ஒழிக்க, நீட்சேயை முன்னிறுத்துவது அவசியமாகின்றது. Nஐர்மானிய ஆக்கிரமிப்பை அவன் "வாழ்க்கைக்கான ஏகாக்கிர சித்தம் அழிந்துவிடாமல் நிலைப்பதற்காகப் புரியும் போராட்டத்திற்கானது மட்டுமல்ல் அந்த ஏகச்சித்தம் மாபெரும் யுத்தத்தின் பொருட்டும், மகத்தான வலிமையின் பொருட்டும், உன்னத சக்தியின் பொருட்டுமே தேவைப்படுகிறது"1 என்றான். வலிமையின் பொருட்டு எதையும் அழிக்கவும், ஆதிக்கத்தை நிலைநாட்டவும் நீட்சே கோட்பாட்டின் பின்னால் தமிழில் மறைமுகமாக களம் இறங்குகின்றனர். பார்ப்பணியம் இந்து சாம்ராச்சிய கனவு வலிமையில் முஸ்லிம் மக்களையும்,  பார்ப்பனிய சாதி வலிமையில் தாழ் சாதிகளையும், இந்தி மற்றும் சமஸ்கிருத ஆட்சி அதிகார மொழி வலிமையில் தமிழ் மற்றும் மொழிகளையும் வலிமையின் பின்னால், உன்னத சக்தியின் பொருட்டும் அடக்கி அடிமைப்படுத்தி அழிக்க நீட்சேயை துணைக்கு அழைத்து வருகின்றனர்.

வர்க்க சமரசத்தை, அமைதியான அடங்கிப் போகின்ற, அடக்குமுறையை ஏற்றுக் கொள்கின்ற வகையில் கோட்பாட்டு விளக்கத்தையே நீட்சே முன்வைக்கின்றார். "நாம் இயல்பாகவே நம்முடைய அவஸ்தைகளைச் சார்ந்த அவற்றிற்கே முக்கியத்துவமளிப்பதால் நம்மைச்  சார்ந்து நிற்கும் அவஸ்தை நமக்கு நேர் நிலையாக அமைகிறது. நம்மை விட்டு விலகி நிற்கின்ற-நம்மால் கவனிக்கப்படாத நிறைவேறிய விருப்பங்களால் தோற்றுவிக்கப்படுகின்ற மகிழ்வு நமக்கு எதிர்மறையாக நிற்கின்றது. எல்லாம் வல்ல ஏக சித்தத்தின் கிரியையால் இவையிரண்டும் இணைந்து ஆத்ம திருப்தியான இன்பமாக பரிணமிக்கிறது."1 என்கிறார். பார்ப்பணிய உபநிமிடத்தை ஏற்றுக் கொள்ளும் நீட்சே, பார்ப்பணிய பாணியில் முன்மொழிகின்றார். இன்பமும் துன்பமும், கிடைப்பதும் கிடையாமையும், நிறைவேறியதும் நிறைவேறாததும் என்று நீடிக்கின்ற உணர்வுகள் எகசித்தத்தால் இன்பமாக பரிணமிக்கின்றது என்கின்றார். வறுமையை அனுபவிக்கும் மனிதன் எப்படி எதை சித்தமாக கொண்டு இன்பமாக இருக்க முடியும். இன்பம், துன்பம் வர்க்க சமுதாயத்தின் கொடையல்லவா! இன்பமாக இருப்பவன் துன்பப்பட்டவனை உதைத்தபடி தான் அதைச் சாதிக்கின்றான். ஆத்ம் திருப்தியான இன்பம் இருப்பதாக கூறும் நீட்சே, துன்பம் எதன் ஆத்ம சித்தமாக இருக்கின்றது என்பதை பேசுவதே அநாகரிகமாகப்படுகின்றது. கீழ் நிலை மக்கள் அனுபவிக்கும் துன்பத்தை பற்றி பேசுவதை விட, அவர்கள் உயிர் வாழ்வது அவசியமா என்பதே நீட்சேயின் தலையாய கோட்பாடாகும். அத்துடன் வலிமையற்ற பிரிவுகள் உயிர் வாழத் தான் வேண்டுமா? என்று கேட்டு அவர்களை சமூக விரோதிகள் என்கின்றார். இதுபோன்று  நோயாளி குறித்து நீட்சே "நோயாளி என்பவன் சமுதாயத்தின் ஒரு புல்லுருவி" என்று கிட்லருக்கே கோட்பாட்டு தளம் அமைத்து கொடுத்த ஒரு கொடுங்கோலளாவான்;. 60 லட்சம் யூதர்களின் படுகொலை முதல் சமுதாயத்தை அங்கவீனமாக்கி கிட்லர் கொன்று குவித்தது தற்செயலாக அல்ல. நீட்சே போன்ற தத்துவவியலாளர்களின் கோட்பாட்டின் துணையில் என்றால் மிகையாகாது.

நீட்சேயின் முக்கிய துணையாகவும், ஆலோசகராகவும் இருந்த சகோதரி எலிஸபெத் நாசிக் கட்சியின் முன்னணி நபராக இருந்தார். இவள் நாசிக் கட்சியின் முக்கிய உறுப்பினரான பெர்னார்டு பார்ஸ்டரையே திருமணம் செய்து, நேரடி யூத எதிர்ப்பிலும் வன்முறைகளிலும் பங்கேற்றவள். நீட்சே காதலித்த இரண்டாவது பெண் லோவு யூத இனத்தைச் சேர்ந்தவள் என்பதால் திருமணம் செய்வதை கைவிட்டு, நாசிகளுக்கு சார்பாக நடைமுறையில் வாழ்ந்தார். பின்னால் பெண் இனத்தையே தூற்றுவதில் இன்புற்றதுடன் தனது வக்கிரத்தை வெளிப்படுத்தியவன்.

பின்நவீனத்துவ, தலித்தியலை முன்னிறுத்தும் நீட்சே, பெண்களை கேவலமான ஆணாதிக்க வலிமையின் வழிகளில் தூற்றி அடக்கி ஆளவும், கோரவும் பின்நிற்கவில்லை. "பெண்களுக்கு உரிமை அளிப்பதானது பெண்மைக்கே உலை வைப்பதாகும். பெண்களின் பொறுப்பு தன் கணவன்மார்களை மகிழ்விப்பதும் அவர்களுக்குப் பிள்ளை பெற்றுக் கொடுப்பதுதான்."1 என்கிறான் ஆணாதிக்க நீட்சே. இந்த நயவஞ்சகமான வலிமையான ஆணாதிக்கவாதியான மாமனிதன் நீட்சே, பெண்களிடம் செல்லும் போது "பெண்களிடம் போகிறீர்களா? உங்கள் சாட்டையை மறந்து விடாதீர்கள்!"1 என்கிறான். அதாவது பெண்களை அடிக்கத் தவறாதீர்கள் என பார்ப்பான் மனுவின் அதே உபதேசத்தையே முன்வைக்கின்றார். மனுவின் பார்ப்பணிய ஒழுக்கம் சார்ந்த சமுதாயம் பற்றிய நூலை, இந்த பாசிச நாசி குறிப்பிடும் போது "உயர்குடிமக்கள், தத்துவியலாளர்கள், வீரர்கள் ஆகியோர் மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பளித்து வழிகாட்டுபவலராக உள்ளனர். உயரிய நலன்கள் அதில் நிறைந்துள்ளன, வாழ்வுக்கு இணக்கம் தெரிவிக்கும் ஒரு முழுமையுள்ளது என்ற உணர்வு நிரம்பியது. இதற்காக மட்டுமல்லாமல் வாழ்வின் நலன்களுக்குரிய வெற்றியுணர்வு நிரம்பியது, நூல் முழுமைக்கும் சுடரொளிர்கின்றது."2 என்று மனுவின் மனு சாத்திரத்தை நீட்சே மெச்சுகின்றார். மனுவின் சமுதாய விளக்கவுரைகள் பார்ப்பனியம் சார்ந்த உயர் குடிகளின் நலன்களை உள்ளடக்கியதால், நீட்சே அவரின் பக்தர் ஆகின்றார். இதை நீட்சேயைக் கொண்டு வரும் தமிழ் பின்நவீனத்துவ தலித்தியல்வாதிகளின் நோக்கம் பார்ப்பனியத்தை கீழிருந்து நிறுவுவது என்பதே, இதன் அடிப்படையான உள்ளடக்கமாகும்;. நீட்சே மனுவின் நூல் பற்றி குறிப்பிடும் போது "மக்களைப் பெறுதல், மகளிர், திருமணம் ஆகியவற்றைப் பற்றிய கிறிஸ்தவத்தில் ஆழம் காண முடியாத ஆபாசப் புகைமூட்டமாக கூறப்பட்டிருப்பவை இந்த நூலில் வாழ்க்கை விருப்போடும், கனிவோடும், நம்பிக்கையுடனும் கூறப்பட்டுள்ளது.  மணமாகாத ஆண், பெண் கலவியைத் தவிர்ப்பதற்கு, அவனவன் தனக்கு மனைவியைப் பெற்றிருப்பனாக, பெண்டிர் யாவரும் தத்தமக்குரிய கணவரைப் பெற்றிருப்பாராக... எரிக்கப்படுவதை விட திருமணம் செய்து கொள்வது மேலானது என்றுரைக்கும் இழிந்ததொரு புத்தகத்தை குழந்தைகளும், பெண்களும் படிப்பதற்குரிய வாய்ப்பினை நாம் அளிக்கலாமா? மாந்தரின் தோற்றமே கிறிஸ்தவ மயமாக்கப்பட்டுள்ள போது - அதாவது களங்கமில்லாத கர்ப்பம் தரிப்பது  பற்றிய கோட்பாட்டின் காரணமர் களங்கமுற்றுள்ள போது கிறிஸ்தவனாக இருப்பதென்பது ஏற்புடையதுதானா? பெண்ணிடத்தில் மென்மையும், கருணையுமுள்ளதாகக் கூறப்பட்டுள்ளவை, வேறெந்த நூலிலும் கூறப்பட்டிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. வெண்தாடிக் கிழவர்களும் துறவிகளும் பெண்ணிடம் வீரத்தைக் காட்டும் முறை தெரிந்தவர்; இவ்வகையில் வேறெவரும் இவர்களை மிஞ்சமுடியாது. மனு ஓரிடத்தில், ~பெண்ணின் வாய், கன்னியின் மார்பு, குழந்தையின் பிரார்த்தனை, யாகத்தின் புகை ஆகியவை எப்போதும் தூய்மையானவை| என்று சொல்லுகிறார். இன்னொரு இடத்தில் ~கதிரவனின் கிரணம், பசுவின் நிழல், காற்று, நீர், தீ, கன்னியின் மூச்சு ஆகியவற்றை விடத் தூய்மையானது வேறேதுவும் இல்லை| கடைசியாக அவரால் கூறமுடிந்ததொரு புனிதமான பொய் |உடலில் தொப்புளுக்கு மேலுள்ள திறந்த பகுதிகள் தூய்மையானவை. தொப்புளுக்குக் கீழுள்ளவை யாவும் தூயவை அல்ல.  கன்னியொருத்தியின் உடல் மட்டும் தான் முழுதுமாக தூய்மையானது| "2 நீட்சே மனுவை போற்றிப் புகழ்ந்து, ஆணாதிக்கத்தை அங்கீகரித்து கிறிஸ்தவத்தை வெறுத்த விதம் இப்படித்தான். கிறிஸ்தவ எதிர்ப்பு என்பது உயர் மனிதர்களை படைக்கும் ஆற்றல் அற்றது என்ற அடிப்படையில், மனுவின் மனுதர்மம் பார்ப்பனிய உயர் சமூகத்தை படைப்பதில் இருந்தே ஏற்றுக் கொள்கின்றார். மனுவை நீட்சேயும் ஒப்பிட்டு ஆராயும் போது, நீட்சே 19ம் நூற்றாண்டின் இறுதியில், பார்ப்பனிய மயமாக்கலை Nஐர்மனிய ஆரிய சமூகம் சார்ந்து கோருகின்ற அந்தக் காலகட்டம் என்பது, ஏகாதிபத்திய மயமாதலை பாசிச மயமாக்குவதை அடிப்படையாகக் கொண்டே இது எழுகின்றது. மனு பெண்கள் பற்றி கூறிய ஆணாதிக்க அடக்குமுறைக் கோட்பாடுகளை விரிவாக எனது நூலான "ஆணாதிக்கமும் பெண்ணியமும்" என்ற நூலில் கண்க. பெண்கள் பற்றி மனுவின் ஆணாதிக்க அடக்குமுறையை பார்ப்பனிய பண்பாடாக உருவாக்கிய இருண்ட காலத்தை, 19ம் நூற்றாண்டில் போற்றி மெச்சி நீட்சே முன்மொழிவது என்பது, ஆணாதிக்கத்தின் வீழ்ச்சியை மீளவும் நிறுவும் முயற்சியின் விளைவே, நீட்சேயின் விளக்கவுரைகள். இன்று பின்நவீனத்துவத்தின் பின்னும், தலித்தியத்தின் பின்பாகவும் நீட்சே நுழைக்கும் நோக்கம், இந்திய சமுதாயத்தின் ஆணாதிக்கமும், சாதியமும், சுரண்டலும் தகர்த்து வரும் வர்க்கப் போராட்ட சமுதாய போக்கை, தடுத்து நிறுத்தும் ஒரு முயற்சியாகவே இது உள்ளது.

பார்ப்பனிய மயமான நீட்சே பெண்கள் பற்றி ஆணாதிக்க வழியில் கூறுவதைப் பார்ப்போம்; "பெண்ணுக்கு ஆண் என்பவள் ஒரு வழிவகை தான். குழந்தை தான் அவளுக்கு எப்போதும் நோக்கம். ஆனால் ஆணுக்குப் பெண் என்பவள் என்ன? உண்மையான மனிதன் இரண்டு வித விஷயங்களை விரும்புகிறான்: ஆபத்தும் பொழுது போக்கும் தான் அவை. அதனால்  மிகவும் ஆபத்தான விளையாட்டுக் கருவியாக பெண்ணை அவன் விரும்புகிறான். ஆண் போருக்காகப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இதைத் தவிர மற்றவை எல்லாம் முட்டாள்த் தனமான பிழைகள். அதி தித்திப்பான பழங்களை போர்வீரன் விரும்புவதில்லை. அதனால் தான் அவன் பெண்ணை விரும்புகிறான். ஏனெனின் அதி தித்திப்பான பெண் கூட கசப்பாகத் தான் இருக்கிறாள்."1 என்கிறான் நீட்சே. ஆணாதிக்கம்  இப்படித் தான் பெண்ணை வருணித்து, இழிவுபடுத்துகின்றது. ஆண்களின் வலிமையான அதிகாரத்தில் பெண்ணின் கடமையை செய்வதே அவளுக்கு பணியாக மீளவும் கூறிய நீட்சேயின் விளக்கத்தையே, நாசிகள் தமது பாசிசத்தை உச்சத்தில் கொண்டிருந்த காலத்தில் நிலைநாட்டினர். பெண்களின் சுதந்திரங்கள் பல மறுக்கப்பெற்று பிள்ளை பெறவும், வளர்க்கவும், கணவனின் தேவைகளை பூர்த்தி செய்யும் படியும் கோரப்பட்டனர்.

பெண்களை நீPட்சே சபிக்கும் போது "ஒரு விளையாட்டுக் கருவியாகவே பெண் இருக்கட்டும்! இனி வரப்போகும் உலகத்தின் நற்குணங்களால் ஒளியூட்டப்பெற்று அழகோடும், தூய்மையோடும் அதியற்புதமாகப் பிரகாசிக்கும் அபூர்வமான ஒரு வைரமணி போலவே அவள் ஒரு விளையாட்டுக் கருவியாக இருக்கட்டும். நட்சத்திரத்தின் ஒளி வீச்சு ஒன்று உங்கள் காதலில் மின்னட்டும்! ~அதிமனிதனை நான் பெற்றெடுப்பேன்| உங்கள் நம்பிக்கை சொல்லட்டும்."1 மனுவின் அதே பிதற்றல்களையே, நீட்சே அதிமனிதனின் பெயரால் பெண்களுக்கு உபதேசிக்கின்றார். பெண் அடிமையாக இருக்க பெண் அடங்கியிருக்க "உங்கள் காதலில் வீரம் இருக்கட்டும்! உங்களை பயத்தால் தூண்டியெழுப்புகிறவன் யாரோ அவனை உங்கள் காதலாலேயே தாக்குங்கள்" என்கிறார். எந்த ஆணைக் கண்டு பெண் பயந்து நடுங்குகின்றளோ, அவனை வீரத்துடன் காதலிப்பது நல்லது என்கின்றான் நீட்சே. பயந்து அடங்கி வாழ்ந்தபடி காதலிப்பதே வீரத்தின் பண்பு என்கின்றான். ஆணாதிக்கத்துக்கு அடங்கி சலாமிட்டபடி காதலித்து பணிவிடை புரிய, பாசிச ஆணாதிக்க நீட்சே வலிமையின் வீரமாக இதைக் காட்டி, பெண்கள் ஆணுக்கு அடங்கி வாழப் பணிக்கிறான். பெண் அடங்கி வாழ்வதே சிறப்பு என்று கூறும் போது "பெண் கீழ்ப்படியத் தான் வேண்டும். அதன் மூலம்தன் மேற்பரப்புக்கு ஓர் ஆழத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்;." கீழ்படிவின் கரைகாணவேண்டும் என்கிறார். அடங்கி வாழ்வதில் வலிமையின் வீரத்தை அடிப்படையாக கொண்டு மாமனிதனாக வேண்டும் என்கிறார். அடங்கி வாழ மறுத்தால் அவள் "அடக்கத்தை இழக்கிற பெண் ருசியை இழக்கிறாள்" என்றதன் மூலம், பெண்ணின் சுதந்திரம் அவளின் இன்பத்தையே சிதைப்பதாகும் என்கிறார். இதைவிட ஆணாதிக்கத்தை திணித்து சுதந்திரத்தை இந்தளவு அப்பட்டமாக யாரும் மறுக்க மாட்டார்கள். இதை மீறும் பெண்ணை நீட்சே எப்படி தூற்றுகிறான் எனப் பார்ப்போம்; "பெண்ணொருத்தியிடம் பாண்டித்திய நோக்கங்கள் இருக்கின்றன என்றால் பொதுவாக அவளுடைய பெண் தன்மையில் (கருப்பையில்) கோளாறு இருக்கிறது என்று அர்த்தம்!"1 என்று ஆணாதிக்க நீட்சே பெண்ணையிட்டு எச்சரிக்கின்றார். இலங்கை இந்திய பின்நவீனத்துவ தலித்தியல் வாதிகள் இதை ஏற்பதால் தான் நீட்சேயை முன்னிறுத்துகின்றனர்.  ஆணாதிக்க வாதியான நீட்சே பெண்களை எப்படி கருதுகின்றார்; என்பதையும் சொல்லத் தயங்கவில்லை. அதை அவர் "வழியைத் தவற விட்டுவிட்டுத் தங்களை நோக்கிப் பறந்து வந்த பறவைகளாகவே பெண்களை ஆண்கள் கருதுகிறார்கள்" என்று கூறுவதன் மூலம், பெண்ணின் சுய ஆற்றல் மறுக்கப்படுகின்றது. ஆணின் தயவில் வாழும் அளவுக்கு, அவள் வழி தவறியவள் என்கின்றார். அதாவது பெண், ஆண் சார்ந்து வாழ்வதே இயற்கையின் விதி என்கிறார். இதை மேலும் அவர் "பெண்களைப் பொறுத்த வகையில் அவர்களுக்கு ஒரேயொரு இச்சைதான் இருக்கிறது. தனக்கு ஏற்றவனாக அவள் யாரை விரும்புகிறாளோ, அவனை அடைவது தான்" என்று நீட்சே பெண்களை இழிவு செய்து கொச்சைப்படுத்துகின்றான். பெண்ணின் இயல்பாக மேலும் "காதிலிப்பதிலும் சரி, பழி வாங்குவதிலும் சரி, ஆடவனைவிடப் பெண் தான் அதிகம் காட்டுமிராண்டித்தனமாக இருக்கிறாள்"1 என்கிறான். ஆணின் பழிவாங்கும் நயவஞ்சகமான, சதித்தனமான, கோழைத்தனமான பண்புகளையும் நோக்கங்களையும் மூடி மறைக்க, பெண்ணை தூற்றுவது நீட்சேக்கு மாமனித கோட்பாட்டு நிபந்தனையாகின்றது. பெண்ணை காதலிப்பதாக காட்டி அவளின் தற்காப்பை உடைத்து, பாலியலை நுகர்ந்து எறிகின்ற போது, பெண் வெகுண்டெளுவதையே நீட்சே கண்டு சினந்து பெண்ணை இழிவுபடுத்துகின்றான்;. பெண் வஞ்சகமற்ற நேர்மையான பரஸ்பரக் காதலை பொதுவாக எதிர்பார்க்கின்ற போது, ஆணாதிக்கம் இதற்கு எதிர்மறையாக இருப்பது யதார்த்தமாக உள்ளது. இங்கு பெண் இதைக் கண்டு எதிர்த்து போராடுவதை, பாசிச நாசி நீட்சேயால் சகிக்க முடியவில்லை. அதனால் தூற்றுவதும், இழிவுபடுத்துவதும் அவரின் கோட்பாடாகின்றது. இதில் இருந்தே பெண்ணை நீட்சே வருணிக்கும் வடிவம் "நிலா வெளிச்சத்தில் பெண்ணைவிட ஆணைத் தான் நான் அதிகம் நம்புவேன்"1 என்பதன் மூலம் ஆணின் விபச்சாரத்தை மூடிமறைந்து, பெண் சோரம் போகின்றவள் என்பதையே, சொல்லாமல் சொல்லுகின்றார். இதில் இருந்தே பெண்ணின் கடமையை "போரட்டத்துக்குத் தகுதியான ஆண், தாய்மைக்குத் தகுதியான பெண். நடனமாடுவதற்குத் தகுதியாக இருவரும்!" என்றதன் ஊடாக ஆணின் கடமை உலகை அடக்கியாள்வதும், பெண்ணின் கடமை அடக்கியாளும் குழந்தைகளை பெத்துப் போடுவதுமே என்கிறார். இதை நீட்சே "பெண்ணுக்கு குழந்தைகள் தேவைப்படுகின்றன." என்று ஆணாதிக்க உலகத்தை பாதுகாத்து பாசிசத்தை கட்டமைக்க, அவரின் கோட்பாடு பெண் அடிமைத்தனத்தை மீளவும் உபதேசிக்கின்றார். பெண்ணை மனுவின் வார்த்தைகளில் கொச்சைப்படுத்தவும் தயங்கவில்லை. "ஆணைவிட கயமைத்தனமும் தந்திரமும் வாய்ந்தவள்"1 என்று ஆண்களின் பண்புகளை பெண்களின் பண்பாக சித்தரிப்பதும், திரிப்பதிலும் சாதனை படைக்கின்றார். பெண் ஆணுக்கு அடங்கிப் போகவேண்டும் என்பதை "ஆண்களைக் கண்டு பயப்படுதலைக் கற்கத் தவறும் பெண் தன் பெண்மையின் அதி உன்னதமான இயல்புணர்வுகளைப் பலியிடுகிறாள்."1 என்று கூறி ஆணாதிக்க உலகத்தை பாதுகாக்க சபதம் ஏற்கின்றார். பெண்ணின் இயல்பும், இயற்கையும் அடங்கிப் போவது தான் என்பதையே, நீட்சே ஒப்புவிக்கின்றார். அதை அவர் "பெண்களின் சமஉரிமைப் போராட்டம் என்பது நிச்சயமாக ஒரு வியாதியின் அறிகுறியே! ... பெண்ணிடம் எவ்வளவுக் கெவ்வளவு பெண்மை அதிகம் இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக அவள் உரிமைகளை எதிர்த்துப் போராடுவாள். இயற்கையின் நியதி அதுதான்."1 எவ்வளவு மோசமான ஒரு ஆணாதிக்கவாதியை நாம் சந்திக்கின்றோம்; பெண் தனது விடுதலைக்கு போராடுவதை மறுக்கும் நீட்சே, அதை பெண் எதிர்த்துப் போராடுவதை மெச்சுகின்றார். ஆண்கள் பெண்விடுதலைப் போராட்டத்தையும் விடுதலையையும் தடுக்க முடியாது என்பதால், பெண்களை அதை எதிர்த்து போராடுவதன் மூலம் முட்டுக்கட்டை போட்டுவிட முடியும் என்று, நயவஞ்சகத்துடன் கூடிய கயமையுடன் நீட்சே முன்னிறுத்துகின்றார். நீட்சே தமிழில் முன்னிறுத்தும் பின்நவீனத்துவ தலித்தியல்வாதிகள் இதற்கு ஊடாக சாதிக்க முனைவதும் இதைத் தான்.  நீட்சே பெண்ணின் சமவுரிமை போராட்டத்தை வெறுப்பது போல், சமதர்ம அமைப்பையும் வெறுக்கத் தயங்கவில்லை. அதை அவன் "சமத்துவத்தைப் பற்றி போதிப்பவர்களே! சர்வாதிகாரக் கொடுங்கோன்மைப் பித்தின் ஆண்மையற்ற தன்மை தான் அவ்வாறு உங்களிடம் சமதர்மம் என்ற பெயரில் கூச்சலிடுகிறது" என்று தனது உயர் வர்க்க மாமனித சுரண்டும் நிலையை போற்றுகின்றான்;. மக்களின் விடுதலை பற்றி பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தை ஆண்மையற்ற தன்மையாக அடையாளம் காட்டி, அதை பெண்மையின் அங்கமாக சித்தரிப்பது, ஆணாதிக்க சுரண்டல் அமைப்பின் பார்ப்பணிய பாசிமூலமாகும்;.  இது தான் நீட்சேயின் கோட்பாடாகும.

1.சிந்தையாளர் நியெட்ஸே

2.டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி -6

3.அம்மா இதழ் -13

4.சனதருமபோதினி