08152022தி
Last updateபு, 02 மார் 2022 7pm

விபச்சாரமும் இலக்கியமும் சந்திக்கும் புள்ளிகள்

ஐரோப்பிய பாலியல் வக்கிரத்தை தீர்க்க சுற்றுப் பிரயாணத்தை செய்த சாருநிவேதா, இந்திய ஏகாதிபத்திய தரகு முதலாளிகளுக்கு சார்பான மேட்டுக் குடி பெண்களின் அலைந்து திரிந்து அனுபவிக்கும், நுகர்வு விபச்சாரத்தை ரசித்து அனுபவித்த ஆணாதிக்க வக்கிர வெறியை இலக்கியமாக்கி, அதை புலம்பெயர் வக்கிரங்களுக்கு புலம்பியபடி, ஐரோப்பிய விபச்சாரிகளை வீதி விதியாக தேடி, பரந்த பெரிய மார்பகங்களை கண்டுபிடித்து (இப்படியான பெண்களே வேண்டும் என்று கோரி தேடியலைந்தான்) அவர்கள் முன் அமர்ந்தே, இலக்கிய சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த புரட்சிச் செம்மல். ஆணாதிக்க பாலியல் வக்கிரம் பிடித்த இந்தச் செம்மல் 1.2.2001 குமுதம் இதழில் "கஞ்சா புகைத்தபடி" ஆடை அவிழ்ப்பை நடன (டிஸ்கோவில்) மண்டபத்தில் செய்ததாக வாக்கு மூலம் கொடுக்கின்றான். கஞ்சா அடித்தபடி ஆணாதிக்க வக்கிரத்தை ரசித்து இலக்கியம் படைக்க, கோப்பை கழுவி கூப்பிட்டதாக இந்த ஆணாதிக்க பன்றி அதில் எழுதத் தயங்கவில்லை. பாரிசில் ஸ்ராலின் பேய் கலைக்க வந்த இடத்தில், சாதித்தது எல்லாம் இவைதான். இந்த பச்சைப் புளுகாண்டி கஞ்சா அடித்த போதையில் ஆணாதிக்க பாலியல் வக்கிரத்தை தீர்க்க கூப்பிட்ட புலம்பெயர் பின்நவீனத்துவ தலித்துகள், நாள் ஒன்றுக்கு 30 மணி (!!) நேரம் உழைத்து, 30 மணி முடிய (!!) மயங்கி விழுந்ததாக கூறுவது, பார்ப்பான் தியாகராயர் சிதம்பரம் சென்ற போது திரைச்சீலை அறுந்து விழுந்து திருவுருவம் காட்டியது போல் அதிசயமானது. இது போன்ற பல புளுகுகளை குமுதம் ஊடாக வெளியிட்ட சாருநிவேதாவை, 30 மணி நேரம் மயங்கி விழ விழ கோப்பை கழுவி அவரை கூப்பிட்டு தூக்கி திரிந்து, விவாதம் நடத்திய எல்லா எழும்பு சுப்பிகளின் "சுதந்திர" "இலக்கிய" தலித் பின்நவீனத்துவ "முதுகு எலும்;புகளிடம்" குலைத்து நக்க இதை விட்டுவிடுவோம்;. "அரசியல்வாதிகளால் கவிஞர்களைப் புரிந்து கொள்ள முடியாது. வெறுமனே குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்யவே முடியும்" என்று சாருநிவேதா கூற, அம்மா இதில் இருந்து தனது இலக்கிய கோட்பாட்டை வகுக்க, அதன் ஆசிரியர் குறிப்பில் "இன்றைய இலக்கியச் சூழல் ஓர் கலகக்காரரின் வருகைக்காக காத்துக்கிடக்கிறது..." என்ற தலைப்பிட்டே இதை எடுத்துக் காட்டி, ஒரு கலகக்காரனுக்குரிய பெருமை கொடுத்து பெருமைப்பட்டு சாமரை வீசத் தயங்கவில்லை. கஞ்சா அடித்து ஆணாதிக்க வக்கிரத்தை (சினிமாவில் ஆடவைக்கப்படும் பாலியல் வக்கிர நடனங்கள் மற்றும் காட்சிகள் போல்) கொட்டித் தீர்க்கும் கோட்பாட்டு சமூகவிரோதிகளை, அரசியல்வாதிகள் சரியாக புரிந்தே இருப்பதை இவை மீண்டும் உறுதி செய்கின்றது. இங்கு அரசியல்வாதிகள் என்பது பாட்டாளி வர்க்கத்தை குறித்தே நிற்கின்றது. (இந்த நடத்தைகளில் ஈடுபடும் சாதாரண மக்களை, கோட்பாட்டு இலக்கிய தளத்தில் இருந்து வேறுபிரித்தே பாட்டாளி வர்க்கம் அணுகுகின்றது.) இந்தியாவில் கோடான கோடி மக்கள் கொத்தடிமையாகவும், சாதிய கொடூரத்தாலும் மற்றும் சுரண்டப்படும் உழைக்கும் மக்களின் உதிரத்தை மறைமுகமாக ஆதாரமாக கொண்டு, சொகுசாக வாழும் இந்த பன்றிகளின் சமூக விரோத வக்கிர இலக்கியங்களை பாட்டாளி வர்க்கம் சரியாகவே மீண்டும் இனம் காண்கின்றது. அதையிட்டு மூலதனமும், அதை வாலாட்டி சூப்பித் தின்னும் நாய்களும் குரைக்கின்ற போதே, எமது விமர்சனத்தினதும்; போராட்டத்தினதும் சரியான பாதையை மீளவும் உறுதி செய்கின்றது.


பி.இரயாகரன் - சமர்