பாரிஸ்சில் தனிப்பட்ட இருநபருக்கு இடையில் நடந்த வன்முறையையும், அதை வைத்து நடத்திய பிழைப்பையும் அம்பலம் செய்த அறிக்கை (இது மேலே உள்ளது) ஒன்றை அனுப்பிய போது, வந்த இரண்டு ஈ மெயில்கள் கீழ் உள்ளது. ஒரு கடிதம் அனுகுமுறை ரீதியாக வக்கிரமானதும் வன்முறை ரீதியானவை. இரண்டாவது சமுதாய விடையங்களில் இருந்து ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கும் இந்த சமுதாய பிரியரிடம் இருந்து வந்தவை.
|
உமக்கென்ன தலை கழண்டா போச்சு. ஈ மெயில் ஒருக்கா அனுப்பினால் கிடைக்கும் தானே
|
No Mail Please!
please dont send a mail folowing adress:
முதல் கடிதம் இரண்டு முறை அனுப்பியதால் மண்டை கழன்று போச்சோ என்று கூறியதன் மூலம், உண்மையில் வன்முறைக்கு எதிரான கருத்தை மறுப்பதைக் காட்டுகின்றது. இரண்டுமுறை அனுப்பியது என்பது வௌ;வேறு விடையங்களை கொண்டிருந்தது என்பது ஒருபுறம் இருக்க, இப்படியான அணுகுமுறை எம்மண்ணில் தொடரும் வன்முறை வக்கிரத்தின் ஒரு பகுதிதான். சர்வ சாதாரணமாகவே சமுதாய அக்கறையை சமுதாயப் புரட்சியூடாக மாற்றுவது என்ற வழிகளில் வெளிப்படுத்தும் போது, மண்டை கழன்று போனதாக வியாக்கியானப்படுத்தும் நிகழ்வுகளை நாம் நாள்தோறும் சந்திக்கின்றோம். இந்த சமுதாயத்தின் நுகர்வு வக்கிரம், வன்முறை… மேல் எழுப்பும் கேள்விகளை, ஒரு மனநோயாளிக்குரிய வகையில் அடையாளப்படுத்தி தமது வக்கிரங்களை பாதுகாப்பது இந்த சமுதாயத்தின் பண்பாகவுள்ளது. 1985ம் ஆண்டு நான் பல்கலைக்கழகத்தில் ராக்கிங்கை எதிர்த்து துண்டுப்பிரசுரம் ஒன்றை விநியோகித்த போது, பல்கலைக்கழக மாணவர்கள் "பல்கலைக்கழகத்தில் ஒரு மனநோயாளி" என்று என்னை குறிப்பிட்டு துண்டுப்பிரசுரம் போட்டதுடன், அதை அன்றைய யாழ் பத்திரிகையிலும் மறுபிரசுரமாக்கினர்.
சமுதாயம் தொடர்பானதும் வாழ்வியல் விடையங்களை நாம் முன்வைக்கின்ற போது, அதை கேவலமாக கருதும் தன்மை காணப்படுகின்றது. இவற்றை புறக்கணிப்பது, அவதூறு செய்வது இந்த சமுதாயத்தின் வன்முறை கொண்ட ஜனநாயக விரோத பண்பாகவுள்ளது. இணைய கடிதம் மூலம் ஒரு செய்தியை நாம் அனுப்பும் போது, அதை தடுக்கும் வழிகள் சொந்தத்தில் இருந்த போதும், அதை அனுப்ப வேண்டாம் என்ற வேண்டுகோளும், மறு தளத்தில் வன்முறை ரீதியாக மொழியில் பதில் கிடைக்கின்றது. ஆனால் சமுதாயத்தில் நாம் காணும் இடமெல்லாம், எம்மை நோக்கி பல்வேறு விடையங்கள் திணிக்கப்படும் போது, இந்த நபர்கள் அதை பாதுகாக்க விரும்பும் போதே எதிர்வினைகள் எம்மை நோக்கி வருகின்றது. தொலைக்காட்சி விளம்பரம் முதல் காட்சிகள் வரை, தமிழ் சினிமாவில் பாலியல் வக்கிர முதல் எதார்த்ததுக்கு புறம்பான காதல் கட்சிகள், வீதியில் நடக்கும் போது வீதி எங்கும் எம்மை சுண்டி இழுக்கும் விளம்பரங்கள், தாபல் பெட்டியில் வந்து குவியும் விளம்பரங்கள் என்று, வாழ்வின் அனைத்து அம்சத்திலும் எம்மை நோக்கி பல விடையங்கள் திணிக்கப்படுகின்றது. இதில் பெரும்பாலானவையை நாம் ஜிரணித்து அதன் பிரதியாகிவிடும் போது, இதைக் கேள்வி எழுப்பி வெளிவரும் ஒரு சிலவற்றை இழிவுபடுத்தும் வடிவத்தையே நாம் மேலுள்ள கடிதத்தின் வழியாக காண்கின்றோம்.