Language Selection

சமர் - 29 : 11 - 2001
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அண்மைக் காலமாக புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில், புலிகளுக்கு எதிரான தனிமனித அழித்தொழிப்பு தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. முக்கிய முன்னணி தலைவர்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள், ஈனத்தனமான இராணுவ அரசியல் வழிமுறையாகும். தனிமனித படுகொலை மூலம் போராட்டங்களையும், நியாயமான மக்களின் உரிமைகளை சிதைக்கவும் அழிக்கவும் முனைகின்றனர். நன்கு தேர்ந்த முறைகளில் விரிவான தளத்தில் இந்த படுகொலைகள் நடப்பதையே நிகழ்வுகள் தெளிவாக்கின்றன. இயக்க முன்னணி தலைமைகளை குறிவைத்து தொடர்ச்சியாக நடக்கும் அழித் தொழிக்கும் நடைமுறைக்கு, தலைமைக்கு அருகில் நெருங்கி நிற்கும் பிரிவுகளை சார்ந்து நிற்பதே, எப்போதும் சாத்தியமான ஒரேயொரு வழிமுறையாகும்;. எதிரி நெருங்கி வரமுடியாத நிலையில், போராட்ட சக்திகளுக்கு அருகில் அக்கம் பக்கமாக நிற்கும் அதிர்த்தியுற்ற பிரிவுகளை கண்டறிவதன் மூலமே, எதிரி அவர்களை பயன்படுத்தும் நுழைவாயிலை ஏற்படுத்திவிடுகின்றது. இது இயக்கத்தின் உள்ளும் அமைப்புக்கு வெளியிலும் எதிரி நுழைந்துவிடும் போது, போராட்டம் ஆழமான நெருகடியை சந்திக்கின்றது.  இந்த வகையில் அதிர்த்தியுற்ற நபர்கள் உருவாகதா வகையில், போராடும் அமைப்புகள் ஜனநாயக மத்தியத்துவத்தை ஆதாரமாக கொண்டு, எதிரியையும் நன்பனையும் சரியாக கோடு பிரிக்க வேண்டும்;. இதில் தவறு இழைக்கும் போது, எதிரி அவற்றை தனக்கு சதகமாக இலகுவாக பயன்படுத்திவிடுகின்றான்.

 

வரலாற்றில் இது முதல் தடவை நடந்தவையல்ல. உலகைக் குலுக்கிய சோவியத் புரட்சிக்கு தலைமை தாங்கிய போல்ஷிவிக் கட்சியின் மத்திய குழு வரை கூட எதிரி நுழைந்திருந்தான். இது பற்றி லெனின் கூறும் போது "தலைமையகத்தை - தலைவர்களை -~மூடிமறைத்தப்| பரம இரகசியமாய் வைத்துக் கொள்வது அவசியமாகி விடும்படி சட்டபூர்வமான வேலைகளும் சட்ட விரோதமான வேலைகளும் மாறி மாறி வந்தால், சில நேரங்களில் மிகவும் அபாயகரமான விளைவுகள் ஏற்பட்டன. இவ்விளைவுகளில் மிகவும் மோசமானது 1912ல் போலிஸ் கையாள் மலினோவ்ஸ்கி போல்ஷிவிக் மத்தியக் கமிட்டியில் புகுந்து கொண்டதுதான். மிகச் சிறந்த, பற்றுறுதி மிக்க எத்தனையோ பல தோழர்களைக் காட்டிக் கொடுத்து, அவர்களுக்குக் கடும் காவல் தண்டனை கிடைக்கச் செய்து, பலரும் விரைவிலேயே மரணமடைய அவன் காரணமாயிருந்தான். ... மலினோவ்ஸ்கி எங்கள் நம்பிக்கைக்கு உரியவனாகும் பொருட்டு, சட்டபூர்வமான தினசரிப் பத்திரிகைகளை நிறுவ எங்களுக்கு உதவும்படி நிhப்பந்திக்கப்பட்டான்." என்று எழுதிய லெனின், இதை "நமது தவறு" என்ற குறிப்பிடத் தவறவில்லை. ஒரு எதிரி அருகில் அல்லது உள்ளே நுழைகின்றான் என்றால், அது முற்று முழுதாக போராட்ட அமைப்புதான் காரணமாக இருகின்றது. அமைப்பை நம்ப வைக்கவும், அமைப்புக்காக நாய் போல் இயங்க வேண்டிய நிhப்பந்தம் உள்ளது. போல்ஷிவிக் கட்சி மக்கள் இயக்கமாக இருந்தால், அவன் கட்சிக்காக மக்களை அணிதிரட்டும் நடவடிக்கையில் செயற்பட வேண்டியிருந்தது. இதன் மூலம் தான் எதிரி தன்னை மறைக்க முடிந்தது. அவன் கட்சிக்காக புதிய பல நபர்களை இனைத்தபடிதான், சிலரை காட்டிக் கொடுக்கமுடிந்தது.

ஆனால் புலிகள் இயக்கத்தில் இது நேர்மறையில் தான் நடக்கமுடியும். தனிமனித புகழ்பாடல் மூலம் யாரும் இலகுவாக அமைப்பில் நுழைந்து விடலாம். அதிலும் தீவிரமாக செயல் ரீதியாக உள் வெளி எதிரிகளை (போலியாகவும், உண்மையாகவும்) இனம் காட்டுவது மற்றும் தண்டனைகள் வழங்குவது, இலகுவாக சந்தேகமற்ற உயர் நிலையை அடைந்துவிட முடியும். இதன் மூலம் எதிரி பரிசோதிக்க முடியாத உயர் நிலையை அடைகின்றான். எதிரியைத் தேடி எதிரியே இயங்குவது என்ற நிலையும் ஏற்பட்டுவிடும். இது அமைப்பின் அரசியல் ரீதியாக மக்கள் அமைப்பை உருவாக்க தவறுகின்ற நிலையில் எதிரியை அடையாளம் காணமுடியாது பரிதபம் ஏற்படுகின்றது. இந்த நிலை அமைப்பில் நிகழ்வதற்கு அடிப்படையாக உட்கட்சி ஜனநாயகம் இன்மை, நன்பன் எதிரிகளை தேசிய உள்ளடகத்தில் கோட்பாட்டு ரீதியாக வகுக்காமை, தனிமனித துதிபாடல், மக்களின் சுய செயற்பாடின்மை, சுய பொருளாதார ஊக்குவிப்பின்மை, பொருளாதார நெருக்கடிகளை அரசியல் ரீதியாக முன்வைத்து போராட மறுக்கும் தன்மை, பண சேகரிப்பு வரை முறையற்ற தன்னியல்பான தன்மை, கட்டாய ஆட்சேகரிப்பும் இராணுவ பயிற்சியும், மக்கள் மேலான கடும் தண்டனை முறை, மக்கள் நீதிமன்றங்கள் சமூக பொருளாதார விடுதலையின் அடிப்படையில் அரசியல் ரீதியாக உருவாக்காமை, போராட்டத்தில் போராட விரும்பும் அமைப்புகளை அழித்தொழிப்பது போன்ற பல்வேறு காரணத்தினால் எதிரி இலகுவாக, தனக்கு தேவையான நபர்களை இயக்கத்தின் உள்ளும் வெளியிலும் போராட்டத்தின் அருகில் பெற்றுவிடுகின்றான். எதிரியின் ஊடுருவல் இனம் காண முடியாத தொடர்பற்ற வலைப்பின்னலை இது உருவாக்கிவிடுகின்றது. எதிரி இதை வெளியில் இருந்தும் உள்ளிருந்தும் இலகுவாக இயக்க முடியும்.

இனனொரு வழியில் எதிரி அல்லாத அதிர்த்திக் குழுக்கள் புலியின் உள் அல்லது வெளியில் அல்லது இரண்டு தளத்திலும் செயற்படக் கூடிய ஒரு சூழலும் இந்த விவகாரத்தில் காணப்படுகின்றது. இதில் எது என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டிய கட்டயத்தில் உள்ளது.

புலிகளின் தலைமைகள் மீதான தாக்குதல்கள் விரிவான தளத்தில் பரந்த பிரதேசத்தில் நடப்பதை அவதானிக்கும் போது, ஆச்சரியப்படுமளவுக்கு எதிரியின் ஊடுருவல் புரையோடிப் போய்யுள்ளதை காட்டுகின்றது. வன்னி முதல் கிழக்குவரை நடக்கும் இந்த தாக்குதல், உயர் மட்ட தலைமைகளின் நடவடிக்கைகளை கண்காணித்து நடத்தப்படுவது அவதானிக்க முடிகின்றது. இதில் இருந்து இந்த தாக்குதலுக்கான கண்காணிப்பு முன்னணி தலைமைக்குள்ளும் உடுருவியுள்ளதையும், இது வடக்கில் இருந்து கிழக்கு வரை புரையோடியிருப்பதை காட்டுகின்றது. இதில் இருந்து இரு ஊகங்கள் வெளிப்பாடுகின்றது.

1.இந்த தாக்குதலை புலிகளின் அதிர்த்தியுற்ற பிரிவு ஒன்று திட்டமிட்டே உள்யிருந்து தாக்குகின்றாதா? அல்லது

2.இராணுவத்தின் கைக்கூலியாக பல அதிர்த்தியுற்ற நபர்கள் விரிவான தளத்தில் செயற்படுகின்றனரா?

என்ற சந்தேகத்தை மீண்டும் விட்டுள்ளது. ஆனால் இந்த உயர்மட்ட படுகொலை கண்காணிப்பு, புலிகளின் உயர்மட்டம் திட்டமிடும் நடத்தும் இராணுவ தாக்குதலை முன் கூட்டியே அறிந்து முறியடிக்கவில்லை. இங்கு புதிய ஊகங்களை இத விடுகின்றது.

1.தனிமனித படுகொலைகான குழு இராணுவ தாக்குதலை கண்காணிப்பதில் இருந்து, எதிரி தனிமைப்படுத்தியிருக்கலாம் அல்லது

2.இராணுவத்துடன் தொடர்பற்ற குழு புலியின் உள் அல்லது வெளியல் அல்லது இரண்டிலும் செயற்படும் குழுவுக்கு, இராணுவம் மீது தாக்குதல் நடத்தப்படுவது அவர்களுக்கு அவசியமற்ற விடையமாக இருக்கலாம்.

இராணுவ உளவாளிகள் உட்புகுந்து குறிப்பான தலைமைகளின் நடமட்டங்களை சரியாக தேர்ந்து ஒரு தாக்குதலை நடத்துகின்றார்கள் எனின், முன் கூட்டியே புலிகளின் இராணுவ தாக்குதலைக் கூட அறியமுடியும். ஆனால் அப்படி ஒன்றும் இதுவரை நிகழவில்லை. இது பிரச்சனையை மேலும் சிக்கலாக்கி வருகின்றது. இந் நிலையில் மட்டகளப்பில் கிளைமோர் கண்ணிவெடியுடன் கைது செய்து மரணதண்டனை வழங்கியதாக கூறும் புலிகளின் செய்தி, ஆச்சரியப்படத்தக்கது. மிக குறுகிய காலத்தில் வேகமாக அதுவும் கிளைமோருடன் கைது செய்தாக கூறுவது, எதிரி மேலும் ஆழமாகவும் நுட்பமாகவும் ஒளித்துக் கொள்வதைக் காட்டுகின்றது. பெரும் தொகையாக மட்டகளப்பில் நடந்த கைதின் பின்பும் கூட, தாக்குதல் நடந்தாக பத்திரிகை செய்திகள் தொரிவிக்கின்றன. இயக்கங்களில் இருந்து ஒதுங்கிய மற்றயை இயக்க நபர்கள், புலிகளின் இருந்து விலகியவர்கள் மேலான சந்தேகம் மற்றும் தண்டனைகள் எதிரியை அடையாளம் காண்பதற்கு பதில் எதிரியை வழமையான பணியில் விளக்கி தேடுவதாகும். இது போன்று புலிகளால் எதோ ஒரு விதத்தில் முன்னர் பதிக்கப்பட்டவர்கள் மேலான சந்தேகங்கள் மற்றும் விசாரனை நடந்துள்ளாதாக செய்திகள் வெளிவருகின்றன. சிலருக்கு தண்டனைகளை புலிகள் வழங்கியதாக அறிய முடிகின்றது. இவை அனைத்தும் எதிரி நவீனமாக உடுருவி உள்ளிருந்தும் நடத்தும் தாக்குதலின் புறநிலைத் தன்மையை, புலிகள் இனம் காணமையைக் காட்டுகின்றது. பழைய வடிவில் எதிரியை தேடி வரும் போக்கு, அவர்களின் திசை வழியில் ஆழமான சமுதாய பிளவை அகலவைக்கின்றது. இதன் மூலமும் எதிரியின் நோக்கம் வெற்றிபெறுகின்றது.

இந்த தாக்குதலின் நோக்கம் பலவாக இருக்கலாம்.

1.புலிகளின் தலைமை அழிப்பதன் மூலம் புலிகளின் போராட்டத்தை ஒடுக்குவதன் மூலம், தமிழ் மக்களின் சுயநிர்ணயத்துகான போராட்டத்தை அழிக்கலாம்.

2.கடுமையான தீவிரமான தலைவர்களை அழிப்பதன் மூலம் மிதவாத தலைமையை உருவாக்கி பேச்சு வார்த்தை மூலம் போராட்டத்தை சிதைய வைக்கும் ஒரு வழிமுறையாக இருக்கலாம்;.

3.புலிகளின் உள் உள்ள ஒரு பிரிவு, மற்றொரு பிரிவை அழிப்தன் மூலம் தலைமைக்கு வர முயல்வதாக இருக்கலாம்.

4.புலிகளின் உள் உள்ள ஒரு பிரிவு போராட்டத்தை அழிக்கும் ஒரு நடைமுறையை கடந்தகால விரக்திகளில் எடுத்திருக்கலாம்.

இதிலும் எது என்பது காலமே பதில் அளிக்க வேண்டியுள்ளது. புலிகளின் உள்ளான கருத்து முரண்பாடுகள் அனுமதிப்பதில்லை. அதே போல் தலமை என்பது ஜனநாயக மத்தியத்துவதை கொண்டது அல்ல. தனிமனித வழிபாட்டை கொண்ட ஒரு தலைமையின் எற்படும் மேல் எற்படும் அதிர்ப்திகள் அனைத்தும், தன்னை அதற்குள்ளேயே மூடிமறைத்துக் கொள்கின்றது. முரண்பாடுகள் துரோகமாகி விடும் என்பதால், அதிர்த்திகள் தன்னை இரகசியமாக்கி கொள்கின்றது. இவை இணைகின்ற போது ஆழமான சதிக் குழுக்களாக அல்லது எதிரியுடன் கூட்டு இணைந்த துரோக குழுக்களாக செயற்படத் தொடங்குகின்றது. இதை கண்டு அறிவது என்பது, புலிகளின் இராணுவ வழிமுறைகளில் சாத்தியமில்லை. அனைத்தும் தனிமனித புகழ்பாடு பொது செயற் திட்டத்தில், நன்றாக தன்னை அலங்கரித்து மறைத்துக் கொள்கின்றது.