இந்தியப் படை இலங்கையிலிருந்து முற்றாக வெளியேற்றம்
இந்தியப்படைகள் இலங்கையில் நிலைகொண்டிருக்கையில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க தேர்தல் இந்தியாவில் நடைபெறத் தொடங்கியிருந்தது. ஆளும் இந்தியக் காங்கிரஸ் கட்சிக்கெதிராகக் கூட்டுச்சேர்ந்த ஜனதா தள் கூட்டணி இந்திய காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றியிருந்தது. இந்தியப் பிரதமராக ஜனதா தள் கூட்டணியைச் சேர்ந்த விஸ்வநாத் பிரதாப் சிங் பதவி ஏற்றார். ஜனதா தள் கூட்டணியின் ஆட்சி ஏற்று இந்தியாவின் இலங்கை குறித்த நிலைப்பாட்டில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்திருந்தது. பிரதமராகப் பதவியேற்ற விஸ்வநாத் பிரதாப் சிங் மார்ச் 1990 இறுதிக்குள் இந்தியப்படைகள் அனைத்தும் இலங்கையிலிருந்து வெளியேறும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார்
தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை அரசுடன் நெருங்கிவந்திருந்த வேளை இந்தியப்படையின் வெளியேற்றம் ஆரம்பமாகியிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியப்படையின் வெளியேற்ற ஆரம்பத்துடன் தமக்கெதிராகச் செயற்பட்டவர்கள் எனச் சந்தேகப்பட்டவர்களை அழித்தொழிப்பதில் தீவிரமாக இறங்கியிருந்தனர்.
ரணசிங்க பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கைகோர்த்தவாறு பத்தபென்டி டொன் நந்தசிறி விஜேவீர (ரோஹண விஜேவீர) தலைமையிலான ஜனதா விமுக்திப் பெரமுனவினருடனான ஒரு முடிவை நோக்கிய யுத்தத்தில் இறங்கியிருந்தது. 1971ம் ஆண்டு சிறிமாவோ ரத்வத்த டயஸ் பண்டாரநாயக்க தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசுக்கெதிரான ஜனதா விமுக்தி பெரமுனவினரின் ஆயுதக்கிளர்ச்சியின் போது இந்தியப்படையினரை உதவிக்கழைத்து ஜனதா விமுக்திப் பெரமுனவினரின் கிளர்ச்சியை சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசு ஒடுக்கியிருந்தது. ஆனால் இம்முறை ஜனதா விமுக்திப் பெரமுனவினரின் கிளர்ச்சியை ரணசிங்க பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசு இலங்கை அரசபடைகளைக் கொண்டு முகம் கொடுக்க முடிவெடுத்திருந்தது. 1971ம் ஆண்டு ஜனதா விமுக்திப் பெரனமுனவில் இணைந்திருந்த சிங்கள இளைஞர்களை சுட்டுக்கொலை செய்து அவர்களது உடல்களை களனிகங்கையில் வீசியெறிந்து ஜனதா விமுக்திப் பெரமுனவினரையும் அவர்களது ஆதரவாளர்களையும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசு பீதி கொள்ளச் செய்திருந்தது. எண்பதுகளின் இறுதியில் ஜனதா விமுக்திப் பெரமுனவினரையும் அவர்களது ஆதரவாளர்களையும் சுட்டுக்கொலை செய்து வீதிகளில் ரயர் போட்டு கொழுத்தியதன் மூலம் ரணசிங்க பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசு ஜனதா விமுக்திப் பெரமுனவினரையும் அவர்களது ஆதரவாளர்களையும் பீதி கொள்ளச் செய்திருந்தது.
யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலை இயக்கப் (TELO) போராளிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் கொன்றொழித்தபோது எப்படி அப்போராளிகளை வீதிகளில் ரயர் போட்டுக் கொழுத்தினரோ அதே போன்ற செயற்பாடுகளை ஜனதா விமுக்திப் பெரமுனவினரையும் அவர்களது ஆதரவாளர்களையும் ரணசிங்க பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசு கொன்றொழித்தபோது பின்பற்றிக் கொண்டிருந்தது. ஜனதா விமுக்திப் பெரமுனவின் இலங்கை அரசுக்கெதிரான போராட்டமும் அதற்கெதிரான ரணசிங்க பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியரசின் பதில் நடவடிக்கையும் தென்னிலங்கை மக்களின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியதுடன் வீதிகளில் ரயர் போட்டு எரியூட்டும் ரணசிங்க பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசின் செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டிருந்தன. ஜனதா விமுக்திப் பெரமுனவின் தலைவர் ரோகண விஜேவீர, அதன் செயலாளர் டொன் உபதிஸ்ஸ கமநாயக்க உட்பட தலைமையில் உள்ளவர்களைத் தேடும் தீவிர நடவடிக்கையில் ரணசிங்க பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசும் அரசபடைகளும் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. 1971ம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசுக்கெதிரான ஆயுதக் கிளர்ச்சியில் தோல்விபெற்று சிறைசென்றிருந்த ரோகண விஜேவீரவும் ஜனதா விமுக்திப் பெரமுன தலைமையும் தமது தவறான அரசியல் கருத்துக்கள்-இனவாதக் கருத்துக்கள் உட்பட- குறித்தும், தவறான போராட்ட வழிமுறைகள் குறித்தும் மீளாய்வு செய்து அதிலிருந்த சரியான அரசியலுக்கும், சரியான போராட்ட வழிமுறைகளுக்கும் செல்வதற்கு மாறாக, மீண்டும் தவறான அரசியலுக்குள்ளும் தவறான போராட்ட வழிமுறைகளுக்குள்ளும் தம்மை நிலைநிறுத்திக் கொண்டனர். ஜனதா விமுக்திப் பெரமுனவினுடைய தவறான போராட்ட வழிமுறைகளை தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட ரணசிங்க பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசு ஜனதா விமுக்திப் பெரமுனவினரையும் அதன் தலைமையையும் கொடூரமானவர்களாகவும், மக்கள் விரோதிகளாகவும் காட்டி அவர்களை முழுமையாக அழிப்பதை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது.
ஜனதா விமுக்திப் பெரமுனவின் கீழணி உறுப்பினர்கள் பலரை கைது செய்து அழித்தொழித்துவிட்டிருந்த இலங்கையரசு அதன் தலைவர் ரோகண விஜயவீரவையும், செயலாளர் உபதிஸ்ஸ கமநாயக்க ஆகியோரை தேடுவதிலும் இறங்கியது. விசேட படைப்பிரிவுகளையும் விசேட உளவுப்பிரிவையும் அமைத்து தீவிர தேடுதல் நடவடிக்கையில் இறங்கியிருந்த ரணசிங்க பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசுக்கு வெற்றி அதிக தூரத்தில் இருக்கவில்லை. கண்டியில் உலபன தோட்டப்பகுதியில் தனது குடும்பத்துடன் தலைமறைவு வாழ்க்கை நடத்திவந்த ரோகண விஜயவீரவும், ஜனதா விமுக்திப் பெரமுனவின் செயலாளர் உபதிஸ்ஸ கமநாயக்கவும் இலங்கை அரசபடைகளால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கென கொண்டுசெல்லப்பட்டனர். ஆனால் இவர்கள் கைதுசெய்யப்பட்டு சிலநாட்களுக்குள்ளாகவே அவர்கள் கொல்லப்பட்டுவிட்டதாக ரணசிங்க பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசு அறிவித்திருந்தது. ஜனதா விமுக்திப் பெரமுனவினதும் அதன் தலைவர் ரோகண விஜயவீரவினதும் தவறான அரசியல்பாதை, மக்களிலிருந்து அந்நியப்பட்ட போராட்ட வழிமுறைகள் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் அழிவிலும் ரோகண விஜயவீர, உபதிஸ்ஸ கமநாயக்கவின் மரணத்திலும் முடிவுற்றிருந்தது. தவறான அரசியல் மார்க்கம், தவறான போராட்ட வழிமுறை மூலம் ஜனதா விமுக்திப் பெரமுனவின் தலைமை தனது போராட்டத்தை தற்கொலைக்கு இட்டுச்சென்றிருந்தது. ஜனதா விமுக்திப் பெரமுனவின் தலைவர் ரோகண விஜயவீர, அதன் செயலாளர் உபதிஸ்ஸ கமநாயக்க கைதுசெய்யப்பட்டு கொல்லப்பட்டுவிட்டபோதும் கூட உதிரிகளாக எஞ்சியிருந்த ஜனதா விமுக்திப் பெரமுன உறுப்பினர்களை தேடியழிக்கும் செயற்பாடுகளில் இலங்கை அரசபடைகள் ஈடுபட்டுக் கொண்டிருந்தன.
"தீப்பொறி"க் குழுவுடன் இணைந்து கொண்ட ஜயரின் மூலமாக இந்திய இடதுசாரிகள் தொடர்பு குறித்த பல தகவல்களை பெற்றுக்கொண்ட நாம், இந்திய இடதுசாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களது போராட்ட அனுபவங்களை பகிர்ந்துகொள்வதெனத் தீர்மானித்தோம்.
தமிழீழ தேசிய விடுதலை முன்னணியில் (NLFT) ஜயர் அங்கம் வகித்திருந்தபோது இந்திய இடதுசாரி அமைப்பான "மக்கள் யுத்தம்" குழுவினருடன் இருந்த தொடர்புக்கூடாக "மக்கள் யுத்தம்" குழுவினருடனும் மற்றும் சில இந்திய இடதுசாரி குழுக்களுடனும் பேசுவதென முடிவு செய்தோம். இச்சந்திப்புக்களுக்கான ஒழுங்குகளை மேற்கொள்வதற்கு ஜயரை முதலில் இந்தியாவுக்கு அனுப்பி வைத்திருந்தோம். இதன்பின் "தீப்பொறி" செயற்குழுவின் முடிவின்படி இந்தியா சென்ற ரகுமான் ஜானும் நானும் தமிழ்நாட்டுக்குச் சென்றிருந்தோம். இந்தியாவில் நாம் தங்குவதற்கான ஏற்பாடுகளையும் இடதுசாரி அமைப்புக்களுடன் பேசுவதற்கான ஒழுங்குகளையும் ஐயர் மேற்கொண்டிருந்தார். இந்தியாவில் "மக்கள் யுத்தம்" குழுவினரையும் மற்றும் சில இந்திய இடதுசாரிக் குழுக்களையும் சந்தித்துப் பேசினோம். "மக்கள் யுத்தம்" குழுவைச் சேர்ந்த ஏ.கே.கோதண்டராமன் பல நாட்கள் எம்முடன் சந்திப்புக்களை ஏற்படுத்தி தமது போராட்ட அனுபவங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டிருந்தார். "மக்கள் யுத்தம்" குழுவினரின் அரசியல் கருத்துக்கள், மக்களுக்காகத தம்மை அர்ப்பணித்துச் செயற்படுதல், அவர்கள் அனுபவங்கள், மார்க்சியத்தைக் கற்றுக் கொண்டதில் அவர்களிடம் காணப்பட்ட அறிவு என்பன அவர்களது சரியான பக்கமாக இருந்தபோதும் மார்க்சியத்தையும் புரட்சிகரப் போராட்ட அனுபவங்களையும் இந்தியச் சூழலுக்கு ஏற்ப பிரயோகிப்பது என்பதில் தவறு இழைப்பவர்களாகவே காணப்பட்டனர்.
மார்க்சிச சித்தாந்தத்தின் துணையுடன் உலகப் புரட்சிகர போராட்ட அனுபவங்களை சுவீகரித்துக் கொண்டு - சீனப் புரட்சிகரப் போராட்ட அனுபவங்கள் உட்பட - இந்திய நிலைமைகளுக்கேற்ப போராட்ட வடிவங்களை உருவாக்குவதிலிருந்து தவறி சீன-இந்திய நிலைமைகளை ஒப்பீடு செய்து சீனப் புரட்சியின் மாதிரியை "இறக்குமதி" செய்யும் ஒரு நிலையைக் காணக் கூடியதாகவிருந்தது. மாசேதுங்கின் நூல்கள் மற்றும் சீனப் புரட்சியின் வரலாறு ஆகியவற்றிலிருந்த பெறுமதிமிக்க கருத்துக்களை எடுத்துக் கொண்டு இந்திய சூழலுக்கு ஏற்ப புரட்சிகர திட்டத்தை முன்வைப்பதற்குப் மாறாக மாசேதுங்கின் நூல்களுக்குள் இந்தியப் புரட்சிகரக் கட்சிக்கான திட்டத்தைத் தேடுபவர்களாகவே காணமுடிந்தது. கோதண்டராமனுடனான சந்திப்பின் பின் வேறுசில இடதுசாரிக் கட்சிகளுடனும் எமது சந்திப்பு அமைந்திருந்தது. நாம் இந்தியாவில் தங்கியிருக்கும் வேளையில் இங்கிலாந்தில் எம்முடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்தவர்களான கேசவன், மோகன் ஆகியோர் இந்தியா வந்து எம்மைச் சந்தித்து எமது செயற்பாடுகள் குறித்துப் பேசியிருந்ததோடு பிரான்சிலிருந்து இந்தியா வந்திருந்த ஜீவனையும் சந்தித்துப் பேசியிருந்தோம். இந்திய இடதுசாரிகளுடனான சந்திப்பின் முடிவில் நாம் இலங்கை திரும்பிய போது இந்தியப் படையினர் இலங்கையிலிருந்து வெளியேறுவது நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தியப் படையினர் வெளியேறிய இடங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டத் தொடங்கிவிட்டிருந்ததுடன் தமக்கு எதிரானவர்கள், இந்தியப் படையினருக்கு உதவி புரிந்தவர்கள் எனக் கருதுபவர்களைக் குறிவைத்து செயற்பட்டுக் கொண்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதித்தலைவர் மாத்தையாவை தலைவராகக் கொண்ட விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியினர் தமது செயற்பாடுகளை இந்தியப்படை வெளியேறும் பகுதிகளில் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர்.
இந்தியப்படையினர் இலங்கையிலிருந்து வெளியேறுவது வடக்குக்-கிழக்கு மாகாணசபையை செயலற்றதாக்கிவிடுவதென்ற பிரேமதாச அரசினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் நோக்கத்தை ஈடேற்றி விடும் என்பதை உணர்ந்த வரதராஜப் பெருமாள் இந்தியாவில் பதவியேற்ற ஜனதா தள் அரசையும் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கருணாநிதியையும் சந்திப்பதற்காக இந்தியா சென்றார். இந்தியப்படைகள் இலங்கையிலிருந்து முழுமையாக வெளியேற முன் வடக்குக்-கிழக்கு மாகாண சபைக்கு உரிய அதிகாரங்களை பெற்றுக்கொடுக்குமாறு ஜனதா தள் அரசுக்கு வரதராஜப் பெருமாள் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் ஜனதா தள் பிரதமர் வி.பி.சிங் வரதராஜப் பெருமாளினுடைய கருத்துடன் உடன்பட்டுக்கொண்டவராக இருந்திருக்கவில்லை.
வரதராஜப் பெருமாளின் வேண்டுகோளை வீ.பீ.சிங் தலைமயிலான ஜனதா தள் அரசு ஏற்க மறுத்து கைவிரித்து விட்டிருந்த நிலையில் வரதராஜப் பெருமாளினதும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியினரினதும் இறுதித் தரிப்பிடம் தமிநாடு முதல் அமைச்சர் கருணாநிதியாக இருந்தார். கருணாநிதியுடனான வரதராஜப் பெருமாளின் பேச்சுவார்த்தையில் வடக்குக்-கிழக்கு மாகாண சபை குறித்து பேசியதுடன் வடக்குக் கிழக்கு மாகாணசபையை தமிழீழ விடுதலைப் புலிகளிடம் கையளிக்க வரதராஜப் பெருமாள் முன்வந்தார்.ஆனால் கருணாநிதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதியான "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கமும் அவருடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்களும் வரதராஜப் பெருமாளின் கருத்தை ஏற்க மறுத்ததுடன் தமிழீழ விடுதைலப் புலிகள் தேர்தல் மூலமே பதவிக்கு வர விரும்புகின்றனர் என்றும் குறுக்கு வழிகளால் அல்ல என்றும் கருத்து தெரிவித்திருந்தனர்.
வரதராஜப் பெருமாளின் இந்தியப் பயணமும் ஜனதாதள் பிரதமர் வீ..பீ. சிங் மற்றும் கருணாநிதியுடனான சந்திப்பும் தோல்வியில் முடிவடைய நாடு திரும்பிய வரதராஜப் பெருமாள் வடக்குக் கிழக்கு மாகாண சபை "அரசியல் சுயநிர்ணய சபை"யாக மாறுகின்றதென்றும் "சுதந்திர தமிழ் அரசு" க்கான அரசியல் சட்டம் உருவாக்கும் பொறுப்பை மாகாணக் கவுன்சில் இடம்பெறும் என்றும் செய்தியாளர்களுக்கு அறிவித்திருந்ததுடன் ஈழப் பிரகடனம் செய்யுமளவிற்கும் சென்றார். இவற்றையெல்லாம் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்த பிரேமதாச கடைசி இந்திய படைவீரர் வெளியேறும் வரை பொறுமை காத்தார்.
வடக்குக்-கிழக்கு இணைந்த மாகாண சபையின் மீதும் அதன் ஆட்சின் மீதும் தூக்குக் கயிறு வீசப்பட்டிருந்தது. எந்நேரத்திலும் வடக்குக்-கிழக்கு இணைந்த மாகாண சபையும் அதன் ஆட்சியையும் இழுத்து வீழ்த்தப்படலாம் என்ற நிலை நிலவியது. இந்தியாவின் புதிதாகப் பதவியேற்ற ஜனதா தள் பிரதமர் வீ.பீ.சிங் அறிவித்திருந்தபடி மார்ச் 1990 முடிவிற்குள் இந்தியப்படைகள் அனைத்தும் இலங்கையிலிருந்து வெளியேறிவிடும் எனக்கூறியிருந்ததுபோல் மார்ச் 24, 1990 கடைசி இந்தியப் படைவீரனும் திருகோணமலைத் துறைமுகத்தில் இருந்து வெளியேறியிருந்தான்
இந்தியப்படை இலங்கையில் இருந்து வெளியேற வேண்டுமென ஜனதா விமுத்திப் பெரமுன, தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியோரின் போராட்டங்கள், இலங்கை அரசின் வேண்டுகோள் என்பன நிறைவேற்றப்பட்டிருந்தன. ஆனால் இந்தியப் படை இலங்கையில் காலூன்றிய பின்னரான ஈடு செய்ய முடியாத உயிரிழப்புகளுக்குப் பின்பும் கூட இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வும், இலங்கையில் - வடக்குக்-கிழக்கு உட்பட - ஜனநாயகம் என்பதும் கானல் நீராகவே காணப்பட்டது.
(தொடரும்)
1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1
2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2
3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3
4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4
5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5
6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6
7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7
8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8
9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9
10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10
11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11
12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12
13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13
14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14
15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15
16. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 16
17. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 17
18. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 18
19. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 19
20. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 20
21. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 21
22. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 22
23. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 23
24.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 24
25.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 25
26.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 26
27.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 27
28.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 28
29. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 29
30 .புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 30
31. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 31
32. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 32
33. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 33
34. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 34
35.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 35
36.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 36
37.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 37
38.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 38
39.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 39
40. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 40
41.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 41
42. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 42
43. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 43
44.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 44
45. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 45
46. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 46
47. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 47
48. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 48
49. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 49
50 .புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 50
51.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 51
52. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 52
53.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 53
54.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 54
55.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 55
56. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 56
57. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 57
58. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 58
59. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 59
60 ரஜனி திரணகம படுகொலை - கருத்துச் சுதந்திரத்திற்கு புலிகளின் சாவுமணி