01242022தி
Last updateஞா, 16 ஜன 2022 1pm

கூலிப் போராட்டத்தை நடத்தக் கூடாது, நடத்தினால் அது துரோகம் என்று கூறிய புலிகள் - (வதைமுகாமில் நான் : பாகம் - 50)

குறிப்பு : ஏன் விசுவமடுவில் இரு விவசாயத் தலைவர்களைக் கைது செய்தீர்கள் எனக் கேட்டேன். வீ.ஏ கந்தசாமி (இவர்கள் எமது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்) போன்றோர் கூலிப் போராட்டம் நடத்தும்படி கூறியதால் என்றார்.

 

விளக்கம் : தாம் வர்க்கப் போராட்டத்தின் எதிரிகள் தான், என்பதை ஒத்துக் கொண்டார். ஏழை எளிய மக்களின் விடுதலைக்காக, அவர்களின் கோரிக்கைக்காக போராடிய போது எல்லாம், அதை தலைமை தாங்கியோர் கைது செய்யப்பட்டனர் அல்லது வீதிகளில் படுகொலை செய்யப்பட்டனர். கைதானவர்களை அவர்களின் சொந்த பாசிச சிறைகளில் வதைத்தே கொன்றனர். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடியவர்களின் கதையும் இதுதான். சாதிய அமைப்பை பாதுகாப்பதில் புலிகள் பாசிசத்தை தமது அரசியல் வழியாக கொண்டனர். சோசலிச தமிழீழம் என்பது ஏமாற்றும் மோசடி நிறைந்தவை என்பதற்கு புலிகளின் பிரதி தலைவர் மாத்தையா வாக்கு மூலம் தந்தார். ஆனால் நடைமுறை எதார்த்தம் இதை எப்போதும் ஆணி அறைந்தாற் போல் பறைசாற்றியே வந்துள்ளது. புலிகளின் பாசிச அரசியலும், அவர்களின் சொந்த நடைமுறையும் வரலாற்று ரீதியாகவே அவற்றை உறுதி செய்தது. ஏழை எளிய மக்களை நாயிலும் கீழாக மிதிக்கும் புலிப் பாசிசம், உயர்மட்ட பணக்கார கொள்ளையர்களுக்கு வாலாட்டி தேசியத்தை விபச்சாரம் செய்தனர். உயர்சாதிய ஆதிக்கத்தை தக்கவைத்து, அதன் சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்து கொண்டனர் புலிகள். யாழ் பிரதேசவாத நலன்களை ஆணையில் வைத்து தேசியத்தை வரைமுறை இன்றி பெண்ணின் அடிமைத்தனத்தை படுக்கையாக்கி கற்பழித்தனர்.

புலிகளின் பாசிசம் 1986க்கு பின் அதிகாரத்துக்கு ஏறத் துடித்த காலத்தில், ஈவிரக்கமற்ற பல படுகொலைகளை நடத்தினர். இதன் போது தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மேலான தண்டனை, உயர்சாதி இளைஞர் மேலான தண்டனையை விட கோரமாக இருந்தது. அழித்தொழிப்பு உச்சத்தில் இருந்த 1988 இல், வடமராட்சியைச் சேர்ந்த தமிழீழ தேசிய விடுதலை முன்னணியைச் (என்.எல்.எப்.ரி) சேர்ந்த தாழ்த்தப்பட்ட இளைஞர்களை ஒரேநாளில், வெவ்வேறு இடத்தில் வைத்து தெரிவு செய்தே வீதிகளில் சுட்டுக் கொன்றனர். அன்று தப்பியவர்களை தொடர்ந்து தேடி அழித்தனர். அப்போது வடமராட்சிக்கு புலிக்கு பொறுப்பாக இருந்த தாழ்த்தப்பட்ட இளைஞனையே, முதலில் அவர்களே சுட்டுக் கொன்றனர். பின்பே இந்த அழித்தொழிப்பு அரங்கேறியது. புலிகள் முஸ்லிம் மக்கள் மேலான தாக்குதலையும், முஸ்லிம் பள்ளிவாசல் மீதான தாக்குதலையும் தொடங்க முன்பு, புலிகளில் இருந்த முஸ்லிம் போராளிகளை கிழக்கில் முதலில் கொன்ற பின்பே, முஸ்லிம் விரோத படுகொலைகளை கட்டவிழ்த்துவிட்டனர். இது போல் வடமராட்சியில் தாழ்த்தப்பட்ட மாற்று இயக்க போராளிகள் மேலான தாக்குதலுக்கு முன், அதாவது 1988, 1989 இல் சொந்த இயக்கத்தில் தாழ்த்தப்பட்டோரைக் கொன்றனர். இதைத் தொடர்ந்து இக் காலத்தில் வெவ்வேறு இயக்கங்களில் இருந்த தாழ்த்தப்பட்ட இளைஞர்களை, தெரிந்தெடுத்து துரோகியாக்கி கொன்றனர்.

குறிப்பு : கேசவன் தாக்கப்பட்டது கிட்டுவின் காதலிக்கு நக்கல் அடித்தபடியாலா? என நான் கேட்க தெரியாது என பதிலளித்தார்.

குறிப்பு : கிட்டுக்கு பல காதலிகள் இருக்கிறார்கள் என நான் கேட்க, இல்லை ஒரு காதலி தான் என பதிலளித்தார். ஆனால் இவருக்கு பல பெண்களுடன் பாலியல் தொடர்பு இருந்தது.

குறிப்பு : தெல்லிப்பளை புலி பொறுப்பாளர் மதி, ஒரு வைத்தியரின் மனைவி, மகள் இருவரும் கற்பமாக காரணம் என்று நான் கேட்க, தெரியாது என்றார்.

விளக்கம் : கிட்டு மட்டுமல்ல பல புலித்தலைவர்கள் பல பெண்களுடன், தமது பாசிச அதிகாரத்தின் மூலம் தொடர்பு வைத்திருந்தனர். இயக்கத்தில் பெண்களை சேர்க்க முன்பே, பல வைப்பாட்டிகளையே புலித் தலைவர்கள் வென்று எடுத்து இருந்தனர். அதிகாரம் மற்றும் பணத்துடன் மிதந்த புலிகளின் தலைவர்மார்களில் சிலர், பெண்கள் பலரை தமது வைப்பாட்டியாக வைத்திருந்தனர். குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளை பயன்படுத்தி, ஆணின் அதிகாரத்தை புலிகளின் பாசிச மிரட்டல் கட்டுப்படுத்திய நிலையில் பாலியல் ரீதியாக பெண்கள் புணரப்பட்டனர். ஆண் இதைத் தட்டிக் கேட்டால் துரோகியாக வீதியில் கொல்லப்படும் அவலம் சமூக ஒழுக்கமாகியது. அத்துடன் யாழ் பூர்சுவா ஆயுதக் கவர்ச்சி சார்ந்த பெண்களையும், உதவி மற்றும் ஆதரவு தளத்தில் வீடுகளில் உள்ள பெண்களையும் கூட பயன்படுத்தினர். ஒரே வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் கூட, புலியின் வெவ்வேறு நபர்களுக்கு இடையில் பாலியல் உறவை திருமணத்துக்கு வெளியில் கொண்டிருந்தனர். புலிகளின் புனிதம், தூய்மைக் கோட்பாடுகள் ஆயுத முனையில் பவனி வந்த போது, ஆணாதிக்கத்தின் வக்கிரத்துடன் பெண்கள் புணரப்பட்டனர். புலிகள் புகைப்பது இல்லை என்பது அதன் புனிதமான ஒழுக்கம். ஆனால் மாத்தையா இரகசியமாக புகைப்பவர். இப்படி பல. புலிகள் திருமணம் செய்யக் கூடாது என்பது, புலிகளின் ஆரம்பகால புனிதம் சார்ந்த தேசிய ஒழுக்கம் சார்ந்த சட்டமாகும். பெண்களை இயக்கத்தில் இணைத்தல், திருமணம் செய்தால் போராட்டத்தை சிதைத்துவிடும் என்பது "மேதகு" பிரபாகரனின் தேசிய ஒழுக்க கோட்பாடு. ஆனால் அதை பிரபாகரனே பகிரங்கமாக முதலில் மீறினார். புனிதங்கள் எல்லாம் போலியானவையாக, உலகத்தை ஏமாற்ற கட்டமைக்கப்பட்டவையே. ஜெர்மனிய நாசிச ஆரியர்கள் போன்று, தூய்மைக் கோட்பாடு எல்லாம் போலியாகவும் ஏமாற்றகவும் இருந்தது. ஒழுக்கத்தின் பெயரில் ஒழுங்கீனம் என்பது பாசிச வழிகளில் மூடிமறைக்கப்பட்டு பெருகியது. வெளித் தோற்றத்தில் போலியான ஒழுக்கவாதிகளாக இருந்த அதே நேரம், உள்ளடக்கத்தில் அவர்கள் மிக மோசமான மனித விரோதிகளாக இருந்தனர். இரக்கமற்ற படுகொலைகளை தமது பண்பாக்கியதுடன், இரத்தம் தோய்ந்த கையால் ஒழுக்கம் மேல் சத்தியப் பிரகடனம் செய்தனர். ஆனால் ஆணாதிக்க சமுதாயம் சார்ந்து, பெண்களை நுகர்வதில் புலிகளின் ஒழுக்கம் மூடிமறைக்கப்பட்ட போதும், இவை சுற்று வட்டாரத்தில் இரகசியமான ஒரு குசுகுசுப்பாக இருப்பதை யாராலும் தடுக்க முடியவில்லை.

49.சுடும்படி கோர, உன்னைச் சுடுவதாயின் பகிரங்கமாவே சுடுவோம் என்றனர் - (வதைமுகாமில் நான் : பாகம் - 49)

48.யாழ் பல்கலைக்கழக போராட்ட கோசத்தைக் கூறக் கோரி தாக்கினர்-(வதைமுகாமில் நான் : பாகம் - 48)

47.புலிகள் ஒரு மனிதனை அயன்(ஸ்திரிப்பெட்டியால் சுட்டு சூடு வைத்து) பண்ணிக் கொன்ற நிகழ்வு பற்றி - (வதைமுகாமில் நான் : பாகம் - 47)

46. விஜிதரன் போராட்டமும், அதை நடத்தியவர்கள் யார் என்றும் கேட்டனர்? - (வதைமுகாமில் நான் : பாகம் - 46)

45.நீங்களெல்லாம் ஐந்தாம் படை என்று குற்றம்சாட்டிய புலிகள் - (வதைமுகாமில் நான் : பாகம் - 45)

44.கிட்டுவை படுகொலை செய்ய முயன்றவர்கள், அதை நான் செய்ததாக கூறினர் - (வதைமுகாமில் நான் : பாகம் - 44)

43.புதியபாதை குமணன், ராகவன் பற்றி இரண்டாவது வதையின் இறுதியில் மாத்தையா - (வதைமுகாமில் நான் : பாகம் - 43)

42.எதிர்த்துப் போராடி மடிவது அல்லது புலிக்கு எதிரான இரகசிய ஆயுதம் ஏந்திய குழுவை உருவாக்குவது (வதைமுகாமில் நான் : பாகம் - 42)

41.ஊளையிட்டு கூச்சல் போடுவதற்கு அப்பால், இயற்கையான இயக்கத்தை நிறுத்த முடியாது - (வதைமுகாமில் நான் : பாகம் - 41)

40.அறைச் சுவரில் துப்பாக்கிச் சூட்டு அடையாளங்களும், கிரனையிற் சிதறல்களும் - (வதைமுகாமில் நான் : பாகம் - 40)

39.சிலதைக் கூற, பயங்கரத் திருப்பம் என்று கூறிய சலீம் ..(வதைமுகாமில் நான் : பாகம் - 39)

38.  வதைமுகாமின் உள்ளே…(வதைமுகாமில் நான் : பாகம் - 38)

37.வதைமுகாமில் இருந்து தப்பிய பின் முதல் இரண்டு நாட்களில் எழுதப்பட்ட சிறு குறிப்புகளில் இருந்து (வதைமுகாமில் நான் : பாகம் - 37)

36.துருப்பிடித்த வாள்,கத்தி, கோடாலி மூலம், என்னைக் கடத்தியது புலிகளல்ல, என்.எல்.எவ்.ரி. என்று நிறுவிய புலிகள் (வதைமுகாமில் நான் : பாகம் - 36)

35.வாய்க்குள் துப்பாக்கியை வைத்து மிரட்ட, சுடடா நாயே என்று கத்தினேன் (வதைமுகாமில் நான் : பாகம் - 35)

34.நான் மத்தியகுழு உறுப்பினர் என்பதை தெரிந்து கொண்டு, தகவல்களை கோரித் தாக்கினர் (வதைமுகாமில் நான் : பாகம் - 34)


33.கற்றன் நாசனல் வங்கி நடவடிக்கையில் நீ பங்கு பற்றினாயா? யார் இதைச் செய்தனர்? பணம் எங்கே? (வதைமுகாமில் நான் : பாகம் - 33)


32.மத்தியகுழு உறுப்பினர் என்பதை தெரிந்தவுடன் மூன்றாவது முறை வதைகள் தொடங்கியது (வதை முகாமில் நான் : பாகம் - 32)


31நான் ஒப்புக் கொண்ட பொருட்கள் மற்றும் விபரங்கள் தொடர்பாக (வதை முகாமில் நான் : பாகம் - 31)


30.03.05.1987 – 06.05.1987 வரை இரண்டாவது வதை முகாமில் நடந்த சித்திரவதைகள் (வதை முகாமில் நான் : பாகம் - 30)


29. புதிய வதைமுகாமில் மலத்தை நடுவறையிலேயே இருக்கத் தொடங்கி அதன் அருகில் வாழத்தொடங்கினேன். (வதைமுகாமில் நான் : பாகம் - 29)


28.மே 2ம் திகதி 1987 இல் புதிய வதைமுகாம் நோக்கி பயணம் (வதை முகாமில் நான் : பாகம் - 28)


27.முதலாவது வதைமுகாமில் எனது அறை (வதை முகாமில் நான் : பாகம் - 27)


26.முதல் நான்கு நாட்களும் தொங்கவிட்ட நிலையில் நடந்த சித்திரவதைகள் (வதை முகாமில் நான் : பாகம் - 26)


25.என்.எல்.எப்.ரி.யே என்னைக் கடத்தியிருப்பதாக சொன்ன முட்டாள் புலிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 25)


24.7.30 மணிக்கு தொடங்கிய சித்திரவதை (வதை முகாமில் நான் : பாகம் - 24)

 

23."தற்கொலை செய்வது பற்றி நீ என்ன நினைக்கின்றாய்" இதுதான் புலிகள் கேட்ட முதற் கேள்வி (வதை முகாமில் நான் : பாகம் - 23)

 

22.மாலை 6.30 மணிக்கு புலித் தளபதி தீபன் என் தலையில் துப்பாக்கியை வைத்துக் கடத்தினான் (வதை முகாமில் நான் : பாகம் - 22)

 

21.28.04.1987 புலிகள் என்னை கடத்திய அன்று (வதை முகாமில் நான் : பாகம் - 21)

 

20.புலி அல்லாத அனைவரும் சமூக விரோதிகள் - மாத்தையா (வதை முகாமில் நான் : பாகம் - 20)

 

19.புலிப் பாசிசத்துக்கு அஞ்சி, பத்திரிகைகள் அன்று வெளியிடாத எனது உரை (வதை முகாமில் நான் : பாகம் - 19)

 

18.என்னைக் கடத்துவதற்கு முன் (வதைமுகாமில் நான் : பாகம் - 18)

 

17.புலிகள் என்னை கடத்துவதற்கான என் மீதான கண்காணிப்பு (வதை முகாமில் நான் : பாகம் - 17)

 

16. எனது போராட்டமும் புலிகளின் கடத்தலும் (வதை முகாமில் நான் : பாகம் - 16)

 

15. ஈவிரக்கமற்ற கொலைகாரத்தனம் தலைமைத்துவத்தை வழங்க, அது தேசியமாகியது (வதை முகாமில் நான் : பாகம் - 15)

 

14. சுயநிர்ணயம் என்பது மனித உரிமையைக் கோருவதாகும் (வதை முகாமில் நான் : பாகம் - 14)

 

13. கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை மறுத்து உருவானதே புலிப்பாசிசம் (வதை முகாமில் நான் : பாகம் - 13)

 

12. புலிப் பாசிசத்தின் தோற்றுவாய் (வதை முகாமில் நான் : பாகம் - 12)

 

11. புலிப் பாசிசத்தின் தோற்றமும் என்பது வரலாற்று நீட்சி (வதை முகாமில் நான் : பாகம் - 11)

10. புலிகள் பாசிட்டுகளே ஒழிய ஒரு மக்கள் இயக்கமல்ல (வதை முகாமில் நான் : பாகம் - 10)

 

09. பாசிசம் குறித்து அடிப்படையான தரவுகள் (வதை முகாமில் நான் : பாகம் - 09)

 

08. மக்கள் விரோத துரோகக் குழுக்களும், அவர்களின் பாசிசக் கோட்பாடுகளும் (வதை முகாமில் நான் : பாகம் - 08)

 

07. இனவாத யுத்தம் மக்களின் அவலங்களை முடிவின்றி பெருக்கியது (வதை முகாமில் நான் : பாகம் - 07)

 

06. சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதம் (வதை முகாமில் நான் : பாகம் - 06)

 

05. பாசிசம் கட்டமைத்த அரசியல் மீது (வதை முகாமில் நான் : பாகம் - 05)

 

04. புலியின் இந்த வதைமுகாமுக்கு முன்னும் பின்னுமான படுகொலை முயற்சிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 04)

 

03. மக்களை ஒடுக்கும் தேசியம், பாசிசத்தை விதைக்கின்றது (வதைமுகாமில் நான் : பாகம் - 03)

 

02. 1987ம் ஆண்டு என் நினைவுக்குள் நுழைய முன்.. (வதை முகாமில் நான் : பாகம் - 02)

 

01. வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை - (வதை முகாமில் நான் : பாகம் - 01)


பி.இரயாகரன் - சமர்