செத்துப்போன மகா பெரியவருக்கு முந்தையவருக்கும் முந்தையவரான மகா, மகா, பெரியவர் சந்திரகேசரேந்திரர்5 என்பவரது காலத்தில் (184344) கும்பகோணம் மடம் கடனிலிருந்ததாம். மடத்தின் ஸ்ரீ கார்யம் (கணக்குப் பிள்ளை) கணபதி சாஸ்திரி என்பவர் அன்றைய தஞ்சை மன்னன் சிவாஜியிடம் (சரபோஜியின் மகன்) கையேந்தினாராம். அவர் பணம் தர மறுத்துவிட்டாராம். உடனே சிவபெருமானே கனவில் வந்து மன்னனை மிரட்டினாராம். பயந்து போன மன்னன் அந்த சங்கராச்சாரியை "அன்புக் கைது' செய்து தஞ்சை வரவழைத்து வேண்டிய அளவு காசு கொடுத்து விட்டானாம் இது முதல் கதை.
(வெள்ளைக்காரனிடம் பென்சன் வாங்கித் தின்று கொண்டிருந்த கோழையான அந்த தஞ்சை சிவாஜியை மிரட்ட கணபதி சாஸ்திரி வேறொரு பார்ப்பானை ஏற்பாடு செய்திருப்பார் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டியதுதான்)
அடுத்து வந்த சங்கராச்சாரியான சுதர்சன மகா தேவேந்திர சரஸ்வதி, அதாவது மகா மகா பெரியவர் மேற்படி கணபதி சாஸ்திரியின் அண்ணன் மகனாம். அவர் செலவாளியாம். "கணக்கு வழக்கில்லாமல் செலவு செய்து' மடத்தை மறுபடியும் திவால் நிலைக்கு கொண்டு வந்துவிட்டாராம். உடனே கணபதி சாஸ்திரி தஞ்சை ராஜாவின் படையாட்களை வரவழைத்து மேற்படி சங்கராச்சாரியை சிறை வைக்க, உடனே அவர் உண்ணாவிரதமிருக்க பிறகு தகராறு ஒருமாதிரியாக முடிவுக்கு வந்திருக்கிறது. இதுதான் இரண்டாவது "அன்புக் கைது'.
அதன் பிறகு கபிஸ்தலம் மூப்பனாரைப் பிடித்து அவர் மூலம் இன்னொரு சைவப் பிள்ளை நிலப்பிரபுவைப் பிடித்து மடத்துக்கு 270 ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டாராம் கணபதி சாஸ்திரி.
(இந்த இடத்தில் ஜெயேந்திரன் அண்டு விசுவநாதன் பிரதர்ஸ்க்கும், விஜயேந்திரன் அண்டு ரகு பிரதர்ஸ்க்கும் இன்று நடக்கும் சொத்து தகராறையும், அப்பு வகையறா தொடர்பையும், ஜெயேந்திரன் நடத்தும் ரியல் எஸ்டேட் வியாபாரத்தையும் நினைவில் கொள்ளவும்.)
அடுத்த சங்கராச்சாரிதான் செத்துப் போன மகா பெரியவாள். அவர் மேற்படி கணபதி சாஸ்திரியின் பேரனாம். இதைவிடப் பச்சையான "வாரிசு அரசியலை' வேறெங்காவது காணமுடியுமா?
இந்தக் கதையை வெளியிட்டதன் மூலம் இன்றைய சங்கரமடக் கிரிமினல்களின் வரலாற்றை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
தினமணிக்கு நன்றி.