ஞீ தோடா... சாமி இப்டி அநியாயமா ரவுடி மாரி கொலை பண்ணலõமான்னு கேளு. அது நாயம். ஒண்ணுக்கு போலாமா, ரெண்டுக்குப் போலாமான்னு கேக்குற! அறிவு கீதா உனுக்கு?
ஆ நான் இன்னா கேக்குறேன், நீ இன்னா சொல்றே? ஒண்ணும் புர்லியா?
ஞீ புரியாம இன்னா? முதல்ல உன் முதுவுல கீற அழுக்க கழுவு. அப்பால சாமியப்பத்திப் பேசு. ரேசன் அரிசிய துண்ட்டு பன்னிக்குட்டி மாரி பெத்துப் போட்டுக்கினே கீற. நீ முருங்க குச்சி மாரி கீற. உனுக்கே இவ்ளோ கீதே, ஜெகத்குருன்னா சொம்மாவா? உன்ன மேரி ரிக்ஸா மெறிக்கிற வேலயா? யார்னாலும் அட்தவன் கஸ்டம் புரியாம கலாய்க்கக் கூடாது.
ஆ தூ.. வாயக் கழுவு, சாமியாரா அவன்? மூஞ்சப் பாரு, அறுத்துப் போட்ட பன்னி மாரி. நம்ம டி.வி. அட்டேஸ்மென்ட்ல ஒரு பொடி பையன் சொல்வானே ""ஆர்லீக்ஸ்னா நா அப்டியே சாப்டுவேன்னு'' அதமேரி ஆர்லிக்ஸ் மாமியவே அப்டியே சாப்ட்டுகிறான். அது போவுதுபா, ஊர்கோலம் மாரி, சீரங்கம் உஷா, ஜெயா, மைதிலி, அனுராதாக்கா.. அப்பாலிக்கா... நம்ம சொர்ணமாலியா... நல்லா மேய்ஞ்ச்சிக்கிறான் மாமூ...!
ஞீ வாயை மூடு! மேய்ஞ்சிகிறான், கீஞ்சுகிறான்னு சொல்லாதே! "என்ன வுடுங்கடா, நா எங்கன்னாப் போய்... மேய்ஞ்சிக்கேறேனு' அந்தாளு ஓட்னானுல்ல, வுட்டான்களா? எஸ்கேப் ஆனவனையும் புட்ச்சி இட்டாந்து அடைச்சு வச்சா இன்னாடா பண்ணுவான்? பால் குடி, தயிர் குடி, முந்திரி துண்ணு, பிஸ்த்தா துண்ணு, பழம் துண்ணு... ன்னு, அவன் வாயீ, வவுறு... சந்து... பொந்து எல்லாத்திலயும் வெடி மருந்த திணிச்சுட்டு... இப்ப வெடிச்சிருச்சி.. வெடிச்சிருச்சின்னு அலறுனா... அவன் இன்னாடா பண்ணுவான்?
ஆ அதுக்காக ஊர் மேய சொல்லுதா? அம்ணகுண்டியா குந்திகினு ஒரு பொம்பிளய கூப்டலாமா? மாமிங்க பாவம் ரத்தகதி ரணகதி ஆயி அலறுதுங்கோ. நீ சாமியாருதான, அதான் உனுக்கு அத்து வைத்தியமோ, சித்த வைத்தியமோ ஏதோ ஒண்ணு வச்சிருக்கீல்ல, அத்த வச்சி சமாளிக்க வேண்டியத்தானே!
ஞீ கம்னு கெட... அதுபேரு அத்துவைதம். பெரீய்ய விசயம்லாம் இன்னான்னு புரியாம பேசக்கூடாது. அத்துவைதம் அப்படின்னா... நீ... நானு.. இந்த சாராயம்... கோட்டரு... ஆம்பள... பொம்பள... ஏணி... எருமாடு எல்லாம் மாயைன்னு அருத்தம். அவன் கரீட்டாதான் எல்லாத்தையும் பாத்துக்கிறான்.. அப்புக்கும்.. அப்துல்கலாமுக்கும் ஒரே மாரிதான் ஆசீர்வாதம் குடுத்துக்கிறான். அத்த யாரும் கேக்க மாட்றான். பொம்பள மேட்டர மட்டும் ஏண்டா கொடயிறீங்க? சொர்ணமால்யா பொண்ணு மாரி, அனுராதா தங்கச்சி மாரி அப்படீன்னு அவன் வித்யாசம் பாக்கிறதில்ல. நீ ஏன் பாக்கிற?
ஆ அது இன்னா மாயையோ இன்னா எளவோ! கருவாட்டுக்கு அலயிற பெருச்சாளி மாறி கல்யாணம் ஆன மாமிங்களா பாத்து கலாஞ்சியிருக்கிறான். நம்மள தேவ்டியாளுக்கு பொறந்தவனுங்கோன்னு சொல்றானே, எதுக்குடா சொல்றான்னு ரோசனை பண்ணி ரோசனை பண்ணி பாத்திருக்கேன். இப்பதான் தெர்து. ஊரான் பொண்டாட்டியா பாத்து தேடித் தேடி மேஞ்சிருக்கானே, அவுனுக்கு அல்லா பொம்பளையும் தேவ்டியாளாத்தான் தெரியும். நல்ல வேளை மாமு. நம்மள்ளாம் சுத்தமில்லன்னு வுட்டான். சுத்தமான மாமிங்கதாம்பா பாவம்!
ஞீ இன்னாடா பாவம்? யார்னா அந்த சாமியாருக்கு நேந்த பாவத்த நெனச்சி பாத்தீங்களா? மூணு வேளை முனியாண்டி விலாஸ் பிரியாணி துண்ட்டு நீ மூடிக்னா இருப்பே? அவன் துண்ற அயிட்டம் எல்லாம் என்னா வெள்ளாட்டா? ஒரு சித்த வைத்தியங்கிட்ட போய் கேட்டுப் பாரு... பலான.. பலான அயிட்டம் துண்ணா அவன் கதி இன்னாவுண்ணு கேளு! கன்ட்ரோலு பண்ண முடியுமான்னு கேளு.
ஆ புலி குகைக்குள்ளார போயிட்டு புடிங்கிடுச்சி.... புடிங்கிடுச்சி.. ன்னா? அங்க ஏன் நீ போறே அப்படீன்னு அந்த மாமிங்கள... யாராவது கேட்டீங்களா?
ஞீ ஆனந்த விகடன், கல்கீன்னு எல்லா பொஸ்தகத்திலியும் சாமி மூஞ்சில அருள் தெரியுது, அது தெரியுதுன்னு வேற எழுதிவுட்றான். அதப் படிச்சி படிச்சி மாமிங்க பேஜாராயிட்டாங்கோ... சாமிய சுத்தி பிகருங்கள நிக்கவுட்டு தொடக்கூடாது, படக்கூடாதுன்னா மன்சன் இன்னாடா பண்ண முடியும்?
ஆ நீ சாமியாருதான. போக வேண்டியதானே... பட்ணத்தாரு, வள்ளலாரு மாரி.
ஞீ வுட்டாதானே! அப்புறம் 6000 கோடி சொத்த ஆரு நிர்வாகம் பண்றது? நீயும் நானும் பண்ண முடியுமா? இப்பகூட பாப்பாரப் பசங்க இன்னா சொல்றானுங்க? சாமி ஆஸ்பத்திரி கட்னாரு, காலேஜ் கட்னாருன்றான். இந்த வேலைய செய்யறதுக்கு ஏன்டா சாமி? இந்த வேலையத்தான் சினிமாக்காரன் விஜயகாந்தும் சாராய உடையாரும் செய்றானுங்களே...
ஆ அவுங்க செய்யிற அல்லா வேலையும் செய்யணுமாம். அவனுகள மாரியே புல்லா துன்னனும். ஏசி ரூம்ல தூங்கணுமாம். ஆனா அது மட்டும் கூடாதாம். இன்னாடா நாயம் பேசுறீங்க?
பச்சையப்பன்